பிறமொழி/தமிழ்

வகர நிரலில் உள்ள வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் .

வ , வா , வி , வீ ,வெ, வே , வை

“வ”சங்கதம் /தமிழ்

வகித்தல் -பொறுத்தல், பூணல், ஏற்றல்.
வக்கிரசந்திரன் – இளம்பிறை, வளர்பிறை.
வக்கிரதந்தம் – வளைந்த பல்.
வக்கிரம் – வளைவு.
வங்கசிந்தூரம் -ஈயச்செந்தூள்.
வங்கபஸ்பம் – ஈயநீறு.
வங்கம் – ஈயம்.
வசநம் – உரைநடை.
வசநித்தல் -சொல்லுதல்.
வசந்தம் -தென்றற்காற்று, மணம்.
வசந்தன் -காமவேள்.
வசித்தல் – உறைதல், வாழ்தல் தங்கல்.
வசியம் -கவர்ச்சி.
வசீகரணம், வசீகரம் – கவர்ச்சி.
வச்சிரகாயம், வச்சிரசரீரம் – அழியா யாக்கை.
வச்சிரம் -அழிவில்லாதது.
வச்சிராயுதம் -இடிப்படை, வானவர்கோன் படை.
வஸ்திரம், வத்திரம் , வஸ்து, வத்து – ஆடை, துணி, கூறை பொருள்.
வஸ்து நிர்ணயம் – பொருளுறுதி.
வஸ்து நிர்த்தேசம் -வருபொருளுரைத்தல்.
வடவாமுகம், வடவாமுகாக்கினி, வடவை – ஊழித்தீ.
வண்ணம், வர்ணம்-நிறம், எழில், அழகு.
வதநம், வதனம் -முகம்
வதந்தி -பேச்சு, பலரறிசொல்.
வதம் -கொலை.
வதுவை – மணம், மணப்பெண்.
வதூ -பெண்.
வதூவரர் -மணமக்கள்.
வநக்கிரீடை -பொழில் விளையாட்டு.
வநசபீடம் -தாமரை யிருக்கை.
வநசம் -தாமரை, முளரி.
வநசரன், வநேசரன் -வேடன்.
வநஜாசனை ,வநசாட்சி, வருஜை -திருமகள்.
வந போஜனம் – சோலையுணா.
வநம் – காடு, தோப்பு.
வநவாசம் – காடுறை வாழ்க்கை.
வநாந்தரம் -காடு.
வநிதா, வநிதை -பெண்மகள்.
வந்தனம் -வணக்கம், வழிபாடு.
வந்தனோபசாரம் -வணக்கவுரை.
வந்தி,வந்தியா -மலடி.
வந்தித்தல் -புகழ்தல், வணங்கல்.
வந்தியர் – புகழ்வோர்.
வந்நி – தீ.
வந்மம் -தீராப்பகை.
வந்மீகம் கம் -புற்று
வமிசம், வம்சம் -கால்வழி, பரம்பரை, தலைமுறை.
வம்சாவளி -கால்வழிக் குறிப்பு.
வயசு, வயது -ஆண்டு, அகவை, வாழ்நாள்.
வயம், வசம் -அதுவாதல், வழி.
வயிரம் -கூர்மை, ஒளிமணிக்கல், காழ்ப்பு.
வயோதிகம் – முதுமை.
வயோதிகர் – முதியர்,கிழவர்.
வரதஹஸ்தம்,வரதகரம் -அருளளிக்குங் கை, அருட் கை.
வரதம் -காத்தல், ஈதல்.
வரதன் -கடவுள்.
வரப்பிரசாதம் -அருள்.
வரம் -பேறு, மேன்மை, அருள்.
வராகம் -பன்றி.
வருக்கம், வர்க்கம் -இனம், வகுப்பு, ஒழுங்கு.
வருடம், வருஷம், வர்ஷம்-ஆண்டு.
வருடாரம்பம், வர்ஷாரம்பம் -ஆண்டுத் தொடக்கம்.
வருணம், வர்ணம் -நிறம்,குலம்.
வருணனை,வர்ணனை -ஒப்பனை.
வருணன், வர்ணன் -மழைக்கடவுள்.
வருணாசாரம், வர்ணாசாரம்- குல ஒழுக்கம்.
வர்க்கம் -வகுப்பு, கூட்டம், இனம்.
வர்ஷித்தல் -மழைபொழிதல்.
வர்ணாத்துவா -எழுத்து வழி.
வர்ணித்தல் -புனை தல், புகழ் தல்.
வர்த்தமானம் -செய்தி
வர்த்தனை -வளர்ச்சி.
வர்த்திகா -எழுதுகோல்.
வல்லபம் – வலிமை, ஆற்றல், திறம் .

