
* பூவழகே பூவழகே – உன்
பூவிதழ் பல நூறழகே !
* பொன்னழகே பொன்னழகே
பொன்னை விட நீயழகே !
* உச்சி முகர்ந்தேனடி – உன்
உச்சி துடிக்கையில் வேர்த்தேனடி!
* கண்ணயர்ந்து நீ துயிலயிலே,
கனவுலகை வெல்வாயடி!
* மண்ணுலகம் நீ வந்தாயடி!
விண்ணுலகம் போற்ற வாழ்வாயடி!
* நாளை நீ உலகம் வெல்ல,
இன்று கண்ணுறங்கு கண்மணியே!
* வையத்தில் வஞ்சனைகள் நிறைந்திருக்க,
* வாஞ்சனையால் நீ மாற்றுவாயடி!
* தமிழ்த்தேனே நீ கண்ணுரங்கு,
தமிழ் மகளாய் வளர்வாய் நாளை இங்கு !
கவிதாயினி விமலாதேவி




