தமிழ்பிறமொழி/தமிழ்

“உ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

“உ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
  • உகமாருதம்‌ – ஊழிக்காற்று.
  • உகம்‌,யுகம்‌ – உலக முடிவு, இரண்டு.
  • உகளம்,யுகளம்‌ – இரட்டை, இணை.
  • உகாந்த காலன்‌ – சிவன்.
  • உகாந்தம்‌, யுகாந்தம்‌ – இறுதி, உலகமுடிவு, ஊழி முடிவு.
  • உகுணம்‌ – மூட்டுப்‌ பூச்சி.
  • உக்கிர கோபாக்கனி – கடுஞ்சினத்தீ.
  • உக்கிரம்‌ – கொடுமை, வெப்பம்‌, சினம்‌,ஊக்கம்‌, மிகுதி.
  • உக்கிராக்காரன் – களஞ்சியங்காப்போன்‌.
  • உக்கிராணம்‌ – களஞ்சியம்‌, சரக்கறை.
  • உக்கிருஷ்டம்‌, உத்கிருஷ்டம்‌ – மிகுதி, மேன்மை, தகுதி.
  • உஷம்‌, உஷத்காலம்‌,
  • உஷை – விடியற்காலம்‌, இரவு, காலை,மாலை.
  • உஷனன்‌ –  வெள்ளி.
  • உஷிதம்‌ –  கொளுத்தப்பட்டது. ‘
  • உஷ்ணம்‌,  உட்ணம்‌ – வெப்பம்‌, சூடு.
  • உஷ்ட்ரகம்‌ – ஒட்டகம்‌.
  • உசிதம் –   உயர்வு, சிறப்பு, மேன்மை,  தகுதி, ஒழுங்கு.
  • உசிதன் – தக்கோன்‌,
  • உசுவாசம்‌ –  மூச்சை உள்ளிழுத்தல்‌.
  • உச்சதசை, உச்சதிசை –  நல்லகாலம்‌, மிகமேலானநிலை.
  • உச்சதரு –  உயார்த மரம்‌.
  • உச்சதாநம்‌ –  உயர்நிலை.
  • உச்சந்தம்‌ – தணிவு.
  • உச்சந்தி – கோள்களின்‌ கூட்டம்‌.
  • உச்சபாடணம்‌ – உரத்துப்‌ பேசுதல்‌,
  • உச்சம்‌ – உயர்ச்சி, சிறப்பு.
  • உச்சரிக்தல்‌ – சொல்லுதல்‌, ஒலித்தல்‌, ஓதல்‌.
  • உச்சரிப்பு – எழுத்தோசை,
  • உற்சவம்‌, உத்சவம்‌ – திருவிழா.
  • உச்சாகம்‌, உச்சாயம்‌ –  உள்ளக்கிளர்ச்சி, மனஎழுச்சி.
  • உச்சாடநம்‌ – ஏவுதல்‌, அசுற்றல்‌, மந்திர மொழிதல்.
  • உச்சாட்டியம்‌ – பேயகற்றல்‌, ஓட்டுதல்‌.
  • உச்சாரம் – சொல்லுதல்‌.
  • உச்சாரிதம்‌ –  உரைக்கப்பட்டது.
  • உச்சி – மேடு, முகடு.
  • உச்சிக்‌ காலம்‌, உச்சிச்‌ சமயம்‌ – நண்பகல்‌, நடுப்பகல்‌.
  • உச்சிஷ்டம்‌ – எச்சில்‌, எஞ்சியது,
  • உச்சிதம், உசிதம் – அரியது, தகுதி, மேன்மை.
  • உச்சிராயம்  – உயரம்‌.
  • உச்சீவனம் – பிழைப்பு, உய்கை.
  • உச்சுவாசம்‌ – மூச்சு உள்வாங்குதல்‌.
  • உச்சேதம்‌ –  வெட்டல்‌, அழித்தல்‌.
  • உண்டி (இந்து) – பணச்சீட்டு. உதகக்கிரியை,
  • உதக்கிரியை – நீர்க்கடன்‌.
  • உதகம்‌ – நீர்‌, மழைத்துளி.
  • உதக்கு, உதீசி – வடக்கு,
  • உததரிசம்‌ – நீர்ச்தோற்றம்‌.
  • உததி – கடல்‌.
  • உதபாநம்‌ – கிணறு.
  • உதபாரம்‌ – முகில்.
