படைப்புகள்

“தமிழும் நானும்”

“தமிழும் நானும்”

 

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை – என்னைப்போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை – அந்த
மாதவி அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித்தமிழெனக்கு வேணுமேயடா – உயிர்
காக்கும் மொழியெனக்கு வேணுமேயடா
தின்னத்தமிழெனக்கு வேணுமேயடா – தின்று
சாகத்தமிழெனக்கு வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை – ஒரு
உற்றாருறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒருபிடியும் வேண்டியதில்லை – வேற்று
மொழியின் சுவையதுவும் வேண்டியதில்லை.

சொல்லியத்தின் சொல்லொன்றைத்தின்று களிப்பேன் – தமிழ்
பாயும் இடங்களிலேயென்னை மறப்பேன்
தமிழின் அழகினைக்கண்டு மகிழ்வேன் – அதில்
இலக்கண இலக்கியம் தின்று மகிழ்வேன்.

தமிழ்ச்சான்றோர் பலர் தேடி ஓடிவருவேன் – அவர்
அறிவின் ஒளியதனில் மூழ்கிவிடுவேன்
தமிழெனை அணைத்துவிட்டால் கூத்தாடி மகிழ்வேன் – இளம்
பிஞ்சுக்குழந்தைகட்கும் அதைச்செப்பி நிறைவேன்.

ஈழத்தாயின் நினைவுகளில் மூழ்கியெழுவேன் – பின்பு
கல்லறை மறவர்களைத் தொழுதெழுவேன்
கரிகாலன் புகழதனைக்கூறிமகிழ்வேன் – அவர்
முன்பு தலைவணங்கி மீண்டு வருவேன்.

தாயின் அருகாமையைத்தேடி அலைவேன் – நாளும் அம்மா
என்றழைத்து நொந்து விழுவேன்
அம்பொன் கனவினிலே கண்டனேயடா – அவள்
உயிருக்கு ஈடுயிணை காணலேயடா.

உள்ளம் இரந்து உயிர் நோவுதேயடா – பா
சாறைக் குடித்தநெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் – அதை
நோக்கித்தமிழ்ப்பசியும் ஆறிடவேண்டும்.

புகழும் மாந்தநிலை வேண்டியதில்லை – அவர்
சொல்லின் புகழதுவும் வேண்டியதில்லை
உயிர்நீக்கும் பொழுதிலும் தமிழ்மொழிவேன்
தமிழுண்ண வழியிலையேல் உயிரைத்துறப்பேன்.

வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழியவே
வாழிய என் தமிழ் வாழியவே!

 

பசிகூட எடுப்பதில்லை ..
பைந்தமிழோ டிருக்கையிலே ..
நோய்கூட நொய்கிறது ..
தொல்தமிழ்ச்சு வையினிலே ..!

கண்வளர்க்க நேரமாச்சு ..
வாட்டமி ன்னும் நெருங்கவில்லை..
விழிமடல்கள் வலிக்கிறது ..
விடைபெறவோ மனமுமில்லை ..!

காதலென்றால் என்னவென்று
கற்றுத்தந்த யன்னைத்தமிழ் ..
காதலித்துக்க ளிப்பதாலே ..
காலிப்பதை நிறுத்தவில்லை ..!

அன்பு மவளே ..
அறமு மவளே ..
உறவு மவளே ..
உயிரு மவளே..
தேடலும் மவளே ..
தொலைவதும வளிடமே ..!

வேண்டும்வே ண்டுமென்றேன்-அவள்
வேரூன்றிப்பற்றிக்கொண்டாள்..
அறிவொளித்தாயி னன்பில் -என்
எழுபிறப்பும் நிறைந்ததம்மா ..!

போதும் போதுமிது ..
பிறப்புய்தபேறு பெற்றேன் ..
வாழ் நாட்களெல்லாம் -யான்
உன்னுள் லுறைபனியே !

 

-நிலா.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button