“வா”சங்கதம் /தமிழ்

வாகனம்- ஊர்தி.
வாகீசன் -நாவரசன்.
வாகீஸ்வரி -நாமகள், கலைமகள்.
வாகு, பாகு -தோள்.
வாக்கியயாகம் -சொற்றொடர் அமைப்பு.
வாக்கியம் -சொற்றொடர், தொடர்.
வாக்கியார்த்தம் -உரையாடல், பொழிப்புரை.
வாக்கு – வாய்உரை, சொல், மொழி.
வாக்குச்சகாயம் -சொல்லுதவி.
வாக்குத்தத்தம் -உறுதிமொழி.
வாக்குமனாதீதன்- உரையுணர் விறந்தோன், கடந்தவன், சொல்லுக்கும் மனதிற்கும் எட்டா தவன்.
வாக்குமூலம் -உறுதிச்சொல்.
வாக்குவசீகரம்-சொல்வன்மையாற்றன் வழிப்படுத்தல்.
வாக்குவல்லபம் -பேச்சுத்திறன், சொற்றிறன், சொல்வன்மை.
வாக்குவாதம் -சொற்போர்.
வாசகம் -சொல்.
வாசஸ்தலம், வாசஸ்தானம் -இருப்பிடம், உறைவிடம்.
வாசம், வாஸம் -மணம், இருப்பு.
வாசனை -மணம்.
வாசாமகோசரம் -மொழிதலுக்கு எட்டாதது.
வாசாலகன், வாசாலன் -சொல்வன்மையாளன்.
வாசித்தல் -பயிலல், கற்றல்.
வாச்சல்லியம்,வாத்சல்யம் -இரக்கம், அன்பு, விருப்பம்.
வாஞ்சனை, வாஞ்சை – விருப்பம், அவா.
வாஞ்சிதம் -விரும்பியது, விரும்பிய பொருள்.
வாதப்பிரதிவாதம் -வழக்கு எதிர்வழக்கு.
வாதம் – காற்று, குளிர்ச்சி,காற்றுப் பிடிப்பு, வழக்கு.
வாதனை -துன்பம், வருத்தம்.
வாதி – வழக்காளி.
வாதித்தல் -வழக்கிடுதல்.
வாதை, வேதனை -துன்பம், வருத்தம்.
வாத்தியம் – இசைக்கருவி.
வாநப்பிரத்தம், வானப்பிரஸ்தம் -காடுறைதவம், காடுறைநிலை.
வாநரம் -குரங்கு.
வாந்தி -வாயாலெடுப்பு, கக்கல்.
வாந்திபேதி – கக்கற் கழிச்சல்.
வாமநம் -குறள்,குள்ளம்.
வாமான் -குள்ளன்.
வாமம் -அழகு,இடப்பக்கம்.
வாமா -பெண்.
வாயு – கால் , காற்று, வளி.
வாயுவேகம் -மிகு விரைவு, கடுவிரைவு.
வாரணம் -கடல், யானை, தடுத்தல்.
வாரம் -கிழமை, அன்பு.
வாராவதி -பாலம்.
வாரிதி – கடல், வெள்ளம்.
வார்த்தை -சொல்.
வாலசந்திரன்,பாலச்சந்திரன் – இளம்பிறை.
வாலிபம் -இளமை
வாலுகம் -வெண்மணல், மணல்.

