ஈழம்படைப்புகள்

தமிழீழத்தின் தேயக்கொடி, தமிழீழ கட்டமைப்பு – ஒரு தொகுப்பு.

இப்பதிவு தனித்தமிழுக்கு முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது . ( தமிழைத்தேடித்தலைவரும் வழிச்செலவுசெய்தார் என்பதனால் அவர்விட்டுச்சென்ற பணியைத்தொட்டுச்செல்வதில் தவறில்லை )

தமிழீழத்தின் தேயக்கொடி , தமிழீழக்கட்டமைப்புப்பற்றிய ஒருதொகுப்பு.

தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழினம் தலைநிமிர்ந்தநாள்  தமிழீழமக்களின் அடையாளமாகவும், தமிழர்களை தனிப்பெரும் ஆற்றலாக பாருக்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்திரண்டாம் ஆண்டின் நடுப்பகுதியில் தனது பதினேழாவது அகவையில் , “புதியதமிழ்ப்புலிகள்” என்ற பெயரிடன் தமிழ்த்தேயத்தலைவர் பிரபாகரனால்  தொடங்கப்பட்டது.

அதன்பின்னர் தமிழ்த்தேயத்தலைவர் “புதியதமிழ்ப்புலிகள்” என்ற பெயரிலிருந்த இயக்கத்தை ஒருபெரிய படையினராக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (LTTE) ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்தாறாம் ஆண்டு, விடைத்திங்கள் ,ஐந்தாம்நாள் தொடங்கினார்.

அன்றுதொட்டு வளர்ந்து ஓரமைப்பாகி,  தரை , கடல், வான் என விரிந்து பல்வேறு படைத்துறைசார், மக்கள்சார் கட்டமைப்புகளாக விரிந்து, தமிழர்களுக்கான தாயகம், தேயம், தன்னாட்சியுரிமை என்ற அடிப்படை வேண்டுகோள்களுக்காக போராடிய அதேநேரத்தில், தனிநாடு என்ற கட்டமைப்புக்கான அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

புலிக்கொடி.

தேயக்கொடியும் அதிலுள்ள வண்ணங்களும்.

அந்த வகையில்தான் இயக்கத்தின் கொடியாக இருந்த புலிக்கொடி, அதில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு, தமிழீழ தேயக்கொடியாகக்கொண்டுவரப்பட்டது.

எமது தேயகொடியை மஞ்சள்,சிவப்பு,கறுப்பு,வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.  தொடக்கத்தில் தேயக்கொடியில் வெள்ளை நிறம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் இடைக்காலத்தில் வெளிவந்த பதிப்புகளில் வெள்ளைநிறம் தவறவிடப்பட்டிருந்தது.(26-11-2005) இருபத்தாறாம்நாள் , நளித்திங்கள், இரண்டாயித்தைந்து அன்று அமைப்பில் அலுவகமுறைப்படி  வெளியிடப்பட்ட கையேட்டில் தேயக்கொடிவடிவம் பயன்படுத்தும் முறைமை தொடர்பான விரிவான விளக்கம் வந்திருந்தது.

தமிழீழமக்களுக்கு ஒருதாயகமுண்டு. அத்தாயகம் அவர்களது உடமையுரிமை. தமிழீழமக்கள் ஒரு தனித்துவமான தேய இனம் என்பதால் அவர்களுக்கு தன்னாட்சியுரிமையுண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படையரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழமக்கள் மேற்கொண்டுள்ள தேய விடுதலைப்போராட்டம் அறத்தின்பாலானது.

  • மாந்தவறத்தை அடிப்படையாகக்கொண்டது என்பதை மஞ்சள்நிறம் சுட்டி நிற்கின்றது.
  • ஏற்றத்தாழ்வுகளற்ற, வகுப்பு ,சமய, முரண்பாடுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிசார்பான அரசியல் குறிக்கோளை சிவப்புநிறம் குறியீடு செய்கின்றது.
  • கரடுமுரடான சாவும், அழிவும், தாங்கொணாத்துன்பங்களும் நிறைந்த வழிக்கூடாகச்சென்று எமது குறிக்கோளை அடைவதற்கு வேண்டிய உருக்குப்போன்ற உள்ளவுறுதியை கறுப்புநிறம் குறித்துக்காட்டுகின்றது.
  • அமைப்பினதும் போராட்டத்தினதும் தூய்மையை, நேர்மையை வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

எமது பண்டைய தமிழ் அரசின் கொடியில் வாள் குறுக்காக இருக்கும். அதனை அடிப்படையாகவைத்தே துமிக்கி குறுக்காக எமது கொடியில் வந்ததாக தலைவர் சொல்கிறார்.