  • உதமன்‌ – பகலோன்‌.
  • உதயபருவதம்‌ – பகலவன்‌, தோன்று மலை.
  • உதயநம்‌, உதயம் – காலை, விடியல்‌, பிறப்பு,
  • வெளிப்படல்‌, தோற்றம்‌.
  • உதயன் – பகலோன்.
  • உதயாஸ்‌தமநம்‌,
  • உதயாத்தமநம்‌ – காலை மாலை.
  • உதரம்‌ – வயிறு.
  • உதரபந்தம்‌, உதரபந்தநம்‌ – அரைப்பட்டிகை.
  • உதராக்கிநி – அகட்டுத்தீ.
  • உதராவர்த்தம்‌ – கொப்பூழ்.
  • உதவசிதம்‌ – வீடு.
  • உதவாசம்‌ – நீர்க்கரை, வீடு.
  • உதவிந்து – நீர்த்துளி.
  • உதாசநம் – இகழ்ச்சி.
  • உதாசீநம் – விருப்பு, வெறுப்பின்மை.
  • இகழ்ச்சி, நொதுமல்‌.
  • உதாத்தம்‌ – விருப்பம்‌, எடுத்சலோசை.
  • உதாத்தன்‌ – சிறந்தோன்‌, வள்ளல்‌.
  • உதாநம்‌ கொப்பூழ்.
  • உதாநன்‌ – உள்வளி.
  • உதாரகுணம்‌, உதாரம் – வள்ளன்மை, தண்ணாளி,ஈகைதக்கன்மை.
  • உதாரணம்‌, திருட்டாந்தம்‌ – எடுத்துக்காட்டு, சான்று.
  • உதாரன்‌,  உதாரி – வள்ளல், கொடையாளி, ஆண்டகை.
  • உதிதம்‌ – சொல்லப்பட்டது, உயர்ந்தது.
  • உதித்தல்‌ – பிறத்தல்‌, தோன்றுதல்‌.
  • உதிரம்‌ – செந்நீர்‌, குருதி.
  • உதிரன்‌ – செவ்வாய்‌.
  • உதீசி – வடக்கு.
  • உத்கர்ஷம்‌ – உயர்ச்சி, மேன்மை.
  • உத்சாகம்‌ – ஊக்கம்‌, உள்ளக்கிளர்ச்சி.
  • உத்தண்டம்‌ – இறுமாப்பு, வலிமை, அணிவு,கொடுமை, கொடை.
  • உத்தமசீடன்‌ – மூதல்‌ மாணவன்‌.
  • உத்தமபட்சம்‌ – மூதற்றரம்‌.
  • உத்தமபுருஷன்‌ – சிறந்தோன்‌, தக்கோன்‌, மேலோன்‌.
  • உத்தமம்‌ – உண்மை, மேன்மை.
  • உத்தமர்ணன் – கடன்‌ கொடுத்தவன்‌.
  • உக்தமன்‌ –  மேலோன்‌, உண்மையாவன், சிறந்தவன்,பெரியோன்‌. உத்தமி – கற்புடையவள்.
  • உத்தமோத்தமம்‌ –  மேன்மையிலுமேன்மை.
  • உத்தம் – புகழுரை.
  • உத்தர கன்மம் – சாவு சடங்கு.
  • உத்தரணி – சிறுகரண்டி.
  • உத்தர துருவம் – வடமுனை.
  • உத்தர தேசம்‌ –  வடநாடு.
  • உத்தர பக்ஷம்‌ – வடபக்கம்,  தேய்பிறை.
  • உத்தர பாகம்‌ – பிற்பகுதி, பிற்கூறு.
  • உத்தர பாதம் – மறுமொழி
  • உத்தர பூர்வம்‌ – வடகிழக்கு.
  • உத்தரம்‌ – மறுமொழி.
  • உத்தரவாதி – பிணையாளி.
  • உத்தரபாதம் – வடக்கு, வடநாடு.
  • உத்தராயணம்‌ – கதிரவன்‌ வடபாற்போ தல்‌,
  • தைத்திங்கட்‌ பிறப்பு.
  • உத்தரியம்‌ ,உத்தரீயம் – மேலாடை.
  • உத்தரவு – கட்டளை.
  • உத்தாபம்‌ – மிகுவெப்பம்‌, தவிர்ப்பு, முயற்சி.
  • உத்தாபநம் – எழுப்புதல்‌, நின்‌ று வணங்கல்‌.
