தமிழை உயர் செங்கோல் மன்ற மொழியாக்கு ! உண்ணாநிலைப் போராட்டம் !

தமிழ்நாட்டில் தமிழ் அலுவல் மொழியாகவோ ஆட்சிமொழியாகவோ இல்லாதது தமிழ் மக்களுக்கு என்றுமே வருத்தமளிக்கக் கூடிய ஒன்றாகவே இருந்துவரும் நிலையில், உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது .
இந்த உண்ணாநிலைப்போராட்டமானது , உயர் செங்கோல் மன்ற மங்கள் இயக்கம் மற்றும் செங்கோல் மன்ற உயர் வழக்குரைஞர் செயற்பாட்டுக் குழு போன்றவற்றினால் முன்னெடுக்கப்படுகிறது .
“ ஒன்றிய அரசே! தமிழைச் சென்னை உயர் செங்கோல் மன்றத்தின் அலுவல் மொழியாக்க ஒன்றிய அரசிற்குத் தமிழ்நாடு அரசு 07/12/2016 அனுப்பிய கோப்பிற்கு ஒப்புதலைப் பெற்றிடு! மற்றும் தமிழை உயர் செங்கோல் மன்ற மொழியாக்கு! “
என்ற முழக்கத்துடன் , 28/02/2024 முதல் எழும்பூர் சென்னையில் அமைந்துள்ள இராசரத்தினம் விளையாட்டு அரங்க முன்றலில் , கோரிக்கை நிறைவேறும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது .
மேலும் , இதைப்பற்றிய செய்திகளை அறிந்து கொள்வதற்கு வழக்குரைஞர்களா,
பகத்சிங்: 9443917588/8124363699 மற்றும்
பாவேந்தன்:9443306110/9361578849
ஆகியோரின் தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன .
தமிழை உயர் செங்கோல் மன்ற மொழியாக்கு !
என்ற கோரிக்கையை வலியுறுத்தும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்திற்கு மக்களின் மிகையான ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்றே செயற்பாட்டுக்குழுவினரால் எதிர்பார்க்கப்படுகின்றது .



