தமிழ்பிறமொழி/தமிழ்

“க”கர நிரல் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

கா,கா,கி,கீ,கு,கூ,கெ,கே,கை,கொ,கோ,கௌ

  • ககநசாரி – வானிற் செல்வோன்.
  • ககநம்‌ – வான், காடு, படை.
  • சுகேசன் –  கருடன்‌, கலுழன்‌, கழுகு, ஞாயிறு.
  • ககோள சாஸ்திரம் – வான நூல்.
  • ககோளம்‌ – வான்வட்டம்‌, வளிமண்டலம்‌.
  • ககோள வித்தை – வான நூற்‌ கல்வி.
  • கங்காசு தன்‌ – முருகன்‌, வீடுமன்‌.
  • கங்காகரன்‌ – சிவன்.
  • கங்காசேவி – நீர்மகள்‌.
  • கங்காளம்‌ – எலும்பு, எலும்புக்கோவை.
  • கங்காளன்‌ – சிவன்.
  • கங்கை வேணியன்‌ – நீர்வார்‌ சடையன்‌.
  • கசங்கலம் –  கடல்‌.
  • கசபம் – புல்.
  • கசம்‌,கஜம் – யானை, இரண்டு முழ  அளவு,நீருற்று, மயிர்.
  • கக்ஷி – பக்கம்‌, சார்பு.
  • கஷாயம்‌ – மருந்துக்குடிநீர்.
  • கசானனன்,கஜானனன்‌ – யானைமுகன்‌, பிள்ளையார்‌.
  • கசுமலம்‌ – அழுக்கு.
  • கசுமாலம்‌ – அழுக்குடையது, தீயது.
  • கசேந்திரம்‌, கஜேந்திரம் – வானவர்கோன்‌ யானை.
  • கச்சபம்‌ – ஆமை.
  • கச்சுரன் – காமுகன்‌.
  • கச்சோதி – மின்மினி.
  • கஞ்சகம்‌ – முன்றானை.
  • கஞ்சகாரர்‌ – கன்னார்.
  • கஞ்சநம்‌ – கரிக்‌ குருவி.
  • கஞ்சநன்‌ – காமன்‌.
  • கஞ்சம்‌ – வெண்கலம்‌, முளரி, தாமரை, துளசி.
  • கஞ்சரன்‌ – கதிரவன்‌, நான்முகன்‌.
  • கஞ்சுகம்‌ – மெய்ப்பை, பாம்பின்றோல்‌.
  • கஞ்சுகன்‌ – மெய்காப்பாளன்‌, சட்டை,
  • வாயிற்காப்போன்‌.
  • கடகம்‌ – கைவளை, வளையம்‌.
  • கடமாசம்‌ – மாசித்திங்கள்‌.
  • கடமுனி – குடமுனி, குறுமுனி.
  • கடம்‌ – குடம்‌, யானைக்கதுப்பு.
  • கடம்பன்‌ – முருகன்‌.
  • கடாகம்‌ – கிணறு, கொப்பரை.
  • கடாகாசம்‌, கடாகாயம்‌ – குடவெளி.
  • கடாசலம்‌ – யானை.
  • கடாட்சம்‌, கடாக்ஷம்‌ – அருள்‌, கடைக்கண்‌.
  • கடாட்சவீட்சணம்‌ – கடைக்கண்பார்வை, அருணோக்கம்‌.
  • கடாட்சித்தல்‌ – அருளல்‌.
  • கடாரம்‌ – கொப்பரை.
  • கடிகாசுத்திரம்‌ – நாழிகைவட்டம்‌, ௮ரைநாண்‌.
  • கடிகாசூத்திரன்‌ – குயவன்.
  • கடிகாரம்‌ – நாழிகைவட்டில்‌, பொழுது காட்டுங்கருவி.
  • கடிகை – நாழிகை, தாழ்ச்கோல்‌.
  • கடிப்பிரதேசம்‌ – பின்பக்கம்‌.
  • கடின சித்தம்‌ –  வன்னெஞ்சம்‌.
  • கடினம்‌ –  வன்மை, கடுமை, வருத்தம்‌,
  • கொடுமை.
  • கடு – நஞ்சு.
  • கடுரவம்‌ –  தவளை.
  • கடூரம்‌ – கொடுமை.
  • கடோற்பவன்‌ – குடத்திற் பிறந்தவன், குறுமுனி.
  • கட்கத்‌ தம்பம்‌ – வாள்வெட்டாமல்‌ தடைசெய்‌யும் வித்தை.
  • கட்கம்‌ – வாள்‌.
  • கட்காதாரம்‌ – வாளுறை.
  • கட்டநன்‌ – குறியவன்‌.
  • கட்டம்‌, கஷ்டம்‌ – துன்பம்‌, வருத்தம்‌.
  • கஷ்டசாத்தியம்‌ – அரிதின்‌ முடிவது.
  • கஷ்டார்ச்சிதம்‌,கஷ்டார்ஜ்ஜிதம்‌ – வருந்திச்‌ தேடியது.
  • கணநாதர்‌ – கூட்டதக்சதலைவர்‌, பிள்ளையார்‌,கணத் தலைவர்.
  • கணபதி – பிள்ளையார்‌.
  • கணப்பிரபை – மின்னல்‌.
  • கணம்‌, க்ஷணம்‌ – குழாம்‌, கூட்டம்‌, தொகுதி,கொடி.ப்பொழுது.
  • கணாதிபன்‌ – சிவன்‌, பிள்‌ளையார்‌, கூட்டத்‌தலைவன்.
  • கணி – கோள்‌ நால்‌, கோள்றால்‌ வல்‌லான்.
  • கணிகை –  பொதுமகள்‌.
  • கணிசம்‌ – அளவு, மேம்பாடு.
  • கணிதசாஸ்திரம்‌ – கணக்கு நூல்‌.
  • கணி தம்‌ – கணக்கு.
  • கணிதர்‌ – கணக்காளர்‌,
  • கணேசன்‌ – பிள்ளையார்‌.
