
அறுபது ஆண்டுகட்குமான(தமிழ் / சங்கத) பெயர்கள்.
எண் - தமிழ் - சங்கதம்.
௧. நற்றோன்றல் - பிரபவ. ௨. உயர்தோன்றல் - விபவ. ௩. வெள்ளொளி - சுக்ல. ௪. பேருவகை - பிரமோதூத. ௫. மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி. ௬. அயல்முனி - ஆங்கீரஸ. ௭. திருமுகம் - ஸ்ரீமுக. ௮. தோற்றம் - பவ. ௯. இளமை - யுவ. ௰. மழை - தாது. ௰௧. ஈச்சுரம் - ஈஸ்வர. ௰௨. கூலவளம் - வெகுதானிய. ௰௩. முதன்மை - பிரமாதி. ௰௪. நேர்நிரல் - விக்கிரம. ௰௬. விளைபயன் - விஷு. ௰௬. ஓவியக்கதிர் - சித்திரபானு. ௰௭. நற்கதிர் - சுபானு. ௰௮. தாங்கெழில் - தாரண. ௰௯. நிலவரையன் - பார்த்திப. ௨௰. விரிமாண்பு - விய. ௨௰௧. முற்றறிவு - சர்வசித்து. ௨௰௨. முழுநிறைவு - சர்வதாரி. ௨௰௩. தீர்பகை - விரோதி. ௨௰௪. வளமாற்றம் - விக்ருதி. ௨௰௫. செய்நேர்த்தி - கர. ௨௰௬. நற்றலைமை - நந்தன. ௨௰௭. உயர்வாகை - விஜய. ௨௰௮. வாகை - ஜய. ௨௰௯. காதன்மை - மன்மத. ௩௰. வெம்முகம் - துன்முகி. ௩௰௧. பொற்றாடை - ஹேவிளம்பி. ௩௰௨. அட்டி - விளம்பி. ௩௰௩. எழில்மாறல் - விகாரி. ௩௰௪. வீறியெழல் - சார்வரி. ௩௰௫. கீழறை - பிலவ. ௩௰௬. நற்செய்கை - சுபகிருது. ௩௰௭. மங்கலம் - சோபகிருது. ௩௰௮. பகைக்கோடு - குரோதி. ௩௰௯. உலகநிறைவு - விசுவாசுவ. ௪௰. அருட்டோற்றம் - பரபாவ. ௪௰௧. நச்சுப்புழை - பிலவங்க. ௪௰௨. பிணைவிரகு - கீலக. ௪௰௩. அழகு - சவுமிய. ௪௰௪. பொதுநிலை - சாதாரண. ௪௰௫. இகல்வீறு - விரோதகிருது. ௪௰௬. கழிவிரக்கம் - பரிதாபி. ௪௰௭. நற்றலைமை - பிரமாதீச. ௪௰௮. பெருமகிழ்ச்சி - ஆனந்த. ௪௰௯. பெருமறம் - ராட்சச. ௫௰. தாமரை - நள. ௫௰௧. பொன்மை - பிங்கள. ௫௰௨. கருமை வீச்சு - காளயுக்தி. ௫௰௩. முன்னியமுடிதல்- சித்தார்த்தி. ௫௰௪. அழலி - ரவுத்திரி. ௫௰௫. கொடுமதி - துன்மதி. ௫௰௬. பேரிகை - துந்துபி. ௫௰௭. ஒடுங்கி - ருத்ரோத்காரி. ௫௰௮. செம்மை - ரக்தாட்சி. ௫௰௯. எதிரேற்றம் - குரோதன. ௬௰. வளங்கலன் - அட்சய.
மேற்கூறப்பட்டுள்ள தமிழ்ப்பெயர்களனைத்தும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்மொழிபெயர்ப்பென கூறிடினும்,எமது மொழியில் இவற்றைப்பயன்படுத்துவதே தமிழராகிய எமக்கு எம்மொழிக்கும் சிறப்புய்க்கும்.
நன்றி.
வாழ்க தமிழ்!




