ஈழப்போராட்டத்திற்காக உயிர் நீத்த தமிழ்நாட்டு மக்கள்..
மக்கள் தெரிந்து கொள்வதற்கு .

தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஈழத்திற்காகக் குரல்கொடுத்து உயிர் நீத்த நிகழ்வுகளின் தொகுப்பு
2009 சுறவம் முதல் மீனம் வரையான காலப்பகுதியில் தமிழ்நாட்டில் பதினைந்து பேர், மலேசியாவில் ஒருவர், சுவிட்சர்லாந்தில் ஒருவர் என மொத்தம் பத்தொன்பது பேர் இறந்துள்ளார்கள்.
செங்கொடி ( அகவை:21, இறப்பு: 28-08- 2011) ராயீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு ஒறுத்து வழங்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக்கேட்டு 28-08-2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார்.
1989 ஆம் ஆண்டில் தீக்குளிப்பில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மு.ந.ஆறுமுகம். 1989 ஆம் ஆண்டில் திருமுட்டத்தில் நடைபெற்ற ஈழத்தமிழர் போராட்டத்தின் போது தீக்குளித்து உயிர்நீத்த ஈகைப் போராளி .
1995 ஆம் ஆண்டில் தீக்குளிப்பில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரவூஃப் ஆவார். 1995 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இடம்பெற்ற படைத்துறைத் தாக்குதல்களின் போது குடாநாட்டில் இருந்து பெரும் தொகையானோர் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இந்த இடப்பெயர்வினால் துயரடைந்த இவர் அப்துல் ரவூப் திருச்சியில் 15-12-1995 அன்று தீக்குளித்து சாவடைந்தார்.
தமிழ்நாட்டில் 29-1-2009, ஆம் நாள் முத்துக்குமார் என்ற தமிழகத்தைச் சேர்ந்த இதழாசிரியர். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடுவண் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சாசுதிரி பவனுக்கு முன்னால், ஈழத்தமிழர்களை வாழ்த்தி முழக்கமிட்டும், அவர்களைக் காப்பாற்ற வேண்டியும் ஓசையெழுப்பியபடி மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்து தமது உயிரை மாய்த்துக் கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பள்ளப்பட்டி சிற்றூரைச் சேர்ந்தவர் ரவி. இவர் 31-1- 2009 காரிக்கிழமை அன்று திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை நகரின் பேருந்து நிலையம் அருகில் தீக்குளித்தார்.
சீர்காழி கட்சி ஒன்றின் செயலர் இரவிச்சந்திரன் என்பவர் 7-2-2009, அன்று இரவு 1.30 மணியளவில் உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டு, தமிழ் வாழ்க….. தமிழீழம் வெல்க…… ராயபக்சே ஒழிக….. காங்கிரசு ஒழிக…….. எனக் குரல் கொடுத்துக் கொண்டே தம்மைத் தாமே எரித்துக் கொண்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவைச் சேர்ந்தவர் அமரேசன் (அகவை 65). இவர் 8-2-2009, அன்று சுங்கச்சாவடி பேருந்து நிலையம் எதிரில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
தமிழ்வேந்தன் 18-2-2009, அன்று மாலை 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்துக்குள் மண்ணெண்ணையுடன் வந்தவர் ஈழத்தமிழர்களுக்கு இசைவாக முழக்கங்கள் எழுப்பியபடியே தீக்குளித்தார்.
சிவப்பிரகாசம் (55) என்பவர் 2 லீற்றர் மண்ணெண்ணெயை எடுத்து வந்து தன் மீது ஊற்றிக் கொண்டார். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்து என்று கத்திக் கொண்டே உடலில் தீ வைத்துக் கொண்டார்.