  • கண்டலஸ்நானம்‌ – கழுத்துவரை குளிப்பு.
  • கண்டரநாளம்‌ – மிட து, கழுத்து.
  • கண்டம்‌ – நிலப்பிரிவு, பிரிவு, துண்டு,கட்டி, மிடறு, கழுத்து.
  • கண்டனம்‌ – மறுப்பு.
  • கண்டாரவம்‌ – மணியொலி
  • கண்டி – கழுத்தணி.
  • கண்டிகை – சிவமணி, தோளணி, பதக்கம்‌.
  • கண்டி தம்‌ – உறுதி, வரையறுப்பு, ஒறுப்பு.
  • கண்டித்தல்‌ – அறு த்தல்‌, ஒறு த்தல்‌.
  • கண்டூயை – சொறி.
  • கண்‌ திட்டி, கண்திருஷ்டி – கண்ணேறு.
  • கதகன்‌ – வாரலாறு கூறுவோன்‌.
  • கதம்‌ – வெகுளி, செலவு, வலி.
  • கதம்பகம்‌, கதம்பம்‌ – கூட்டம்‌, மணப்பொருட்‌கூட்டு.
  • கதரம் – யானைத் தொட்டி.
  • கதலி – வாழை.
  • கதலீவநம்‌ – வாழைக்காடு.
  • கதாபாணி – தண்டேந்திய கையன்‌.
  • கதாப்பிரசங்கம் – வரலாற்று விரிவுரை.
  • கதாமஞ்சரி – வரலாற்றுக்‌ கொத்து.
  • கதாயுதம்‌ – தண்டுப்படை.
  • கதி – நடை, செலவு, வழி, புகலிடம்‌, பற்றுக்கோடு, நிலை, சொல்லப்பட்டுது.
  • கதிதம்‌ – சொல்லப்பட்டது.
  • கதித்தல்‌ – ஒலித்தல்‌, சனத்தல்‌, வழிப்‌படுதல்‌.
  • கத்தபம்‌ – கழுதை.
  • கத்தியம்‌, கத்தியரூபம்‌ – உரைநடை, சொல்லக்‌ தக்கது.
  • கத்துருத்‌துவம்‌, கர்த்ருத்வம் – ஆளுந்தன்மை.
  • கநகசபை – பொன்னம்பலம்‌.
  • கநகம் – பொன்.
  • கநகாசனம் –  பொன்னிருக்கை.
  • கநகாசலம் – பொன்மலை, மேருமலை.
  • கநகாபிஷேகம்‌ – பொன்‌ திருமுழுக்கு.
  • கநகாமிரதம்‌ – வெள்ளி.
  • கநதி, கநம்‌ –  பருமை, பெருமை, சமை.
  • கநவாட்டி பெருமாட்டி.
  • கநவான்‌ – பெரியோன்‌, பெருமையாளன்.
  • கநாகரம்‌ – மழைக்காலம்‌.
  • கநிட்டம்‌, கநிஷ்டம்‌ – சிறுமை, ௮ழகு, கடைவிரல்‌.
  • கநிஷ்டை – பின்னோள்‌, தங்கை.
  • கநித்திரம்‌ – மண்வெட்டி.
  • கந்தக பூமி – வெப்புகிலம்‌.
  • கந்த மூலம்‌ – கிழங்கு.
  • கந்தம்‌ – மணம்‌, நாற்றம்‌, கிழங்கு.
  • கந்தரம்‌ – கழுத்து.
  • கந்‌தருவம்‌,கந்தர்வம்‌ –  இசை, யாழோர்‌ கூட்டம்‌, குதிரை.
  • கந்‌தவகம்‌ – மூக்கு.
  • கந்தவர்க்கம்‌ – மணப்பொருட்டொகுதி.
  • கந்தன்‌, ஸ்கந்தன்‌ –  முருகன்‌, முருகவேள்‌.
  • கந்தாரம் – இசைப்பாட்டு
  • கந்தி – ,தவப்பெண்‌.
  • கந்தூகம்‌ – குதிரை, பந்து.
  • கந்நபாரம்பரியம்‌,
  • கர்நபாரம்பரியம்‌ – செநல்வழக்கில்வழங்குவது.
  • கந்நபூஷணம்‌, கர்நபூஷணம்‌ – காதணி.
  • கந்நம்‌, கர்நம்‌ – காது.
  • கந்நவேதனம்‌, கர்நவேதனம்‌ – காதுகுத்தல்‌.
  • கந்திகாதானம்‌, கந்யாதானம்‌ – பெண்ணை அறமாகக்‌கொடுத்தல்‌
  • சுந்கிகாபதி – மருமகன்‌.
  • கந்நிகை – மணமாகாதவள்‌, இளம்‌ பெண்.
  • கந்நியாக்கிரகணம்‌ – பெண்கொள்ளல்‌, மணம்‌.
  • கந்நியாஸ்‌திரி – மணமாகாப்பெண்‌.
  • கந் நியா தோஷம்  – கற்பழிவு.
  • கந்மசண்டாளன்‌ – தீவினையாளன்‌.
  • கந்மசாந்தி – தீவினைக்கமிப்பு.
  • கந்மஷம்‌, கல்மஷம்‌ – அழுக்கு, தீவினை.
  • கந்மத்‌ துரோகி – தீவினையாளன்‌.
  • கந்ம நிவர்த்தி –  தீவினைநிக்கம்‌.
  • கந்மபரிபாகம்‌ –  தீவினைத்தொலைவு.
  • கர்மம்‌, கருமம்‌ – தொழில்‌, வினை.
  • கந்மரோகம்‌, கந்மவியாதி – வினைநோய்‌, தீரா நோய்‌.
  • கந்மாதி – வினைத்தொடக்கம்‌. கர்மி – தொழிலாளன்‌, தீவினையாளன்.
  • கந்மேந்திரியம்‌ – தொழிற்‌ கருவி.
  • கபடஸ்‌தன்,கபடன்‌ – கரவுடையோன்‌, வஞ்சகன்‌.
