ஏனைய பற்றியம்வரலாற்றில் இன்று

துளிப்பணிப்பகத்தலைமை அறிக்கை : 22/09/2024

கிளைகள் : துளிவானொலி / துளி அறக்கட்டளைப்பணிமனை

துளிப்பணிப்பக ஆற்றுநர் அறிக்கை

பெயர் :நிலா
பணி: துளியின் அமைத்துநர் மற்றும் துளிப்பணிப்பகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் .

துளிவானொலி பத்தாம் நாள் ஒன்பதாம் திங்கள் இரண்டாயிரத்து இருபத்தோராம் ஆண்டன்று, நிலா என்ற என்னால் பிரான்சு மண்ணில் தொடங்கப்பட்டது .

கொள்கை

பிறமொழிக்கலப்பற்ற தமிழைப்பட்டிதொட்டியெங்கும் எடுத்துச்செல்லல்.

கட்டமைப்பு :

துளிப்பணிப்பகமானது, முன்பு துளிவானொலி என்ற வானொலிப்பணியையும் அதனூடாக அறக்கட்டளைப்பணியையும் எடுத்துச்சென்றது . தற்போது ,இப்பணிகள் இரண்டும் துளிப்பணிப்பக அமைத்துவத்தின் கீழ் , கிளை அமைத்துவங்களாகச்செயற்படவுள்ளன. துளிப்பணிப்பகமானது பதினைந்தாம் நாள் , ஒன்பதாம் திங்கள் , இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு ,துளிப்பணிப்பகமாக மாறிச்செயலாக்கம் பெற்றுள்ளது . துளி பணிப்பகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைத்துவராக நிலாவாகிய நான் பணியாற்றுகின்றேன் என்பதை உறுதிப்படுத்துகின்றேன் .

துளிவானொலி

துளி அமைத்துவத்தின் கிளையான துளிவானொலியின் தலைவராக துளியரசன் செண்பகம் அவர்கள் 16/09/2024 அன்று , நிலாவாகிய எனது தனிப்பட்ட விருப்பிற்கமையத்தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவர் துளியின் உறவாக இருந்து துளியின் முழுவளர்ச்சியிலும் துணைநின்றவர் என்பதால் இத்தேர்வு இடம்பெற்றது . துளியரசன் செண்பகம் அவர்களுடைய முழுவிரும்பின் அறிக்கை வெளியானதும் அவர்களிடம் பொறுப்பு முறைப்படி ஒப்படைக்கப்பட்டது .

துளிவானொலியின் செயற்குழுக்கள்

துளிவானொலியானது தலைவர் துளியரசன் செண்பகம் அவர்களின் ஒப்புதலுக்கமைய பலகிளைகளாகப்பிரிந்து துளிப்பணிப்பகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிலா மற்றும் துளிவானொலித்தலைவர் துளியரசன் செண்பகம் ஆகியோரால்  துளிவானொலிக்குழுவின் ஆற்றுநர் செயற்குழு, அறிவிப்பாளர் செயற்குழு மற்றும் செய்திச்செயற்குழு போன்றன ஒருங்கமைக்கப்பட்டது  .

துளி அறக்கட்டளைப்பணிமனை

இதுவரை காலமும் துளி அறக்கட்டளைப்பணியானது தனித்த தலைமையுனூடாக(நிலா) முன்னெடுக்கப்பட்டது . தற்போது இவ்வறக்கட்டளைப்பணிமனை துளிப்பணிப்பகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு ,
தமிழ்சார் பணிகளுக்கான அறக்கட்டளையாக வருங்காலத்தில் நடைபயிலவுள்ளது . இதற்காக துளிஅறக்கட்டளைத்தலைவராக கயந்தா என்பவரை அவரின் முழு ஒத்துழைப்புடன் துளிப்பணிப்பகம் பணியமர்த்தி உள்ளது . இவர் துளியின் விளப்பர இணையராக மூன்றாண்டாக துளிவானொலியோடு தொடரும் ஒருவர் என்பதால் கயந்தா அவர்களைத்தேர்வு செய்துள்ளோம் .

துளிப்பணித்தகத்தின் செயற்றிட்டம்

  • துளிவானொலி இயக்குநரான பவியம்மாவின் கைநாட்டை ஒப்பமாகக்கொண்டு, ஆண்டு தோறும் மொழியோடு ஒன்றிச்செல்லும் குழந்தைகள், தமிழ்ப்பற்றாளர்கள் , அறிஞர்கள் , வல்லுநர்கள் , மற்றும் மாந்தநேயச்செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கல் .
  • பிறமொழிக் கலப்பற்ற தமிழை , பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல பாலமாகச்செயற்படல் .
  • வாழும் போதே வாழ்த்திப்போற்றி , தமிழ் தந்த சான்றோர்களுக்கு மதிப்பளித்து , அவர்களினூடாக சரியானமுறையில் தமிழைப்பேசவும் எழுதவும் கற்றுக்கொடுத்தல் .

 

துளிப்பணிப்பகத்தின் பிறசெயற்பாடுகள்

துளியில் ஏற்கனவே பலகிளைகள்
செயற்பாட்டில் உள்ளன. அதில் குறிப்பிட்டுக்கூற வேண்டியவை இளைஞர் செயற்குழு மற்றும் சிறுவர் செயற்குழு . வளரும் தலைமுறையினரிடம் மொழிக்கலப்பற்ற மொழிப்பற்றையும் , தலைமைத்துவத்தையும் கையளிக்க பயிற்றுவித்தல்  இதன் நோக்கமாகும் .

உறுதிமொழி

விரைவாக பிறமொழிக்கலப்பற்ற தமிழ்மொழியை எல்லோரிடமும் எடுத்துச்செல்லவும் உறவுகளின் கைகளில் அனைத்தையும் ஒப்படைத்து தமிழ் தமிழுக்கானது என்ற எண்ணவிதைகளைத்தூவி வருங்காலத்தை மேம்படுத்துவதே எமது பணியாகும் .

“தமிழே எங்கள் முகவரி” என்ற அடையாளத்தோடு , துளிப்பணிப்பகத்தின் ஆற்றுநர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிலாவாகிய நான் மக்களிடம் இவ்வறிக்கையை கையளிக்கின்றேன்.

“தமிழே எங்கள் முகவரி”
இதுவே எமது உறுதிமொழி .

“நிலா”

நன்றி
வாழ்க தமிழ் ..!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button