  • உத்தாரணம்‌ – உயர்த்துதல்‌, நிலை நாட்டல்‌.
  • உததாரம்‌ – மறுமொழி, விடை, கட்டளை.
  • உத்தி – அறிவு, இணக்கம்‌, இசைவு,சூழ்ச்சி, சொல்‌.
  • உத்திட்டம்‌ – சொல்லப்பட்டது.
  • உத்தியம்‌, உத்தியமம்‌ –  அலுவல்‌, வேலை, தொழில்‌.
  • உத்தியாபநம்‌ – முடிவு, நிறுத்துதல்‌.
  • உத்தியாசம்‌ ,உத்தியாநவநம்‌,உத்தியாவநம்‌ – பூந்தோட்டம்‌, பூஞ்சோலை.
  • உத்தியோகஸ்தன்‌ – அலுவலாளன்‌.
  • உத்தியோகஸ்தர் –  அலுவளர்
  • உத்தியோகம்‌ – அலுவல்‌, முயற்சி, தொழில்‌.
  • உத்திரவாதம்‌ – பிணை, பொறுப்பு, ஈடு.
  • உத்திராவம்‌ – பேரொலி.
  • உத்திரேகம்‌ – தொடக்கம்.
  • உத்தீபநம்‌ –  விளக்கேற்றல்‌, எழுச்சி.
  • உத்தூளநம் – உயர்ச்சி, நெடுமை, மேன்மை.
  • உத்தூளிநம்‌, உத்தூளிதம்‌ – சாம்பற் பூச்சு.
  • உத்தேசம்‌, உத்தேகம்‌ – கருத்து, மதிப்பு, ஏறக்‌குறைவு.
  • உத்தேசி – மதிப்பிடுவோன்‌.
  • உத்தேசியம்‌ –  கருதிய பொருள்‌.
  • உத்தபாதநம்‌ – பிறப்பித்தல்‌.
  • உத்பாதம்‌ –  தூக்கிய திருவடி, இக்குறி.
  • உத்பிச்சம்‌, உத்பீஜம்‌ – வித்துப்‌ பிறப்பு.
  • உத்பிரேட்சை – தற்குறிப்பேற்றம்‌.
  • உந்திக்‌ கமலம்‌ – கொப்பூழ்.
  • உந்துரம், உந்துரு –  எலி, பெருச்சாளி.
  • உந்நதம்‌ – உயர்ச்சி, மேன்மை.
  • உந்நத ஸ்தநாம்‌ – உயா்நிலை, மேனிலை.
  • உந்நம்‌ – ஈரம்‌, அருள்‌.
  • உந்நயம்‌ – உயர்த்துதல்‌.
  • உந்நாலயம்‌ – நெஞ்சம்‌.
  • உந்மதம்‌ –  மயக்கம்‌, வெறி.
  • உந்மத்தம் – ஊமை, வெறி, பித்து.
  • உந்மத்தன் – பித்தன்‌, வெறியன்‌.
  • உந்மாதம்‌ – கலக்குதல்‌.
  • உந்மாநம்‌ – நிறை.
  • உந்மார்க்கம் – கூடாவொழுக்கம்‌, தப்பானாவழி.
  • உந்மிதம்‌ – ௮ளக்கப்பட்டது.
  • உந்மீலநம்‌ – கண்ணிமைத்தல்‌, ‘விழிக்கல்‌.
  • உந்மீலிதம்‌ –  தோற்றுவித்தல்‌.
  • உந்மேதை – கொழுப்பு.
  • உப கதை – கிளைக்கதை.
  • உபகரணம்‌ – கொடுத்தல்‌,
  • உதவிப்பொருள்‌, கருவி – துணைக்காரணம்‌.
  • உபகாதம்‌ – அழித்தல்‌, இகழ்தல்‌.
  • உபகாரகன்‌,உபகாரணன்‌, உபகாரபரன்‌ – உதவியாளன்‌, ஈவோன்‌.
  • உபகாரம்‌ – உதவி, நன்றி.
  • உபகிருதம்‌, உபகிருதி – உதவி.
  • உபகுல்லியை – ௮கழி.
  • உபக்கிரமணிகை – பாயிரம்‌, முகவுரை.
  • உபக்கிரமம்‌ – தொடக்கம்.
  • உபக்குரோசம்‌ – பழிதூற்றல்‌, இகழ்ச்சி.