  • கபடம், கவடம், கபடு – “கரவு, படி.று, வஞ்சகம்‌, மோசம்‌, சூது, ஒளிப்பு.
  • கபடபுத்தி –   கரவெண்ணம்.
  • கபநாசம்‌ – கண்டங்கத்திரி.
  • கபம்‌ – கோழை, ஐ.
  • கபவியாதி – கோழை நோய்‌.
  • கபாடம்‌, கவாடம்‌ –  கதவு, காவல்‌.
  • கபாலம்‌ – தலையோடு.
  • கபாலன்‌ – aலையோ தாங்கியவன்‌, சிவன்.
  • கபி – குரங்கு.
  • கபிஞ்சலம்‌ – ஆந்தை.
  • கபித்துவசன்‌ – குரங்குக்‌ கொடியோன்‌.
  • கபிலம்‌ – கருமை கலக்க பொன்னிறம்‌, புகர் நிறம்.
  • கபிலை – பொன்னிற ஆ.
  • கபீரம்‌ – ஆழம்‌.
  • கபோதம்‌ – புறா
  • கபோதி – குருடன்‌.
  • கபோலம்‌ – கதுப்பு, கன்னம்‌.
  • கப்பம்‌ – இறை.
  • கமண்டலம்‌ – நீர்க்குடுவை.
  • கமநம்‌ – செலவு, நடை, போதல்‌.
  • கமம்‌ – நிறைவு, போதல்‌.
  • கமலம்‌ – தாமரை, நீர்‌
  • கமலாகரம்‌ – தாமரைப்பொய்கை.
  • கமலாசநதி, கமலாசநை – திருமகள்‌.
  • கமலாசனன்‌ – தாமரையிருக்கையன்‌, நான்முகன்.
  • கமலாலயை – திருமகள்‌.
  • கமலை – திருமகள்‌, திருவாளூர்‌.
  • கம்சன்‌, ஹம்சன்‌ –  செஞ்சுடர்‌, கதிரவன்‌, ஞாயிறு.
  • கம்பம்‌ – அசைவு, தூண்‌, நடுக்கம்‌.
  • கம்பிதம்‌ – அசைவு, நடுக்கம்‌.
  • கம்பீரம்‌ – செருக்கு,  உயர்தோற்றம்‌, பெருமை, ஆழம்‌.
  • கயழுகன்‌,  கஜமுகன்‌  – பிள்ளையார்‌, யானைமுகன்‌.
  • கயம்‌, ஹயம்‌ – குளம்‌, ஆழம்‌, யானை.
  • கயசோகம்‌,க்ஷயரோகம்‌ –  எலும்புருக்கிநோய்‌.
  • கயிங்கரன்‌, கிங்கரன்‌ – பணியாளன்‌, ஏவல்செய்.
  • கயிரவம்‌ – ஆம்பல்‌.
  • கயிரிகம் – காவிக்கல்‌.
  • கயிலாசபருவதம்‌ – வெள்ளிமலை.
  • கயிலாசம்‌, கயிலாயம்‌ – சிவப்பேறு, நொடித்தான்‌மலை.
  • கரகம்‌ – நீர்க்குடுவை, வட்டில்‌.
  • கரகோசம்‌, கரகோஷம்‌ –  கைதட்டுதல்‌.
  • கரக்கம்பம்‌ – கையசைத்தல்‌.
  • கரக்கிரகணம்‌, கரக்கிரகம்‌ – கைப்பிடித்தல்‌, மணம்‌.
  • கரசரணாதி ௮வயவம்‌ – கைகால்‌ முதலிய உறுப்பு.
  • கரசாகை – கைவிரல்‌.
  • கரசூகம்‌ – நகம்‌.
  • கரடகன்‌ – கரவன்‌, வஞ்சகன்‌.
  • கரணம்‌ – கருவி, ஐம்பொறி.
  • கரணர்‌ – கணக்கர்‌.
  • கரணீயம்‌ – கைவினை, செய்யத்தக்கது.
  • கரண்டம்‌ – நீர்க்காக்கை, நீர்க்குடுவை.
  • கரதலம் – உள்ளங்கை, கை.
  • கரதலாமலகம்‌ – உள்ளங்கை நெல்லிக்கனி.
  • கரநியாசம்‌ – கைவைத்தல்‌.
  • கரப்பரிசம்‌ – கையாற்றொடுதல்‌.
  • கரமுகன்‌, கரிமுகன்‌
  • கரம்‌ –  தும்பிக்கை முகன்‌, பிள்ளையார்.
  • கரம் – கை.
  • கரவடம்‌ – களவு.
  • கரா – முதலை.
  • கருச்சனை, கருச்சிதம்‌ – முழக்கம்‌.
  • கருச்சித்தல்‌ – முழங்கல்‌, இரைதல்‌.
  • கருடசாரம்‌ – உப்பு.
  • கருடதிசை – கீழ்த்திசை.
  • கருடதியாநம் – கலுழன்‌ வழிபாடு.
  • கருடன்‌ – கலுழன்.
  • கருணபத்திரம்‌ – காதோலை.
  • கருணாகடாட்சம்‌ – அருட்பார்வை.
  • கருணாகரம்‌ – அருட்கடல்‌, அருளிடம்‌.
  • கருணாகரன்‌ -௮ருட்கடவுள்‌.
  • கருணாநிதி – அருட்செல்வம்‌.
  • கருணாபரன்‌ – அருளாளன்‌.
  • கருணாமூர்த்தி – ௮ருள்‌ வடிவினன்‌.
  • கருணாலயம்‌ – அருளிருப்பு.
  • கருணீகன்‌ – கணக்கன்‌.
  • கருணை – அருள்‌, இரக்கம்‌.
  • கருமம்‌ – வினை, தொழில்‌.
  • கர்க்கடகசிரிங்கி – கடுக்காய்ப்பூ.
  • கர்க்கடகம்‌ – நண்டு.
  • கர்ச்சநம்‌ – ஒலி.
  • கர்ஷணம்‌ – இருத்தல்‌.
  • கர்த்தபம் – கழுதை.
  • கர்த்தா, கருத்தா – தலைவன்‌, வினைமுதல்‌, ஆக்கியோன்‌,  நூலாசிரியன்‌, முதல்வன், கடவுள்.
