இலக்கணம்தமிழ்

ன,ண,ந எழுத்துகளைப் பிழையற எழுதுவதற்கான எளிய வழிமுறைகள்.!

ன,ண,ந எழுத்துகளைப் பிழையற எழுதுவதற்கான எளிய வழிமுறைகள்.!

“ண” இதன் பெயர் டண்ணகரம் ,

நண்டு ,மண்டபம், கொண்டாட்டம் , உண்டியல் , தொண்டு என்று எங்கெல்லாம் இந்த மூன்று சுழி “ணகர” ஒற்றெழுத்து வருகின்றதோ, அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து ‘ட’ நிரல் எழுத்தாகத்தான் இருக்கும். இதனால் இதற்கு “டண்ணகரம்” என்று பெயர்.

“ன” இதன் பெயர் றன்னகரம்

கன்று , இன்று , தென்றல், சென்றான், மன்றம்
என எங்கெல்லாம் இந்த இரண்டு சுழி “னகர” ஒற்றெழுத்து வருகின்றதோ, அதையடுத்து வருகின்ற உயிர்மெய் எழுத்து ‘ற’ நிரல் எழுத்தாகத்தான் இருக்கும். அதனால் இதற்கு “றன்னகரம்” என்று பெயர்.

“ந” இதன் பெயர் தந்நகரம்

பந்து, வெந்தயம், மந்தை , ஆந்தை என எங்கெல்லாம் இந்த நகர ஒற்றெழுத்து வருகின்றதோ அதைத்தொடர்ந்து வருகின்ற உயிர்மெய்யெழுத்து ”த” நிரல் எழுத்தாகத்தான் இருக்கும் .அதனால் இதற்கு”தந்நகரம்” என்று பெயர் .

எளிதாகச் சொல்ல வேண்டுமானால்..

“ட “ நிரல் எழுத்திற்கு முன் (ன்,ந்) போன்ற எழுத்துகள் ஒருபோதும் வரா . “ ண்” என்ற எழுத்தே வரும். ஏனெனில் அது டண்ணகரம் .

அதே போல் ,” ற” நிரல் எழுத்து வருவதற்கு முன் எப்பொழுதும் “ன்” என்ற மெய்யெழுத்தே வரும் . (ண்,ந்) போன்ற எழுத்துகள் வரா . ஏனெனில் , இது றன்னகரம்.

அடுத்து “த” நிரல் எழுத்துகளுக்கு முன் எப்பொழுதும் “ ந்” என்ற மெய்யெழுத்தே வரும் . (ண், ன்) என்ற எழுத்துகள் வரா .ஏனெனில் , இது தந்தகரம் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button