நாள் காட்டி

மீனத்திங்கள் நாள்காட்டி

திருவள்ளுவர் ஆண்டு 2055

தமிழ் நாள்காட்டியின் 03-ஆம் திங்கள் (மீனம்) முதலாம் நாளானது, உலக நாள்காட்டியின் 14-ஆம் நாள் தொடங்கியுள்ளது .

 

மீனத்திங்கள் ௨ (02)-ஆம் நாள் ;உலக நாள்காட்டி (15/03/2024)

நிகழ்வுகள்

  • கிமு 44 – உரோமின் கொடுங்கோண்மையாளர் யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
  • 351 – இரண்டாம் கான்சுடன்டீனசு தனது உடன்பிறவா சகோதரன் கால்லசுக்கு சீசர் பட்டம் அளித்து, உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதிக்குப் பொறுப்புக் கொடுத்தான்.
  • 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய படைத்துறையை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
  • 1493 – கொலம்பசு அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியா திரும்பினார்.
  • 1564 – முகலாயப் பேரசர் அக்பர் “யிசுயா” எனப்படும் தலைவரியை நீக்கினார்.
  • 1776 – தெற்கு கரோலினா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
  • பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடு இதுவாகும்.
  • 1802 – இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது,
  • 1815 – நேப்பில்சு மன்னன் யோக்கிம் முராட் ஆஸ்திரியா மீது போர் தொடுத்தான்.
  • 1819 – பிரான்சிய இயற்பியலாளர் பிரெனெல் ஒளி ஓர் அலை போல் செயல்படுகிறது என நிறுவினார்.
  • 1820 – மேய்ன் ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக இணைந்தது.
  • 1827 – ரொறன்ரோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
  • 1848 – அங்கேரியில் புரட்சி வெடித்தது. ஆப்சுபேர்க் ஆட்சியாளர்கள் சீர்திருத்தக் கட்சியின் முக்கிய நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.
  • 1874 – பிரான்சுக்கும் வியட்நாமிற்கும் இடையில் சாய்கோன் உடன்பாடு எட்டப்பட்டது. கோச்சின்சீனா மீதான பிரான்சின் முழுமையான அரசுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 1877 – முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்துக்கும் ஆத்திரேலியாவுக்கும் இடையில் மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் தொடங்கியது .
  • 1888 – ஆங்கிலோ-திபெத்தியப் போர் தொடங்கியது.
  • 1917 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசு முடி துறந்தார். 304-ஆண்டுகால ரொமானொவ் மரபுவழி ஆட்சி முடிவுக்கு வந்தது.
  • 1921 – உதுமானியப் பேரரசின் முன்னாள் பிரதமரும், ஆர்மீனிய இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான தலாத் பாசா பெர்லினில் ஆர்மீனியர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1922 – எகிப்து ஐக்கிய அரசிடம் இருந்து முறையாக விடுதலை அடைந்த பின்னர் முதலாம் புவாட் எகிப்தின் மன்னனானார்.
  • 1931 – வைக்கிங்கு என்ற கப்பல் நியூபவுன்லாந்து அருகே வெடித்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
  • 1943 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியப் படையினர் உக்ரேனின் கார்க்கொவ் நகரை சோவியத் படத்துறையிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1951 – ஈரானில் எண்ணெய் உற்பத்தி தேயசார்பாக்கப்பட்டது.1952 – ரீயூனியன், சிலாவோசு நகரில் 24 மணி நேரத்தில் 1870 மிமீ மழைவீழ்ச்சி பதியப்பட்டது. இது உலக வெற்றியாக அறிவிக்கப்பட்டது.
  • 1961 – தென்னாப்பிரிக்கா பொதுநலவாய நாடுகளில் இருந்து வெளியேறியது.
  • 1970 – எக்ஸ்போ ’70 உலகக் கண்காட்சி யப்பானின் ஒசாக்கா நகரில் தொடங்கியது.
  • 1978 – சோமாலியா, எத்தியோப்பியாவிற்கிடையேயான போர் முடிவுக்கு வந்தது.
  • 1985 – உலகின் முதலாவது இணைய ஆள்களப் பெயர் (symbolics.com) பதியப்பட்டது.
  • 1986 – சிங்கப்பூரில் நியூ வேர்ல்ட் என்ற உணவு விடுதி இடிந்து வீழ்ந்ததில் 33 பேர் உயிரிழந்தனர்.
  • 1990 – மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது நிறைவேற்று அரசுத்தலைவராகத் தெரிவானார்.
  • 1991 – பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் பின்னர் செருமனியின் ஆதிக்க நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்சு, ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகியவற்றிடம் இருந்து செருமனி முழுமையான விடுதலையைப் பெற்றது.
  • 1995 – இலங்கைத் துடுப்பாட்ட அணி முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி வென்றது.[2]
  • 2004 – கதிரவக் குடும்பத்தில் மைக்கை விரைவான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2007 – இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதி காவல் நிலையம் மீதுபயங்கர சார்பாளர்கள் நடத்திய தாக்குதலில் 55 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.
  • 2008 – அல்பேனியாவில் ஆயுதக்கிடங்கு ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 26 பேர் உயிரிழந்தனர்.
  • 2011 – சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கியது.

