தமிழ்பிறமொழி/தமிழ்

“ஈ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

“ஈ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

  • ஈங்கிசை – கொலை, வரு, வருத்தம்.
  • ஈசன்‌ –  தலைவன்‌, ஆள்‌வோன்‌.
  • ஈசநாதன் – இயக்கம்‌, ஆணை செய்யும்‌ வலியுடைக்கடவுள்‌. 
  • ஈசாநி – உமை, இறைவி.
  • ஈசான மேரு – வெள்ளிமலை.
  • ஈசானம்‌ – வடகீழ்ப்பால்‌.
  • ஈசி – இறைவி.
  • ஈசிகை – ஓவியம்‌, எழுதுகோல்‌.
  • ஈசிதன்‌ – ஆள்பவன்‌.
  • ஈசுரநிச்சியம்  கடவுளுண்மை,
  • ஈசுவரசத்தித்திரயம்‌ – இறைவனின்‌ மூவாற்றல்கள்‌.
  • ஈசுவரத் துவம்‌ – இறைவனாந்தன்மை.
  • ஈசுவர லீலை –  இறைவன்‌ திருவிளையாட்டு.
  • ஈசுவரன் –  இறைவன்‌.
  • ஈசுவரார்ப்பணம்‌ –  கடவுட்கு உரியதாக்குதல்‌.
  • ஈசுவரி – இறைவி.
  • ஈசுவரியம்‌ – இறைவனுடையது.
  • ஈசுவரோபாசனை – இறை (கடவுள்‌) வழிபாடு.
  • ஈஷுகம்‌, ஈடகம்‌ –  மனத்தைக்‌ கவர்வது.
  • ஈஷணம்‌, ஈடணம்‌ , ஈடணை – விருப்பம்‌.
  • ஈஷணாத்திரயம்‌ – மூவகைப்‌ பொருட்பற்றுக்‌கள்‌, (மண்‌, பெண்‌, பொன்‌),
  • ஈஞ்சை –  கொலை.
  • ஈடா தண்டம் – ஏர்க்கால்‌,
  • ஈட்சணம்‌ –  கண்‌, பார்வை.
  • ஈட்டுமம் – வசந்தகாலம்‌.
  • ஈட்டுமன்‌ – காமன்.
  • ஈநசாதி – இழிகுலம்‌, கீழ்வகுப்பு.
  • ஈநம்‌ – இழிவு, குறைபாடு, குறைவு.
  • ஈநன்‌ – இழிந்தோன்‌, தாழ்ந்தோன்‌.
  • ஈரிதம்‌ – தள்ளப்பட்டது, நீக்கப்பட்டது.
  • ஈர்ஷை, ஈரிலை, ஈரிடை – பொறாமை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button