“வி”சங்கதம் /தமிழ்

விகடகவி – பகடி செய்வோன், நகைச் சுவையளிப்போன்.
விகடநம் -திறத்தல்.
விகடம் -பகடி, வேடிக்கை.
விகர்ப்பம், விகல்பம் -வேறுபாடு, உறழ்வு.
விகாதம் -இடையூறு, தடை, பகை.
விகாரம் – அழகின்மை, வேறுபாடு.
விகிதம் -நேயம்,நட்பு,விழுக்காடு.
விகிர்தம் -வேறுபாடு, செய்யப்படாதது.
விக்கிநம் -இடையூறு, தீங்கு.
விக்கிநேஸ்வரர் -பிள்ளையார்.
விக்கிரக ஆராதனை -உருவ வழிபாடு.
விக்கிரகம் -உருவம், பருப்பொருளுரு.
விக்கிரயம் -விலை, விலைப்பொருள்.
விக்கேபம்-சேய்மைப்படுத்தல்.
விக்ஞாபனம் -விண்ணப்பம், முறையீடு, வேண்டுகோள்.
விசநம், வியசநம் -கவலை.
விசயம், விஜயம் -வெற்றி, எழுந்தருளல்.
விசர்ச்சனம் -வெளிவிடுகை.
விசர்ப்பநம் -பரவுதல்.
விசாரணை -ஆராய்ச்சி,கேள்வி.
விசாரம் -கவலை, எண்ணம்.
விசாலம், விஸ்தீரணம் -விரிவு, அகலம்.
விசிட்டம் -எல்லாம்.
விசித்திரம் -வியப்பு, புதுமை.
விசுத்ததேகம் – தூயஉடல், புனித யாக்கை.
விசுவநாதன் -சிவன், உலக முதல்வன், முழு முதல்வன்.
விசுவம், விஸ்வம் -உலகம்,எல்லாம்.
விசுவரூபம் -முழுவடிவம், உலகவடிவம், விரிந்த உருவம், பேருரு.
விசுவாச காதகம் -நம்பிக்கைக்கேடு, இரண்டகம்.
விசுவாசம் -நம்பிக்கை, உண்மை.
விசேடணம் -அடைமொழி, அடை.
விசேடம், விசேஷம் -மேன்மை, சிறப்பு.
விசேட வாக்கியம் -சிறப்பு மொழி.
விச்சின்னம் -வேறாக்கப்பட்டது.
விச்சை,வித்தை -அறிவு.
விஞ்ஞாபநம் -அறிவிப்பு.
விஞ்ஞானகலர் -ஒருமலத்தர்.
விஞ்ஞானமயகோசம் -அறிவுடம்பு.
விஞ்ஞானம் -அறிவியல் , கலை.
விஞ்ஞானான்மவாதம் -அறிவே உயிரெனும் வழக்கு.
விஞ்ஞை -கல்வி.
விஞ்ஞேயம்-அறிவிக்கத்தக்கது.
விடங்கம் -அழகு, ஆண்மை,முகடு.
விடசுரம்,விஷசுரம் -நச்சுக் காய்ச்சல்.
விடசெந்து,விஷஜெந்து -நச்சுயிர்.
விடம்,விஷம் -நஞ்சு.
விடயம், விஷயம்- பொருள், நுதலிய பொருள்.
விட்டுணு, விஷ்ணு- திருமால்.
விதண்டாவாதம் -அழிவழக்கு.
விதநம் -துன்பம், வருத்தம்.
விதந்து,விதவை, விதவா -கைம்பெண், அறுதலி.
விதம்-வகை,ஆறு,வழி.
விதானம்-மேற்கட்டி.
விதி -ஊழ், தெய்வம், முறை, செயற்கை, கட்டளை, ஏற்பாடு, பால்.
விதித்தல் -கட்டளையிடல், வகுத்தல்.
விதிவாக்கியம் -ஆணைமொழி.
விதுரன் -அறிஞன்.
விதேயன் -பணிவுள்ளவன்.
வித்தகம் -அறிவு.
வித்தகன் -அறிஞன், திறனாளன்.
வித்தாரம், விஸ்தாரம் -விரிவு.
விது-திங்கள்.
வித்தியாசம் -வேறுபாடு, ஏற்றத்தாழ்வு, வேற்றுமை.
வித்தியாதேவி -கலைமகள்.
வித்தியார்த்தி -மாணவன்.
வித்தீரணம்,விஸ்தீரணம்-விரிவு, பெருக்கம், அகலம்,அளவு.
வித்துவான் -புலவன்.
வித்தை,வித்யா -நினைப்பு , கல்வி.
விநயம் -வணக்கம், அடக்கம், அறிவு.
விநாயகர் -பிள்ளையார்.
விநோதம் -விளையாட்டு, புதுமை.
விந்து -ஒலிமுதல், வெண்ணீர், தூமாயை.
விந்தை -புதுமை.
விபசாயம், விவசாயம் -பயிர்த்தொழில், உழவுத்தொழில், வேளாண்மை.
விபட்சம் -பிறபக்கம்.
விபத்தன் -வேறானவன்.
விபத்து -இக்கட்டு, துன்பம்,இடையூறு.
விபரீ தகுணம் -மாறுபட்டதன்மை.
விபரீதம் -வேறுபாடு, திரிபு (தரு).
விபவம் -செல்வம்.
விபாகம் -பிரிவு (தரு), நீக்கம்.
விபுணன் -சிறந்தோன்.
விபுதன் -அறிஞன்.
விபுலம் -வையகம், பெருமை, விரிவு.
வீபூதி -திருநீறு,நீறு.
விமரிசம் -எண்ணல், ஓர்தல், ஆராய்தல்.
விமரிசை -சிறப்பு.
விமலம் -அழுக்கின்மை, மாசின்மை.
விமலன் -கடவுள், மாசிலான்.
விமலா -தூயோன், மாசற்றவன்.
விமோசநம் -நீக்கம், விடுதலை.
விம்பம் -ஒளி,உருவம்.
வியஞ்சகம் -விளக்கம், விளக்குங்கருவி.
வியதிரேகம் -எதிரிடை (தரு).
வியத்தம், வியக்தம் -வெளிப்படை, தெளிவு.
வியபிசாரி -ஒழுக்கமிலாள்.
வியம் -செலவு.
வியர்த்தம் -வீண்.
வியவகாரம் -வழக்கு.
வியவஸ்தை -ஏற்பாடு.
வியாகரணம் -இலக்கணம்.
வியாகுலம் -கவலை.
வியாக்கியாநம் -விரிவுரை.
வியாக்கிரம் -புலி
வியாசம் -கட்டுரை.
வியாச்சியம் -வழக்கு.
வியாதி -நோய், பிணி.
வியாத்தி -ஒப்பு நிறைவு.
வியாபகச்சித்து -சிவம், நிறை அறிவு.
வியாபகம் -நிறைவு, பரப்பு, விரிவு.
வியாபாரம் -வாணிபம், கொண்டுவிற்றல்,
வியாப்பியம் -பண்டமாற்று.
வியாவிருத்தி -அடங்கிய நிறைவு. பிரிவு, பிரித்தல் (தரு).
வியூகம் -அணிவகுப்பு, படைவகுப்பு, விலங்கின் கூட்டம்.
விரகம் -காமவிழைவு, அவா, காதல்.
விரக்தி,விரத்தி -வெறுப்பு.
விரதநியமம் -நோன்பு நெறி.
விரதம் -நோன்பு,தவம்.
விரதியர் -தவத்தினர்.
விருச்சம்,விருட்சம் -மரம்.
விருச்சிகம் -தேள்.
விருத்தம் -வட்டம், கிழத்தன்மை,முது, முதிய,முதிர்ந்த மூத்த.
விருத்தன்- கிழவன், முதியோன்.
விருத்தாந்தம் -வரலாறு.
விருத்தி -ஆக்கம், பெருக்கம்,வளர்ச்சி, விளக்கம்.
விரோதம் -பகை, முரண், மாறுபாடு.
விரோதி -பகைவன்.
விவகாரம் -வாய்பாடு (தரு), வழக்கு.
விவரணம் -விளக்கம்.
விவாகக்கிரமம் -மணமுறை.
விவாகம் -மணம், மன்றல்.
விவாதம் -வழக்கு.
விவேகம் -பகுத்தறிவு, அறிவு.

