ஈழம்

கரும்புலிகள் – தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதற்படையணி.

கரும்புலிகள்நாள் -ஐந்தாம்நாள் கடகத்திங்கள் .

கரும்புலிகள் – தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலைத்தாக்குதற்படையணி.

தொடக்ககாலம்:
நாள்: ஐந்தாம்நாள் கடகத்திங்கள் ஆயிரத்துதொள்ளாயிரத்து எண்பத்தேழு.
இடம்: யாழ்ப்பாணம், நெல்லியடி.
தொடங்கியவர்: கரும்புலி கப்டன் மில்லர் (உண்மை பெயர்: வல்லிபுரம் வசந்தன்)
நிகழ்வு: இலங்கை படைத்துறைப்பாசறையின் மீது முதலாவது தற்கொலைத்தாக்குதல் நடைபெற்றது.

கரும்புலிகள் என்றால் யார்?

கரும்புலிகள் என்போர் தமிழீழ விடுதலைப்புலிகளின் உள்ளகத்திலேயே மிகுந்த கட்டுப்பாடும் பயிற்சியுமுடைய தற்கொலைத்தாக்குதல் படையணியைகுறிக்கும்.
இவர்கள்,தங்களது உயிரைப்பற்றிக்கவலைக்கொள்ளாமல் உயர்ந்த குறிக்கோளுடன் செயல்படுவோர். திட்டமிட்டு மிகச்சிறந்த பயிற்சியுடன் தாக்குதல்களில் ஈடுபடுவோராவர்.

முழுமையானகணிப்பு (ஆயிரத்துதொள்ளாயிரத்து எண்பத்தேழு–இரண்டாயிரத்தேழு):
மொத்த கரும்புலிகள்: முந்நூற்று இருபத்திரெண்டு.
தரைக்கரும்புலிகள் : எண்பத்தொருபேர் . கடற்கரும்புலிகள் : இருநூற்று நாற்பத்தொருபேர்.
இவர்களில் பெரும்பாலோர் இலங்கையின் எல்லைக்குள் மறச்சாடைந்துள்ளனர்.

பிரிவுகள் (வகைகள்):
வகை : விளக்கம்
தரைக்கரும்புலிகள்-நிலத்திலுள்ள குறிகள்மீது தற்கொலைத்தாக்குதல் மேற்கொள்ளும் படையணி.
மறைமுகக்கரும்புலிகள்- அடையாளமின்றி, கமுக்கமுறையில் செயல்பட்டு தற்கொலைத்தாக்குதலில் ஈடுபடும்குழு.
கடற்கரும்புலிகள்-கடற்படைக்காக அணியம் செய்யப்பட்ட தற்கொலைப்படை. கப்பல்களுக்கு எதிரான தாக்குதல்கள்.
வான்கரும்புலிகள் : வான்வழித்தாக்குதல்களுக்கான தற்கொலைப்படை. வானூர்திகள்மூலம் தாக்குதல் மேற்கொள்கின்றனர்.

முதன்மைத்தாக்குதல்கள்:

➤ தரைக் கரும்புலி தாக்குதல்:
முதற்றாக்குதல்:
நாள்: ஐந்து கடகம் ஆயிரத்துதொள்ளாயிரத்து எண்பத்தேழு.
இடம்: நெல்லியடி, யாழ்ப்பாணம்.
மறவர்: கப்டன் மில்லர்
குறி: இலங்கை படைத்துறைப்பாசறை.
பின்னுரை: “Operation Liberation” என்ற படைத்துறை நடவடிக்கையை முடக்கியதாக்குதல்.

➤ கடற்கரும்புலித்தாக்குதல்:
நாள்: பத்து கடகம் ஆயிரத்துதொள்ளாயிரத்து தொண்ணூறு.
வீரர்கள்: மேயர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்சு.
குறி: P-715 “எடித்தாரா” இலங்கை கடற்படைக்கப்பல்.
இடம்: வல்வெட்டித்துறை கடற்பரப்பு.
முடிவு: கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

➤ வான் கரும்புலி தாக்குதல்:
நாள்: இருபது குடம் இரண்டாயிரத்தொன்பது .
மறவோர்: கேணல் ரூபன், லெப். கேணல் சிறிதரன்.
குறி:கொழும்பு – உள்நாட்டு வருவாய் துறை (ஐஆர்டி)
கட்டுநாயக்கா விண்ணூந்துப்படைத்தளம்
விண்ணூந்து: சிறிய அமைப்பு வானூர்திகள்.
வெடிபொருட்களுடன் தாக்குதல்: வானூர்திகள் சுட்டுவீழ்த்தப்பட்டன.
பாதிப்பு: பொதுமக்கள் காயம், விண்ணூந்து ஓட்டுநரின் உடற்றொகுதி மீட்பு.