பிறப்புகள்

  • 270 – நிக்கலசு, கிரேக்கக் கத்தோலிக்க ஆயர், புனிதர் (இ. 343)
  • 1767 – ஆன்ட்ரூ யாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் 7வது அரசுத்தலைவர் (இ. 1845)
  • 1852 – அகஸ்டா, லேடி கிரிகோரி, ஆங்கிலோ-ஐரிய நிலவுரிமையாளர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர் (இ. 1932)
  • 1854 – எமில் அடால்ஃப் வான் பெர்ரிங், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (இ. 1917)
  • 1860 – வால்டெமர் ஆஃப்கின், உருசிய-சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியலாளர் (இ. 1930)
    1914 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1979)
  • 1915 – அழகு சுப்பிரமணியம், ஆங்கில இலக்கியத்துறையில் புகழ் பெற்ற இலங்கையர் (இ. 1973)
  • 1919 – பார்வதி கிருஷ்ணன், இந்திய அரசியல் சார்பாளர் (இ. 2014)
  • 1929 – செம்பனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன், தமிழக நாதசுவரக் கலைஞர் (இ. 2013)
  • 1930 – சொரேசு ஆல்ஃபியோரொவ், நோபல் பரிசு பெற்ற பெலருசிய-உருசிய இயற்பியலாளர் (இ. 2019)
  • 1930 – மார்ட்டின் கார்ப்பிளசு, நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க வேதியியலாளர்
  • 1932 – ஆலன் பீன், அமெரிக்கக் விண்வெளிவீரர் (இ. 2018)
  • 1934 – கன்சிராம், இந்திய அரசியல்சார்பாளர் (இ. 2006)
  • 1934 – பத்மா சோமகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2020)
  • 1938 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (இ. 2012)
  • 1941 – மைக் லவ், அமெரிக்கப் பாடகர், இசைக்கலைஞர்
  • 1950 – கே. வி. தங்கபாலு, தமிழக அரசியல் சார்பாளர்
  • 1955 – மோசின் கான், பாக்கித்தானியத் துடுப்பாளர்
  • 1956 – ஓவியர் யீவா, தமிழக ஓவியர், திரைப்பட கருத்து மதிப்பாய்வாளர் , எழுத்தாளர்
  • 1959 – ரென்னி கர்லின், பின்லாந்து இயக்குநர்
  • 1975 – வெசிலின் தோப்பலோவ், பல்கேரிய வாலாட்ட வீரர்
  • 1986 – யெய் கோர்ட்னி, ஆத்திரேலிய நடிகர்
  • 1993 – அலீயா பட், பிரித்தானிய நடிகை, பாடகி

