தமிழ்பிறமொழி/தமிழ்

“எ” , “ஏ”, “ஐ”, “ஓ”, “ஔ” என்ற எழுத்துகளில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

“எ” , “ஏ”, “ஐ”, “ஓ”, “ஔ” என்ற எழுத்துகளில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

          எ

  • எக்கியம்‌ – வேள்வி.
  • எக்கியோபவீதம்‌, யஞ்ஞோபவீதம்‌ -வேள்விப்பூணூல்‌.
  • எக்சன்‌, யஞ்ஞன்‌ – வேள்வி யாசிரியன்‌.
  • எசமாநி – தலைவி, முதல்வி.
  • எசமானன்,எஜமான்‌ -உள்ளபடி, வழக்கம்போல்‌, தலைவன்‌, முதல்வன்‌.
  • எட்டு – எழுச்சி.
  • எதா அஸ்து -௮வ்வாளறாகட்டும்‌, ௮வ்வாறாகுக.
  • எதாசக்தி-  கூடியவலியளவு, முடிந்தவரை.
  • எதாப்பிரகாரம்‌ -உள்ளபடி, வழக்கம்போல்‌, இருந்தவாறு.
  • எதார்த்தம்‌ – உறுதி, உண்மை.
  • எதாவஸ்து – உள்ளபடி.
  • எதி, யதி – துறவி.
  • எதிருத்தரம்‌ – மறுமொழி.
  • எதேச்சை – விருப்பப்படி.
  • எதேஷ்டம்‌, எதேட்டம் –  மிகுதி, விருப்பப்படி.
  • எத்தநம்‌ – முயற்சி.
  • எந்திரம்‌ – பொறி.
  • எமதூதர் –  கூற்றுவன்பணியாள்‌ .
  • எமன்‌ – கூற்றுவன்‌, மறலி .
  • எல்லி நாதன்‌ – திங்கள்‌.
  • எவ்வநம்‌,யெளவநம்‌ – இளமை, அழகு.

           

           

  • ஏகசக்கரம்‌ – ஓராழி.
  • ஏகசக்கரவர்த்தி – தனிவேச்தன்‌, மன்னர்‌ மன்‌னன்.
  • ஏகசக்கராதிபதி – தனியரசாள்வோன்‌.
  • ஏகசரன்‌ – தனியே திரிபவன்‌.
  • ஏகசிந்தை – ஒரே நினைவு.
  • ஏகசுபாவம்‌ – ஒரேதன்மை.
  • ஏகதேசம்‌ – ஒருபால்‌, ஒருபுடை, சிறுபான்மை.
  • ஏகதேசவியாபகம்‌ – ஒரிடத்து நிறைந்திருத்தல்‌.
  • ஏகதேவன்‌ – தனிக்கடவுள்‌.
  • ஏகநாதன்‌ – தனித்தலைவன்‌.
  • ஏகாநாயகன் – முழுமுதற்கடவுள்‌, ஒரே தலைவன்.
  • ஏகபதம்‌ – ஒருநிலை.
  • ஏகபத்திரிகை – வெண்டுளசி.
  • ஏகபத்தினிவிரதம்‌ – ஒர்‌இலாள்‌ கோள்‌ முறை.
  • ஏகபரிபூணம்‌ –  எங்கும்‌ நிறைவு.
  • ஏகபரிபூணன் – எங்கும்‌ நிறைந்தவன்‌, கடவுள்.
  • ஏகபாதம் – ஓரடி, ஓரணி.
  • ஏகபாவம் – ஒரே தன்மை.
  • ஏகபிங்கன்‌ – குபோன்‌.
  • ஏகபிராணன்‌ – ஒருயிர்.
  • ஏகபோகம்‌ – உளநிறை யின்பம்‌, ஒருபடித்‌தான இன்பம்.
  • ஏகம்‌ – ஒன்று, தனிமை.
  • ஏகரூபம்‌ – ஒரே வடிவம்.
  • ஏகவாசம் – தினியிருப்பு, ஆலமரம்‌.
  • ஏக வெளி – பெருவெளி.
  • ஏகன்‌ – தனியன்‌, ஒருவன்‌.
  • ஏகாக்கம்‌ – காக்கை.
  • ஏகாக்கன்‌- ஒற்றைக்‌ கண்ணன்‌.
  • ஏகாக்கிரம்‌ – ஒன்றிலே உளம்வைத்தல்‌.
  • ஏகாங்கி – தனியன்‌, துறவி.
  • ஏகாசம்‌ – மேலாடை.
  • ஏகாட்சரி – ஓங்காரம்‌, ஓரெழுத்து.
  • ஏகாட்சி – ஒற்றைக்கண்‌.
  • ஏகாண்டம்‌ – வெளி, முழுக்கூறு.
  • ஏகாதசம் – பதினொன்று.
  • ஏகாதிசி – பதினோராம்பிறை.
  • ஏகாதிபதி – வேந்தன், தனியரசான்வேன்.
  • ஏகாதிபத்தியம்‌ – தனியரசாட்சி,
  • ஏகாந்தஸ்‌தலம்‌ – தனி இடம்‌.
  • ஏகாந்தம்‌ – தனிமை, ஒருமுடிவு.
  • ஏகாந்மவாதம் –  உயர்‌ ஒன்றெனுங்‌ கொள்கை.
  • ஏகாம்பரன்‌- சிவன்.
  • ஏகி – ஒருத்தி, தனியள்.
  • ஏகிபவித்தல்‌ – ஒன்றாய்ப்பிறத்தல்‌, ஒன்று சேர்தல்‌.
  • ஏகிபாவம்‌ – ஒன்றாந் தன்மை.
  • ஏகோபித்தல்‌ – ஒன்றுபடுதல்‌.
  • ஏசநம்‌ – அசைதல்.
  • ஏடணை, ஏஷணை – விருப்பம்‌.
  • ஏதசன்‌ – பார்ப்பான்‌.
  • ஏதம்‌ -குற்றம்‌, துன்பம்‌, தீங்கு.
  • ஏதி, ஹேதி – வாள்.
  • ஏது, ஹேது – காரணம்‌.
  • ஏத்துவாபாசம்‌ – ஏதுப்போலி, இயைபில்லா ஏது, கூறல்.
  • ஏநம் – பன்றி.
  • ஏம கூடம் – பொன்மலை.
  • ஏம் புட்டம் – அசோகமரம்‌.
  • ஏமன் – மறலி, கூற்றுவன்‌.