  • கர்ப்பகோசம்‌ – கருப்பை.
  • கர்ப்பக்கிரகணம்‌ – கருக்தோற்றம்‌.
  • கர்ப்பக்கிரகம்‌ – கருவுலம்‌, கருவீடு, மூலஇடம்‌.
  • கர்ப்பதாரணம்‌ – சூல்‌ கொள்ளல்‌.
  • கர்ப்பவதி – சூல்.
  • கர்ப்பவாதை ,கர்ப்பவேதனை,கருவுயிர்க்குந்துன்பம்‌, வயா, பேறுகாலத்துன்பம்‌.
  • காரப்பாசயம்‌ – கருப்பை.
  • கர்மகர்த்தா – தொழிற்றலைவன்‌.
  • கர்ம காரகன்‌ -கம்மாளன்‌, பணியாளன்‌.
  • கர்மக்யாநம்‌, கருமஞ்ஞானம்‌ – பழவினை அறிவு.
  • கர்மசண்டாளன்‌ – நன்றியிலான்‌, தீயவன்‌,
  • பகைவன்‌, கொடியவன்‌.
  • கர்மசுத்‌தி – வினைத்தூய்மை.
  • கர்மநிவர்த்தி – வினைநீக்கம்‌.
  • கர்மபந்தம்‌, கர்மந்தனம் – பழவினைக்தொடர்பு, பழவினைக்கட்டு.
  • கர்மபலன்‌ – வினைப்பயன்.
  • கர்மவிபாகம் – தொழிற்பிரிவு, வினைப்பிரிவு.
  • கர்மவியாதி – வீனைநோய்‌.
  • கர்மாத்மா – தீவினையாளன்‌, வினையாளன்‌.
  • கர்மானுபவம்‌ – வினை நுகர்ச்சி.
  • கர்மி – வினையாளன்‌.
  • கர்வம்‌ – செருக்கு, இறுமாப்பு.
  • கர்வி, கர்விதன்‌ – செருக்குடையவன்‌.
  • கர்னம்‌ – காது, செவி.
  • கலகண்டம்‌ – குயில் .
  • கலசமுனி – குடமுனி.
  • கலசம்‌ – குடம்.
  • கலம்பகம்‌ – கலவை, நறுஞ்சாந்து.
  • கலம்பம்‌ – அம்பு.
  • கலாசாலை – கல்லூரி.
  • கலாதகன்‌ – தட்டான்.
  • கலாதரன் – திங்கள்.
  • கலாதி – சண்டை, குழப்பம்‌.
  • கலாநிதி – கலைமகள்‌, கலைச்செல்வம்‌, நிலவு, திங்கள்‌.
  • கலாபம்‌, கலபம்‌ – மயில்‌, மயிற்றோகை.
  • கலாபி – ஆண்மயில்‌, மயிலிறகு.
  • கலாபூரணன்‌ – முழுநிலா, முழுமதி.
  • கலாபதி, –  நிலவு, திங்கள்‌.
  • கலி – வறுமை, துன்பம்‌.
  • கலிக்கம்‌,கலிங்கம்‌ – கண்ணிலிடு மருந்து.
  • கலியாணம்‌ – மணம்‌, மன்றல்‌, பொன்‌,மகிழ்ச்சி.
  • கலினம்‌ – கடிவாளம்‌.
  • கலைக்கியானம்‌, கலாஞானம்‌ – கலையறிவு, நூலறிவு.
  • கல்மஷம்‌ – கலக்கம்‌, குற்றம்‌.
  • கல்லாரம்‌ – செங்கழுதீர்‌.
  • கல்லோலம்‌ – நீர்த்திரை, மகிழ்ச்சி.
  • கல்வம்‌ – குழியம்மி.
  • கவசம்‌ – இரும்புச்சட்டை, மூடி, காப்பு.
  • கவந்தம்,கபந்தம்‌ – தலைக்குறை,
  • கவளீகரித்தல்‌, கபளீகரித்தல்‌ – முற்றும்‌ விழுங்குதல்‌.
  • கவனம்‌ – கருத்து, நோக்கம், உன்னிப்பு.
  • கவாத்து (இந்து.) – படைக்கலப்‌ பயிற்சி.
  • கவி – செய்யுள்‌, புலவன்‌, பாட்டு.
  • கவிசிநம்‌, கெளபீனம் – கீழுடை, கோவணம்‌.
  • சுவிச்சக்கரவர்த்தி – புலவர்‌ தலைவன்‌.
  • கவித்துவம்‌ – புலமை, செய்யுளியற்றுத்திறன்.
  • கவிநாயகன்‌ – பாட்டுடைத்‌ தலைவன்‌.
  • கவிராயன்‌ – செய்யுட்புலவன்‌.
  • கவிவாணன்‌ – பாவலன்.
  • கவீச்சுரன்‌ – புலவர்‌ தலைவன்‌.
  • கவுசிகன்‌ – வானவர்கோன்‌.
  • கவுந்தி – அருந்தவப்பெண்‌.
  • கவுரவம்‌ – மேன்மை.
  • கவுளி, கெளளி – பல்லி.
  • களத்திரம்‌ – மனைவி.
  • களபம்‌, களவம்‌ – கலப்பு, கலவைச்சுண்ணம்‌, யானைக்கன்று.
  • களேபரம்‌ – உடல்‌, பிணம்‌, குழப்பம்‌.
  • கற்கபலம்‌ – மாதுளை.
  • கற்க – குதிரை.
  • கற்பகவிருக்ஷம்‌ – தெய்வமரம்‌, விரும்பியதைக்‌ கொடுக்கும் மரம்.
  • கற்பம் – ஊழிக்காலம்‌,நெடுவாழ்க்கை, மருந்து.
  • கற்பாந்தம்‌ – உலகமுடிவு, ஊழிக்காலம்‌.
  • கற்பிதம்‌ – செய்யப்பட்டது, கட்டளை.
  • கனம்‌ – சுமை, பளுவு.

