ஈழம்

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!

தாயகப்பாடல் எழுத்துவடிவில்.

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!
நீர்சொரியும் மனதுடனே தேடிவருகிறோம்.
தீயெரியும் விழிகளுடன் தேசம் தேடுகிறோம்.

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!

உயிரைநெய்யாக்கி உணர்வைத்தீயாக்கி
விழியில் ஒருதீபம் ஏற்றுவோம்.
உயிர்கள் உருகியே உணர்வு சுடரிடும்
பொழுதும் நினைவாகி போற்றுவோம்.

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!

காலவெளி தாவிப்பாயும் ஒளியாகி
வாழ்வில் ஒளிதீபம் ஏற்றினீர்….
காலம்வளமாக நேரமினிதாக
வீரவரலாறு ஆகினீர்.

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!

தலைவன் நினைவாக தாயின் கனவாக
தேசம்காண நீரோடினீர்
எங்கள் கனவுநனவாக,
கோலம்புதிதாக விதையும்பொருளாக ஆகினீர்,

கல்லறைகள் உங்களுக்காய் செய்தோம்! செய்தோம்!!
வீர விதைகளையே மூடியிட்டு வைத்தோம்! வைத்தோம்!!

புயல்நீங்கும் ஒருநாளில் மீண்டும் வருவீர்
உயிராகி வாசல்வந்து எம்மில் உறைவீர்
அந்நாளில் அசைந்தாடும் புலியின்கொடியின்
அந்நாளில் அசைந்தாடும் புலியின்கொடியின்
எம்வானில் உயர்ந்தேறி
இருக்கக்காண்பீர்! இருக்கக்காண்பீர்!!
புயல்நீங்கும் ஒருநாளில் மீண்டும்வருவீர்!
மீண்டும் வருவீர்!! மீண்டும் வருவீர்!!!

நன்றி .
வாழ்க தமிழ் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button