         

  • ஐகியம் – இவ்வுலகம்‌, இம்மை.
  • ஐக்கம்‌, ஐக்கியம்‌ – ஒற்றுமை.
  • ஐக்கியபதம்‌ – கடவுளும்‌ உயிரும்‌ ஒன்று பட்டிருக்குந் தன்மை.
  • ஐங்கரன்‌ – பிள்ளையார்‌.
  • ஐசானம்‌, ஈசானம்‌ – வடகிழக்கு,
  • ஐச்வரியம்‌ – செல்வம்‌, திரு.
  • ஐதிகம்‌ – உலகுரை.
  • ஐதிகாதிகன்‌ – வரலாற்றறிவன்‌.
  • ஜந்தவி – கலைமகள்‌.
  • ஐந்தரியம்‌ – பொறிகளோடு தொடர்புடையது.
  • ஜம்பூதம்‌ – ஐந்து முதற்பொருள்.
  • ஐராவதம் – வானவர்கோன்‌ யானை.

             

  • ஓசசு,ஓசம் – புகழ்‌, விளக்கம்‌.
  • ஓசிவனம்‌ – பிழைப்பு.
  • ஓடதீசன்‌ – திங்கள்‌.
  • ஓட்டம்,  ஓஷ்டம்‌ – மேலுதடு, உதடு.
  • ஓதனம்‌ – சோறு, உண்டு.
  • ஓதா, ஹோதா – வேள்வி. செய்வோன்‌.
  • ஓத்திரம்‌ – வேள்வி. ஒத்திரி, ஹோத்திரி – வேள்வி செய்வோன்‌.
  • ஓம குண்டம்‌ – வேள்விக்குழி.
  • ஓமசாந்தி –  வேள்விச்‌ சடங்கு.
  • ஓமதிரவியம்‌,ஹோமதிரவியம்‌-வேள்விப்பண்டம்‌.
  • ஓமம்‌,ஹோமம்‌ – வேள்வி
  • ஓமாக்கனி – வேள்வித்தி.
  • ஓமித்தல்‌, ஹோமித்தல்‌ – வேட்டல்‌.

                       ஒள

  • ஒளசரம்‌ – இரும்புக்கல்‌.
  • ஒளசித்தியம்‌ – தகுதி.
  • ஒளடதம்‌, ஒளஷதம் – மருந்து.
  • ஒளட்டணியம்‌ – சூடு.
  • ஒள தாசீனியம்‌ – விருப்பு வெறுப்பின்மை.
  • ஒள தாரியம்‌ – மிகுகொடை, மேன்மை,கொடைப்‌ பண்பு.
  • ஒளபசாரிகம்‌ –  முகமனுரை.
  • ஒளபச்தியம்‌ – புணர்ச்சி.
  • ஒளபநிதிகம்‌ – ஈடாகவைக்சப்பட்டது உதவியாக வைக்கப்‌பட்டது.
  • ஒளபாசனம்‌, ஒளபாசனை – வேள்வித்தீயோம்புகை, உணவொழி நோன்பு.
  • ஒளசரபுத்திரன், ஒளரசன் – உரிமைமகன்‌.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button