பகர நிரலில் உள்ள வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் .
ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, போ, பௌ
“ப” சங்கதம்/ தமிழ்
பகம் – கொக்கு.
பகவதி – இறைவி.
பகவன், பகவான் – கடவுள், பெருமான்.
பகிஷ்காரம் – விலங்கு.
பகிரங்கம் – வெளிப்படை.
பகிரண்டம் – புறவுலகு.
பக்குவம் – தகுதி, நிலை.
பக்குவர் – கணிவுடையவர், தகுதியுடையவர்.
பக்தன் – அன்பன்.
பக்தி – அன்பு.
பக்தி காண்டம் – விழை தகுதொகுதி.
பங்கசம், பங்கஜம், பங்கயம்,
பங்கேருகம் – தாமரை, முளரி.
பங்கம் – குறை, பழுது, சேறு, குற்றம்.
பங்கயாசனன் – தாமரையிருக்கையன், நான்முகன்.
பஞ்ச ஞானேந்திரியங்கள்,ஆக்கிராணம் (சோத்திரம்)- ஐம்பொறிகள் : மெய், வாய், கண், மூக்கு, செவி.
பஞ்சதந்திரம் -ஐவசைச் சூழ்ச்சிகள்.
பஞ்சதன்மாத்திரை, கள் (சித்- தத்). [இரசம், ரூபம்,பரிசம், சத்தம்,கந்தம் – ஜந்து நுண்ணிய பொருள்
கள் : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
பஞ்ச தூபம் – ஐவகை மணப்பொருட்புகை.
பஞ்சநதம் – திருவையாறு .
பஞ்சபாதகம் – ஐங்கொடுவிளை, ஐம்பெருங்குற்றம்.
பஞ்சபாதகன் – ஐம்பெருங் குற்றத்தான்.
பஞ்சபூதங்கள் ,பிருதிவி, அப்பு,
தேயு, வாயு, ஆகாயம் – ஐந்து பருப்பொருள் கள் :
மண், புனல், அனல், கால் , விசும்பு.
பஞ்சமி, பஞ்சம் – ஐந்தாம் நாள், ஐந்து.
பஞ்சமூர்த்தி – ஐவகைக் கடவுளர்.
பஞ்சலட்சணம் – ஐந்திலக்கணம்.
பஞ்சலோகம் – ஐம்பொன்.
பஞ்சவர் – ஜவர்.
பஞ்சாக்கரம், பஞ்சாட்சரம் – ஐந்து தெழுத்து.
பஞ்சாங்கம் – ஐந்துறுப்பு.
பஞ்சாட்சர உபதேசம் -ஐந்தெழுத்தருணிலை, அறிவறுப்பு.
பஞ்சாயம் – நடுவர் ஐவர் கூட்டம்.
புஞ்சாவத்தை – ஐவகைதநிலை.
ப.ஞ்சேந்திரியம் – ஐம்பொறி.
படநம் – படித்தல், ஓதல், கற்றல், பயிலல்.
படம் – ஓவியம்.
படுதா (இந்து) – திரைச்சீலை.
பட்சணம் – தின்பண்டம்.
பட்சதாபம், பட்சாத்தாபம் – இரக்கம், கண்ணோட்டம்,கழிவிரக்கம்.
பட்சபாதம் – ஓரம், ஒருபக்கம்.
பட்சம் – உருக்கம், அன்பு.
பட்சி – பறவை, புள்.
பட்சிராசன் – கலுழன்; புள்ளரசு.
பட்டணப் பிரவேசம் – ஊர்வலம்.
பட்டமகஷி – பட்டத்தலைவி.
பட்டாபிஷேகம் – முடிசூட்டல்.
பட்டுவஸ் திரம் – பட்டாடை.
பண்டி (சகடி) – வண்டி.
பண்டிகை – பெருநாள், திருவிழா.
பண்டி தன் – புலவன், அறிஞன், மருத்துவன்.
பதகன் – கீழ்மகன், தாழ்ந்தோன்.
பதச் சேதம் – சொற் பிரிப்பு, கண்ணழித்தல்.
பதட்டம், பதஷ்டபம் – பதுறுதல், விரைதல், அஞ்சல்.
பதம் – சொல், நிலை,
பதவி – நிலை.
பதாகை – பெருங்கொடி, கிளைக்கதை.
பதாதி – காலாள்.
பதாத்வா – சொல்வழி.
பதாந்தரம் – வேறு நிலை.
பதார்த்தம் – சொற்பொருள் (தரு), பொருள்,
பதி – கடவுள், தலைவன், கணவண், அரசன்.
பதிபசுபாசம் – கடவுள், உயிர், உலகம்,இறை, உயிர், தளை.
பதிவிரதம் – கற்பு.
பதிவிரதா தருமம் – கற்பு நெறி.
பதிவிர தாபத்தினி, பதிவிரதை – கற்பரசி கற்புடையாள்.
பதும தளம் – தாமரைத் தளிர், தாமரைஇலை.
பதுமநாபன், பத்மநாபன் – திருமால்.
பதுமம், பத்மம் – தாமரை, முளரி
பதுமன், பத்மன் – நான் முகன்.
பதுமாசனம் தாமரையிருக்கை,
பதுமாசனன், பத்மாசனன் – நான்முகன்.
பதுமாவதி, பத்மாசநி – திருமகள்.