  • உபசங்காரம்‌ – அழிவு, மாற்று, மீண்டும்‌, ஒடுக்குதல்.
  • உபசத்தி – உதவி, ஒற்றுமை.
  • உபசந்தாநம்‌ – இணைத்தல்‌, தொடுத்தல்‌.
  • உபசமநம்‌, உபசமம்‌ – அமைதி
  • உபாசரணை,
  • உப்சாரம்‌ – வரவேற்பு:
  • உபசர்ச்கம்‌ –  முன்‌ அடை.
  • உபசாதி, உபஜாதி – இரட்டைக்குலம்‌.
  • உபசாந்தி – அமைதி, ஓய்வு, விருப்பு, வெறுப்பின்மை.
  • உபசார கரணம்‌ – உதவிசெய்தல்‌.
  • உபசார கருமம்‌ – விருந்தோம்பல்‌.
  • உபசாரம்‌ – முகமன்‌, பணிவிடை.
  • உபசார வசநம்‌ – முகமனுரை, இன்சொல்‌.
  • உபசீவகன்‌ – பிறரைச்சார்ந்து வாழ்பவன்‌.
  • உபட்சேபணம் – எறிதல்‌.
  • உபதாநம்‌ – இரப்பு, ஐயம்‌.
  • உபஸ்தாநம்‌ – சார்ந்த இடம்‌.
  • உபதி – கை.
  • உபதேசக்கிரமம்‌ – அறிவுறுத்தும்‌ முறை.
  • உபதேசம்‌ – அருண்மொழி, அறிவுரை.
  • உபதேசிகன்‌ – அருளாசிரியன்‌, குரு, குரவன்.
  • உபதேசித்கல்‌ –  அறிவுறுத்தல்‌, தெருட்டல்‌,உணர்த்தல்‌.
  • உபதை  – காணிக்கை,
  • உபத்தம்‌, உபஸ்தம் –  பெண்குறி,
  • உபத்தாநம்‌ – அணிமை, அயல்‌.
  • உபத்திரம்‌,உபத்திரவம்‌ ,
  • உபத்திரியம்‌ – இடர்‌, இக்கட்டு, துன்பம்‌, வருத்தம்‌, தடை.
  • உபநதி – சிற்றாறு, கிளையாறு.
  • உபநயம்‌,உபநயநம்‌ – பூணூற்சடங்கு, வழிநடத்துதல், மூக்கண்ணாடி.
  • உபநாயகன்‌ – உதவித்‌ தலைவன்‌.
  • உபநிஷதம், உபநிடதம்‌ – மறையின்‌ அறிவுப்பகுதி.
  • உபநிட்கரம்‌ – பெருந்தெரு, தெரு.
  • உபநிதி – ஈடு, அடைக்கலப்பொருள்‌.
  • உப பத்தி – ஏது, ஒழிவு.
  • உப பலம்‌ – துணைவலி.
  • உப புரம்‌ – நுகர்ப்புறம்‌.
  • உபமாநம்‌ – உவமை, ஒப்புப்பொருள்‌.
  • உபமிதம்‌ – ஒப்புமை காட்டப்பட்டது,
  • உபமேயம்‌ – உவமிக்கப்படும்‌ பொருள்‌, பொருள்‌.
  • உபம்‌, உபயம்‌ – இரண்டு.
  • உபயத்தம்‌ – இருபொருள்‌.
  • உபயம்‌ – இரண்‌டு, உதவி.
  • உபயவாதி – இருதரவழக்காளி.
  • உபயார்த்தம்‌,உபயாத்தம்‌ – இரு பொருள்‌.
  • உபயோகம்‌ – பயன்‌.
  • உபரசம்‌ – கடல்‌ நுரை, இழிந்தபொருள்‌.
  • உபரசன்‌ – தம்பி. இளையன்‌.
  • உபரட்சணம்‌,உபரச்சநம்‌ – புறக்காவல்‌.
  • உபராசன்‌ – இளவரசன்‌.
  • உபரரமம்‌ – வெறுத்தல்‌, துறத்தல்‌.
  • உபரி – மிகுதி, மேலிடம்‌.
  • உபரிகை – மேன்மாடம்‌, மேல்வீடு.
  • உபரோதகம்‌ – உள்வீடு.
  • உபலட்சியம்‌ – குறிப்பால்‌ பொருள்‌ விளக்குதல்‌.
  • உபலாநம்‌, உபலாலநை – சீராட்டு, பாராட்டு.