அக்கொடியில் வட்டமாக முப்பத்துமூன்று குண்டு இருக்கின்றது. அதற்கான விளக்கம் கொடுக்கப்படாமல், அது அப்படியேயிருந்தது.

ஆனால் ஆயிரத்துத்தொள்ளாயிரத்து எழுபத்தாறாம் ஆண்டு , விடைத்திங்கள் , ஐந்தாம் நாள்
தொடங்கிய ஆய்த விடுதலைப்போராட்டம்  இரண்டாயிரத்தொன்பது விடைத்திங்கள் பதினெட்டாம்நாளில்அமைதிகாக்கப்பட்டது  வரையான
காலப்பகுதிமுப்பத்துமூன்று ஆண்டுகள்.

சிலவற்றைச்சொல்லியும் சிலவற்றைச்சொல்லாமலும் காலம் கற்பிக்குமென புரிந்துகொள்வதற்கே விட்டுச்சென்ற பலசெய்திகளில் இதுவுமொன்றாக இருக்ககூடும்.

தமிழீழத்தேயக்கொடி , எமக்கான அடையாளம். உயிரீகங்களினால் மதிப்புப்பெற்ற கொடி. அதனைப்போற்றுவதும் ஏற்றுவதும் எமது கடமையாகும்.

இதனைப்போலவே விடுதலைக்கான போராட்ட காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள் பற்றிய தொகுப்பு திரட்டப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும் செய்தியின் அடிப்படையில் அவை முழுமைப்படுத்தப்படும் என எண்ணுகின்றோம்.

தமிழீழக்கட்டமைப்புகள்.

01.படைத்துறை (தரைப்படை ,பல்வேறு படை யணிகள்) இம்ரான்பாண்டியன் படையணி, யெயந்தன் படையணி, சார்ள்சு் அன்ரனி சிறப்புப்படையணி, கிட்டு பீரங்கிப்படையணி, ராதா வான்காப்புப்படையணி, குட்டிசிறி உந்துருளிப்படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப்படையணி, விக்டர் கவசயெதிர்ப்புப்படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப்படையணி, யாழ் செல்லும் படையணி, பதுங்கித்தாக்குதல் அணிகள், குறிபார்த்துச்சுடும் படையணி, ஆழஊடுருவி பதுங்கித்தாக்குதல் அணி, சிறுத்தைப்படையணி, பொன்னம்மான் மிதிவெடிப்பிரிவு, ஆய்தக்களஞ்சியச்சேர்க்கை, வேவுப்பிரிவு.
02. கடற்புலிகள்: நீரடி நீச்சற்பிரிவு, கடல் வேவு அணி, சார்ல்சு் சிறப்புக்கடற்புலிகள் அணி, அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சலணி (பெண்கள்), நிரோயன் ஆழ்கடல் நீச்சலணி, கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி, நீரடி நீச்சலணி, படகு கட்டுமானப்பகுதி, கடற்கண்காணிப்புப்பிரிவு (Radar Monitoring)
03. வான்புலிகள்
04. கரும்புலிகள்
05. அரசியற்றுறை (அரசியற்தொடர்பு, மக்கள் தொடர்பு, பரப்புரை, கொள்கை முன்னெடுப்புப் பிரிவு)
06. புலனாய்வுத்துறை (வெளியகப்புலனாய்வுப் பிரிவு, உள்ளகப்புலனாய்வுப்பிரிவு)
07. படையப்புலனாய்வுப்பிரிவு.     
08. தமிழீழப்படைத்துறைப்பள்ளி
09. கல்விப்பயற்சிப்பிரிவு :தொடக்கப்பயிற்சிக்கல்லூரி, சிறப்புப்பயிற்சிக்கல்லூரி, பட்டய அறிவியற்கல்லூரி (MO), படைத்துறை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, மேலாளர்கள்பயிற்சிக்கல்லூரி.
10. ஒட்டுக்கேட்கும் பிரிவு (Communication Monitoring – படையினர் நகர்வு விண்ணூந்துத்தாக்குதல் பற்றிய செய்திகளை ஒட்டுக்கேட்டு அணியப்படுத்தும் அணி)
11. வரைபடப்பிரிவு (மாதிரிகள் அமைக்கும் அணி (model), தொலைத்தொடர்பு கமுக்க மொழி, தாள்கள் உருவாக்கும் அணி)
12. போர்க்கள ஆய்வு நடுவம்.
13. சுடுகலன் ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு
14. அனைத்துலகச்செயலகம் (வெளிநாட்டுக்கிளைகளமைப்பு)
15. வழங்கற்பிரிவு
16. விடுதலைப்புலிகளின் அமைதிபணிச்செயலகம்
17. எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை
18. தலைமைச்செயலகம்.
19. தலைமைச்செயலக பாதுகாப்பு அணி
20.தொழில் நுட்பப்பிரிவு(கணனிப்பிரிவு)
21. போர்க்கருவித் தொழிலகம்

