ஏனைய பற்றியம்

பிரான்சில் நடைபெறவிருக்கும் ஒலிப்பிக்கின் தீவட்டியை ஏந்தும் பெருமையைப் பெற்ற ஈழத்தமிழர்!

ஒலிப்பிக் போட்டியானது 26 -ஆம் நாள் 2024 தொடக்கம் மடங்கல் திங்கள் 11-ஆம் நாள் வரை பிரான்சு் தலைநகர் பரிசில் நடைபெறவுள்ளது .

பிரான்சில் – பரிசில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சிறந்த வெதுப்பி செய்வோருக்கான போட்டியில், இந்த ஆண்டுக்கான விருதை ஈழத்தைச் சேர்ந்த தர்சன் செல்வராசா வென்றது குறிப்பிடத்தக்கது .

‘பரிசின் சிறந்த வெதுப்பி’ என்ற போட்டியில் வெதுப்பி செய்வோருக்கான விருதைப் பெற்ற ஈழத்தைச் சேர்ந்த தர்சன் செல்வராசா அவர்கள் ,  பிரான்சை வந்தடையும் ஒலிம்பிக் தீவட்டியை  ஏந்தும் உயர்வான வாய்ப்பைப் பெற்றுள்ளார் . ஆயிரக்கணக்கான திறமையாளர்களில்  ஒருவராகி இவ்வரிய வாய்ப்பை தனதாக்கிக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

கிரீசில் இருந்து ,  நேற்று அறிவன்கிழமை  ஒலிம்பிக் தீவட்டி  பிரான்சின் தென்பகுதியான மார்செய் என்ற இடத்தை வந்தடைந்துள்ளது . நாடு முழுவதும் உள்ள பல நூறு நகரங்களுக்கு இந்த ஒலிம்பிக் தீவட்டி 10,000 பேர் வரையானவர்களால் கொண்டு செல்லப்பட உள்ளது.

அவர்களில் ஒருவராக பிரெஞ்சு வெதுப்பகப் பணியாளர் தர்சன் செல்வராசா தெரிவாகியுள்ளார்.
நடப்பு ஆண்டில் வெற்றியாளரான தர்சன் செல்வராசா அவர்களுக்கு உலகத் தமிழர்களின் வாழ்த்தும் பாராட்டும் குவிந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

எங்கிருந்தாலும் தமிழன் தன் அடையாளங்களை நிலைப்படுத்தத் தவறுவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய தர்சன் செல்வராசா அவர்களை வாழ்த்திப் பெருமைப்படுத்துகிறது தமிழ் கூறும் நல்லுலகு .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button