இறப்புகள்

  • கிமு 44 – யூலியசு சீசர், உரோமக் குடியரசுத் தளபதி (பி. கிமு 100)
  • 220 – சாவோ சாவோ, சீன கான் வம்ச மன்னர், இராணுவ அதிகாரி (பி. 155)
  • 931 – ஏழாம் சுதேவான் (திருத்தந்தை)
  • 1206 – கோரி முகமது, கோரி பேரரசர் (பி. 1149)
  • 1660 – லுயீசு டி மரிலாக், பிறரன்பின் புதல்வியர் துறவற சபையை நிறுவியவர், கத்தோலிக்கப் புனிதர் (பி. 1591)
  • 1897 – யேம்ஸ் சில்வெஸ்டர், ஆங்கிலேயக் கணிதவியலாளர் (பி. 1814)
  • 1937 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1890)
  • 1939 – தாலமுத்து, இந்தித் திணிப்புக்கு எதிரான செயற்பாட்டாளர் (பி. 1915)
  • 1962 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாலர் (பி. 1892)
  • 1983 – ரெபெக்கா வெஸ்ட், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1892)
  • 1991 – அரவிந்தன், மலையாளத் திரைப்பட இயக்குநர் (பி. 1935)
  • 2008 – சரளா தாக்ரல், இந்திய விமான ஓட்டி (பி. 1914)
  • 2013 – கள்ளம் அஞ்சி ரெட்டி, இந்திய மருந்தியலாளர், தொழில் முதல்வர் (பி. 1940)
  • 2015 – நாராயண் தேசாய், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1924)

சிறப்பு நாள்

  • புத்தியிர்ப்பு, இயற்கைசார் விழா (யப்பான், )
  • காவல்துறையினரின் வன்செயல்களுக்கு எதிரான பன்னாட்டு நாள்
  • புரட்சி நினைவு நாள் (அங்கேரி, 1948)
  • உலக நுகர்வோர் உரிமைகள் நாள்
  • உலக முசுலிம் பண்பாட்டு , அமைதி, கலந்துரையாடல், மற்றும் திரைப்பட நாள்

மீனத்திங்கள் ௩ (03)-ஆம் நாள் ;உலக நாள்காட்டி (16/03/2024)                                 

  • கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. செடேக்கியா மன்னராக முடிசூடினார்.
  • 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார்.
  • 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய தொடக்கினர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
  • 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சில் ஒமோனொம் தீவை அடைந்தார்.
  • 1660 – இங்கிலாந்தில் லோங் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
  • 1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: எசுப்பானியப் படைகள் ரோட்டான் என்ற கரிபியன் தீவைக் கைப்பற்றின.
  • 1792 – சுவீடன் மன்னர் மூன்றாம் குசுத்தாவ் சுடப்பட்டார். இவர் மீனம் 29 இல் இறந்தார்.
  • 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து அரசின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
  • 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அவராசுபரோ போர் தொடங்கியது . இஒதில் அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் பெரும் இழப்பைச் சந்தித்தன.
  • 1898 – மெல்பேர்ண் நகரில் ஐந்து குடியேற்ற நாடுகள் இணைந்து அரசியலமைப்பை உருவாக்கின. இதுவே ஆத்திரேலியாவின் உருவாக்கத்திற்கு முதலாவது காரணியாக அமைந்தது.
  • 1917 – முதலாம் உலகப் போர்: செருமனியின் போர்க்கப்பல் ஒன்று மூழ்கியது.
  • 1925 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.
  • 1926 – முதலாவது திரவ-எரிபொருளினால் உந்தும் ஏவூர்தியை மசாசுசெட்சில் இராபர்ட் காடர்ட் என்பவர் செலுத்தினார்.
  • 1935 – வெர்சாய் ஒப்பந்தத்தை மீறும் வகையில் எதிராக செருமனி மீண்டும் புதுப்படைக்கலன்கள் அணியப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என இட்லர் கட்டளையிட்டார் .
  • 1939 – பிராக் அரண்மனையில் இருந்து இட்லர் பெகேமியா, மொராவியாவை செருமனியின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
  • 1942 – முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது).
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்தது.
  • 1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் 20-மணித்துளிக் குண்டுவீச்சில் செருமனியின் வூர்சுபேர்க் நகரின் 90 விழுக்காடு அழிந்தது. 5,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1962 – மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க விண்ணூந்து 107 பயணிகளுடன் காணாமல் போனது.
  • 1963 – பாலியில் ஆகூங்க் மலை நெருப்பு கக்கி 11,000 பேர் வரை இறந்தனர்.
  • 1966 – யெமினி 8, நாசாவின் 12வது மாந்தரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது.
  • 1968 – வியட்நாம் போர்: மை லாய் படுகொலைகள் இடம்பெற்றன. பெண்கள், குழந்தைகள் உட்பட 350 முதல் 500 வரையிலான வியட்நாமியர்கள் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1969 – வெனிசுவேலாவில் உள்ளூர் விண்ணூந்து ஒன்று இடறுக்குள்ளாகியதில் 155 பேர் உயிரிழந்தனர்.
  • 1978 – இத்தாலியின் முன்னாள் முதல்வர் அல்டோ மோரோ கடத்தப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டார்.
  • 1979 – சீன-வியட்நாமியப் போர்: மக்கள் விடுதலைபடைத்துறை எல்லையைக் கடந்து சீனாவினுள் நுழைந்ததை அடுத்து, போர் முடிவுக்கு வந்தது.
  • 1985 – அசோசியேட்டட் பிரசு ஊடகவியலாளர் டெரி ஆன்டர்சன் பெய்ரூட் நகரில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் 1991 சிலை 4 இல் விடுதலை ஆனார்.
  • 1988 – ஈராக்கில் குருதிய நகரான அலப்யாவில் நச்சு வளித் தாக்குதலில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
  • 1989 – எகிப்தில் 4,400-ஆண்டு பழமையான மம்மி கிசாவின் பெரிய பிரமிடு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1995 – மிசிசிப்பி அடிமை முறையை ஒழிப்பதற்கான சட்டமூலத்தை ஏற்றுக் கொண்ட கடைசி அமெரிக்க மாநிலமானது.
  • 2001 – சீனாவின் சியியாசுவாங் நகரில், இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 108 பேர் கொல்லப்பட்டனர், 38 பேர் காயமடைந்தனர்.
  • 2005 – இசுரேல் எரிக்கோவை சட்டநிறைவாக பாலத்தீனியர்களிடம் ஒப்படைந்தது.
  • 2006 – மாந்த உரிமைகளுக்கான அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஒத்திசைவாக இருக்கை வாக்களித்தது.
  • 2014 – கிரிமியாவில் நடைபெற்ற குழப்பத்திற்குரிய பொது கருத்துக்கணிப்பில் உக்ரைனில் இருந்து பிரிந்து உருசியாவுடன் இணையப் பெருமான்மையானோர் இருக்கை அளித்தனர் .

