ஈழம்வரலாற்று மாந்தர்கள்

வேலுப்பிள்ளை பார்வதியம்மாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார்

வேலுப்பிள்ளை பார்வதியம்மாள்;

பிறப்பு: மடங்கல் திங்கள் 07-ஆம் நாள் 1931 .
நீத்தல் :குடத்திங்கள் 20-ஆம் நாள் 2011.
அறியப்படுதல் : தமிழீழத் தேசியத்தலைவர் திரு வே பிரபாகரன் அவர்களின் தாயார் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மா தனது 81 ஆவது அகவையில் காலமானார்.

பார்வதியம்மாளுக்கு வல்வெட்டித்துறை மருத்துவமனையில் மருத்துவம் அளித்துவந்த மருத்துவரான மயிலேறும் பெருமாள் ஆத்திரேலியாவின் இன்பத் தமிழ் ஒலி செய்தியாளருக்கு இது குறித்துத் தெரிவிக்கையில்,

“பார்வதியம்மா கடந்த ஒரு திங்களாகப் படுக்கையில் இருப்பதாகவும், நீர் உணவுகள் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவித்தார். அவருக்குத் தனது பிள்ளைகள் தொடர்பான எண்ணங்கள் கூடிக் காணப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார் .

பார்வதி அம்மாள் 2010 மேழம் 16-ஆம் நாள் மலேசியாவில்
இருந்து மருத்துவத்திற்காக சென்னை வந்தபோது, இந்திய மேலாளர்களால் ஒப்புதல் மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே விண்ணூந்திலேயே மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். பக்க இழுவை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மலேசிய அரசு மனிதநேய அடிப்படையில் அங்கு தங்கியிருக்க ஒரு திங்கள் இருப்பு ஒப்புதல் அட்டை வழங்கியிருந்தது. அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை மருத்துவ மனையில் மருத்துவம் பெற்று வந்தார்.

பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் படைத்துறைக் காவலில் இருக்கும் போது 2010 சுறவம் காலமானார். 2009 விடைத்திங்கள் நடைபெற்ற இறுதிக் கட்ட போரின் போது போர் வலயத்திலிருந்து படைத்துறையிடம் சென்றடைந்த வேளை வேலுப்பிள்ளை மற்றும் அவரது மனைவி பார்வதியம்மா ஆகியோர் படைத்துறையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து கூடுதல் ஆய்வுகளைக்காக இவர்கள் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னரே வேலுப்பிள்ளை அவர்கள் காலமாக, பார்வதி அம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிர் நீத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button