ஏனைய பற்றியம்வரலாற்று மாந்தர்கள்

சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார்

சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார்

பிறப்பு: குடத்திங்கள் 20-ஆம் நாள் 1878 .
நீத்தல் :சுறவத்திங்கள் 24-ஆம் நாள் 1961.
பணி: வழக்கறிஞர்,நகரசபை உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர், சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி ஆணையாளர். தூத்துக்குடி அறிவொளி அவையின் தலைவர்
அறியப்படுதல் : பெரிய புராணத்திற்கு உரையெழுதிய உரையாசிரியர்.

சிவக்கவிமணி என்று அறிஞர்களால் போற்றப்பட்ட இவர் கோவை நகர்க்கனி, சைவக் குலமணி, வித்துவமணி, திருத்தொண்டர் புராணமணி, சேக்கிழார்செய் சேவையினை மக்களுணர்ந் துய்யவழி காட்டுமணி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.

சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வகையில் அயராது உழைத்த சிவக்கவிமணி பல நூல்களை இயற்றித் தந்துள்ளார். அவற்றுள்,
செய்யுள் நூல்கள்.

திருப்புக்கொளியூர் அவிநாசிப் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ்,

கந்தபுராணப் போற்றிக் கலி வெண்பா,
திருப்பேரூர் இரட்டை மணிமாலை,
மருதங்கோவை.

உரைநடை நூல்கள்.

நீத்தார் பெருமை அல்லது ஸ்ரீமாணிக்கவாசகர்,
வாகீசர் அல்லது மெய்யுணர்தல்,
கருவூர்த் தேவர்,
சேக்கிழார்,
சேக்கிழாரும் சேயிழையார்களும்,
செம்மணித் திரள்,
அர்த்தநாரீசுவரர் அல்லது மாதிருக்கும் பாதியான்,

திருத்தொண்ட புராணத்துள் முருகன்

சிவக்கவிமணி பதினோராம் திருமுறையில் சில நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். அவை,

சேத்திர திருவெண்பா (பதினோரம் திருமுறை)
பெரிய புராணம் (பன்னிரண்டாம் திருமுறை).

சிவக்கவிமணியின் பெரிய புராணப் பேருரை 1935ஆம் ஆண்டு முதல் இதழ்களாக வெளிவரத் தொடங்கியது. முதல் இதழ் 05.06.1935இல் சேக்கிழார் திருநாளன்று தில்லையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. ‘சிவக்கவிமணி அவர்களின் பெரியபுராணம் பேருரை, உயர்ந்த காகிதத்தில், 160 பக்கங்கள் கொண்டுள்ளது. நாற்பத்து நாலு சஞ்சிகைகளையும், ஆசிரியர் ஏழு பகுதிகளாகப் பிரித்து வெளியிட்டுள்ளார்.

நன்றி .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button