
“ல” சங்கதம் /தமிழ்
லஞ்சம் – கைக்கூலி, கையுறை.
லக்ஷம், லட்சம் – நூறாயிரம்.
லக்ஷிமி – திருமகள்.
லக்ஷியம் – இலக்கு , குறி.
லப் தஹானி – பேறழிவு.
லயம் – ஒடுக்கம்.
லவணம் – உப்பு.
லளிதம் – அழகு.
“ லா”சங்கதம் /தமிழ்
லாகவம் – திறமை
லாவண்யம் – அழகு.
“லி”சங்கதம் /தமிழ்
லிங்கம் – குறி, அடையாளம்.
“லீ”சங்கதம் /தமிழ்
லீலை -விளையாட்டு.
“லே”சங்கதம் /தமிழ்
லேகன் – எழுதுகிறவன்.
“லோ”சங்கதம் /தமிழ்
லோகப்பிரசித்தம் -உலகறிந்தது.
லோகம் -உலகம்.
லோகாபவாதம் -உலகப்பழிச்சொல்.
லோசநம் – கண்.
லோபி – ஈகையிலான், பிசுனன்.



