
தமிழர்கள் தமிழ்மொழியின் அறிவை முழுமையாகப் பெற்றுக்கொள்ளாமையால் , இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் போன்ற நிறங்களைத் தவிர பிறவற்றைத் தமிழில் குறிப்பது அருகி விட்டது.
வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.
- அடர் சிவப்பு – cramoisy
- அடர் நீலம் – perse / smalt
- அடர் மஞ்சள் – gamboge
- அயிரை/ அசரை – sandy colour
- அரத்த(ம்) (நிறம்) – heliotrope / haematic
- அருணம் – bright red, colour of the dawn;
- அவுரி(நிறம்) – indigo
- அழல் நிறம் – reddish colour of fire
- ஆழ் சிவப்பு – cinnabar
- ஆழ் செந்நீலம் (ஊதா) – claret
- ஆழ் பழுப்பு – brunneous
- ஆழ் பைம்மஞ்சள் – citrine
- ஆழ்சிவப்பு – cramoisy
- ஆழ்நீலச் சிவப்பு – aubergine
- இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous
- இருள் சிவப்பு – puccoon
- இருள்சாம்பல் – slate
- இள மஞ்சள் – flavescent / primrose
- ஈய(ம்) (நிறம்) – plumbeous
- ஈரல்நிறம் – Dark red colour, purple colour
- உறைபால்(நிறம்) – whey
- எண்ணெய்க்கறுப்பு – dark black colour
- எலுமிச்சை ம் – citreous
- ஒண்சிவப்பு – cardinal
- ஒளிர் செஞ்சிவப்பு – phoeniceous
- ஒளிர் செம்மை – coccineous
- ஒளிர் வெண்கலம் – aeneous
- ஒளிர் வெண்கலம் (நிறம்) – aeneous
- ஒளிர்சிவப்பு – puniceous
- ஒளிர்மஞ்சள் – sulphureous / vitellary
- கசகசாச் சிவப்பு – ponceau
- கடல்நீல (நிறம்) – ultramarine
- கடற்பச்சை – cerulean
- கத்தரிநீலம் – periwinkle நித்திய கல்யாணி
- கபிலை / புகர்நிறம் – Tawny, brown or swarthy colour;
- கரு (நிறம்) – sable
- கருஞ்சிவப்பு – porphyrous/purpureal
- கரும்பச்சை – corbeau
- கருமை – nigricant / nigrine
- காயாம்பூ (நிறம்) – purple colour
- காளிமம் – black colour
- கிளிச்சிறை – Gold resembling the parrot’s wing in colour
- குங்குமச் சிவப்பு- vermeil
- குங்குமப்பூ(நிறம்) – croceate / saffron
- குரால் – Dim, tawny colour;
- குருதிச்சிவப்பு – erythraean / sanguineous / incarnadine
- குருதிச்செம்மை – vermilion
- குருவகம் / வெண்சிவப்பு / மென் சிகப்பு -rose
- கோமேதக(நிறம்) -topaz
- சருகிலை (நிறம்) – filemot
- சாம்பல் – cinerious
- சாம்பல் பச்சை – caesious / sage
- சாம்பல் மஞ்சள் – isabelline
- சுடர் (நிறம்) – flammeous
- சுடுமண்(நிறம்) – terracotta
- சுதை வெண்மை – cretaceous
- செக்கர் – reddish sky
- செங் கருநீல(நிறம்) – violet / violaceous
- செங்கருப்பு – piceous
- செங்கல்மங்கல் – Dim red colour
- செங்கற்சிவப்பு – lateritious / testaceous
- செந்தீவண்ணம் – colour of glowing fire
- செந்தூரச்சிவப்பு – minium
- செப்புநிறம் – Dark-red colour
- செம்பட்டை – Brown colour of hair
- செம்பவளம் – deep red colour;. Crimson colour; மிகு சிவப்பு
- செம்பழுப்பு – sinopia/ sorrel
- செம்பு – Copper colour;.