பதுமை – பாவை.
பத்தகணம் – அன்பர் கூட்டம், தொண்டர், குழாம்.
பத்தர், பக்தர் – அன்பர், தொண்டர்.
பத்தா, பர்த்தா – கணவன்.
பத்தி, பக்தி – அன்பு, நேயம், பற்று.
பத்திமார்க்கம் – அன்பு நெறி.
பத்தியம் – மருந்துணா, செய்யுள்.
பத்திரம் – இலை.
பத்திரலிங்கம் – ஊட்டிடக் குறி.
பத்திரிகை – செய்தித்தாள், செய்தி,இதழ்.
பந்தகம் – கட்டு
பந்தநிவர்த்தி – கட்டறுத்தல், தளைநீக்கம்.
பந்தபாசம் – பிற விக்கட்டு,
பந்தம் – உறவு, தொடர்பு, குற்றம், கட்டு.
பந்தனம் – கட்டல், பிறவிப் பிணிப்பு.
பந்தி – வரிசை, தொகுதி,
பந்துக்கள் – உறவினர், சுற்றத்தார், கிளைஞர்.
பந்து வர்க்கம் – உறவின்முறை.
பந்நகம் – பாம்பு.
பந்நகாசயநம் – பாம்புப்படுக்கை, பாம்பணை.
பாந்நகாசயநன் – திருமால்.
பந்நசாலை – ‘இலைக்குடில்.
பயங்கரம் – கொடுமை, அச்சம்.
பயசு, பயஸ் – பால், நீர்.
பயபக்தி, பயபத்தி – அச்சமும் அன்பும்.
பயம் – அச்சம்.
பயாப்தி, பயோததி – பாற்கடல்.
பயோதரம் – முகில், மூலை, கொங்கை.
பயோதிகம் – கடனுரை.
பரகதி – வீடுபேறு, மேல்நிலை .
பரகமனம் – ௮யல்மனைச் சேறல், பிறன் கடை நிற்றல்.
பரகாயப் பிரவேசம் – கூடுவிட்டுக் கூடுபாய்தல், பிறவுடற் புகுதல்.
பரகாயம் – பிறவுடல்.
பரகீதம் – பிறர்கூற்று, பிறர் புகழ்ச்சி.
பரசமயம் – புறச்சமயம்.
பரசுகம் – மேலான இன்பம், பேரின்பம்.
பரசுவம், பரஸ்வம் – பிறர் பொருள்.
பரஸ்தானம், பிரஸ்தானம் – வழிச்செல்கை, புறப்பாடு.
பரஸ் நேகம் – பிறர் நட்பு.
பரஸ்பரம் – ஒருவருக்கொருவர்.
பரஞானம் – உண்மை மேலறிவு, அருட் காட்சி.
பரஞ்சோதி – பேரொளி, கடவுள்.
பரதசாத்திரம் – நாடக நூல்.
பரதநம் – பிறர்பொருள்.
பரதந்திரம் – அடிமைத்திறம்.
பரதந்திரவயம் – பிறர்வழி.
பரதந்திரன் – பிறர்வழிப்பட்டவன்.
பரதம் – கூத்து
பரதாரகமனம் – பிறன்மனை விழைதல்.
பரதாரம் – பிறர்மனை.
பரதேசம் – பிறர்நாடு, அயல் நாடு, வேற்றூர்.
பரத்திரி, பரஸ்த்ரி – பிறர்மனைவி.
பரத்துவம் – கடவுட்டன்மை, மேன்மை.
பரந்தாமன் – திருமால்.
பரபட்சம் – எதிர்ப்பக்கம்.
பரபுருடன் – அயலான்.
பரபோகம் – பேரின்பம்.
பரப்பிரம சொரூபம் – முழுமுதற்கடவுளுண்மை.
பரப்பிர்மம் – மிகப்பெரியது.
பரமகதி – வீடுபேறு, அடைக்கலம்.
பரமகருத்தன், பரமகர்த்தா – மேலான தலைவன், கடவுள்.
பரமசண்டாளன் – மிகக்கொடியோன்.
பரம௫சத்துரு – கடிம்பகைவன்.
பரமசந்தோஷம் – பேருவகை, பெருங்களிப்பு, பெருமகிழ்ச்சி.
பரமசித்தி – வீடுபேறு.
பரம சுகம் -மேலான இன்பம்.
பரமதுஷ்டன் – மிகக்கொடியோன்.
பரமபதம் – வீடுபேறு.
பரமபுருஷன் – தக்கோன், மேலோன்.
பரமம் – மேல், மேன்மை.
பரமரகசியம் – அருமறைப்பொருள்.
பரமலோகம் – மேலுலகம்.
பரமலோபி – ஈய்ப்பிணி, வடிகஞ்சன், பிசுநன்.
பரமவியோமம் – ௮ருள்வெளி.
பரமன் – கடவுள், மேலானவன்.
பரமாகாயம் – பெருவெளி.
பரமாதிசயம் – மேலான வியப்பு.
பரமாத்துமா, பரமாத்மா – முற்றறிவிலக்கமுடையமுதல்வன், இறைவன்,முழுமுதற்பொருள்.
பரமாநந்தம் – பேரின்பம்.
பரமாந்ம சைதன்யம் – முழுமுதற் பேரறிவு.
