ஏனைய பற்றியம்வரலாற்று மாந்தர்கள்

உ.வே.சாமிநாதையர்

உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள்!!

உ.வே.சாமிநாதையர்

பிறப்பு : 19 குடத்திங்கள் 1855.
நீத்தல்: 28 மேழம் 1942.
இடம்: சூரியமூலை, தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாநகரம்
பணி: பதிப்பாளர்.
அறியப்படுவது : அழிநிலை நூல்களைப் பதிப்பித்தமை/ தமிழறிஞர்/ தமிழ்த்தாத்தா

உ.வே.சாமிநாதையர் அவர்களைச் சுருக்கமாக உ.வே.சா என்று அழைப்பர்.இவர் எல்லோராலும் சிறப்பாகத் தமிழ்த் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ.வே.சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும்,செழுமையையும் அறியச் செய்தவர்.

தமிழர்கள் மறந்து போன ஒரு தமிழறிஞர்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதையர்.

சுமார் 3000-க்கும் கூடுதலான ஏட்டுச் சுவடிகளையும் ,கையெழுத்தேடுகளையும் காப்பகப்படுத்தியிருந்தார்.
இவர் மட்டும் இல்லையென்றால் தமிழர்களுக்கு இன்று தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி எதுவுமே தெரிந்திட வாய்ப்புகளில்லை.

உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை ‘என் சரிதம்’ என்று ஆனந்த விகடன் கிழமை இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார்.

இது 1950-ம் ஆண்டில் தனி நூல் வடிவம் பெற்றது. இந்நூலின் கையடக்க ஆவண வடிவமைப்புகள் கணிணியில் ஏராளமாக உள்ளன.

இன்றைக்காவது உ.வே.சாவின் ‘என் சரித்திரம்‘ படித்துப் பார்த்து அவருக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

தமிழ் பல ஆண்டுகள் வாழ்ந்திட,உயர்திரு. உ. வே. சாமிநாதையர் (தமிழ்த் தாத்தாவின் )
அருஞ்செயலால் எமக்குக் கிடைத்த நூல்கள்..

உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள்!!

நூல்களின் பெயர் ; பதிப்பித்த ஆண்டு ; முறையே ..

1.நீலி இரட்டை மணிமாலை 1874.

2.வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878.

3.திருக்குடந்தைப் புராணம் 1883.

4.மத்தியார்ச்சுன மான்மியம் 1885.

5.சீவக சிந்தாமணி 1887.

6.கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888.

7.திருமயிலைத் திரிபந்தாதி 1888.

8.பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889.

9.தண்டபாணி விருத்தம் 1891.

10.சிலப்பதிகாரம் 1892.

11.திருப்பெருந்துறைப் புராணம் 1892

12.புறநானூறு 1894

13.புறப்பொருள் வெண்பா மாலை 1895

14.புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898

15.மணிமேகலை 1898

16.மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898

17.ஐங்குறுநூறு 1903

18.சீகாழிக் கோவை 1903

19.திருவாவடுதுறைக் கோவை 1903

20.வீரவனப் புராணம் 1903

21.சூரைமாநகர்ப் புராணம் 1904

22.திருக்காளத்தி நாதருலா 1904

23.திருப்பூவண நாதருலா 1904

24.பதிற்றுப் பத்து 1904

25.திருவாரூர்த் தியாகராச லீலை 1905

26.திருவாரூருலா 1905

27.திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906

28.தனியூர்ப் புராணம் 1907

29.தேவையுலா 1907

30.மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907

31.திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908

32.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910

33.திருக்காளத்திப் புராணம் 1912

34.திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
பரிபாடல் 1918

35.உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924

36.பெருங்கதை 1924

37.நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925

38.நன்னூல் மயிலை நாதருரை 1925

39.சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928

40.தக்கயாகப் பரணி 1930

41.தமிழ்விடு தூது 1930

42.பத்துப் பாட்டு மூலம் 1931

43.மதுரைச் சொக்கநாதர் உலா 1931

44.கடம்பர் கோயிலுலா 1932

45.களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932

46.சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932

47.பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932

48.பழனி பிள்ளைத் தமிழ் 1932

49.மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932

50.வலிவல மும்மணிக் கோவை 1932

51.சங்கரலிங்க உலா 1933

52.திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933

53.பாசவதைப் பரணி 1933

54.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 1 1933

55.சங்கர நயினார் கோயிலந்தாதி 1934

56.மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் – பகுதி 2 1934

57.விளத்தொட்டிப் புராணம் 1934

58.ஆற்றூர்ப் புராணம் 1935

59.உதயண குமார காவியம் 1935

60.கலைசைக் கோவை 1935

61.திரு இலஞ்சி முருகன் உலா 1935

62.பழமலைக் கோவை 1935

63.பழனி இரட்டைமணி மாலை 1935

64.இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936

65.கனம் கிருஷ்ணயைர் 1936

66.கோபால கிருஷ்ண பாரதியார் 1936

67.திருநீலகண்டனார் சரித்திரம் 1936

68.திருமயிலை யமக அந்தாதி 1936

69.திருவள்ளுவரும் திருக்குறளும் 1936

70.நான் கண்டதும் கேட்டதும் 1936

71.புதியதும் பழையதும் 1936

72.புறநானூறு மூலம் 1936

73.பெருங்கதை மூலம் 1936

74.மகாவைத்தியநாதையைர் 1936

75.மான் விடு தூது 1936

76.குறுந்தொகை 1937

77.சிராமலைக் கோவை 1937

78.தமிழ்நெறி விளக்கம் 1937

79.திருவாரூர்க் கோவை 1937

80.நல்லுரைக் கோவை பகுதி 1 1937

81.நல்லுரைக் கோவை பகுதி 2 1937

82.நினைவு மஞ்சரி – பகுதி 1 1937

83.அழகர் கிள்ளை விடு தூது 1938

84.சிவசிவ வெண்பா 1938

85.திருக்கழுக்குன்றத்துலா 1938

86.திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938

87.திருமலையாண்டவர் குறவஞ்சி 1938

88.நல்லுரைக் கோவை பகுதி 3 1938

89.குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939

90.தணிகாசல புராணம் 1939

91.நல்லுரைக் கோவை பகுதி −4 1939

92.புகையிலை விடு தூது 1939

93.மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939

94.கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940

95.திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940

96.வில்லைப் புராணம் 1940

97.செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941

98.நினைவு மஞ்சரி – பகுதி 2 1942

99.வித்துவான் தியாகராச செட்டியார் 1942

நன்றி .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button