மொழிப்பற்றாளர் மற்றும் தனித்தமிழ் எழுத்தாளர் : துளியரசன் செண்பகம்!
துளியரசன் செண்பகம் அவர்களின் எழுத்தில் உருவான படைப்புகள்

தமிழின் ஆற்றல்
தமிழை ஆளும் வகை
அவ்வப்போது சிதைக்கும்
ஆனால் சிதைக்க முடியாத
கருப் பொருள்…
பல்லாயிரம் ஆண்டுகளாக
பல்வேறு மாந்தர்களை
இனம் கண்டுள்ளது…
இன்னும் பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் இன்னும் பல
கோடி மாந்தர்களை
எதிர்கொள்ளும் ஆற்றல்
தமிழுக்கும் தமிழருக்கும்
உண்டு….
இலக்கியம் இலக்கணம்
கல்வெட்டுகள் அணைகள்
ஞாலம் வியக்கும் வரலாற்றை
சொல்லிக்கொண்டே
இருக்கும்…
வீழ்த்த முடியாத தமிழை
எவரும் சிதைக்க முடியாது
தமிழரும் அப்படியே ….
அறிவாற்றல் மிக்க
தமிழரால் பேராற்றலாய்
ஞாலம் புது வரலாறு
படைப்பதை யாரால்
தடுக்க இயலும்…
வாழும் ஞாலத்தை
தமிழால் தமிழரால் மட்டுமே
தலை நிமிர வைக்க
முடியும்….
விண்ணிலும் மண்ணிலும்
அறிவியல் தொழில்நுட்பத்திலும்
வேளாண்மையிலும் கூரிய
வல்லமை படைத்தவர்கள்
தமிழும் தமிழினிமே
என்பதை அறிவாற்றல்
மட்டுமின்றி நல் மாந்த
எண்ணங்களை கொண்டவராக
இருப்பவராகஇருந்தால்
மட்டுமே உணரமுடியும்
“நம்பிக்கை அதுதானே எல்லாம்”
இன்னல்களை
மின்னல்களாக
கடந்து விடு…!
சுமைகளை
இமைகளாக
நினைத்து விடு…!
கற்களை
படிகற்களாக
மாற்றி விடு…!
புற்களுக்கும் அழகிய
வரலாறு உண்டு
நம்பி விடு…!
இடற்படும்
மனது
எதற்காக..?!
தீயில்
கருகித்தானே
திரி எரிகிறது..!
வருந்தாமல்
ஒளியை
தருகிறது..
மகிழ்ச்சி
அன்று போகும்
சிலந்தி வலையல்ல…!
சிலந்தி பூச்சியிடம்
நாம் கற்கும்
கலை…!
கலங்கிநிற்பதால்
விளங்குவது
என்ன..?!
நுனிகாலில்
இருக்கும் சலங்கை
ஒலிக்கவில்லையா…?!
துயரங்கள்
தூய
பனித்துளிப்போல..!
முகத்தை
அதில்
பார்ப்போம்…!
புதிய
விடியல்
அழகாய் பிறக்கும்..!
எழு
நட
போராடு…!
உலகம்
உம்மைகண்டு
வியக்கும்….!
பரந்த உலகின்
முகவரியே
துயரம் வலி
கவலை..!
பறந்து பார்
மகிழ்ச்சியாய்
அதுவே உரமாகும்…!
ஒற்றுமை
தமிழன்னையின்
திருவடி தொழுதல் வேண்டும்
திருக்குறளாய்
வாழ்க்கை மிளிர வேண்டும்
வரலாறு
படைத்தல் வேண்டும்
தொல்க்காப்பியமாய்
நிலைத்தல் வேண்டும்
வெற்றி நடை
போற்றிட வேண்டும்-
சங்க கால இலக்கியமாய்
திகழ்ந்திடவேண்டும்
பிறமொழி சொற்கள்
கலைந்திடல் வேண்டும்
பிழையற தமிழை
பேசிட வேண்டும்
இன்னொரு முறை
மாந்தராக
பிறந்திடல்
வேண்டும்
தூய தமிழால் _தாய்
தமிழை பலுக்கி
தமிழன்னையே -உன்
மடியில் தவழ்ந்திடல்வேண்டும்
தமிழர்கள் ஒற்றுமை
பேணுதல் வேண்டும்!
ஒற்றுமையே உயிரது
துயரெதுவும்
நீக்கீடும்
பேராற்றல்
தமிழே
துணையாக
நீயீருப்பதால்
இணையில்லா
மகிழ்வே
துணைக்கொண்டு
வழிநடத்தும்
தூய நல்
தமிழே
துளியாய்
வந்து •வந்து
அருவியாக
கொட்டும் உயிரே
இனிக்கும்
சுவையாய்
பொழிகின்ற
அமுதே
சுடராய்
வழிக்காட்டும்
எங்கள்
ஒளியே
தமிழே
உம்மை அறியாமல்
நானேது -இல்லாமல்
வாழ்வேது
ஒற்றுமையே
உயிரது!
துளியரசன்



