அரிய பற்றியம்ஏனைய பற்றியம்

“எழுமையின் சிறப்பு “

எழுவகை அகத்திணைகள்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை

எழுவகை இசை
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்

ஏழு தலைமுறைப் பெயர்கள்

நாம் – முதல் தலைமுறை,
தந்தை + தாய் – இரண்டாம் தலைமுறை,
பாட்டன் + பாட்டி – மூன்றாம் தலைமுறை,
பூட்டன் + பூட்டி – நான்காம் தலைமுறை,
ஓட்டன் + ஓட்டி – ஐந்தாம் தலைமுறை,
சேயோன் + சேயோள் – ஆறாம் தலைமுறை,
பரன் + பரை – ஏழாம் தலைமுறை,
பரன் + பரை = பரம்பரை

ஏழு வண்ணங்கள்

1. ஊதா
2. கருநீலம்
3. நீலம்
4. பச்சை
5. மஞ்சள்
6. செம்மஞ்சள்
7. சிவப்பு

ஆண்களின் ஏழு பருவங்கள்

1. பாலன்-1 முதல் 7 அகவை வரை
2. மீளி- 8 முதல் 10 அகவை வரை
3. மறவோன்.-11 முதல் 14 அகவை வரை
4. திறவோன்-15வது அகவை
5. காளை-16வது அகவை
6. விடலை-17 முதல் 30 வயது வரை
7. முதுமகன்-30 அகவைக்கு மேல்.

பெண்களின் ஏழு பருவங்கள்

1. பேதை -5 அகவை முதல் 7 அகவை வரை
2. பெதும்பை- 8 அகவை முதல் 11 அகவை வரை
3. மங்கை- 12 அகவை முதல் 13 அகவை வரை
4. மடந்தை-14 அகவை முதல் 19 அகவை வரை
5. அரிவை- 20 அகவை முதல் 25 அகவை வரை
6. தெரிவை-26 அகவை முதல் 31 அகவை வரை
7. பேரிளம் பெண்-32 அகவை முதல் 40 அகவை வரை

பூவின் ஏழு பருவங்கள்

1. அரும்பு-அரும்பும் நிலை
2. மொட்டு-மொட்டு விடும் நிலை
3. முகை-முகிழ்க்கும் நிலை
4. மலர்-மலரும் நிலை
5. அலர்-மலர்ந்த நிலை
6. வீ-வாடும் நிலை
8. செம்மல்-வதங்கும் நிலை

தமிழேழு வள்ளல்கள்

பேகன், பாரி, காரி(மலையமான் திருமுடிக்காரி), ஆய், அதிகன் (அதியமான், நெடுமான் அஞ்சி), நள்ளி, ஓரி

நிலத்திணை(செடி)யின் திரிவாக்கத்தில் காணப்படும் எழுமை : முளை, துளிர், தளிர், கொழுந்து, இலை, பழுப்பு, சருகு.

மரத்தின் பாகங்களில் எழுமை : கவை, கொம்பு, கிளை, சினை, போத்து, குச்சி, இணுக்கு.

இலையின் வகைகளில் எழுமை : புல், தாள், மடல், தோகை, ஓலை, தழை, இலை.

பயிர் இளமையில் எழுமை :
நாற்று, கணு, குருந்து, மடலி, பிள்ளை, குட்டி, பைங்கூழ்.

மர அடர்த்தியில் எழுமை :
செய், தோப்பு, தோட்டம், காடு, சோலை, கானல், அடவி.

உழுவுநிலத்தில் எழுமை :
புனம், புலவு, கொல்லை, வானவாரி, புன்செய், நன்செய், மிசை.

பூவின் பருவத்தில் எழுமை:
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்.

காயின் பருவத்தில் எழுமை : பூப்பிஞ்சு, பிஞ்சு, கருங்காய், பழக்காய், காய்ப்பழம், பழம், கனி.

உணவுக்கூலத்தில் எழுமை:
தவசம், பயறு, கடலை, விதை, முத்து, கொட்டை, நெற்று.

உணவுக்கூலத்தின் மேல்தோல்களில் எழுமை :
பொட்டு, உமி, தொலி, தோல், கோது, தோடு, ஓடு.

விளைப்பொருள் வடிவங்களில் எழுமை :
சாறு, சோறு, சுளை, சதை, முத்து, அரிசி, பருப்பு.

நீர்நிலை வகைகளில் எழுமை: குட்டை, குளம், பொய்கை, ஊருண்ணி, ஏரி, கண்வாய், தடாகம்.

காற்றின் வகையில் எழுமை :
வளி, சூறாவளி, புயல், கொண்டல், கோடை, தென்றல், வாடை.

இசையின் (சுரங்களின்) எழுமை:
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ எனும் உயிர்நெடில்களை வைத்துக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.

யாழின் வகையில் எழுமை :
வில்யாழ், பேரியாழ், சுறவியாழ், சகோடயாழ், முண்டகயாழ், செங்கோட்டியாழ், சீறியாழ்.

ஏழு கண்டங்கள்

ஆசியா, ஆப்பிரிக்கா, ஆத்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button