௨௦(20)வது சிறந்த சமையற் கலைஞர் போட்டியின் (MasterChef) வெற்றியாளராக இந்த ஆண்டு முடிசூட்டப்பட்டார் பிருந்தன் (பிரின்) பிரதாபன்: பிரித்தானியச்செய்தி .
ஈழத்தமிழர்

பிரித்தானியாவின் இருபதாவது சமையற் கலைஞர் போட்டியின் சிறந்த சமையல் வல்லுநர் என்ற மகுடத்தைப் பெற்ற பிருந்தன் (பிரின்) பிரதாபன்.
இவர் , எசெக்சின் செல்ம்சு்ஃபோர்டைச் சேர்ந்தவர்; தற்போது பிரிசு்டலில் தனது வருங்கால மனைவி மற்றும் மூத்த உடன் பிறப்புடன் வாழ்த்துவரும் ஈழத்தமிழர் பிரின் பிரதாபன் வட இலங்கையைச் சேர்ந்தவர். தனது தமிழ் பெற்றோருக்கு இவ்வெற்றியை ஒப்புவிப்பதாகக் கூறுகிறார் . ஏனெனில் , அவர்களே தனக்குள் சமையல் ஈடுபாட்டை ஏற்படுத்தினர் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
பிரின்(பிருந்தன்) பிரதாபன் மேலும் கூறியதாவது …
சமையல் என் குடும்பத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. எனது திறமையான பெற்றோரிடமிருந்து செழுமையும் சுவையும் கொண்ட தமிழ் சமையல் மரபுக்களைக் கற்றுக்கொள்வதற்கு நான் பேறு பெற்றுள்ளேன். சமையலில் அவர்கள் வல்லுநர்கள். என் வாழ்நாள் முழுவதும் மகிழ்ந்திருக்க என்னை இக்கலையினூடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
“நான் இன்று சமையற்காரராக இருப்பதற்கு நிகழ்ச்சியும் ஒரு பொருட்டே” என்று அவர் கூறியதோடு தொடர்ந்து ..
அவர் இந்நிகழ்ச்சியில் நுழைவதற்கு முன்பு பிரிசு்டலில் கால்நடை அறுவை மருத்துவ வல்லுநராகப் பணிபுரிந்தார் என்றும் மேலும், அவர் சிறுவனாக இருந்ததிலிருந்து நிகழ்ச்சியைப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நான் வளர்ந்த தன்மை உணவுச்சலிப்பை ஏற்படுத்தவில்லை. இலங்கைத் தமிழ்ப் பின்னணியில் இருந்து வந்த நாங்கள், எப்பொழுதும் நிலப்பலகையில் சுற்றியிருந்து நல்ல உணவை வகைகளையே உண்டோம் என்கிறார் அவர்.
பிரின் தமிழின் தொன்மரபுப் படைப்பாற்றலைச் சமையலறையில் காட்டியதற்காகத் தன்னை வளர்த்தெடுத்த பிரித்தானியாவையும் ஒருங்கே பாராட்டுகிறார். நான் விரும்பும் சமையற்கலை அனைத்துமே உண்மையிலேயே எனது தமிழ்ச் சமையலின் தொன்மரபு மற்றும் எனது பிரித்தானிய வளர்ப்பின் கலவையாகும் என்று கூறும் பிரின் சிறப்பான சுவைகளுடன் உணவுகளை செய்வதில் எனக்கு ஈடுபாடு உள்ளது. ஆனால் அவற்றை ஐரோப்பிய நுட்பங்களுடன் உயர் தரத்திற்கு செம்மைப்படுத்த விளைகிறேன் . உலகம் முழுவதிலுமிருந்து சுவைச்சேர்க்கைகளை இழுக்கவும், தரமான உணவுகளை அணியம் செய்யவும் விரும்புகிறேன்.தமிழ்க்கறிக்கு மதிப்புக்கொடுத்து, தன்னைத் தமிழ் வாகையாளரில் ஒருவராகச்சேர்ப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்கிறார் பிரின்.
அவரது தந்தை, பிரதாபன், இலங்கை, யாழ்ப்பாணத்தில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
இப்போட்டியைப் பற்றி..
