
கனவுலகம்
கனவுலகத்தில் நான் வாழ்கிறேன்
என்று எண்ணும் போது…
உன்னை என் வாழ்வில் காண முடியாத அவ்வுலகில் காண்கின்றேன்..
காட்சிகள் உண்மைதான் என் கனவும் உண்மைதான். உனக்கு என்னை காண விருப்பம் இல்லாது இருக்கட்டும்.
நீ தனித்துவம்..!
நான் நீயன்று..!
என்னில் வாழும் உன்னை காண்கின்றேன்.
மீளாத என் வாழ்வை அவ்வுலகம் எனக்கு மீட்டு கொடுக்கிறது என்பது என் மகிழ்வில் அவ்வுலகம் எனக்கானது மட்டும்..
அது அழகான உலகம் !
உன்னை நான் அதில் காண்கின்றேன் !உன் தொடுதலை உணர்கின்றேன் !
நீ வரும் மணமதை உணர்கின்றேன்..
என் கனவுலகத்தில் நானே …
நான் மட்டுமே வாழும் என் அழகான உலகம் அது!
ஒன்றுபடு தமிழா..
ஒவ்வொரு
நடிகருக்கும்
மணிமண்டபம் கட்டுவோம்
நாங்கள் தமிழர்களாம்..
ஒவ்வொரு
நடிகைக்கும்
கோயில் கட்டுவோம்
நாங்கள் தமிழர்களாம்..
நாங்கள் மட்டும்,
ஓலைக்குடிசையில் குடியிருப்போம்
நாங்கள் தமிழர்களாம்..
நியாய விலைக் கடை அரிசியில்
உயிர் வாழ்வோம்
நாங்கள் தமிழர்களாம்…
கந்தலைக்
கசக்கிக்
கட்டுவோம்
நாங்கள் தமிழர்களாம்..
ஆசிரியர் இல்லா பள்ளியில்
படிப்போம்
நாங்கள் தமிழர்களாம்..
மருத்துவரில்லா அரசு
மருத்துவமனையில் மருத்துவம் பார்ப்போம்
நாங்கள் தமிழர்களாம்..
இதற்கெல்லாம் ஒன்று படும்.. எம் தமிழினமே!!!
தமிழ் என்றாலும் தமிழன் என்றாலும் ஒன்று எம்மினமே
போராடும் குணம் நம்பிறக்கும் போதே உடன் பிறந்தது தானே..
இறப்பு முன்பாவது ஒன்றிணைவோம்..
தாய் வேறு தொப்புள் கொடி கொடி வேறு என்று பிரிந்தது இல்லையே ..உன் மனம் மட்டும் ஏன் வேறுபட்டு நிற்கின்றாய்..
வா தமிழா
தோளோடு தோளாக வாள் ஏந்துவோம் போர்க்களத்தில்.
வா தமிழா ஒன்றிணைவோம் ஒற்றுமையாக இருப்போம்…
குளிர்களி
ஆகா என் ஒரு வியப்பு !!!
ஒரு குளிர்களி இன்னொரு குளிர் கழியை உண்ணும் அழகை தான் காண முடியாது என்றாலும்…
அந்த குளிர்களி மகிழ்ந்ததை கண்டேன்…
இப்பிறப்பை நான் அடைந்தேன்…
அவள் இதழை தொட்டு தொடரும் கொடையே எனக்கு போதும் என்று …
என்னை கடுப்பேற்றியது…
ஏய் குளிர்களியே கொஞ்சம் நில் என்று சொன்னேன்…
ஏய் போடா. … உன்னை மாதிரி கனவிலே நயக்கிறவன் என்று நினைத்தீரோ?
என்னை.. பார்த்தாயா?
எவ்வளவு அழகாக என்னை சாப்பிட்டா ..
போடா போய் கண் மூடி கண்வளரு
அப்பதான் உன்னால் அவளை பார்க்க முடியும்…
இல்ல அதிலும் யாராவது வந்திட போறாங்கனு கேலி செய்யது..
இந்த குளிர்களிக்கு வந்த வாழ்வு
இருக்கு
அட ச்சா ..என்னத்தா சொல்ல
சரி நாமளும் அவன் சொன்ன மாதிரி கண்ண மூடுவோம்…. வரட்டா…..
நன்றி
வாழ்க தமிழ்!
யோ சுந்தர்