பரமார்த்தம் – மெய்ப் பொருள், முடிவான
பொருள். பரமுத்தி – மேல்நிலை வீடுபேறு.
பரமேசவரன், பரமேசுரன் – இறைவன், கடவுள், சிவன்.
பரமேசுவரி – திருமகள், இறைவி.
பரமேட்டி, பரமேஷ்டி – மேலான இடத்திலிருப்பவன்.
பரமோட்சம் – வீடுபேறு.
பரமோபகாரம் -பேருதவி .
பரம் – மேன்மை, கடவுள், மறுமை.
பரம்பரை – கால்வழி, தலைமுறை, வழி ,வழி.
பரர் – அயலார்.
பரம்பொருள் – பேரறிவுப் பொருள், முழு முதற் பொருள்.
பரலோகக்கரியை – சாவுச்சடங்கு, இழவுச் சடங்கு.
பரலோகம் – மேலுலகம்.
பரவசப்படுதல் – பெரிதும் இன்புறுதல்.
பரவசம் – தன்னுணர்வின்மை.
பரவயிந்தவம் – மேல்மாயை.
பரவிவேகம் – மெய்யறிவு.
பரன் – கடவுள், மேலானவன்.
பராக்கிரமசாலி – ஆண்டகை.
பராக்கிரமம் – வலி, வன்மை, அண்மை.
பராசத்தி – இறைவி .
பராசயம், பராஜயம் – தோல்வி.
பராதீனம் – பிறர்க்குரியது.
பராபரவஸ்து, பராபரன் – மேலான கடவுள்.
பராபவம் – தோல்வி, பெருமைக்குறைவு.
பராமரிசம் – ஆராய்ச்சி, பகுத்தறிவு.
பரிகரித்தல் – களைதல், மறுத்தல்.
பரிகாசம் – பகடி, ஏளனம்.
பரிக்கிரசுசத்தி – வைப்பாற்றல்.
பரிசம் – ஊறு.
பரிசனம், பரிவாரம் – குடிமக்கள், ஏவலாளர்.
பரிசாரசம் – ஏவல்வேலை, பணிவிடை.
பரிசாரகன் – ஏவல் செய்வோன், உடன் செய்வேன்.
பரிசித்தல் – தொடுதல்.
பரிசீலனம் – ஆராய்ச்சி.
பரிசுத்தசமித்துகள் – தூய விறகுகள்.
பரிசுத்ததர்மங்கள் – தூய அறிவினைகள்.
பரிசுத்த தீர்த்தம் – தூயதீம்புனல்.
பரிசுத்தம் – தூய்மை, துப்புரவு,
மாசின்மை, புனிதம்.
பரிசுத்தன் – தூயோன், மாசிலான்.
பரிசோதனை – ஆராய்ச்சி, தேர்வு.
பரிச்சேதம் – எல்லை, பிரிவு, பகுத்தறிதல்.
பரிட்சை, பரீட்சை – ஆராய்ச்சி, தேர்வு.
பரிணமித்தல் – வேறுபடல், மாறுதல்.
பரிணயம் – மன்றல்.
பரிணாமம் -வேறுபாடு.
பரிணாமவாதி – ஒன்றுபிறி
தொன்றாகுமென்னும்கொள்கையர்,
பரிதாபம் – இரக்கம்,
பரிதானம் -கைக்கூலி.
பரிபாலனம் – பாதுகாப்பு.
பரிபூரணம் – நிறைவு.
பரிபூரணி – இறைவி. எங்கும் நிறைந்தவள்.
பரிமள சுகந்தம் – நறுமணம்.
பரிமள தைலம் – நறுமண எண்ணெய்
பரிமளம் – நறுமணம் , மகிழ்ச்சி.
பரிமாணம் – அளவு.
பரிமிதம் – ௮ளவுபட்டது.
பரிமிதாகாரம் – மட்டான உணவு.
பரியங்கம் – கட்டில்.
பரியந்தம் – வரை, எல்லை, அளவு.
பரிவாரம் – ௮ரசியற் சுற்றம்.
பருவகாலம் – தக்க காலம்.
பருவதபுத்திரி – மலைமகள்.
பருவதம், பர்வதம் – மலை.
பருவதாசயம் – முகில்.
பருவபேதம் – காலவேறுபாடு.
பருவம் – காலம், பொழு, பதம்.
பரோட்சம் – இறந்தகாலம்.
பரோபகாரம் – உதவி, கைம்பாறு கமுதாவுதவி.
பர்க்கன் – பகலவன்.
பர்ணசாலை – இலைக்குடில்.
பர்ணம் – இலை.
பர்த்தா – கணவன்.
பர்வதராஜபுத்திரி – மலையரசன் மகள்.
பர்வதராஜன் – மலையரசன்.
பலகீனம், பலஹீனம் – வளுக்குறைவு, தளர்ச்சி.
பலபட்சணம் – கனியுணவு.
பலம் – பழம், வலிவு.
பலவான் – வலுவினன், வன்மையாளன்.
பலன் – பயன்.
பலாத்காரம்,
பலவந்தம் – வலுக்கட்டாயம்.
பலாபலம், பலாபலன் – பயன் பயனின்மை.
பலி – இரை, காணிக்கை, வேள்வி,கடவுளுணா, ஒப்புவித்தல்.