அனைத்து தரப்புகளிலும் உள்ள திறமையான வீட்டுச்சமைய சமையற் கலைஞர்கள் மற்றும் புகழ்பெற்ற நடுவர்களின் கீழ் இப்போட்டிக்கான சமையலறையில் போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் பார்வைக்கு முன்னால் புகழ்வாய்ந்த மற்றும் சுவையான உணவுகளை உருவாக்குகிறார்கள். சிற்றூர் முதல் புதுமையான அனைத்துலக சுவைகள் வரை போட்டியாளர்களின் ஈடுபாடு, திறமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் தொழில் முறைச் சமையல் உலகிற்கு, ஒரு சிறப்பான பார்வையை இப்போட்டி வழங்குகிறது.
நிகழ்ச்சியின் வரலாறு மற்றும் வளர்ச்சி
இப்போட்டியானது , 1990 இல் தொடங்கியுள்ளது. புதிய எதிர்கொள்ளல்கள் மற்றும் புதிய தன்மைகளுடன் உருவாகியுள்ளது. இது தொடக்கத்தில் சிற்றூர் சமையல்காரர்கள் மீது ஈடுபாடு செலுத்தியது. பின்னர் தொழில்முறை சமையல்காரர்களை அழைத்துள்ளது . சமையற் சிறப்பிற்கான பட்டியை உயர்த்தியது மற்றும் போட்டியை விரைவுபடுத்தியது என்பன குறிப்பிடத்தக்கது .
நடுவர்கள் மற்றும் புரவலர்களின் பங்கு..
இச்சமையற் போட்டியானது போட்டியாளர்களின் உணவுகளிற்கான திறனாய்வுக் கருத்துகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி யார் முன்னேற வேண்டும் என்பதை மதிப்பாய்வு செய்யும் நடுவர்களை மதிக்கிறது. புகழ்பெற்ற சமையல்காரர்கள் மற்றும் உணவு திறனாய்வாளர்களே இதுவரை நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். ஒவ்வொருவரும் தனித்துவமான முன்னோக்கு மற்றும் சமையல் வழியைக் கொண்டு வருகிறார்கள். அவர்களின் கருத்தானது போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது. நிகழ்ச்சியில் போட்டியாளர்களை விரும்பும் மற்றும் ஊக்குவிக்கும் ஒரு கவர்ச்சியான தொகுப்பாளரும் உள்ளார்.
குறிப்பிடத்தக்க போட்டியாளர்கள் மற்றும் வெற்றியாளர்கள்
இப்போட்டியானது பல ஆண்டுகளாக பல திறமையான போட்டியாளர்களைக் கண்டுள்ளது . சிற்றூர் வீட்டுச் சமையல்காரர்கள் முதல் தொழில்முறைச் சமையல்காரர்கள் வரை ஒவ்வொரு காலத்திலும் தங்களை நிலைப்படுத்த ஈடுபாடுள்ள சமையல் விரும்பிகள் புதிய குழுவைக் கொண்டுவருகின்றன. சில போட்டியாளர்கள் தங்களுடைய வியத்தகு திறமைகள் மற்றும் தனித்துவமான சமையல் திறமைகளால் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். புதுமையான சுவைச் சேர்க்கைகள் மற்றும் வியக்க வைக்கும் விளக்கக்காட்சியுடன் சமையல் கலையின் எல்லைகளைத் தாண்டியுள்ளனர். ஒரு போட்டியாளர் மட்டுமே வெற்றிபெற முடியும் என்றாலும், பலர் உணவுத் துறையில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளனர்.
மறக்கமுடியாத பொழுதுகள்..
இதன் வரலாறு முழுவதும், இப்போட்டியானது மறக்கமுடியாத பல நிகழ்வுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் ஒன்று இன்னட்டு இனிப்பு என்ற இனிப்பு வகையின் கண்டுபிடிப்பு ஆகும். இது ஒரு போட்டியாளர் அதைச் செய்த பிறகு புகழ் பெற்று, மக்கள் நடுவில் மிகவும் அறிந்த ஒருவராகியுள்ளார். இதன் விளைவாக திறம்வாய்ந்த நடுவம் ஏற்பட்டது. இவ்வுணவு இப்போது பல உணவக உணவுப் பட்டியலில் முதன்மையாக உள்ளது.