               

                 கா

  • காகதாலியம்‌, காகதாளிநியாயம் – தற்செயல்‌, எதிர்‌பாராமல்‌, காக்கை உட்காரப்‌ பனம்‌ பழம்‌ விழ என்பதுபோலநிகழும்‌ முறை.
  • காகபுச்சம்‌ – குயில்‌.
  • காகுத்தன்‌ – இராமன்‌, திருமால்‌.
  • காங்கயம்‌ – பொன்‌.
  • காசம்‌ – ஈனை நோய்‌, இருமல்நோய்‌.
  • காசரம் – எருமை.
  • காஷாயம்‌ – காவி.
  • காஷாயவஸ்‌திரம்‌ –  காவியாடை, துவராடை.
  • காஞ்சனம்‌ – பொன்‌, செல்வம்‌, ஊமத்தை, அத்தி.
  • காஞ்சிரம்‌ – எட்டிமரம்.
  • காடாக்கினி – பெருந்தீ, பெருநெருப்பு.
  • காடாந்தகாரம்‌ – பேரிருள்‌.
  • காட்டிச்பிரமாணம்‌ – காண்டலளவை.
  • காட்டம்‌, காஷ்டம்‌ – விறகு.
  • காண்டபடம்‌ – திரைச்‌சீலை.
  • காண்டவம்‌ – பெருங்காடு.
  • காண்டவான்‌ – வில்லாளி.
  • காண்டாவநன்‌ – வானவர்கோன்‌.
  • காதகம்‌ – கொலை.
  • காதகன்‌ – கொலையாளி.
  • காதம்‌ – எழரை நாழிகைக்‌ தொலைவு.
  • காதம்பிநி – முகிற் கூட்டம்.
  • காத்தியாயனி –  இறைவி, துவராடையள்‌.
  • காத்திரம்‌, கரத்ரம்‌ – உடல்‌, சினம்‌, பருமம்‌.
  • காந்தக்கல்‌ – தீக்கல்‌, ஊசியிழுக்குங்‌ கல்‌.
  • காந்தபட்சி – மயில்‌.
  • காந்தம்‌, காந்தி – அழகு, ஒளி, வெப்பம்‌.
  • காபாலன்‌ – சிவன்.
  • காபோதம்‌ – புறாக் கூட்டம்.
  • காமதகனன்‌ – சிவன்‌, காமனை எரித்தோன்‌.
  • காமதேனு – கடவுள்‌ ஆ, விரும்பியதைத் தரும் ஆ.
  • காம பரவசன்‌ – காமவயப்பட்டவ‌ன்.
  • காமரபி – விரும்பியவடிவங்‌கொள்பவன், பச்சோந்தி.
  • காமலீலை – இன்ப ஆடல்‌.
  • காம விகாரம்‌ – காம நோய்‌.
  • காமாதி தோஷங்கள்‌ – உயிர்க்குற்றங்கள்‌.
  • காமிக கன்மம்‌ – பயன்கருதிய செயல்‌.
  • காமிய மரணம்‌ –  தற்கொலை.
  • காமியம்‌ – விரும்பும்‌ பொருள்‌, பயன்கருதிய செயல்.
  • காம்பீரம்‌ – பெருமை, ஆழம்‌, வீறு.
  • காயகற்பம்‌ – உடல்‌ வலுவேறு மருந்து.
  • காயசித்தி – நீடுவாழ்ப்‌ பேறு.
  • காயத்திரி – கலைமகள்‌, ஒரு மந்திரம்‌.
  • காயநம்‌ –  பாட்டு.
  • காயம்‌ – உடல்‌, யாக்கை, வான்‌.
  • காரகம்‌ – வெப்பம்‌, செயல்‌, கருளி,வினைமுதல்‌.
  • காரகன்‌ – செய்பவன்‌.
  • காசணகர்த்தா – முதல்வன்‌, முதற்கடவுள்‌.
  • காரணானு மானம்‌ -முதல்‌ கருதல்‌.
  • காரணிகன்‌ – ஆராய்ச்சியாளன்‌, நடுநிலையாளன்.
  • காரண்டம்‌ – காக்கை.
  • காராகிருகம்‌ – சிறை.
  • காரிதம்‌ – செய்வித்தல்.
  • காரிய கர்த்தா – வினைமுதல்வன்‌.
  • காரிய சாதநம்‌ – வினைவழி, வினைமுடிக்கும்‌ வழி.
  • காரிய தரிசி – அமைச்சன்‌, காரியத்‌ தலைவன்‌,செயலாளன்‌,
  • காரியதுரந்தரன்‌ – செயல்‌ வல்லோன்‌,கைவலாளன்.
  • காரியஸ்‌தன்‌ – செயலாளன்‌.
  • காரியத்துவம்‌ – வினைத்தன்மை, தொழிற்‌றன்மை.
  • காரியா நுமானம்‌ – எச்சக்கருதல்‌.
  • காருகத்தம்‌ – இல்லற நிலை.
  • காருகபத்தியம்‌ – குடிவழித்‌ தீ.
  • காருகர் – நெய்வார்‌, வண்ணார்‌, கொலையாளர்.
  • காருணிகம்‌,காருணியம்‌ –  அருள்‌, இரக்கம்‌.
  • காருணிகன்‌ – அருளாளன்‌.
  • கார்க்கோடம்‌ – பிரண்டை.
  • காலகண்டன்‌ – சிவன்.
  • காலகதி – கால நடை.
  • கால கரணம்‌, கால ஹரணம்‌ – காலத்தாழ்ச்சி.
  • கால கன்மம்‌ – காலத்திற்கேற்ற செயல்‌.
  • காலகுண்டன்‌ – எமன்.
  • காலக்‌ கிரமம்‌ – கால ஒழுங்கு.
  • காலக்‌ கிரயம்‌ – காலத்திற் கேற்றவிலை, காலவிலை.
  • கால சக்கரம்‌ – வாழ்நாட்காலம்‌, கோள்கிலைப்‌போக்கு.
  • கால சங்கை –
  • கால சந்தி – வைகறை, காலை வழிபாடு.
  • காலட்‌ சேபம்‌, கால் க்ஷேபம்‌ – வாழ்க்கை, நாட்கழித்தல்‌, பொழு போக்கல்‌.
  • கால தாமதம்‌ – காலத் தாழ்ச்சி.
  • கால துரிதம்‌ -காலவிரைவு.
  • கால நியமம்‌ –  காலமுறை, காலக்கடன்‌, காலஒழுங்கு.
  • கால நிரூபணம்‌ – கால வரையறை.
  • கால பேதம்‌ –  கால வேறுபாடு.
  • கால வர்த்தமாநம்‌ – கால நிகழ்ச்சி.
  • கால வித்தியாசம்‌ – காலவேற்றுமை, காலவேறுபாடு.
  • கால வேகம்‌ – கால விரைவு.
  • காலாக்கினி – ஊழித்தீ
  • காலாதீதன்‌ – காலங்கடந்தவன்‌, காலவரம்பிலான், கடவுள்.
  • காலாந்தகன்‌ – சிவன்.
  • காலாந்தம்‌ – கால முடிவு.
  • காலாந்தரம்‌ – இடைக்காலம்‌, கால வேறுபாடு.
  • காலாயசம்‌ – இரும்பு.
  • காலாவதி – கால எல்லை.
  • காவாரம்‌ – நீர்ப்பாசி.
  • காவி வஸ்‌திரம்‌ – துவராடை.
  • காளமேகம்‌ – கருமுகில்‌.
  • காளம்‌ – கருமை, முகில்‌.
  • காளவநம்‌ – சுடுகாடு.

