“எந்தமிழ்”

“எந்தமிழ்”
அன்னையும் நீயே ஆற்றலும் நீயே / தமிழே!
முன்னையும் நீயே மூதுரை நீயே / தமிழே!
உன்னியம் நீயே ஊக்கமும் நீயே / தமிழே!
சன்னதி நீயே சாட்சியம் நீயே / தமிழே!
எந்தையும் நீயே ஏற்றமும் நீயே / தமிழே!
சிந்தையும் நீயே சீர்மையும் நீயே / தமிழே!
விந்தையும் நீயே வீரமும் நீயே / தமிழே!
முந்தையும் நீயே மூத்தவள் நீயே / தமிழே!
கன்னலும் நீயே காப்பரண் நீயே / தமிழே!
இன்னியம் நீயே ஈகையும் நீயே / தமிழே!
உன்னதம் நீயே ஊர்ச்சிதம் நீயே / தமிழே!
சின்னமும் நீயே சீர்பதி நீயே / தமிழே!
எண்ணமும் நீயே ஏந்திலை நீயே / தமிழே!
நிண்ணயம் நீயே நீதியும் நீயே / தமிழே!
திண்ணமும் நீயே தீட்சையும் நீயே / தமிழே!
பண்ணிசை நீயே பாடிதம் நீயே / தமிழே!
ஆன்றவள் நீயே ஆற்றுகை நீயே / தமிழே!
ஈன்றவள் நீயே ஈர்ந்தமிழ் நீயே / தமிழே!
தோன்றலும் நீயே தோழமை நீயே / தமிழே!
ஊன்றுகோல் நீயே ஊற்றமும் நீயே / தமிழே!
ஆச்சலும் நீயே ஆளுமை நீயே / தமிழே!
பேச்சினில் நீயே பேரிகை நீயே / தமிழே
மூச்சினில் நீயே மூலமும் நீயே / தமிழே!
வீச்சினில் நீயே வீரியும் நீயே / தமிழே!
போற்றுகை நீயே போதனை நீயே / தமிழே!
ஊற்றுகை நீயே ஊதிகை நீயே / தமிழே!
ஆற்றலும் நீயே ஆயுதம் நீயே / தமிழே!
மாற்றமும் நீயே! மாட்சியும் நீயே / தமிழே!
கூடுகை நீயே கூர்த்திகை நீயே / தமிழே!
தேடுகை நீயே தேசமும் நீயே / தமிழே!
பாடுகை நீயே பாயிரம் நீயே / தமிழே!
நாடுகை நீயே நாற்றிசை நீயே / தமிழே!!
என்றும் இனம் மற்றும் மொழிப்பற்றுடன்
மன்னைத் தமிழ்த்தோன்றல்
#ஈழவேங்கை_தம்பியின்_தம்பி__