பொதுப்பிரிவு

01. ஒளிப்பதிவுப்பிரிவு (உள்ளக படப்பிடிப்பு, களப்படப்பிடிப்பு)
02. நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான­ தொடர்பாடல் தொண்டு  நடுவம்)
03. மருத்துவப் பிரிவு: திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு, பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை,  லெப். கேணல் கௌசல்யன் நினைவுகொள் நடமாடும் மருத்துவத் தொண்டு.
04. தமிழீழ தூய்மைப்பணிகள் (மருத்துவத்தொண்டு, உடல் உளநலன் விழிப்புணர்வுத்தொண்டுகள்)
05. வெண்புறா ( செயற்கைகால் அணியப்படுத்து நிலையம்)

மக்கள் பணிப்பகம்

01. தமிழீழக் காவற்துறை (காவல்துறை, குற்றத்தடுப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுப்பிரிவு, திருத்தப்பள்ளி)
02. தமிழீழ காடுவளத்துறை
03. தமிழீழ பணத்துறை
04. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம்
05. தமிழீழ சொங்கோல்த்துறை (தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ சட்டவாக்கப்பிரிவு, சொங்கோல் மன்றுகள்)
06. தமிழீழ மேலாண்மைத்தொண்டு(மாவட்ட திட்டமிடலுக்கும் மேம்பாட்டிற்குமான) செயலகங்கள்
07. சூழல் நல்லாட்சி ஆணையகம்
08. பெண்கள் மேன்மை மறுவாழ்வு நடுவம்
09. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை 10. தமிழீழ விளையாட்டுத்துறை
11. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் நிலையம்.
12. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களம்
13. தமிழீழ போக்குவரவுக்கழகம்
14. வடகிழக்கு மாந்தவுரிமைகள் செயலகம் (NESoHR)
15. தமிழீழ போக்குவரத்து கண்காணிப்புப்பிரிவு ( கடவட்டை வழங்கும் பகுதி)
16. தமிழீழ மாணவர் அமைப்பு (அன்னை பூபதி பொதறிவுப்போட்டி)
17. தமிழீழ வைப்பகம் http://www.bankoftamileelam.net/
18. தமிழர் புனர்வாழ்வுக்கழகம்
19. தமிழீழக்கல்வி மேம்பாட்டுப்பேரவை (தமிழீழ வரலாற்றுக்கல்வி நூல் வெளியீடு)
20. உல்குடைத்திறைத்துறை
21. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம்
22. பொருண்மிய மதியுரையகம் (The Economic Consultancy House)
23. அனைத்துலக தொலைத்தொடர்புச்செயலகம்
24. மாந்தவளச்செயலகம் (தமிழீழ சிற்றூர்த்தொண்டுப்பிரிவு)
25. தமிழீழக்கல்விக்கழகம்
26. தமிழீழக்கட்டுமானப்பொறியியல் செயலகம்

காப்பகங்கள்.

01. காந்தரூபன் அறிவுச்சோலை (இரவணைப்பற்ற ஆண் குழந்தைகள்)                           
02. செந்தளிர் இல்லம் (5 அகவைக்குட்பட்ட அரவணைப்பற்ற குழந்தைகள்)                         
03. செஞ்சோலைச் சிறார் இல்லம் (அரவணைப்பற்ற பெண் குழந்தைகள்)                           
04. வெற்றிமனை (வலுவிழந்தோர்)                                                                                                         
05. அன்பு இல்லம் (முதியோர்)                                                                                                                   
06. தளிர்கள் (தாய் தந்தை இருவரும் போராளிகளாக இருப்பவர்கள் அல்லது தாய் ,தந்தையில் ஒருவர் மாவீரராக உள்ள சிறார்களின் முன்பள்ளி)                                                           
07. இனிய வாழ்வு இல்லம் (காதுகேளா, வாய்பேசா ,பார்வையில்லா
மாற்றுதிறனாளிச்சிறுவர் சிறுமிகளுக்கானது).                                                                               
08. மகிழ்வு உளவள நடுவம். (மனநோயாளிகளுக்கானது)­.                                                           
09. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது).                             
10. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண்போராளிகளுக்கானது)

ஊடகப்பிரிவு.

