தமிழ்பிறமொழி/தமிழ்

“ஞா”/ஞே எனும் எழுத்துளில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

ஞா” நிரலில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான  தமிழ்ச்சொற்கள்.

ஞாதம்‌ – அறியப்பட்டது.
ஞாதா – அறிவாளன்‌.
ஞாதி – சுற்றம்‌, தாயத்தார்‌.
ஞாதுரு – அறியும்‌ முதல்‌, உயிர்‌, காண்‌பான், அறிபவன்.
ஞாபகச் சிந்நம் – நினைவுக்குறி.
ஞாபகம்‌ – நினைவு.
ஞாபிதம்‌ – அறிவிக்கப்பட்டது.
ஞாயம்‌ – நெறி, முறை.
ஞான காண்டம்‌ – அதிவுப்பகுதி, ௮றிதகு தொகுதி.
ஞானசத்தி – அதிவாற்றல்‌.
ஞான ௪பை – சிற்றம்பலம்‌, அறிவுக்கழகம்‌.
ஞானசாஸ்‌ திர பண்டிதர்‌ – அதிவு நூற்‌ புலவர்‌.
ஞானசாஸ்திரம்‌ – அறிவு நால்‌.
ஞான சொரூபம்‌ – அதிவுரு.
ஞான சொரூபர்‌ – பேரறிவினர்‌.
ஞான திட்டி, ஞானதிருஷ்டி – அகப்பார்வை, அகக்கண்‌.
ஞான தீபம்‌ – அறிவொளி.
ஞான பூர்வகம்‌ – முன்னறிவு.
ஞானமயன்‌ – அறிவு வடிவினன்‌,
ஞானமார்க்கம்‌ -அதிவுநெறி.
ஞானமூர்த்தி – அறிவு வடிவினன்‌,
ஞானம்‌ – அறிவு, கல்வி, மெய்யுணர்வு, அருளறிவு.
ஞானாகாயம்‌ – அறிவுவெளி .
ஞானாசிரியன்‌ – அருட்குரவன்‌, அருளாசிரியன்.
ஞானார்த்தம்‌ –  உட்பொருள்‌, மெய்ப்பொருள்‌.
ஞானானந்தம் – பேரின்பம்‌.
ஞானிகள்‌ – மெப்யறிவினர்‌, துறவிகள்‌.
ஞானேந்திரியம்‌ – அறிவுப்பொறி, அறிவுக்கருவி.
ஞானோபதேசம்‌ – மெய்ப்பொருளுணர்த்தல்‌,மெய்யறிவுத்தல்‌.

“ஞே “

ஞேயம் – அறியப்படுவது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button