பிறப்புகள்

  • 1693 – மல்கர் ராவ் ஓல்கர், மராட்டிய மன்னர் (இ. 1766)
  • 1750 – கரோலின் எர்ழ்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1848)
  • 1751 – யேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது அரசுத்தலைவர் (இ. 1836)
  • 1774 – மேத்தியூ பிலிண்டர்சு, ஆங்கிலேய நிலப்படவியலாளர் (இ. 1814)
  • 1789 – யார்யு ஓம், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1854)
  • 1799 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேய தாவரவியலாளர், படப்பிடிப்பாளர் (இ. 1871)
  • 1839 – சல்லி புருதோம், நோபல் பரிசு பெற்ற பிரான்சியப் பாவலர் (இ. 1907)
  • 1859 – அலெக்சாண்டர் பப்போவ், உருசிய இயற்பியலாளர் (இ. 1906)
  • 1888 – எம். ஆர். சேதுரத்தினம், தமிழக அரசியல் சார்பாளர்
  • 1901 – பொட்டி சிறீராமுலு, இந்திய விடுதலைப்போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1952)
  • 1910 – இப்திகார் அலி கான் பட்டோடி, இந்திய-ஆங்கிலேய துடுப்பாளர், 8வது பட்டோடி நவாப் (இ. 1952)
  • 1916 – சுடோமு யாமகுச்சி, சப்பானிய பொறியியலாளர், தொழில் முதல்வர் (இ. 2010)
  • 1918 – எஸ். ஏ. நடராயன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர்
  • 1926 – யெர்ரி லுவிசு , அமெரிக்க நடிகர்
  • 1927 – விளாடிமிர் கொமரோவ், உருசிய விண்வெளி வீரர் (இ. 1967)
  • 1929 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர், நாட்டுப்புறவியலாளர் (இ. 1993)
  • 1929 – இரா. திருமுருகன், தமிழகத் தமிழறிஞர்
  • 1940 – இராயேசுவரி சண்முகம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நாடகக் கலைஞர் (இ. 2012)
  • 1953 – ரிச்சர்ட் சுடால்மன், கட்டற்ற மென்பொருள் இயக்கம், க்னூ திட்டம் போன்றவற்றின் தோற்றுவிப்பாளர்.
  • 1954 – அருண் வியயராணி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2015)
  • 1959 – இயென்சு சுடோல்ட்டென்பர்க், நோர்வேயின் 47வது முதல்வர்
  • 1959 – வியயதாச ராயபக்ச, இலங்கை அரசியல்சார்பாளர்

இறப்புகள்

  • 1940 – செல்மா லோவிசா லேகர்லாவ், நோபல் பரிசு பெற்ற சுவீடன் எழுத்தாளர் (பி. 1858)
  • 1963 – எம். பதஞ்சலி சாஸ்திரி, இந்தியாவின் 2வது தலைமை செங்கோல் அரசர் (பி. 1889)
  • 1974 – கோ. சாரங்கபாணி, தமிழக ஊடகவியலாளர், எழுத்தாளர், வெளியீட்டாளர் (பி. 1903)
  • 1989 – அழ. வள்ளியப்பா, தமிழகக் குழந்தை இலக்கியக் கவிஞர் (பி. 1922)
  • 2003 – இரேச்சல் கோரீ, அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1979)
  • 2008 – அனுரா பண்டாரநாயக்கா, இலங்கை அரசியல் சார்பாளர் (பி. 1949)
  • 2014 – அமலெந்து டே, இந்திய வரலாற்றாசிரியர் (பி. 1929)
  • 2016 – அலி அகமது உசேன் கான், இந்திய செனாய் இசைக்கலைஞர் (பி. 1939)கலைஞர் (பி. 1939)

மீனத்திங்கள் ௪(04)-ஆம் நாள் ;உலக நாள்காட்டி (17/03/2024)