              கி

  • கிங்கரா்‌ – ஏவல்‌ செய்வோர்‌, பணியாளர்‌.
  • கிங்கரன் – பணியாளன்‌, காமவேள்.
  • கிங்கிரை – குருதி. கிஞ்சம்‌, கிஞ்சிதம்‌,
  • கிஞ்சித்து – சிறிது, சிறுமை.
  • கிஞ்சிஞ்ஞர்‌ – சிற்றறிவினர்‌.
  • கிஞ்சுகம்‌ – கிளி, முள்முருக்கம்பூ.
  • கிடாரம்‌ – கொப்பரை.
  • கிடி – பன்றி.
  • கிட்டிணம்‌ – கறுப்பு.
  • கிதவன்‌ – வஞ்சகன்‌.
  • கித்தான்‌ (அராபி,) – உரப்புத் துணி, முரட்டுத் துணி.
  • கிஸ்தி (இந்து.) – திரை.
  • கிந்நரம்‌ – வீணை யாழ்‌.
  • கிம்புரி – முடியுறுப்புக்களில்‌ ஒன்று தோளணி, யானை கொம்பின் பூண்‌.
  • கியாதம்‌,  கியாதி – புகழ்‌, மேன்மை.
  • கியாநம்‌ – அறிவு.
  • கிரகசத்தி – கோள்வலி.
  • கிரகசாந்தி – தீக்கோட்கழிப்பு.
  • கிரக சாரம்‌ – கோள்நிலை, கோட்பார்வை.
  • கிரகணம்‌, கிராணம்‌ – பற்றுதல்‌, பிடித்தல்‌.
  • கிரக தோஷம்‌ – கோட்குற்றம்‌.
  • கிரகஸ்தம்‌ – இல்லறநிலை.
  • கிரகத்தன்‌, கிரகஸ்தன்‌ – இல்வாழ்வான்‌, இல்லறத்தான்.
  • கிரகுபதி – பகலோன்‌, நெருப்பு.
  • கிரகபீடை – கோள்களால்‌ வரும்‌அன்பம்‌.
  • கிரகப்‌ பிரதிட்டை – வீட்டுக்கு முளைபிடித்தல்‌.
  • கிரகப்‌ பிரவேசம்‌ – குடிபுகுதல்‌, புதுவீடுபுகுதல்‌.
  • கிரகம்‌ – வீடு, கோள்‌, பற்றுதல்‌, பிடிப்பு.
  • கிரகாரா தனை – கோள்வழிபாடு.
  • கிரகித்தல்‌ – பற்றுதல்‌, இழுத்தல்‌, கவர்தல், உணர்தல்.
  • கிரணமாலி – கதிரவன்.
  • கிரணம்‌ – ஒளி, கதிர்.
  • கிரணன்‌ – ஞாயிறு, பகலோன்‌.
  • கிணார்த்தம்‌, கிரணியம்‌ – ஒளியுள்ள பொருள்‌.
  • கிரண்யம்‌, ஹிரண்யம்‌ – பொன்‌.
  • கிரந்த கர்த்தா – .நூலாசிரியன்‌.
  • கிரந்தம் – நூல் எழுத்து.
  • கிரந்தி – காப்பான்.
  • கிரமம்‌ – ஒழுங்கு, முறைமை.
  • கிரயம்‌ – விலை.
  • கிராதன்‌ – குறவன்‌, வேட்டுவன்‌.
  • கிராதி -மரத்தாற்செய்த வேலி.
  • கிராமணி – ஊர்‌த்‌தலைவன்‌.
  • கிராம தேவதை – ஊர்காவற்‌ றெய்வம்‌.
  • கிராமப்‌ பிரதட்சணம்‌ – ஊர்வலம்‌.
  • கிராமம்‌ – சிற்‌றூர்‌.
  • கிராம ரக்ஷை – ஊர்‌ காவல்‌.
  • கிராமாதிகாரி – – சிற்றூர் த்தலைவர்‌.
  • கிராமியம்‌ – சிற்றூரார் செயல்.
  • கிரி – மலை, பன்றி.
  • கிரிகை, கிரியை – தொழில்‌, செயல்‌, விளை, சடங்கு.
  • கிரிமி, கிருமி – பூச்சி, புழு.
  • கிரியா சத்தி – செயலாற்றல்‌.
  • கிரியா சாதனம்‌ – வினைக்கருவி, தொழிற்கருலி.
  • கிரியாதிகாரன்‌ – தொழிற்றலைவன்‌, பிள்ளையார்.
  • கிரியாதீதன்‌ – செயல்கடந்தோன்‌.
  • கிரியா மார்க்கம்‌ – வினைவழி.
  • கிரீட தாரணம்‌ – மூடிசூட்டல்‌.
  • கிரீட தாரி – முடியணிந்தோன்‌.
  • கிரீடம்‌ – முடி
  • கிரீடாதிபதி – முடியுடைத்தலைவன்‌, அரசன்.
  • கிரீடாதிபத்தியம்‌ – முடிசூட்டிய ஆட்டு, அரச சாட்சி.
  • கிரீடாபங்கம்‌ – முடியிழப்பு.
  • கிரீடை – விளையாட்டு, மகளிர் விளையாட்டு.
  • கிரீவம் – கழுத்து.
  • கிருகம்‌ – வீடு,இல்லம்‌.
  • கிருட்டின பக்கம்‌,
  • கிருஷ்ண பக்கம்‌ – தேய்பிறை.
  • கிருட்டினம்‌ – கறுப்பு.
  • கிருட்டினன்‌, கிருஷ்ணன்‌ – கருநிறத்தன்‌, திருமால்‌, கண்ணன்.
  • கிருட்டினாசிநம்‌, கிருஷ்ணாஜிநம்‌ – மான்தோல்.
  • கிருஷி – பயிர்‌, உழவு, பயிர்செய்கை.
  • கிருஷிகன்‌ – பயிர்செய்வோன்‌, உழவன்‌.
  • கிருஷ்டம்‌ – உழுதநிலம்.
  • கிருஷ்ண சயர்தி – கண்ணன்‌ பிறந்தநாள்‌.
  • கிருஷ்‌ண சர்ப்பம்‌, கிருஷ்ண நாகம்‌ – கரும்பாம்பு.
  • கிருதம்‌ – செய்யப்பட்ட, நெய்‌.
  • கிருதர்‌ – செய்பவர்.
  • கிருதலட்சணம்‌ – நல்லிலக்கணம்‌.
  • கிருதார்த்தன்‌ – பயனடைந்தவன்‌.
  • கிருதி – செயல்.
  • கிருத்திகா சுதன்‌, கிருத்திகாசூனு – முருகன்‌.
  • கிருத்திமம், கிருத்திருமம்‌ – கடமை, செயல்‌, பொய்‌, வஞ்‌சனை.
  • கிருத்தியம்‌ – செய்கை, தொழில்‌, சடங்கு.
  • கிருபணசிரோன்‌ மணி – பெரும்பிசினன்‌.
  • கிருபன்‌ – அருளாளன்‌.
  • கிருபாகடாட்சம்‌ – அருட்பார்வை.
  • கிருபாகரன்‌ – அருளாளன்‌, இறைவன்‌.
  • கிருபாநாயகி – அருட்டலைவி, இறைவி.
  • கிருபா மூர்த்தி – அருளுருவினன்‌, கடவுள்‌.
  • கிருபை – அருள்‌, இரக்கம்‌, தண்ணளி.
  • கிரெளஞ்சம்‌ – அன்றில்‌ பறவை, ஒரு மலை.
  • கிலம்‌ – கழிவு, அழிவு, சிறுமை.
  • கிலி – அச்சம்‌.
  • கிலீபதை – அலித்தன்மை.
  • கிலீபம்‌ – பேடு,
  • கிலேசம்‌ – அச்சம்‌, கவலை, துன்‌பம்‌.

             கீ

  • கீசகம், கீசம்‌ – குரங்கு.
  • கீடம்‌ – புழு.
  • கீனம், க்ஷீணம்‌ – கேரி, சிதைவு.
  • கீணர்,க்ஷீணர்‌ – எளியர்‌, கீழோர்‌.
  • கீதசாத்திரம்‌ – இசை நூல்‌.
  • கீதஞானம்‌ – இசையறிவு.
  • கீதம்‌ – இசை, இசைப்பாட்டு.
  • கீதவாத்தியம்‌ – இசைக்கருவி.
  • கீர்த்தனம்‌, கீர்த்தனை – புகழ்ச்சி, புகழ்ப்பா.
  • கீர்த்திமான்‌ – புகழுடையான்‌.
  • கீலகம்‌ – ஆணி, பொருத்து.
  • கீலம்‌ – கழிவு, கீற்று, அழிவு.

