பாப்பா பாட்டு

பாப்பா பாட்டு.
*****************
பாடி வரவேணும் பாப்பா!
அன்பு மிகுந்தவளே பாப்பா!
தேடி வந்த தெய்வம் பாப்பா!
தேசத்தின் எதிர்காலம் பாப்பா!
தெருவோடி விளையாடும் பாப்பா!
வேடிக்கை உலகம் இது பாப்பா!
கீழே விழுந்தாலும் பாப்பா!
கிளர்ந்தெழ மறவாதேப் பாப்பா!
உண்மை உனக்குத்துணைப் பாப்பா!
உன்படிப்பு அறிவின் ஔி பாப்பா!
பெண்மை உயர்ந்ததடிப் பாப்பா!
நீ பேசுகின்ற தெய்வமடிப் பாப்பா.!
பாலியல் சீண்டல்களைக் கண்டால்,
நீ பயம் கொள்ளலாகாது பாப்பா!
தோலை உரித்துவிடப் பாப்பா.!
நீ துமிக்கி ஏந்திடடிப் பாப்பா.!
காலையெழுந்தவுடன் சிலம்பம்!
பின்பு கனிவு கொடுக்கும் கலை நடனம்!
மாலைமுழுதும் ஈட்டி எறிவாய்..
நீ மாவீரம் கொண்டவள்தான் பாப்பா!
தெருவில் தலை நிமிர்ந்து நடப்பாய்!
வீணர்களின் பார்வைகளை தூசாக மதிப்பாய்!
ஆணுக்கு நிகராக இருப்பாய்.!
நீ அறிவொளி வடிவமடி பாப்பா!
வே.கல்யாணகுமார். பெங்களூரூ.