பலிதம் – வாய்ப்பு.
பலித்தல் – கைகூடுதல், பயன்றருதல்.
பலிபீடம் – வேள்விமேடை, படையல்மேடை.
பவபந்தம் – ,பிறவிக்கட்டு, பிறவிப்பிணி.
பவம் – பிறப்பு.
பவனன் – காற்று.
பவன் – கடவுள்.
பவானி – உமை.
பவித்திரம் – தூய்மை, தருப்பைப்புல்,விரலணி,
“பா” சங்கதம்/ தமிழ்
பாகசாலை – ௮டுக்களை.
பாகம் – கூறு.
பாகு,வாகு – தோள்.
பாகுபலம் – தோள்வலி.
பாக்கியசாலி,
பாக்கிய யவான் – செல்வன், நல்வினையாளன்.
பாக்கியம் – பேறு, செல்வம், நல்வினை.
பாக்யவதி – செல்வி.
பாசபந்தம் – அன்புக்கட்டு.
பாசம் – தளை, கட்டு, கயிறு, அன்பு.
பாஷா, பாஷை – மொழி.
பாஷாதோஷம் – மொழிக்குற்றம்.
பாஷாப்பிரயோகம் மொழிவழக்கு.
பாஷிதம், பாடிதம் – பேசப்பட்டது, சொல்லப்பட்டது.
பாஷ்பம், பாட்டம் – கண்ணீர்.
பாஸ்கரன் – செஞ்சுடர், கதிரோன்.
பாடனம் – பேசல், சொல்லல்.
பாடாணம் ,பாஷாணம் – நஞ்சு.
பாடியம், பாஷ்யம் – அகலவுரை, விரிவுரை,பேருரை.
பாணம் – கணை, அம்பு.
பாணி – நீர், கை.
பாணிக்கிரசணம் – கைப்பற்றல், கைப்பிடி.
பாண்டித்தியம் – கல்வித் திறன்.
பாதகம் – தீமை.
பாவநாசம் – தீவினை ஒழித்தல்.
பாவவிமோசனம் தீவினை நீக்கம்.
பாவனம் – கருதல், தூய்மை.
பாவனை – கற்பனை, ஒப்பு, எண்ணம், நினைப்பு.
பாவாத்துமா – தீவினைப்பிறவி, கெட்ட உயிர்.
பாவி, பாபி – தீயோன்.
பாவித்தல் – கருதல், எண்ணல், நினைத்தல்.
பாற்கரன், பாஸ்கரன் – பகலோன்.
பானு – அரசன், ஒளி, ஞாயிறு.
”பி” சங்கதம்/ தமிழ்
பிகம் – குயில்.
பிங்கலநாடி – வலப்பால் நாடி.
பிங்கலை – வலது மூச்சு.
பிசாசம், பிசாசு – பேய், அலகை.
பிச்சாபாத்திரம் – இரப்போர் கலம், திருவோடு.
பிச்சை, பிச்சா, பிட்சை – இரப்பு, ஐயம்.
பிஞ்ஞகம் – தலைக்கோலம்.
பிஞ்ஞகன் – தலைக்கோல முடையவன்,சிவபிரான்.
பட்சான்னம் – ஏற்றுணா, இரப்புணா.
பிடிவாதம் – விடாப்பிடி.
பிண்டசரீரம் – யாக்கை,உடம்பு.
பிண்டம் – பருப்பொருள் (தரு), உடல், சிற்றுலகு, கரு.
பிண்டவிர்த்தி – கருவளர்ச்சி.
பிதா – தந்தை , தகப்பன், அத்தன்.
பிதிரர் – மூதாட்கள்.
பிதிரார்ச்சிதம் – முன்னோர்தேட்டம்.
பிதிர்க்கடன் – மூதாட்கள் கடன், தென்புலத்தார் கடன்.
பிதிர்க்காரியம், பிதிர்க்கிரியை – மூதாட்கள் கடன், மூதாட்சடங்கு, தென்புலத்தார் கடன்.
பிதுர் தேவர் – தென்புலத்தார்.
பிதுர் யாகம் – நீர்க்கடனாற்றல்.
பிநாகபாணி – சிவன், விற்கையன், சூலமேந்திய கையன்.
பிநாகம் – வில், சூலம்.
பிந்நம் – சிதைவு, வேறுபாடு.
பிம்பம் – சாயல்.
பிரசுஸ்பதி – வியாழன், செம்பொன்,வானோர் குரு.
பிரகடனம் – விளம்பரம்.
பிரகரணம் – பகுதி.
பிரகாசம் – ஒளி, துலக்கம், வெளிச்சம்.
பிரகாசித்தல் – விளங்கல், நிலவுதல், ஒளிர்த்தல்.
பிரகாரம், பிராகாரம் – கோயிற் சுற்று.
பிரகிருதம் – உண்டாக்கப்பட்டது,
பிரகிருதி – இயற்கை, பகுதி.
பிரகிருதி சாஸ்திரம் – இயற்கைப்பொருள்
பிரகிருதி ஞானம் – உலகியலறிவு.
பிரகிருதி மாயை – பகுதி மாயை.
பிரக்ஞை, பிரக்கினை – உணர்வு.
பிரசக்தி – அருள்.
பிரசங்கம் – விரிவுரை, சொற்பொழிவு.