                 கு

  • குகம், குஹ்யம் – மறைவு, மறைவிடம்‌.
  • குகுரன் – நாய்.
  • குகை – முழைஞ்சு.
  • குக்குடத்துவசன்‌ – சேவற்கொடியோன்‌, முருகன்.
  • குக்குடம்‌ – கோழி.
  • குசக்கிரந்தி – கருப்பை முடிச்சு.
  • குசம் – புனல்‌, தர்ப்பைப்புல்‌,
  • குசம்‌,குயம்‌ – முலை, கொங்கை.
  • குசலம்‌ – நலம், நன்மை.
  • குசலர்‌ – திறமையாளர்‌, அறிஞர்‌.
  • குசலவித்தை – சூழ்ச்சித்‌ திறன்‌.
  • குசலை – தடை.
  • குசன்‌ – செவ்வாய்‌.
  • குசால்‌ (இந்து.) –  விளையாட்டு,
  • உள்ளக்கிளர்ச்சி.
  • குசினி (போர்த்துக்கல் சொல்) – சமையலறை,
  • குசுமம்‌ – மலர்‌.
  • குஞ்சரம்‌ – யானை.
  • குஞ்சரி – பெண்யானை.
  • குஞ்சித நிருத்தம்‌ – ஒருகாற்‌ றூக்கியாடல்‌. குஞ்சிதபாதம்‌ – தூக்கிய திருவடி.
  • குஞ்சிதம்‌ – வளைவு. குடகன்‌ – சேரன்‌.
  • குடதிசை – மேற்கு.
  • குடார்த்தகோளம்‌,
  • குடகோளார்த்தம் – நிலத்தின்‌ மேற்பாதி உருண்டை.
  • குடிலம்‌ – வட்டம்‌, வளைவு.
  • குடீரகம்‌ – இலைக்குடில்‌.
  • குக்ஷி, குட்சி – ௮கடு, வயிறு.
  • குஷ்டம் – தொழுநோய்‌, பெருநோய்‌.
  • குணசாலி, குணசீலன்‌ – நல்லான்‌.
  • குணஷ்டை – தொல்லை, துன்பம்‌.
  • குணதிசை – கிழக்கு.
  • குணபேதம்‌ – குணவேறுபாடு.
  • குணவதி – நல்லாள்.
  • குணாதீதம்‌ – குணங்கடந்தது.
  • குணாதீதன்‌ – கடவுள்.
  • குணார்த்தகோளம்‌ – நிலத்தின்‌கீழ்பாதி உருண்டை.
  • குணாலயன்‌ – கடவுள்.
  • குதபம்‌ –  தருப்பைப்புல்‌.
  • குதம் – எருவாய்‌, மலவாய்‌.
  • குதர்க்கம் – அழிவழக்கு.
  • குதுகலம்‌, குதூகலம்‌ –  பெருங்களிப்பு, பெருமகிழ்வு.
  • குந்தமம்‌ – பூனை.
  • குபலம்‌ – ஆற்றல்‌ இன்மை.
  • குபேரன்‌ –  பெருஞ்செல்வன்‌, செல்வக்‌கடவுள்.
  • குமரன்‌, குமாரன்‌ – முருகன்‌, இளையன்‌, ஆண்‌மகன்‌, புதல்வன்‌, மகன்‌.
  • குமரி, குமாரி – நங்கை, மணமாகாப்‌ பெண்‌,புதல்வி, மகள்‌.
  • குமுகசகாயன்‌, குழுதபதி, குமுதபாந்தன் – திங்கள், மதி, நிலவு.
  • கும்பகம்‌ – மூச்சக்கட்டல்‌, மூச்சைஅசைவற நிறுத்தல்‌.
  • கும்பதட்சணை – குடத்திடம்‌ பொன்‌.
  • கும்பம் – குடம்‌.
  • கும்ப வத்திரம்‌ – குடத்துணி.
  • கும்பாபிஷேகம்‌ – குடமுழுக்கு.
  • கும்பீரம்‌ – முதலை.
  • குரகதம் – குதிரை.
  • குரங்கம் – மான்.
  • குருகடாட்சம்‌ – ஆசிரியனருட் பார்வை.
  • குருசந்தானம்‌ – ஆசிரியன் வழி, குரு வழி.
  • குருசந்நிதானம்‌ – ஆசிரியன் திருமுன்.
  • குருசேவை – ஆசிரியற் பணி, ஆசிரிய வணக்கம்.
  • குரு நிந்தை – குருவைப்‌ பழித்தல்‌.
  • குருபக்தி, குருபத்தி – ஆசானிடத்தன்பு, குருவினிடத்தன்பு.
  • குருபதம் – வீடு பேறு.
  • குருபத்தினி – ஆசான்‌ மனைவி, குருவின்‌மனைவி.
  • குருபரன்‌ – குரு முதல்வன்‌.
  • குருபுத்திரன்‌ – ஆசான்மகன்‌, குருவின்மகன்‌.
  • குருபூசை – பெரியார்‌ வழிபாடு, குருவழி பாடு.
  • குருப்பியம்‌ – துத்தநாகம்‌.
  • குருப்பிரசாதம்‌ – ஆசானருள்‌, குருவருள்‌.
  • குருமூர்த்தம்‌ ஆசிரியவடிவம்‌.
  • குருமூலம் – ஆசான்வழி, குருவழி.
  • குருலிங்கசங்கமம்‌ – குருவும்‌, சிவனும்‌, அடியாரும்.
  • குருவசநம்‌, குருவாக்கு – குருமொழி.
  • குருவாரம்‌ வியாழக்கிழமை.
  • குருவுபதேசம்‌ – ஆசிரியன்‌ அறிவுரை.
  • குரூபம்‌ – அழகின்மை.
  • குரூபி –  உருவிலி , அழகிலி.
  • குரூரம் – கொடுமை, அஞ்சாமை, தறுகண்.
  • குரூரவதை – கொடுங்கொலை.
  • குரோட்டம்‌ – நரி , பன்றி.
  • குரோதம்‌ – உட்பகை.
  • குரோதி – பகைவன்.
  • குலசன்‌ – நற்குலத்தில்‌ பிறந்தவன்‌.
  • குலத்திரீ, குலஸ்திரீ – குலமகள்‌.
  • குலவித்தை – குலப்பயிற்சி, குலத்தொழில்‌.
  • குலாங்கிஷம்‌ – மறைவு.
  • குலா சாரம்‌ – குலநடை, குலவொழுக்கம்‌.
  • குலாதிக்கம்‌ – குலத்‌தலைமை, குலப்‌பெருமை.
  • குலாபிமானம்‌ -குலப்பற்று.
  • குலாலன்‌ – குயவன்‌.
  • குலிகம்‌ – சிவப்பு.
  • குலிங்கம்‌ – குதிரை.
  • குலிசபாணி – வேற்கையன்‌, முருகன்‌.
  • குலிசம்‌ – வேற்படை.
  • குலீநசம்‌ – நீர்.
  • குல்லா (இந்து.) – தலைப்பாகை, தொப்பி.
  • குவரம்‌ – துவர்ப்பு.
  • குவாகுலம்‌ – ஒட்டகம்.
  • குவிரம்‌ – காடு.
  • குளிகை – மாத்திரை.
  • குளிசம்‌, குளியம்‌ – வளையம் மறைமொழித்தகடு.
  • குளீரம்‌ –  நண்டு.
  • குற்றசம்‌ – இகழ்ச்சி.
  • கு ற்சிதம்‌ – அருவருப்பு.
  • குன்மம்‌ – சூலை, வயிற்று வலி.

         கூ

  • கூசிகை – எழுதுகோல்‌.
  • கூசுமாண்டம்‌,  கூஷ்மாண்டம்‌ –  பூசுணி.
  • கூடகிருதயன்‌, கூடகிருதன்‌ –  சிவன்‌ ஆழ்ந்த நெஞ்சடை யான்‌.
  • கூடமார்க்கம்‌ – கள்ளவழி, கூடாவழி.
  • கூடாகாரம்‌ – மேல்வீடு, நிலவறை.
  • கூபகம்‌ –  நீர்‌, கிணற்றி லுண்டாயது.
  • கூபம்‌ , கூவம்‌ – கிணறு.
  • கூபாங்கம்‌ – மயிர்ப்‌ பொடிப்பு.
  • கூபாரம்‌ – கடல்‌.
  • கூமம்‌ – பெருங்குளம்‌.
  • கூர்ச்சம்‌ –  தருப்பை, மயிர்‌.
  • கூர்த்தம்‌ –  விளையாட்டு.
  • கூர்மம்‌ – ஆமை.