சிவகாசி ஆணையூர் சிற்றூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருட்டிணன்(அகவை55), 25-2- 2009 காலையில் திமுக கொடி, மண்ணெண்ணெய் , கடிதம் இவற்றை கையில் வைத்துக்கொண்டு விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர்களுக்காக தீக்குளிக்கப் போகிறேன் என்று குரல் கொடுத்தபடியே மண்ணெண்ணெயைத் தன் மீது ஊற்றிக்கொண்டு தீ பற்ற வைத்துக்கொண்டு தன் உயிரை ஈகம் செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வள்ளிப்பட்டு சிற்றுரைச் சேர்ந்த 36 அகவையான கூலித் தொழிலாளி சீனிவாசன் இலங்கையில் நடந்து வரும் போரில் இரக்கப்பட்ட தமிழர்களை காப்பாற்றவேண்டி 26-2-2009 இரவு 10.50 மணியளவில் தனது வீட்டருகே இருந்த தேமுதிக கொடி கம்பத்துக்கு அருகில் தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்
சதாசிவம் சிறீதர்(எழில்வளவன்) (அகவை 33), 99 ஆவது வட்டம் , ஒரு கட்சியின் அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தவர். இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்துச் சென்னையில் அறிவன்கிழமை, 4-3- 2009, தீக்குளித்த சிறீதரன் மருத்துவம் கைகொடுக்காமல் வியாழக்கிழமை, 5-3-, 2009 அன்று உயிரிழந்தார்.
நாகலிங்கம் மகன் ஆனந்த்(23). இவர் ஈழத் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி 15-3-2009, ஞாயிற்றுக்கிழமை மாலை தீக்குளித்தார். ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கை எடுக்காததால் ஆனந்த் மனக்கவலை அடைந்திருந்தார். இந்நிலையில், சடுதியாகத் தனது வீட்டிற்கு வெளியே நடுத் தெருவில் நின்றபடி “இலங்கைத் தமிழர்கள்!” வாழ்க என்றும், “இலங்கையில் போரை நிறுத்த வேண்டும்” என்று வெகுண்டெழுந்து முழக்கமிட்டபடியே உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இராசசேகர் (அகவை 24). ஒரு குழந்தையின் தந்தையான இவர் ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை எண்ணி, கடந்த சில நாட்களாகவே வருத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கட்டத்தில் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளிக்கப் போவதாக இராசசேகர் கூறியிருக்கின்றார். இதனைக் கேட்டு நடுங்கிப்போன அவரின் தாய் ரோகம்பா, மகனுக்கு ஆறுதல் கூறியதுடன் தீக்குளிக்கும் எண்ணத்தைக் கைவிடும்படி கூறியிருக்கிறார். ஆனால், 15-3 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் இராயசேகர் தனது வீட்டு வாசலில் முன்பாக உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
பாலசுந்தரம். 22-3-2009, நண்பகல் 12 மணியளவில், தனது வீட்டிற்கு வெளியே மண்ணெண்ணெயை தன் மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார் கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் துயர் நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஒத்திசைவு பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவற்துறையினர் அகற்றினர். இதை தாங்க முடியாத பாலசுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து தனது குடும்பத்தாரிடமும், கட்சிக்காரர்களிடம் வருத்தம் தெரிவித்து வந்த பாலசுந்தரம், 22-3, 2009, நண்பகல் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே தனது மேல் மண்ணெண்ணெயை ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.
மாரிமுத்து (அகவை 62). 22-3-2009 இரவு வீட்டு வாசலில் உள்ள காங்கிரசு கொடிக்கம்பத்தின் முன்பு நின்று கொண்டிருந்தபோது சடுதியாக உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் மாரிமுத்துக்கு மிகுந்த தீக்காயம் ஏற்பட்டது. செய்தி அறிந்து சிவகாசி காவற்துறையினர் விரைந்து வந்து மாரிமுத்துவை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்குக் கேடான நிலையில் சேர்க்கப்பட்ட மாரிமுத்து மருத்துவம் கைகொடுக்கா நிலையில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு மாரிமுத்து ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருக்கிறார். அந்த கடிதம் கொடிக்கம்பத்தின் அருகே கிடந்தது. (அதில் இச்செய்தியும் அடக்கம்)”இலங்கைத் தமிழர்களை சோனியா காந்தி காப்பாற்ற வேண்டும்” என்றும் அந்த கடிதத்தில் அவர் எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி ..
வாழ்க தமிழ்..