பிரசண்டமாருதம் – பெருங்காற்று, பெரும்புயல்.
பிரசண்டம் – மிகுதி.
பிரசண்டவேகம் – மிகுவிரைவு.
பிரசண்டன் – வலியன்.
பிரசந்நதமாதல் – வெளிப்படல், தோன்றல்.
பிரசம் – தேன்.
பிரசம்சித்தல் – போற்றல், புகழ்தல்
பிரசவம் – பிள்ளைப் பேர், கறுவுயிர்ப்பு.
பிரசுவவேதனை – பேறுகாலத் துன்பம் வயா.
பிரசா, பிரஜா,
பிரஜை – குடிகள்.
பிரசா௫ம் – கடவுளுணா, தேவுணா, படைப்பு, அருள்.
பிரசாபதி – ௮ரசன், உயிர்கட்குத் தலைவன், நான்முகன்.
பிரசாரகர் – விரிவுரையாளர், விளம்பர காரர்.
பிரசாரம் – பரப்புதல்.
பிரசித்தம், பிரசித்தி – வெளிப்படை, அறிவிப்பு,புகழ்பரவல்.
பிரசுரம் – வெளியீடு.
பிரஞ்ஞை – அறிவு, உணர்ச்சி,
பி்ரணயகலகம் – ஊடல், கலவியிற் பிணங்கல்.
பிரணாயம் – நம்பிக்கை, அன்பு, நேயம்,கலவி.
பிரணவம் – ஓங்காரம்.
பிரணவரூபம் – ஒங்கார வடிவம்.
பிரணவவிகாசம்-ஓங்கார விளக்கம்.
பிரதக்கணம், பிரதட்சணம், பிரகசணீ கரணம்-வலம்வரல், வலஞ்சுற்றி வரு தல்.
பிரதமம் -முதல், துவக்கம், தொடக்கம்.
பிரதாபம் -உயர்வு, புகழ், மேன்மை. முதன்மை, சிறப்பு.
பிரதானம் பிரதானி-அரசியற் றலைவர், முதல்வர்.
பிரதி-படி
பிரதிகூல காலம் -மாறுபட்ட காலம், போங் காலம்.
பிரதிகூலம் -மாறுபாடு, எதிர்.
பிரதிக்கினை, பிரதிக்ஞா, பிரதிக்ஞை-உறுதி, ஆணை, மேற்கோள், நேர்தல்.
பிரதிக்ஞா விரோதம்-மாறுபட்ட மேற்கோள்.
பிரதிட்டை , பிரதிஷ்டை -நிலைபெறுதல், கோயில் கொள்ளுவித்தல், கடவுள் மங்கலஞ் செய்தல்.
பிரதிதானம் -கைமாறு
பிரதிதினம்- நாடோறும், ஒவ்வொரு நாளும்.
பிரதிதொனி, பிரதித்வனி-எதிரொளி
பிரதிநாதம்-எதிரொளி
பிரதிநிதி -ஆணையாளர்.
பிரதிபட்சன் -எதிரி.
பிரதிபதம் -ஒத்த சொல்.
பிரதிபந்தம்,பிரதிபந்தகம்-கட்டுப்பாடு, தடை.
பிரதிபலனம்-எதிர்த்தோற்றம், எதிர் விளக்கம், உருநிழல்.
பிரதிபலித்தல்-எதிர்தோன்றல்.
பிரதிபாதித்தல் -எடுத்தோதல்..
பிரதிபாலித்தல் -பாதுகாத்தல், ஓம்பல்.
பிரதிபிம்பம் -எதிர்நிழல், எதிர்ச்சாயல்.
பிரதிபை, பிரதிபா -அறிவு.
பிரதிமை -சிலை,பாவை.
பிரதியுத்தரம்-மறுமொழி, நேர் விடை.
பிரதியுபகாரம்,பிரத்தியுபகாரம் – கைம்மாறு.
பிரதிவாக்கியம் -மறுமொழி.
பிரதிவாதம்-எதிர்வழக்கு.
பிரதிவாதி-எதிர்வழக்காளி, எதிராளி.
பிரதீகாரி -வாயிற்காவலன்.
பிரதேசம் -இடம்.
பிரத்தாபம், பிரஸ்தாபம்-அறிவித்தல், வெளிப்படுத்தல்.
பிரத்தியக்கம், பிரத்தியட்சம்-கண்கூடு, தெளிவு.
பிரத்தியக்ஷப் பிரமாணம்-காண்டலளவை
பிரத்தியாகாரம் -தொகைநிலை, ஐந்தவித்தல்.
பிரத்தியேகம்-தனிமை.
பிரத்துவணா சாபாவம்-அழிவுபாட்டின்மை.
பிரபஞ்சபந்தம்-உலகக்கட்டு.
பிரபஞ்சம்-உலகம்.
பிரபஞ்சவாசனை-உலகத் தொடர்பு.
பிரபஞ்சவியாபாரம்-உலகவாழ்வு, உலகநடை, உலகப்போக்கு.
பிரபஞ்சவிருத்தி -உலகப் பெருக்கம், உலகச் செய்கை.
பிரபஞ்ச வைராக்கியம்-உலக வெறுப்பு.
பிரபஞ்சாசாரம்-உலக ஒழுக்கம்.
பிரபந்தம் -நூல், நூற்றொகுதி.