      கே

  • கேகம்‌ – வீடு.
  • கேகயம்‌ – மயில்‌.
  • கேகி –  மயில்‌.
  • கேசவன் – குடிமகன்‌, மயிர்வினைஞன்‌.
  • கேசகீடம்‌ – பேன்‌.
  • கேசபந்தம்‌ –  மயிர்முடி.
  • கேச்பந்தி –  மயிரொழுங்கு.
  • கேசபாரம்‌ –  கூந்தற்சுமை.
  • கேசம்‌ –  மயிர்‌.
  • கேசரம்‌ – அரிமா, பிடரிமயிர்‌, பூந்துகள்‌.
  • கேசரி – அரிமா, குதிரை.
  • கேசவன் – சோழன்‌, திருமால்‌.
  • கேசி – திருமால்‌, அரிமா.
  • கேதம்‌ – துன்பம்‌, இடர்‌, குற்றம்‌.
  • கேதாரம்‌ -மயில்‌, மலை.
  • கேதாரன் – சிவன்.
  • கேமம்‌, ஹேமம்‌ – பொன்‌.
  • கேரளன் –  சேரன்‌, மலையாள நாட்டான்‌.
  • கேலி – பகடி, இகழ்ச்சி.
  • கேவலஞானம்‌ –  இரண்டன்மை.
  • கேவலகிலை – தனி நிலை, அறியாமை நிலை, மறைப்புநிலை.
  • கேவலம்‌ – சிறுமை, தனிமை.
  • கேவலாவத்தை – கிழ்நிலை.

      கை

  • கைங்கரியம்‌ – தொண்டு, பணி.
  • கைடவாரி – கைடவன்‌ என்னும்‌ அவுணணை அழித்த திருமால்.
  • கைதவம்‌ – பொய்‌, வஞ்சனை.
  • கைரவி – திங்கள்‌.
  • கைலாகு (இந்து) – கைகொடுத்தல்‌.
  • கைலாசநாதன்‌ – சிவபெருமான்‌.
  • கைவல்லியம்‌, கைவல்யம்‌ – தனிமை, வீடுபேறு, நுட்பம்‌.

    கோ

  • கோகநகம்‌,
  • கோகநதம்‌ – செந்தாமரை, செவ்வாம்பல்‌.
  • கோகநகை – திருமகள்‌.
  • கோகநாதன் – சிவன்.
  • கோகபந்து – பகலோன்‌.
  • கோகயம்‌ – தாமரை.
  • கோகிரம்‌ – குதிக்கால்‌.
  • கோலம்‌ – குயில்.
  • கோகில கோலாகலம்‌ – குயில் முழக்கம்.
  • கோகுலன்‌ – இடையன்‌, ஆக்காப்போன்‌.
  • கோசகம்‌ – முட்டை, குறி.
  • கோசம்‌ – நூல்‌, உடம்பு, யாக்கை, குறி, கருப்பை, முட்டை.
  • கோசரம்‌ – அறியதக்கது, கோள்நிலை.
  • கோசரித்தல்‌ –  புலனாதல்‌, தோன்றுதல்‌.
  • கோசலம்‌ – ஆனீர்.
  • கோசாங்கம்‌ – நாணற் புல்.
  • கோசிகம்‌, கெளசிகம்‌ – பட்டு, பட்டாடை.
  • கோடம்‌, கோஷம்‌,
  • கோஷ்டம்‌ – முழுக்கம்‌, பேரோசை.
  • கூட்டம்‌, மணப்பொருள்‌,பேரொலி.
  • கோஷ்டி – கூட்டம்‌.
  • கோடி – நூறு நூறாயிரம்‌.
  • கோடீரம்‌ – கீரி, சடை.
  • கோடீரன்‌ – இந்திரன்‌.
  • கோண்டன்‌ – கீழ் மகன்.
  • கோதண்டபாணி – விற்கையன்.
  • கோதண்டம்‌ – வில்‌.
  • கோதனம்‌ – ஆவின்‌ கன்று.
  • கோதா – உடும்பு.
  • கோதானம்‌ –  ஆவை அறமாகக்கொடுத்தல்‌, ஆன்கொடை.
  • கோத்திரம்‌ – குலம்‌, வகுப்பு, மரபு.
  • கோபகன்‌, கோபன்‌ – இடையன்‌ .
  • கோபகன்னிகை – இடைப்பெண்‌.
  • கோபச்சவாலை – சினத்தீ.
  • கோபம்‌ – சினம்‌, வெகுளி, சீற்றம்‌.
  • கோபாக்கினி – வெகுளித்தீ.
  • கோபாலன்‌ – இடையன்‌, கண்ணன்‌.
  • கோபி – சினக்காரன்‌, திருமண்‌.
  • கோபிகாஸ்திரீ ,கோபிகை –  இடைச்சி.
  • கோபுரம்‌ – கொடுமுடி.
  • கோமயம்‌ – ஆனீர்‌, சிறுநீர்‌.
  • கோமலம்‌ –  சாணம்‌.
  • கோமளம்‌ – இளமை, அழகு, மென்மை.
  • கோமாமிசம்‌ – மாட்டிறைச்சி.
  • கோரட்சகன், கோரட்சன் –  இடையன்‌, சிவன்‌.
  • கோரதந்தம்‌ –  நச்சுப்பல்‌.
  • கோரம்‌ –  கொடுமை, ௮ச்சம்‌.
  • கோர௹பம்‌ –  அச்சவடிவம்‌,௮ழகில்வடிவம்‌.
  • கோவர்த்தனர்‌ –  இடையர்‌.
  • கோவிதம்‌ – கலையறிவு.
  • கோவிதன்‌ அறிஞன்‌.
  • கோளகை, கோளம்‌ – உருண்டை, வட்டம்‌.

    கௌ

  • கெளசல்யம்‌ – திறமை.
  • கெளஞ்சிகன்‌ -பொன்‌ வினைஞன்‌.
  • கெளண்டிகர்‌ – தோல்‌ வினைஞர்‌.
  • கெளதூகலம்‌, குதூகலம் –   பெருமகிழ்வு, பேரூக்கம்‌.
  • கெளந்தி – பெண்துறவி, தவப்பெண்‌.
  • கெளபீனம்‌ – கீழுடை, கோவணம்‌.
  • கெளரவம்‌ – மேன்மை, பெருமை.
  • கெளரி – இறைவி, உமை.
  • கெளகியம்‌,  கவ்வியம்‌ – ஆவினைந்து, நானம்.
  • கெளளி –  பல்லி.
  • கெளளிசாஸ்திரம்‌ பல்லி நூல்‌.
  • கெளளிதம்‌ –  உண்ணல்‌.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button