  • உபலேபநம்‌ – சாணியால்‌ மெழுகுதல்‌.
  • உபலேபம்‌ – பூசுதல்‌.
  • உபவநம்‌ – பூஞ்சோலை, பூந்தோட்டம்‌.
  • உபவருத்தநம்‌ –  குடியில்லாவூர்‌.
  • உபாகிதம்‌, உபாகிதை – விண்வீழ்‌ கொள்ளி.
  • உபாகிருதம் – தீங்கறிவிக்குங்‌ குறி.
  • உபாக்கியாநம்‌ -வரலாறு கூறல்‌.
  • உபாங்கம்‌ – நான்மறை உறுப்பு நூல்‌.
  • உபாசகன்‌ – வழிபாடு செய்வோன்‌, ஏவல்‌செய்வோன்‌.
  • உபாசநம்‌, உபாசநை, உபாசனை ,உபாசித்தல்‌ – வழிபாடு, வணக்கம்‌.
  • உபாதாந காரணம்‌ – முதற்‌ காரணம்‌.
  • உபாதாநம்‌ – அரிசி அறம்‌, ஐம்பொறியடக்கம்‌.
  • உபாதாயம்‌ – பற்றப்‌ பவது.
  • உபாதி – நோய்‌, துன்பம்‌, வருத்தம்‌.
  • உபாத்தியாயன்‌ –  ஆசிரியன்‌, கற்பிப்போன்‌,
  • கணக்காயன்‌.
  • உபாத்தியாயிநி, உபாத்தியாயை –  கற்பிப்போள்‌, ஆசிரியை.
  • உபாயகம்‌ – உதவி.
  • உபாயம்‌ – சூழ்ச்சி, நொய்மை, எளிது, சிறிது.
  • உபாலம்பநம்‌ –  இகழ்தல்‌.
  • உபேட்சநம்‌, உபேட்சை –  அசட்டை, விருப்பு வெறுப்‌பின்மை, வெறுப்பு.
  • உபோக்காதம்‌, உபோற்காதம்‌ – துவக்கம், நூன்முகம், பாயிரம்.
  • உமாசகிதன்‌ –  உமை பங்கன்‌
  • உமாசுதன்‌ –  உமை மகன்‌,
  • உமாதம்‌ –  அறிவின்மை.
  • உமாதன்‌ –  அறிவிலி.
  • உமாதேவி –  உமையம்மை.
  • உமாமகேசுவர மூர்த்தம்‌ – அம்மையப்பர்‌ வடிவம்‌.
  • உயிர்க்கணம்‌ –  உயிரெழுத்துக்களின்‌ கூட்‌டம்‌, (உயிர்களின்‌டம்‌, (உயிர்களின்‌தொகுதி.)
  • உயிர்‌ ஸ்தாநம்‌, உயிர்த்தாநம்‌ – உயிர் நிலை.
  • உயிர்ப்‌ பிராணி –  உயிர்ப்பொருள்‌.
  • உயிர்‌வாதநை –  உயிர்த்துன்பம்‌.
  • உயிர்‌வேதநை –  பெருந்துன்பம்‌.
  • உயுக்தம்‌, உயுத்தம், – போர் தகுதி.
  • உரகம்‌ – பாம்பு.
  • உரகர்‌ – அமணர்.
  • உரகாசநன்‌ – திருமால்.
  • உரகா திபன்‌ – திருமால்.
  • உரகாரி – கருடன்.
  • உரகேந்திரன்‌ – ஆதிசேடன்.
  • உரங்கமம்‌, உரங்கம்‌ – பாம்பு.
  • உருக்குமணி, ருக்மணி – பொன்மணி.
  • உருக்குமம்‌, ருக்குமம்‌ – பொன்‌.
  • உருசி, ருசி – சுவை.
  • உருசிகரம், ருசிகரம் – இனிமையானது.
  • உருசிதம், ருசிதம் – விரும்பப்பட்டது.
  • உருசு, ருசு – சான்று, மெய்.
  • உருகப்படுத்தல்,ருசுப்படுத்தல்‌ – மெய்ப்பித்தல்‌.
  • உருத்திரகணிகை – கோயிற்‌ பணிப்பெண்‌,
  • கோயிற்‌ பிணாப்பிள்ளை.
  • உருத்திரகரி – வெள்ளிமலை, நொடித்தான்‌ மலை.
  • உருத்திராக்கம்‌ – சிவமணி, அக்குமணி.