  • 180 – மார்க்கசு ஆரேலியசு இறந்ததை அடுத்து அவரது மகன் கொம்மோடசு தனது 18-வது அகவையில் உரோமைப் பேரரசரானார்.[1]
  • 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
  • 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர்.
  • 1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
  • 1824 – இலண்டனில் கையெழுத்திடப்பட்ட ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன.
  • 1845 – இரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1861 – இத்தாலி அரசு உருவானது.
  • 1891 – பிரித்தானியாவின் யூட்டோப்பியா என்ற கப்பல் ஆன்சன் என்ற ஆத்திரேலியக் கப்பலுடன் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 562 பேர் உயிரிழந்தனர்.
  • 1919 – றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பரப்புரை செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.
  • 1939 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: குவோமின்டாங், சப்பான் இரண்டுக்கும் இடையே நான்சாங் போர் இடம்பெற்றது.
  • 1941 – வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
  • 1942 – பெரும் இன அழிப்பு: மேற்கு உக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாட்சி செருமனியரினால் நச்சு வளி செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
  • 1948 – பெல்யியம், பிரான்சு, லக்சம்பர்க், நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகள் பிரசெல்சு உடன்பட்டில் கையெழுத்திட்டன.
  • 1950 – கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் “கலிபோர்னியம்” என்ற 98-வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
  • 1957 – பிலிப்பீன்சு, சேபு என்ற இடத்தில் வானூர்தி ஒன்று நேர்ச்சிக்குள்ளாகியதில், பிலிப்பீன்சு அரசுத்தலைவர் ரமோன் மக்சேசே உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.
  • 1958 – ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செயற்கைக்கோளை ஏவியது.
  • 1959 – 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியா வந்து சேர்ந்தார்.
  • 1960 – அமெரிக்க அரசுத்தலைவர் டுவைட் டி. ஐசனாவர் கியூபாவுக்கு எதிரான மறைமுகத் தாக்குதலுக்கான தேசிய பாதுகாப்பு சபையின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இது பன்றிகள் விரிகுடா படையெடுப்புக்கு வழிவகுத்தது.
  • 1963 – பாலித் தீவில் ஆகூங்கு எரிமலை வெடித்ததில் 1,100 பேர் உயிரிழந்தனர்.
  • 1966 – காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை ஆல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் நடுவண் தரைக் கடல்பகுதியில் எசுப்பானியாவுக்கு அருகில் கண்டுபிடித்தது.
  • 1968 – அமெரிக்காவின் ஊட்டா மாநிலத்தில் நரம்பு வளியை ஆய்வு செய்ததில் 6,000 இற்கும் கூடுதலான ஆடுகள் இறந்தன.
  • 1970 – மை லாய் படுகொலைகள் தொடர்பானசெய்திகளை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்கபடைத்துறை 14 இராணுவ மேலாளர்கள் மீது குற்றம் சாட்டியது.
  • 1988 – கொலம்பியாவின் போயிங் விண்ணுந்து ஒன்று வெனிசுவேலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் உயிரிழந்தனர்.
  • 1988 – எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பிய படைத்துறை நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை தொடங்கினர் .
  • 1992 – ஆர்ஜெண்டீனாவில் இசுரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.
  • 1992 – தென்னாப்பிரிக்காவில் இனவொதுக்கலை முடிவுக்குக் கொண்டுவர நடத்தப்பட்ட பொது கருத்துக்கணிப்பில் 68.7% மக்கள் ஒத்திசைவாக இருக்கை அளித்தனர் .
  • 1996 – இலங்கை அணி ஆத்திரேலியாவைத் தோற்கடித்து துடுப்பாட்ட உலகக் கிண்ணத்தை வென்றது.
  • 2000 – உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் சமய இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 2004 – கொசோவோவில் இடம்பெற்ற வன்முறைகளில் 22 பேர் உயிரிழந்து, 200 பேர் காயமடைந்தனர். செர்பியாவில் 35 கிருத்தவள் கோவில்கள் , இரண்டு பள்ளிவாசல்கள் அழிவடைந்தன .

பிறப்புகள்

  • 1834 – காட்லீப் டைம்லர், செருமானிய பொறியியலாளர், தொழில் முதல்வர் (இ. 1900)
  • 1919 – நாட் கிங் கோல், அமெரிக்கப் பாடகர் (இ. 1965)
  • 1920 – சேக் முயிபுர் ரகுமான், வங்காள தேயத்தின் 1வது அரசுத்தலைவர் . 1975)
  • 1925 – மேயர் சுந்தரராயன், தமிழகத் திரைப்பட, மேடை நடிகர் (இ. 2003)
  • 1926 – சீக்பிரீட் லென்சு, போலந்து-செருமனிய எழுத்தாளர் (இ. 2014)
  • 1926 – கே. சங்கர், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தொகுப்பாளர் (இ. 2006)
  • 1939 – பங்காரு லட்சுமண், இந்திய அரசியல் சார்பாளர் (இ. 2014)
  • 1940 – காட்பிரீடு மூன்சென்பெர்கு, செருமானிய இயற்பியலாளர் (இ. 2024)
  • 1940 – எம். எச். எம். ஷம்ஸ், இலங்கை ஊடகவியலாளர், புலவர் , எழுத்தாளர் (இ. 2002)
  • 1955 – சிந்தியா மெக்கினி, அமெரிக்க அரசியல் சார்பாளர்கள்
  • 1964 – ராப் லோ, அமெரிக்க நடிகர்
  • 1975 – புனீத் ராச்குமார், இந்திய நடுகர், பாடகர்
  • 1990 – சாய்னா நேவால், இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை

இறப்புகள்

  • 1406 – இப்னு கல்தூன், துனீசிய குமுகாயவியலாளர், வரலாற்றாளர் (பி. 1332)
  • 1527 – ராணா சங்கா, இந்திய ஆட்சியாளர் (பி. 1482)
  • 1764 – யார்ச் பார்க்கர்ராங்கிலேய வானியலாளர், அரசியல் சார்பாளர் (பி. 1695)
  • 1782 – டேனியல் பெர்னூலி, டச்சு-சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1700)
  • 1846 – பிரீட்ரிக் வில்கெல்ம் பெசல், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர், இயற்பியலாளர் (பி. 1784)
  • 1849 – இரண்டாம் வில்லியம், இடச்சு மன்னர் (பி. 1792)
  • 1853 – கிறிசுடியன் டாப்ளர், ஆத்திரிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (பி. 1803)
  • 1956 – ஐரீன் யோலியட் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளர் (பி. 1897)
  • 1957 – ரமோன் மக்சேசே, பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (பி. 1907)
  • 1993 – டானியல் அன்ரனி, ஈழத்து சிறுகதை எழுத்தாளர் (பி. 1947)
  • 2011 – கியார்கிய் ஏ.கிராசின்சுகி, உருசிய வானியலாளர் (பி. 1939)
  • 2014 – மெர்சி எதிரிசிங்க, இலங்கை சிங்கள நடிகை, பாடகி (பி. 1945)
  • 2017 – டெரெக் வால்காட், நோபல் பரிசு பெற்ற செயின்ட் லூசியா எழுத்தாளர் (பி. 1930)
  • சிறப்பு நாள்

குழந்தைகள் நாள், (வங்காளதேசம்)
தேய முவாய் போர நாள் (தாய்லாந்து)
புனித பேட்ரிக்கின் நாள் (அயர்லாந்து, மற்றும் ஆங்கிலம் பேசும் நாடுகள்)

மீனத்திங்கள் ௫(05)-ஆம் நாள் ;உலக நாள்காட்டி (18/03/2024)

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

6 ஆறு                        ௬              19
7 ஏழு                           ௭              20
8 எட்டு                        ௮              21
9 ஒன்பது                   ௯              22
10 பத்து                      ௰              23
11 பதினொன்று         ௰௧           24
12 பன்னிரண்டு        ௰௨            25
13 பதின்மூன்று         ௰௩            26
14 பதினான்கு            ௰௪            27
15 பதினைந்து            ௰௫            28
16 பதினாறு                 ௰௬            29
17 பதினேழு                 ௰௭            30
18 பதினெட்டு             ௰௮            01
19 பத்தொன்பது         ௰௯            02
20 இருபது                  ௨௰             03
21 இருபத்தி ஒன்று     ௨௰௧        04
22 இருபத்தி இரண்டு ௨௰௨        05
23 இருபத்தி மூன்று    ௨௰௩        06
24 இருபத்தி நான்கு    ௨௰௪        07
25 இருபத்தி ஐந்து       ௨௰௫        08
26 இருபத்தி ஆறு        ௨௰௬         09
27 இருபத்தி ஏழு          ௨௰௭          10
28 இருபத்தி எட்டு       ௨௰௮          11
29 இருபத்தி ஒன்பது  ௨௰௯           12
30 முப்பது                   ௩௰                13

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button