படைப்புகள்வரலாற்றில் இன்று

போட்டி எண் ௫(05) “தமிழால் முழங்கு“

போட்டி எண் ௫(05) “தமிழால் முழங்கு“

போட்டிக்கான நாள்..

௧)முதல் சுற்று        04/05/2024

௨)இரண்டாம் சுற்று 11/05/2024

௩)மூன்றாம் சுற்று    25/05/2024

௪)நான்காம் சுற்று    01/06/2024

௫)ஐந்தாம் சுற்று      08/06/2024

௬)இறுதிச்சுற்றுக்கான அறிவித்தல் போட்டியாளர்களுக்குத் தனியாக அனுப்பிவைக்கப்படும்.

போட்டியாளர்களுக்கான விளக்கம்

  • காரிக்கிழமை தோறும் ஐரோப்பிய நேரம் 4:30 மணிக்கு இப்போட்டி ஒலிபரப்பாகும்.
  • இப்போட்டியானது ஆறு சுற்றுப் போட்டியாகத்  தொடர்ந்து நடக்கும் .
  • ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெற்றவர்கள் ஆறாம் சுற்றில் பங்கேற்பார்கள்.
  • ஒவ்வொரு சுற்றிலும் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் உங்கள் பெயர் , முகவரி மற்றும் தொலைத்தொடர்பு எண் போன்றவற்றை thulipotti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள் .
  • வெற்றி பெற்ற போட்டியாளர்களைத் தவிர ஏனைய போட்டியாளர்கள் ஏனைய ஐந்து சுற்றிலும் வெற்றி பெறும்வரை பங்கு பெறலாம் .
  • ஆறாம் சுற்றானது ஐந்து சுற்றிலும் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான சுற்றாக அமையும் .
  • ஆறாம் சுற்றில் பங்கேற்கும்  வாகையாளர் மற்றும்  போட்டியின் வரையறை  போட்டியாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம்  அறியத்தரப்படும்.
  • இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு வெற்றிக்கோப்பையுடன் சான்றிதழும் செம்மொழியான் , செம்மொழியாள் என்ற பட்டத்துடன்  பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

இப்போட்டி நிகழ்விற்கான வரையறை :

  • ஒரு போட்டியாளர்  ஆறு மணித்துளிகள் உரையாடவேண்டும் .
  • ஒரு மணித்துளிக்கு மேல் அமைதி காக்கக்கூடாது  .
  • ஓம் , இல்லை , சரி போன்ற ஒன்றைச் சொல்லில் விடையளிக்கக் கூடாது .

  • போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் மறுமொழி சொல்ல வேண்டும் . எதிர்க்கேள்வி கேட்கக்கூடாது .

  • ஒரே சொல்லை மூன்று முறை மட்டுமே  பயன்படுத்தலாம்.
  • எந்தவொரு பிறமொழிக்கலப்புமின்றி உரையாடல் வேண்டும் .
  • நெறி விலக்குச் சொற்கள் ( அடையாளக் குறியீட்டுச் சொற்கள் : எடுத்துக்காட்டு : “ஐ” திறன்பேசி என்பதில் வரும் “ஐ“ என்ற ஆங்கிலச் சொல் “சம்சூங்” என்ற பெயர் , நைக் என்கின்ற அடையாளம் இவை போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தடுக்கலாம் ).

நன்றி .

வாழ்க தமிழ்.

ஒருங்கிணைப்பு : துளிவானொலி/தமிழே எங்கள் முகவரி .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button