பன்னாட்டுச் சந்தையில..

பன்னாட்டுச் சந்தையில/
பனாட்டு விக்கச் சென்றவரே /எந்நாட்டில் நீருமிப்போ /
ஏங்குறேனே நானுமிப்போ /
பத்துத்திங்கள் ஆகிடிச்சு/
எனது மனம் நோகடிச்சு/
ஊஞ்சலில போட்ட பிள்ள /
தேவைதையா வளந்திடிச்சு/
அச்சொட்டா அவர் முகம் தான்/
மூக்கு முழி நானிருக்க/
கப்பலில கடல் கடந்து/
ஆத்திரேலியா போனாரோ/
ஆபிரிக்காக்குப் போனாரே/
கட்டு நாயக்காவில ஏறி/
கனடாக்குத்தான் போனாரோ/
என்டாலும் கடுதாசி /
எழுதிப் போட வேணுமல்லோ/
என் வீட்டுக்காரர் சரியான உழைப்பாளி/
சும்மாயும் இருக்காது/
சோம்பேறியாப் படுக்காது/
வீட்டுக்குள்ளயே இருந்தா /
முகவரி கூட மறந்து போகும்/
அப்பிடி ஏதுமிருக்காது/
அவர் நல்ல கெட்டிக்காரர்/
உப்பிடியே சொல்லிச் சொல்லி /
மூண்டு ஆண்டு ஆகிப்போச்சு/
என்னாச்சோ ஏதாச்சோ /
எங்கேனும் கேட்டுப் பாரன்/
பக்கத்து வீட்டுக் கிழவி /
முத்தத்தில கண்டால் போதும் /
நித்தமும் இதத்தான் சொல்லும்/
ரெண்டு ஆண்டு கூட இல்ல/
திடீரென்று ஏதும் செய்வார் /
என்றவளும் காத்திருக்க/
வீம்பு பிடிச்ச கிழவி /
வாய் திறந்தால் மூடாது/
ம்….
அடுத்த நாளுமாகியது/
அதே கிழவிதான் குறுக்க/
கடைவீதி வரும் வழியில் /
சடுதியாய் வாய் திறந்து/
” எடி பிள்ள கடிதக்காரர் உனக் கண்டாவரச் சொன்னார்/
ஏதோ கடிதமாம் கெதியா
தான்போ பிள்ள..”
கடிதம் என்றதுமே /
கரைந்தே போனாள்/
மனம் துடிதுடிக்க எண்ணம் சிறகடிக்க/
விரைந்தோடினாள் /
கடிதத்தை பெற்றுக்கொண்ட அவள்/
மீண்டும் வீட்டுக்கே விரைந்தோடினாள்/
முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த /
தன் பிள்ளையைத் தூக்கி உச்சி முகர்ந்தாள் /
சேர்த்தணைத்து முத்தமழை பொழிந்தாள்/
வாசலுக்குப் பக்கத்தில் /
இருத்தியவள் படிக்கலானாள்/
படித்ததும் இடிந்து போய்/
படிக்கல்லானாள்/
அவள் கையிலிருந்து பறந்த கடிதத்தை நீங்களும் படியுங்கள்..
“அன்புள்ள மனைவிக்கு,
இதுவரை காலமும் எந்த கலந்தாய்வுமின்றி
என்னை இருட்டறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள் .
உடனடியாக ஒரு வழக்குரைஞரைத் தொடர்பு கொண்ட
ஓடிவரவும்கெதியெண்டு”
(முற்றும்)
ஈழத்து எமுத்தாளன் : தீரன்
கனடா