  • உருத்திராரி, ருத்திராரி – வேல்
  • உரூடம்‌, ரூடம்‌ – இடுகுறி.
  • உரூடி,ரூடி – இடுகுறி. உரூபம்‌, ரூபம்‌ – உருவம்‌, வடிவம்‌.
  • உரூபாவதி, ரூபாவதி – பேரழகி
  • உரூபித்தல்‌, ரூபித்தல் –  மெய்ப்பித்தல்‌. 
  • உரூப்பியம்‌ –  அழகானது, வெள்ளி நாணயம்‌.
  • உரொக்கம்‌, ரொக்கம்‌ –  கைப்பணம்‌, இருப்பு,மொத்த இருப்பு.
  • உரோகசாந்தன்‌ –  மருத்துவன்‌.
  • உரோகம்‌, ரோகம் –  நோய்‌, ஒளியின்மை.
  • உரோகாயதளம்‌ –  உடம்பு.
  • உரோசநி –  கடகு, கோரோசனை.
  • உரோசம்‌, ரோசம்‌ – வெட்கம்‌, கணை, உணர்ச்‌சி, பெருமை, சினம்‌, முளை.
  • உரோதனம்‌, ரோதனம் –   கண்ணீர், அழுகை.
  • உரோமகூபம்‌ –  மயிர்ச்சிலிர்ப்பு.
  • உரோமசங்காரி, ரோம சங்காரி –  அம்பட்டன்‌, குடிமகன்‌, மயிர்‌வினையன்‌.
  • உரோமத்துவாரம்‌,ரோமக்துவாரம்‌ – மயிர்க்கால்.
  • உரோமப்புளகம்‌, ரோமப்புளகம்‌ -மயிர்க்கூச்செரிவு.
  • உரோமம்‌, ரோமம்‌ –  மயிர், முடி, குஞ்சி.
  • உரோமராசி, ரோமராசி – மயிரொழுங்கு.
  • உரோமாஞ்சம்‌, உரோமாஞ்சலி, உரசோமாசிதம்‌, உரோமாரிஷம்‌ – மயிர்ப்‌ பொடித்தல்‌.
  • உரோமாம்பரம்‌ – கம்பளம்‌, மயிர்ச்சலை.
  • உலகசஞ்சாரம்‌, உலோகசஞ்சாரம் – உலகச்‌ சுற்று.
  • உலகநாதன்‌ – அரசன்‌, கடவுள்‌, உலகத்‌ தலைவன்.
  • உலகநாயகி, லோகநாயகி – இறைவி, உலகத்தலைவி.
  • உலகநீதி, லோகநீதி – உலகநெறி, நன்னெறி,
  • உலகநேத்திரன்‌ – கதிரவன்.
  • உலகப்பிரசித்தி –  எங்கும்பரந்த புகழ்‌.
  • உலகமாதா, லோகமாதா – இறைவி, உலகன்னை.
  • உலக மார்க்கம்‌ – உலக நெறி.
  • உலச யாத்திரை – உலகக் சுற்று.
  • உலகரட்சகன்‌, லோகரட்சகன்‌ –  கடவுள்‌.
  • உலகங்காப்போன்‌-அரசன்‌.
  • உலகாசாரம்‌, லோகாசாரம்‌ – உலஇயல்‌, உலக நடை.
  • உலகா நுபவம் – உலகியலறிவு, உலகப்‌ பழக்கம்.
  • உலகாயதம்‌, உலகாயிதம்‌ – உலகமே கடவுள்‌ எனுங்‌கொள்கை.
  • உலுத்தம்‌ – ஈயாமை, இவறல்‌.
  • உலுத்தன்‌ – ஈயாதவன்‌, பிசினன்‌.
  • உலூகம்‌ – கோட்டான்‌, கூகை.
  • உலூகலம்‌ – உரல்‌, குங்கிலியம்‌.
  • உலோகப்பிரசித்தம்‌ –  உலகறிந்தது.
  • உலோகம்‌, லோகம்‌ – உலகம், வெள்ளி, பொன், செம்பு, முதலியன.
  • உலோகரூடம்‌ – உலகவழக்கம்‌, நாட்டுவழக்‌கம்.
  • உலோகார்த்தம்‌ – உலகியல்‌.
  • உலோகிதன்‌ – செவ்வாய்‌.
  • உலோகேசன்‌ – கடவுள்‌, அரசன்‌, நான்முகன்‌.