பிரபலம், பிரபல்லியம்-புகழ், முதன்மை, சிறப்பு.
பிரபவம் -பிறப்பு.
பிரபா,பிரபை-ஒளி
பிரபாதசமயம் -விடியற்காலை.
பிரபாவம் -புகழ், பெருமை.
பிரபு -பெருந்தகை, பெருஞ்செல்வன்,தலைவன். பிரமக்கியானம்- கடவுளையறியுமறிவு, மெய் யறிவு.
பிரிமசரியம் -ஒதுநிலை, கல்விநிலை.
பிரமசாரி -மணமாசா கவன்.
பிரமஞானி -மெய்யுணர்வினள்.
பிரமதேவன் -நான்முகன்.
பிரமபுரம் -சீகாழி.
பிரமம் -கடவுள், முதல்.
பிரமா-நான்முகன்
பிரமாணம் -அளவை , தலைமை,மேற்கோள், ஆணை,கட்டளை.
பிரமாண்டம் -பேருலகம்.
பிரமாதம்-மிகுதி.
பிரமானந்தம் -பேரின்பம்.
பிரமித்தல் -மலைத்தல், திகைத்தல், மருளல்.
பிரமேயம்- அளக்கப்படும் பொருள், அறியப்படும் பொருள்.
பிரமை -மயக்கம், அறியாமை.
பிரமோற்சவம்-பெருவிழா.
பிரயத்தனம்-முயற்சி.
பிரயாசம் , பிரயாசை -முயற்சி, வருத்தம், பாடு, உழைப்பு, தொல்லை.
பிரயாணம் -பயணம், வழிப்போக்கு, வழிச்செலவு, செலவு.
பிரயாணி -வழிப்போக்கன்.
பிரயோகம் -செலுத்தல், பயன்படுதல்.
பிரயோசனம்-பயன்.
பிரலாபம் -பயனில்சொல்.
பிரவருத்தனம் -முயற்சி, சொல்லுதல்.
பிரவர்த்தி-முயற்சி, செய்கை.
பிரவாகநித்தம்-வெள்ள நிலை.
பிரவாகம் -வெள்ளப் பெருக்கு.
பிரவாகித்தல் -பெருக்கெடுத்தல்.
பிரவிடை -பூப்பு.
பிரவேசம் -நுழைவு, முயற்சி.
பிரவேசித்தல்-நுழைதல், உட்செல்லல்.
பிரளயம் -அழிவுகாலம், உலக ஒடுக்கம்,வெள்ளம்.
பிரளயாகலர்-இருமலத்தர்.
பிராகபாவம்-முன் இன்மை.
பிராகிருதபிரளயம்-உலக அழிவுக்காலம், ஊழிக்கால வெள்ளம்.
பிராசங்கிகம் -சார்புப் பொருள் (தரு).
பிராசனம் -சோறூட்டல்.
பிராசீனம்-பழமை.
பிராசீனாவீதம் -பூணூல்வலத்தோளி
லணிதல்.
பிராணசகி -உயிர்த்தோழி ..
பிராணசங்கடம்-உயிர்த்துன்பம்.
பிராணசத்தி-உயிராற்றல்.
பிராணசத்து -உயிர்ப்பொருள்.
பிராணசிநேகிதன் -உயிர்த்தோழன், ஆருயிர்
நண்பன்.
பிராணச் சேதம் -உயிர்க்கொலை, உயிர்க்கேடு.
பிராணத்தியாகம் -உயிர்க்கொடை.
பிராணநாதன் -உயிர்த்தலைவன், கணவன்,
பிராணநாயகி -உயிர்த்தலைவி, மனைவி.
பிராணமயகோசம் -வளியுடம்பு. உயிரொடுக்கம்.
பிராணலயம்,பிராணவாயு, ராணவாாசம்-மூச்சுவிடும் பழக்கம்.
பிராணவாயு -உயிர்க்காற்று,உயிர்வளி.
பிராணன் -உயிர்ப்பு.
பிராணாக்கினி -உயிர்த் தீ.
பிராணாதாரம் -உயிர் நிலைக்களன்.
பிராணாபாயம் -உயிர்க்கேடு.
பிராணாயாமம் -வளிநிலை, வளியுள்ளடக்கல், மூச்சுப்பழக்கம்.
பிராணான்மவாதம் -மூச்சே உயிரெனும் வழக்கு.
பிராணி-உயிருடையது, சிற்றுயிர்.
பிராணி சாஸ்திரம்-உயிர் நூல்
பிராணேசன்-கணவன்.
பிரா தக்காலம்-விடியற்காலம்.
பிராது (அராபி)-முறையீடு,முறைப்பாடு.
பிராந்தி-நிலையின்மை, மயக்கம்.
பிராபவம்-முதன்மை.
பிராப்தம்-கிடைத்தது, பேறு.
பிராப்தி-அடைதல், பெறுதல்.
பிராயச்சித்தம்-கழுவாய், குற்ற நீக்கம்.
பிராயம் -அளவு, ஆண்டு, அகவை.
பிராரத்தகன்மம்-தூய்வினை,நுகர்வினை, துவக்கவினை.
பிராரப்தம்,பிராரத்தம்-ஊழ்வினை.
பிரார்த்தனை-நேர்த்திக்கடன், வேண்டுகோள்.
பிரார்த்தித்தல்-வேண்டல்.
