தமிழ்பிறமொழி/தமிழ்

“ஊ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

“ஊ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

ஊகம்‌ – கருகல்‌, ஒர்தல்‌, கருத்து, நினைவு,  உட்பொருளுணர்‌தல்‌, கருங்குரங்கு.
ஊகித்தல் – நினைத்தல்‌, ஓர்‌தல்‌.
ஊசிக்காந்தம் – இரும்பிழுக்கி.
ஊஷம்‌, ஊடம்‌ – விடியற்காலம்‌.
ஊஷ்மகம்‌ – கோடைக்காலம்‌.
ஊநம்‌, நியூகம்‌ – குறைவு, இழிவு.
ஊருசன்‌ – தொடையிற்‌ பிறந்தவன்‌.
ஊருத்தம்பை – வாழைமரம்‌.
ஊர்ச்சிதம்‌, ஊர்ஜ்ஜிதம் – நிலைப்படுதல்‌,உறுதி.
ஊர்ணநாபி – சிலந்திப்‌பூச்சி.
ஊர்ணாயு – ஆட்டுக்கடா.
ஊர்த்துவசீலம்‌ – நெருப்பு, மேலே செல்லுந்தன்மையுடையது.
ஊர்த்துவம்‌ – மேனோக்கு, நிமிர்ச்சி, மேல்‌,முதன்மையானது.
ஊர்த்துவபாதம்‌ – தூக்கிய திருவடி.
ஊர்த்துவ புண்டாம்‌ – நெற்றிக்குறி.
ஊர்‌த்துவமுகம்‌ – மேனோக்கிய முகம்‌.
ஊர்‌த்துவாங்கம்‌ – இடுப்பிற்கு மேலுள்ள உறுப்பு.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button