முடிவுரை..
இப்போட்டி நிகழ்வின் அமைத்துவமானது அது எதிர்கொள்ளும் தன்மை, ஈர்க்கக்கூடிய உணவுகள் மற்றும் திறமையான போட்டியாளர்கள் மூலம் புகழ்பெற்ற சமையல் அமைத்துவமாக பெயர் பெற்றுள்ளது . நிகழ்ச்சியின் வடிவம், செல்வாக்கு மிக்க நடுவர்கள் மற்றும் வளமான வரலாறு ஆகியவை உலக அளவில் உணவு விரும்பிகளை இதைக் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தூண்டுகிறது . அத்துடன் அதன் அனைத்துலக விளம்பரத்தினால் பல்வேறு சமையல் திறமைகள் மற்றும் தொன்மரபுகளை வெளிப்படுத்துகிறது. இது உலகளவில் சமையற்றொழில் மற்றும் உணவுப் பண்பாட்டு வரலாற்றைத் தொட்டு நிற்கிறது .
இந்த ஆண்டு, தமிழ் போட்டியாளரான பிரின் பிரதாபன் இப்போட்டியில் முடிசூடி வெற்றி பெற்றது தமிழ்ச் சமையல் மரபின் தரத்தை உயர்த்திப் பிடித்து வரலாற்றில்கொடி நாட்டியுள்ளது .
குறிப்பு:
2023 ஆம் ஆண்டில், பாரிசு நகரம் 30வது உணவுப் போட்டியின் ஆண்டு விழாவைப் பிரான்சு கொண்டாடியது. தர்சன் செல்வராயா எனும் 37 அகவையுடைய மற்றொரு வட இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர் இப்போட்டியில் கலந்து கொண்டார் . அதன் மூலம் அவர் வலுவான பணி நெறிமுறைக்கு தன்னை ஒப்புவித்து அவரது திறமையின் மூலம் 126 போட்டியாளர்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
பிரெஞ்சு முதன்மை மேலாளர் இருப்பிடமான எலிசே அரண்மனைக்கு நாடோறும் சுற்றுண்டி (பக்கோடா) வழங்கும் வாய்ப்பை தர்சன் செல்வராசா வென்றார். அங்கு அவை ஆளுநர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது பணியாளர்களால் அவ்வுணவுசுவைக்கப்படுகிறது ..அத்துடன் 2024 பிரான்சு தலைநகர் பாரிசில் இடம்பெறவிருக்கும் ஒலிம்பிக் தீவட்டியை ஏந்தும் ஈழத்தமிழர் என்ற பெருமையையும் பெற்றார்.
வெதுப்பகப்பணி மற்றும் கோதுமை மாவின் பயன்பாடு ஐரோப்பியர்களின் ஆளுமைக் காலத்தில் குறிப்பாக போர்த்துகீசியர்களால் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அறிமுகம் பல்வேறு சிற்றுண்டிகளின் புதுமைகளைத் தூண்டியது.
கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற தமிழர் தெரு உணவு திருவிழாவின் போது, கனடாவின் ஆளுநர் யசு்டின் ட்ரூடோ விழாவில் பங்கேற்றபோது மிகவும் புகழ்பெற்ற தமிழர் உணவான ‘கொத்துப் புரியடையை உண்டு பார்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .
நிறைவு
தமிழீழம் என்கின்ற குறுநிலத்தீவிலிருந்து எத்தனையோ ஆயிரம் உயிர்களைக் கொடையளித்து , நாடிழந்து , உடமையிழந்து காகக் கூட்டங்கள் போல் ஒவ்வொரு நாட்டிலும் ஏதிலியாக அடைக்கலம் புகுந்த ஈழத்தமிழர்கள் எங்கு வாழினும் சிறப்புற்றுத் திகழ்வது அந்நாட்டின் உயிர் ஈகர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒன்றாகவே உள்ளது .
இந்நேரத்தில் துளிவானொலி எம் தமிழ் வெற்றியாளர்களை வாழ்த்திப் போற்றி மதிப்பளிக்கிறது .
எழுத்து: நிலா
நன்றி.. வாழ்க தமிழ் ..!