01. அறிவமுது பொத்தகசாலை.                                                                                                                 
02. விடுதலைப் புலிகள் செய்தி இதழ், ஈழநாதம் செய்தி இதழ், வெளிச்சம் செய்தி இதழ், விடுதலைப்பறவைகள் (பெண்கள் செய்தியிதழ்)                       
03. ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப்பிரிவு                                                           
04. தமிழீழ தேயத்தொலைக்காட்சி                                                                                                         
05. நிதர்சனம் (திரைப்பட அணியம், ஒளிவீச்சு காணொலி சஞ்சிகை அணியம்,மொழியாக்கப்பிரிவு)
06. புலிகளின்குரல் வானொலி, தமிழீழவானொலி,சிங்களவானொலி                                   
07. தமிழீழ இசைக்குழு                                                                                                                                   
08. இணையச்செய்தி நிறுவனங்கள் (தமிழ்நெற் என்ற ஆங்கில இணையமும் புதினம் என்ற தமிழ்ச்செய்தி இணையமும் நேரடி தொடர்பாடலுடன் செயற்பட்டிருந்தன).

மாவீரர்களுக்கானது.

01. மாவீரர் பணிமனை                                                                                                                                
02. (தியாகசீலம்) ஈகஒழுக்கம்                                                                                                                   
03. மாவீரர் துயிலும் இல்லங்கள்

 வணிகநிலையம்.

01. சேரன் வாணிபம், சேரன் சுவையகம்
02. பாண்டியன் உற்பத்திப் பிரிவு, பாண்டியன் வாணிபம், பாண்டியன் சுவையூற்று

03. சோழன் உருவாக்கங்கள்                                                                                                                        04. பொன்னம்மான் உரவகை வாணிபம்
05. தென்றல் இலத்திரனியலகம்
06. தமிழ்மதி நகை மாடம், தமிழ்நிலா நகை மாடம், தமிழரசி நகை மாடம்
07. அந்திவானம் பதிப்பகம்
08. இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
09. ஒளிநிலா திரையரங்கு
10. அந்திவானம் பதிப்பகம்.
11. இளவேனில் எரிபொருள் நிலையம்.
12. இளந்தென்றல் தங்ககம், A9 தங்ககம்
13. காலணி
(காலணி உருவாக்கு நிலையம்)
14. மருதம் வாணிபம்.
15. மருதம் புலால் விற்பனை நிலையம்
16. மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
17. கேடில்சு் தும்புத்தொழிற்சாலை

கல்வி நிலையங்கள்.

01. தமிழ் ஊடக அறிவியற்கல்லூரி
02. தொழில்நுட்பக்கல்லூரி
03. அரசறிவியற்கல்லூரி
04. தமிழீழப்பல்கலைக்கழகம் (கிளிநொச்சி அறிவியல் நகர்ப்பகுதியில் இதற்கான திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோதும் முழுமையடையவில்லை)
05. சிறுவர் கணனிப்பூங்கா

ஒன்றிணைந்த குழுக்கள்.

01. விழிப்புக்குழு (சிற்றூர்களுக்கான இரவுப்பாதுகாப்பு)
02. சிற்றூர் கடற்றொழிலாளர் சங்கம் , அவை , மேலாளர் ஒருங்கமைப்புக்குழு (மாவட்டம்)– இணையம் (மாநிலம்) கட்டமைப்புகள்.
03. மாவீரர் அரங்குகள்.
04. மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
05. மாவீரர் நினைவுத்தெருக்கள்.
06. மாவீரர் நினைவுக்குடியிருப்புத்திட்டங்­கள்.
07. மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
08. மாவீரர் நினைவுப்பூங்காக்கள்
(தியாகசீலம் ) ஈக ஒழுக்கம் பூங்கா, சந்திரன் பூங்கா)
09. மாவீரர் நினைவுப்படிப்பகங்கள்.
10. மாவீரர் நினைவு நூலகங்கள்.
11. மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
12. பெருமாந்தர் விருதுகள்
(தமிழ்த்தேயப்பணி, குமுகாய, பொதுத்தொண்டுகள் செய்வோருக்கானது).

 

இப்பதிவானது தனித்தமிழில் எழுதப்பட்டுள்ளது . தமிழீழ தேயத்தலைவர் தனித்தமிழை வளத்தெடுக்கும் தொண்டையும் போராட்டத்தோடு சேர்த்து எடுத்துச்சென்றார் . தனித்தமிழில் பலவற்றை மாற்றி அமைத்துக்கொண்டு வந்தார் . அவர் விட்டுச்சென்ற பணியைத்தொட்டுச்செல்வதும் எமது கடமையேயெனும் அடிப்படையில் துளிவானொலி மொழிமாற்றத்திற்கான பொறுப்பை முழுமையாகயேற்கிறது.

(இப்பதிப்பானது மீண்டும் புதிய செய்திகள் கொண்டு மேம்படுத்தப்படும் . )

நன்றி ..

வாழ்க தமிழ்..!

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button