“வீ”சங்கதம் /தமிழ்

வீதம் -விழுக்காடு.
வீதி -தெரு.
வீரம் -மறம்,ஆண்மை.
வீரயுத்தம் -மறப்போர்.
வீரர் -மள்ளர், மறவர்.
வீரியம் -மறம், ஆண்மை, வெண்ணீர்.

“வெ”சங்கதம் /தமிழ்

வெகுமானம் -பரிசு, கொடை.

“வே”சங்கதம் /தமிழ்

வேகம் -விரைவு.
வேசரி -கழுதை.
வேடம், வேஷம் -கோலம்.
வேணு -மூங்கில்.
வேணுகானம் -குழலிசை.
வேதம் -மறை.
வேதனம் -கூலி.
வேதனை -துன்பம்.
வேதாத்தியயநம் -மறை ஓதல்.
வேதாந்தம் -மறைமுடிவு.
வேதாரணியம் -திருமறைக்காடு.
வேதிகை -திண்ணை, மேடை.
வேதிநம் -ஈர்வாள்.
வேதியர் -அந்தணர், பார்ப்பார்.
வேத்திரம் -பிரம்பு.

“வை”சங்கதம் /தமிழ்

வைகரிவாக்கு -செவியோசை.
வைகுண்டம்- திருமா லுலகு.
வைசுவதேவம்-நாடோறுஞ் செய்யும் தீக்காரியமாகிய ஒருவேள்வி.
வைசூரி -அம்மை நோய்.
வைடூரியம் -பூனைக்கண்மணி, ஒளி மணி.
வைதவ்யவிரதம் -கைம்மை நோன்பு.
வைதிகம் -மறையியல் நெறி.
வைத்தியநாதன் -மருத்துவர் தலைவன்.
வைத்தியம் -மருத்துவம்.
வைநதேயன் -கருடன்.
வைபவம் -கொண்டாட்டம்.
வைரம் -பகை, காழ்ப்பு,ஒளிமணிக்கல்.
வைராக்கியம் =உளவலிமை/ மனவுறுதி/ மனத்திடம்/ நெஞ்சுரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button