பிரியம்-அன்பு, விருப்பம்,விழைவு.
பிரியவசனம் -இன்சொல், இன்னுரை.
பிரியன்-கணவன், தலைவன், தோழன்,நண்பன்.
பிரியா, பிரியை-பெண், காதலி.
பிரீதம்-உகப்பு, விருப்பம்.
பிரீதி-அன்பு, உருக்கம், அவா, உவகை.
பிருதிவி-நிலம்,மண்.
பிருதிவி தத்துவங்கள்-நிலத்துப்பொருள்கள்.
பிருதிவிலிங்கம்-மண் அருட்குறி.
பிரேதசம்ஸ்காரம்-பிணச்சடங்கு
பிரேதம்-பிணம்.
பிரேரகம்-ஏவுதல்.
பிரேரித்தல் -தோற்றுவித்தல்,நடத்தல்.
“பீ” சங்கதம்/ தமிழ்
பீசம்,பீஜம்-முளை,மூலம்,விதை.
பீசாட்சரம் -மூல எழுத்து.
பீடம்-இருக்கைமேடை.
பீடிகை-இருக்கை, பூர்தட்டு, முகவுரை.
பீடை-துன்பம், பீழை, நோய்.
பீதாம்பரம்-பொற்பட்டாடை.
பீதி -அச்சம்.
பீபத்ச ரசம் -இளிவரற்சுவை.
பீமநாதம் -பேரொலி.
பீமம்-அச்சம், பருமம்.
“பு” சங்கதம்/ தமிழ்
புசங்கம்,புசங்கம், புஜங்கம்-பாம்பு.
புசபலம், புஜபலம், புயபலம்-தோள்வலிமை.
புசம், புஜம்,புயம் -தோள்.
புஸ்தகம், புத்தகம் -சுவடி, நால்.
புஞ்சம் -குளியல்.
புடகம் -இலைக்கலம், தாமரை.
புட்கரம், புஷ்கரம் -அம்பு, நிறைவு.
புட்கரி-யானை.
புட்பசயனம் -பூம்பள்ளி, பூவணை.
புட்பம், புஷ்பம்-பூ, மலர்.
புட்பரசம்-பூந்தேன்.
புட்பராகம் -வெள்ளைக்கல்.
புட்பரேணு-பூந்துகள்.
புட்பவதி-பூப்பானவள்.
புட்பவிமானம், புஷ்பகவிமானம்-பூந்தேர்.
புட்பாசனம் -பூவிருக்கை.
புட்பாசனி-திருமகள், பூமகள், கலைமகள்.
புஷ்டி-பருமன், தடிப்பு.
புண்டாம்-வெண்டாமரை, குறி,நெற்றிக் குறி.
புண்டரீகம் -தாமரை.
புண்ணியசரீரம் -புனித உடம்பு.
புண்ணியக்ஷேத்திரம்-தூய இடம்.
புண்ணிய தலம்-திருப்பதி.
புண்ணியதிநம்-நன்னாள்.
புண்ணிய பாவம்-நல்வினை தீவினை, அறம் மறம்.
புண்ணியம் -நல்லூழ், நல்வினை, அறம்.
புண்ணியாவசநம்-தூய்மையாக்குதல்.
புத்தி-உணர்ச்சி, அறிவு .
புத்தி தத்துவம்-அறிவுப் பொருள்.
புத்தியீனம்-அறிவின்மை, மடமை.
புத்திரசம்பத்து-மக்கட்பேறு.
புத்திரசுவீகாரம்-பிள்ளையெடுப்பு.
புத்திரபாக்கியம்-பிள்ளைச் செல்வம், பிள்ளைப்பேறு.
புத்திர மார்க்கம் -மைந்தநெறி, மகவுநெறி.
புத்திரன்-புதல்வன், மகன், மைந்தன்,கான்முளை.
புத்திரி -புதல்வி, மகள்.
புத்புதம் -நீர்க்குமிழி .
புநருத்தம்-கூறியது கூறல்.
புநர்விவாகம் -மறுமணம்.
புமான்-ஆடவன்
புராணம் -பழங்கதை, பழைய வரலாறு.
புராதனம் -பழமை.
புராரி-சிவன்.
பும்சத்துவம், புருஷத்துவம்-ஆண்டன்மை.
புராவிருத்தம் -பண்டை நிகழ்ச்சி.
புருஷமேதம்-ஆண்மகனைக்கொன்று வேட்கும் வேள்வி.
புருடன், புருஷன் -ஆண்மகன், மகன் (சித்-தத்), கணவன், கொழுநன்.
புருடார்த்தம், புருஷார்த்தம்-உறுதிப்பொருள்.
புருடோத்தமன் -ஆடவரிற் சிறந்தோன்.
புரோகிதன் -வேள்விசெய்வோன்.
புரோக்கணம், புரோக்தம்-சொல்லப்பட்டது.
புரோட்சணம், புரோட்சணை-தெளித்தல்.
புரோவாதம்-முன்மொழிதல்
புவனம், புவனி, புவி-உலகம், வையகம், நிலம்,இடம்.
புவனாத்துவம் -உலக வழி.
புளகம், புளகிதம்-மயிர் சிலிர்த்தல், மயிர்க்கூச் செறிவு.
புனர் செனனம், புனர்சென்மம்-மறுபிறப்பு.