  • உலோசிநம், லோலசநம் – கண்.
  • உயோசிதம் –  சந்தனமரம்‌.
  • உலோபம்‌ ,லோபம்‌ – ஈயாமை, இவறன்மை, கடும்‌ பற்றுள்ளம்.
  • உலோபன்‌, உலோபி – ஈயாதவன்‌, பிசினன்‌.
  • உலோலம்‌ –  அசைவு, அவாப்பெருக்கம்‌.
  • உலோலன்‌, லோலன்‌ – உள்ள நிலையிலான்‌, காமுகன்‌.
  • உல்லங்கநம்‌ – மீறுதல்‌, தாண்டுதல்‌, கடத்‌தல்.
  • உல்லாசம்‌ – மகிழ்ச்சி, விளையாட்டு, உள்‌ளக்களிப்பு.
  • உல்லாபம்‌ – துக்கம்‌, மழலைச்சொல்‌.
  • உல்லுமுகம்‌ – நெருப்புக்‌ கொள்ளி.
  • உல்லேகநம்‌ – எழுதுதல்‌.
  • உல்லோசம்‌ – மேற்கட்டி.
  • உல்லோலம்‌ – பெருந்திசை.
  • உவணகேதநன் – திருமால்‌.
  • உவதி, யுவதி – பதினாறாண்டுப்பெண்‌.
  • உவதை – மலைவீழருவி.
  • உவமாநம் – ஒப்புப்பொருள்‌, உவமை.
  • உவமேயம் – புகழ்பொருள்‌, உவமிக்கப்‌படும் பொருள்.
  • உவரோதம் – உப்புக்கடல்‌.
  • உவவநம் – பூந்தோட்டம்‌.
  • உவாந்தம் – புதுத்திங்கள்‌, முழுநிலா.
  • உவாமதி – முழுத்திங்கல்‌, முழு நிலா.
  • உற்கம் –  ஊழித்தீ, தீத்திரள்‌, எரி கொள்ளி.
  • உற்கருஷம்‌, உங்கருடம் –  மிகுதி, பெருமைபாராட்டுதல்.
  • உற்கலன் –  பறவைபிடிப்போன்‌.
  • உற்காதம்‌ – துவக்கம்‌, நுற்பிரிவு.   உற்காமுகம் –  கொள்ளிவாய்ப்பேய்‌.
  • உற்கிரமம் – மீறுதல்‌, வழிதவறிப்போதல்‌.
  • உற்கிருஷ்டம் – மேன்மை, மிகுதி, முதன்மை.
  • உற்கை – விண்மீன்‌, விண்வீழ்கொள்ளி.
  • உற்கோஷம்‌, உற்கருரோசம்‌ – பேரொலி,நீர்ப்பறவை.
  • உற்சவம் – திருவிழா, திருநாள்‌.
  • உற்சாகம், உற்காயம் –  ஊக்கம்‌, கிளச்சி, முயற்சி, எழுச்சி.
  • உற்சாரணம்‌ – அகற்றல்‌, விருந்து, புறந்தருதல்.
  • உற்சேபணம் – விகிறி.
  • உற்பதநம் – ஏறுதல்‌, பிறத்தல்‌.
  • உற்பத்திக்கிராமம் – தோற்ற முறை.
  • உற்பநம், உற்பந்நம் –  உண்மை, தோற்றம்‌, கல்வி.
  • உற்பலம்‌ – கருங்குவளை, கருநெய்தல்‌, செங்குவளை மலர்‌.
  • உற்பவகாரணன்‌ – தந்தை.
  • உற்பாடநம்‌ – அழித்தல்.
  • உற்பாதகம்‌ – தொடக்கம்.
  • உற்பாதம்‌ – கொடுமை, தீக்குறி.
  • உற்பாதநம்‌ –  பிறப்பித்தல்‌.
  • உற்பாதிதம்‌ –  பிறப்பிக்கப்பட்டது.
  • உற்பிச்சம்‌, உற்பீசம்‌ –  வித்துவேர்ப்‌பிறப்பு.
  • உற்பிந்நம்‌ – பிளவுபட்டது.
  • உற்பிரேட்சை – தற்குறிப்பேற்றம்‌.
  • உற்பூதம்‌ – பொறிகளாலறியத்தக்கது.
  • உன்னதம்‌ – உயர்ச்சி.
  • உன்னதபதவி – உயர்ந்த நிலை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button