ஈழம்

கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே!

தாயகப்பாடல் எழுத்துவடிவில்.

கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே-உங்கள்
உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு
எமையேங்க வைத்தவரே!
எமையேங்க வைத்தவரே!

கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே-உங்கள்
உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு
எமையேங்க வைத்தவரே!
எமையேங்க வைத்தவரே!

இனம்பாடும் தமிழிங்கே உமைநாடிவரும்போது
அலைவந்து போனதடா-மக்கள்
உயிரானதமிழீழம் உருவாகும்வரை -நீங்கள்
எருவாகிச்செல்வதடா!
எருவாகிச்செல்வதடா!

கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே-உங்கள்
உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு
எமையேங்க வைத்தவரே!
எமையேங்க வைத்தவரே!

பேசாத மொழியுண்டோ? கேட்காத நாடுண்டோ?
வாழ்த்தாத நெஞ்சமுண்டோ – உங்கள்
உடல்சிந்தும் குருதியும் கடலோடு கடலாகி
தடை தாண்டிச்சென்றதடா- ஈழம்
விடிவாகி வந்தடா!

கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே-உங்கள்
உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு
எமையேங்க வைத்தவரே!
எமையேங்க வைத்தவரே!

வருவீர்கள் என்றெண்ணி வழிபார்த்து நின்றோமே.
விழி கண்ணீர்சிந்தியதே -எங்கள்
இனம்வாழ மொழிவாழ மனம்வாழ குலமோங்க
அரசாழ வைத்தவரே- தம்பி
பிரபாவின் பிள்ளைகளே!

கடல்தன்னில் அலைமீதில் கவிபாடி விளையாடி புவியாழச்சென்றவரே-உங்கள்
உடலின்றி உயிரின்றி ஒளியோடு ஒலிகேட்டு
எமையேங்க வைத்தவரே!
எமையேங்க வைத்தவரே!

நன்றி.
வாழ்க தமிழ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button