➤ மறைமுகக்கரும்புலிகள்:
கமுக்கமாக நுழைந்து முதன்மைக்குறிகளை அழிக்கும் சிறப்பு மறவோர்.
இவர்களின் பெயர்கள், வடிவங்கள் வெளியிடப்படுவதில்லை,
இவர்கள் நினைவுக்கல்லிலோ, மாமறவர் பட்டியலிலோ இடம்பெறமாட்டார்.
இவர்களே உண்மையான மறைந்துவாழும் மறவோர் எனக்கருதப்பட்டனர்.

⚖️ முதன்மைநிகழ்வு:
இலங்கை முதல்வர் ரணசிங்க பிரேமதாசா, கரும்புலிகள் நடத்திய தற்கொலைத்தாக்குதலில் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றுமூன்றாம் ஆண்டு கொல்லப்பட்டார் என நம்பப்படுகிறது.

கொள்கை:
கரும்புலிகளின் இயக்கமும் கரும்புலிகள்நாளின் நோக்கமும் தாயகவிடுதலை, இனவுரிமை, தன்னாட்சி, மற்றும் ஈகத்திற்கான மதிப்பு என்பவற்றை வெளிக்காட்டுகிறது.

“ஈகமே உயர்ந்த வழி”,
“மக்களை முதன்மைப்படுத்தி தங்களை இரண்டாவதாக எண்ணு” என்பவை இவர்களின் முதன்மைக்கொள்கைகளாகும்.

நினைவுநாள் நோக்கம்:
ஈகர்களை நினைவுகூர்தல்.
இளையர்களுக்கு நாட்டுப்பற்றும் விடுதலை உணர்வும் ஊட்டுதல்.
போரின் உரிமைதேடல்பற்றிய கருத்துகளை ஊன்றுதல்.

தடை:
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டிற்குப்பிந்தைய காலத்தில், இலங்கையரசு இந்நாளை நினைவுகூர்வதை வெளிப்படையாகத்தடைசெய்தது.இந்நாளை நினைத்ததற்கே ஒறுத்தல் கிடைக்கும் சூழல் தொடரும் நிலையில்
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழர், ஆண்டுதோறும் கடகத்திங்கள் ஐந்தாம்நாளன்று கரும்புலிகள்நாளை நினைவுகூரத்தவறுவதில்லை .

️ புகழோங்கும் சொற்றொடர்கள்:

“வேர்கள் வெளியிலே தெரிவதில்லை – சில வீரங்கள் முகவரி தெரியாதவை
பெயர்களைக் கூற முடியாதவை – கரும்புலிகள் கல்லறை வெளியில் இல்லை”
– புதுவை இரத்தினதுரை.

முடிவுரை:

கரும்புலிகள் என்பவர்கள் எளிமையான போராளிகள் அல்லர்.அவர்கள் குறிக்கோளின் உணர்வின் உச்சக்கட்டம்;உயிரையும் ஈகைசெய்யும் உயரந்த ஆற்றலர்;தமிழீழத்தின் விடுதலை கனவுக்காகச்சுடும் தீ.

இவர்கள் போரின் கடுமையான முகத்தையும், ஒரு குமுகத்தின் உள்ளுள அமைதியின் சிதறலையும் வெளிப்படுத்தியோர்.

ஈழம் என்பது ஒரு புவியியல் பகுதி மட்டுமன்று; அது தமிழரின் அறம், அரசியல், உணர்வு, மற்றும் வாழ்வுரிமைக்கான விடுதலைக்குரல் ஆகும். கரும்புலிகள்நாள் என்பது, அக்குரலை உரத்துச்சொல்லும் நினைவுநாள். யாராக இருந்தாலும், ஒருவரின் தாயகப்பற்றும், ஈகமும், விடாமுயற்சியும் மதிக்கப்படவேண்டும். அதுவே உண்மையான மாந்தநேயமும், வரலாற்று உணர்வும் ஆகும்.

“மறம் வீழ்ந்தாலும் நினைவு வீழாது;
ஈகம் முடிந்தாலும் கனவு முடிவதில்லை!”

நன்றி .
வாழ்க தமிழ் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button