புனர்ப்பாகம் புனர்விவாகம்-சோற்றின்மறுபால், தெளு.
புனர்விவாகம்-மறுமணம்.
“பூ” சங்கதம்/ தமிழ்
பூகம் -உருண்டை.
பூகம்பரும், பூகம்பம் -நில நடுக்கம்.
பூகோளசாஸ்திரம் -நிலநூல்
பூசகன், பூஜகன், பூசாரி-வழிபாடு செய்வோன்.
பூசாவிதி -வழிபாட்டு முறை.
பூசை, பூஜை, பூசனை -வழிபாடு, வணக்கம்.
பூஷணம், பூடணம் -அணிகலன், அணி.
பூச்சியம் -இன்மை, அருமை, சுழியம் , பாழ்.
பூஸ்திதி-நிலச்செல்வம்.
பூதசரீரம், பூதனாசரீரம்-பருவுடல்
பூதம்- முதற்பொருள், முதல், புலன், பேய்.
பூதபௌதிகம் -இயற்கைப் பொருள்.
பூதரம்-மலை.
பூதலம் -நிலம், உலகு.
பூதாகாயம் -இடைவெளி, வான்வெளி.
பூதி-துகள், தூள்
பூபாலன் -அரசன்.
பூமி -நிலம், உலகு.
பூமிதேவி, பூமாதேவி-நிலமகள்.
பூமிபாரம் -நிலச்சுமை.
பூரகம்-உள்ளிழுத்தல், உட்கொள்ளுதல், நிரப்புதல்.
பூரணகும்பம் -நிறைகுடம்.
பூரணசந்திரன் -உவா, முழுநிலா.
பூரணபரிபக்குவம் -நிரம்பிய அருணிலை.
பூரணபலன் -நிறைபயன், முழுப்பயன்.
பூரணமனம் -உளநிறைவு, முழுமனம்.
பூரணம் -நிறைவு, எல்லாம், முடிபு.
பூரணவித்தை-முழுக்கல்வி, நிரம்பியகல்வி.
பூரணை -நிறையுவா, முழு நிலா.
பூரித்தல்-நிறைதல்.
பூர்த்தி -நிறைவு.
பூர்வ செனனம், பூர்வ ஜெனனம் -முற்பிறப்பு.
பூர்வசென்ம கருமம்-முற்பிறவி, வினை, பழவினை.
பூர்வசென்மம்-முற்பிறப்பு.
பூர்வம்-பழமை, தொன்மை, முன், கிழக்கு.
பூர்வீகம்-பழமை.
“பெ” சங்கதம்/ தமிழ்
பெத்தான்மா-கட்டுற்ற உயிர்.
“பே” சங்கதம்/ தமிழ்
பேதகம் -வேறுபாடு.
பேதபாவனை-ஒன்றை மற்றொன்றாக நினைத்தல்.
பேதம்,பேதநம்-ஒவ்வாமை, வேற்றுமை, வேறுபாடு
பேதவாதி-வேற்றுமைக் கொள்கையர்.
பேதாபேதம் -வேற்றுமை ஒற்றுமை.
பேதாபேதவாதி-வேற்றுமை ஒற்றுமைக் கொள்கையர்.
பேதி -கழிச்சல்.
“பை” சங்கதம்/ தமிழ்
பைசந்திவாக்கு-நினைவோசை.
பைசாசம் -பேய்,பேய்நிலை.
பைத்தியக்கா ஆஸ்பத்திரி -வெறிகொண்டார் விடுதி.
பைத்தியம்-பித்து, வெறி, கோட்டி.
“பொ” சங்கதம்/ தமிழ்
பொக்கஷம் -பொருட்களஞ்சியம், பண்டாரம்.
“போ” சங்கதம்/ தமிழ்
போகசிவன் உத்தியுத்தன், சகளநிஷ்களன் – -ஏவற்சிவன்.
போகபூமி- விளை நிலம்,இன்ப உலகு, துய்ப்பிடம்.
போகம் -இன்பம், துய்ப்பு, நுகர் பொருள்.
போசனபதார்த்தம்- உணவுப் பொருள்.
போசனப்பிரியன் -உணவு வேட்கையன்.
போசனம், போஜனம் -உணவு, சோறு, உண்டி, ஊண்.
போசன் -செல்வன்.
போஷகன் -காப்போன்.
போஷணை -நுகர்பொருள்.
போஷித்தல் -காப்பாற்றல், வளர்த்தல்.
போதகன் -கற்பிப்போன், ஆசிரியன்.
போதம் -அறிவு.
போதனை -கற்பனை.
போதித்தல் -கற்பித்தல், அறிவுறுத்தல்.
போதை -வெறி, மயக்கம்.
போநகம் -சோறு, உணவு.
“பௌ” சங்கதம்/ தமிழ்
பௌதிகசரீரம் -பருவுடல்.
பௌதிகசாஸ்திரம் -இயற்கைப் பொருள்நூல்.
பௌத்திரன் -பேரன்.
பௌத்திரி -பேர்த்தி.
பெளமம் -மண்ணிலிருப்பது ,நிலத்திற் பிறப்பன.
பௌருஷம் -ஆண்டன்மை, முயற்சி.
பௌர்ணமி -முழுநிலா.
பௌவம்-கடல்.



