வரலாற்றில் இன்று

பன்னாட்டுத் தாய்மொழி நாள்!

வாழ்க தமிழ்

பன்னாட்டு தாய்மொழி நாள்

1952 குடத்திங்கள் 21-ஆம் நாள்அன்று கிழக்கு பாகித்தான் தலைநகர் டாக்காவில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வங்க மொழியை ஆட்சி மொழியாக ஏற்கச்செய்ய நடத்திய போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு மாணவர்களும் ஒன்பது அகவை நிரம்பிய சிறுவனும் உயிரிழந்தனர்.

அவர்களுக்கு ஈகியர் நினைவுச்சின்னம் அமைத்து அந்த நாள் “ஈகியர் நாளாகக் கடைபிடிக்கப்பட்டது. 1956 இல் வங்கமொழி ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட்டது. 1971இல் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என தனிநாடான பின்,1999 இல் வங்கதேசத்தின் வேண்டுகோளை ஒன்றிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுகோ) ஏற்று குடத்திங்கள் 21 “உலகத் தாய்மொழி நாள்” என அறிவித்தது.

ச.இராசகோபாலாச்சாரி 14.7.1937 முதல் 9.10.1939 வரை சென்னை மாநிலத்தில் முதலமைச்சர் பதவியிலிருந்தபோது, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இந்தி மொழி கட்டாயப் பாடம் என ஆணையிட்டார். அதை எதிர்த்து தந்தை பெரியாரும் மற்றவர்களும் முன்னெடுத்த போராட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் என ஈடுபட்டு, 1269 பேர் சிறையில்அடைக்கப்பட்டனர். தந்தை பெரியாருக்கு 6.12.1938 அன்று இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் உரூபா இரண்டாயிரம் குற்றப்பணமும் விதிக்கப்பட்டது.

9.10.1939 இல் இராசகோபாலாச்சாரி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சென்னை மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது.21.2.1940அன்று ஆளுநர் இந்தி கட்டாயப் பாடம் என்ற முடிவைத் திரும்பப்பெற கட்டளையிட்டார்.

அந்த நாள்(குடம்21) “உலகத் தாய்மொழி நாள்”.
1940 குடம் 21ஐ முன்னிட்டு நாம் தாய்மொழி நாளைக் கடைபிடித்து உயிர்மொழியாம் தமிழ் மொழியில் பிறப்பெய்த பெருமையினைக் கொண்டாடி மகிழ்வோம் ..

வாழிய தமிழ்த்தாயே !
வையகம் மேவிநீவீர் !
வாழிய எம் தாயே..!!!

வாழ்க தமிழ் ..!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button