- செம்பூச்சி – kermes
- செம்பொன் – titian
- செம்மஞ்சள் -jacinthe
- செவ்வல் (செந்நிறம்) – Redness;
- சோணம் – Red colour, crimson colour
- தசை (நிறம்) – sarcoline
- தவிட்டுநிறம் – Brown, dun colour
- திமிரம் – Colour ofDarkness
- தும்பை நிறம் – pure white colour
- துமிரம் – Deep red colour .
- துரு (நிறம்) – ferruginous
- துருச் சிவப்பு – rubiginous
- துவர் (சிவப்பு) – Scarlet Red colour,
- துவரி (காவிநிறம்) – Salmon colour
- தூயபழுப்பு – sepia
- தெள்ளுப்பூச்சி (நிறம்) – puce
- நட்டுச்சினைமண் – A kind of earth of the colour of crab’s spawn
- நல்சிவப்பு – coquelicot
- நறுமஞ்சள் – lutescent
- நன்மஞ்சள் – luteolous
- நன்னிறம் – White colour
- நீல (நிறம்) – azuline
- நீல மணி – sapphire
- நீலச்சாம்பல் – glaucous / cesious / gridelin / lovat
- நீலச்சிவப்பு – amaranthine / solferino
- நீலப்பச்சை – turquoise / viridian
- பச்சை – chlorochrous
- பசுமை – virid
- பழுக்காய் – Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut;
- பழுப்பு மஞ்சள் – fulvous
- பழுப்புச் சிவப்பு – castaneous / rufous / russet / umber
- பழுப்புச்சாம்பல் – greige / taupe
- பளீர்சிவப்பு – stammel
- பனிவெண்மை – niveous
- பாணிச்சாய் ( கள்போன்ற முத்துநிறம்.) – Colour of a class of pearls, resembling that of toddy
- பால்வண்ணம் – white colour
- புகர் நிறம் – tawny / tan
- புகைக்கரி – fuliginous
- புள்ளிச் சாம்பல் – liard grey
- புற்பச்சை – prasinous
- புறவு (நிற) – columbine
- பூஞ்சல் – Brown- ish colour; மங்கனிறம்
- பூஞ்சாயம்(அழுத்தமான சிவப்பு) – Deep, ruddy colour;
- பூவல்- Red colour
- பைந்நீல(நிறம்) – teal
- பைம்பொன் – chrysochlorous
- பொன் மஞ்சள் – goldenrod
- பொன்மஞ்சள் luteous
- பொன்மை – aurulent
- மகரம் – Pink colour
- மங்கல் பழுப்பு – fuscous
- மங்கல் பழுப்பு – khaki
- மங்கல்பச்சை – eau-de-nil
- மஞ்சள் – xanthic / icterine / icteritious
- மஞ்சள் பச்சை – chartreuse / zinnober
- மஞ்சள் பழுப்பு – lurid / ochre
- மஞ்சள்சிவப்பு – wallflower
- மணிச்சிவப்பு – rubious
- மணிநிறம் – Dark blue colour, as of sapphire;
- மயில்நீலம் – pavonated
- மரகதப்பச்சை – smaragdine
- மருப்பு (தந்தம்) – eburnean
- மல்லிகை மஞ்சள் – jessamy
- மாமை- dark-brown colour
- முக்கூட்டரத்தம் – Red colour produced by chewing betel, arecanut and lime
- முத்துச்சாம்பல் – griseous
- வளர்பச்சை – virescent
- வாதுமை (நிறம்) – ibis
- வான் நீலம் – cyaneous
- விண் நீலம் – celeste
- விழி வெண்மை – albugineous
- வெங்காயப் பச்சை – porraceous
- வெண்சாம்பல் – hoary
- வெண்மங்கல் – leucochroic
- வெண்மஞ்சள் – ochroleucous
- வெளிர் நீலம் – azure
- வெளிர் பச்சை – celado
- வெளிர் மஞ்சள் – nankeen
- வெளிர் மஞ்சள் பச்சை – tilleul
- வெளிர்நீலம் – watchet
- வெளிர்பழுப்பு – suede
- வெளுப்பு – albicant
- வைக்கோல் (நிறம்) – stramineous
நன்றி .
வாழ்கதமிழ்..!




