தமிழ்பிறமொழி/தமிழ்

“அ“ நிரலில் தொடங்கும் சங்கதச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

* விண்மீன் அடையாளக் குறியீடு குறிப்பது: தமிழும்/சங்கதமும் இணைந்த சொற்கள்

அகங்காரம்,அகம்பாவம்- செருக்கு, இறுமாப்பு , முனைப்பு ,யானெனல்.
அகடம்- முறையின்மை,பொல்லாங்கு.
அகடவிகடம் -வேறுபட்டது , குறும்பு , தட்டுமாற்று.
அகண்டம்- எல்லாம் , முழுமை , பிரிக்கப்படாதது.
அகண்ட வாக்கியம்- பெருஞ்சொல்.
அகதி -ஏதிலி, வறியவன், ஏழை,புகலிலான்,யாருமற்றவன்.
அகந்தை- இறுமாப்பு , செறுக்கு.
அகம் -உயிர் , நான், உட்புறம்.
அகம்பாவம் -தற்பெருமை , செருக்கு. 
அகாலம் – தகாக்காலம், அல்காலம்.
அகராதி -அகரமுதல், அகரநிரல்.
அகிம்சை -இன்னாசெய்யாமை , கொல்லாமை.
அகிலம் -எல்லாம், உலகம், வையம் , நிலம்.
அகிலாண்டகோடி- எண்ணிலுலகு.
அகிலாண்டம் -எல்லா உலகு.
அகோரம் -அழகின்மை,கொடுமை, நடுக்கம்.
அகி- இரும்பு , பாம்பு.
அக்கணம்- அப்பொழுது , அந்நொடி.
அட்சதை -மங்கல அரிசி , மஞ்சள் அரிசி.
அட்சரம் -எழுத்து, அழிவில்லாதது.
அஞ்ஞானம் -அறியாமை, இருள்.
அஞ்ஞானி- அறிவிலான், புல்லறிவாளன்.
அக்கிரமம் -ஒழுங்கின்மை, முறைகேடு.
அக்னி- நெருப்பு , தீ , அனல், தழல்.
அங்கபங்கம் -உறுப்புக்குறைவு , உறுப்புக்கேடு.
அங்கம் -உறுப்பு , அடையாளம்.
அங்கவியல் -உறுப்பியல்.
அங்கவீனன்- உடற்கேடன்,உடற்பழுதன், உடற்பறையன்.
அங்கிகாரம் -உடன்பாடு , ஒப்பு , ஏற்பு.
அங்கீகரித்தல் -உடன்படுதல், ஒப்புதல், உடன்படுதல்.
அங்குலம்- விரற்கடை, விரலளவு.
அசங்கமம் -புணர்ச்சியின்மை.
அசம்பாவிதம்- முரணிகழ்வு.
அசரீரிவாக்கு -வான்மொழி,வானொலி.
அசடு- பேதை.
அசல்- முதல், படி, மூலம்.
அஜாக்கிரதை -விழிப்பின்மை , பாராமுகம், கருத்தின்மை , உன்னிப்பின்மை.
அசாதுரியம்- திறமின்மை.
அசாத்தியம் -அருமை, முடிக்கக்கூடாதது,அரிது.
அஜீரணம் -செரியாமை, பசியின்மை, அழிவுபடாமை.
அசுத்தம் -அழுக்கு, தூய்மையின்மை,துப்புரவின்மை.
அசுரர் -வானோர்க்கு மாறுபட்டவர், இருள்மிக்கவர்.
அசுவினி -குதிரைநாள், முதனால்.
அசோகம்- மகிழ்ச்சி, துன்பமின்மை,பிண்டிமரம்.
அசௌகரியம்- நலமின்மை, இடைஞ்சல்.
அச்சயன் -அழிவில்லான், முடிவிலான், கடவுள்.
அச்சுதம் -அழியாமை.
அஞ்சலி -கும்பிடல், வணக்கம்.
அஞ்சனம்- மை, கறுப்பு, இருள், நீலமலை.
அஞ்சுகம்- கிளி, மேலாடை.
அஞ்ஞானி -அறிவிலி.
அஞ்ஞாதம் -மறைவு, அறியப்படாதது.
அஞ்சாதவாசம்- மறைந்துறைதல்.
அஞ்ஞானம் -அறியாமை, இருள், மருள்.
அடம் -பிடிவாதம்.
அட்சய பாத்திரம்- திருவோடு, ஏற்போடு , இரப்போர்கலம்.
அட்சமாலை -சிவமணிமாலை.
அட்சயம்- அழிவின்மை.
அட்சரசுத்தல் -எழுத்துத்திருத்தம், ஒலிப்புத்திருத்தம்.
அட்சரம்- எழுத்து.
அட்டகாசம் -பெருநகை, பெருஞ்சிரிப்பு , புரளி.
அட்ட சித்தி- எண்பொருட் பேறு.
அஷ்ட திக்கு- எண்புறம்.
அட்டதிக்குப் பாலகர்- எண்புறக்காவலர்.
அட்டாங்க நமஸ்காரம்- எட்டுறுப்பு வணக்கம், நிலந்தோய் வணக்கம்.
அண்டகோளம்- உலக உருண்டை.
அண்ட சரீரம்- உலக உடம்பு.
அண்டபிண்டம் -உலகுடம்பு.
அண்டம் -வித்து,முட்டை, உலகம், மூலம்.
அதமம்- அழிப்பு.
அதரம் -இதழ்.
அதிகப்பிரசங்கம்- மிகுபேச்சு,மற்றொன்று விரித்தல், தன்மேம்பாட்டுரை.
அதிகம் -மிகுதி , பெருக்கம்.
அதிகாரி -தலைவன், முதல்வன், உடையவர், மேளாலர்.
அதிகாரம்- இயல், ஆட்சி, ஆளுமை,நூற்கூறுபாடு,நூலின் பகுதி, தலமை,ஆட்சியுரிமை, செயலுரிமை.
அதிகாலை -விடியற்காலை, புலரிக்காலை, வைகறை.
அதிசய சக்தி- வியத்தகு ஆற்றல்.
அதிசயம்- வியப்பு, புதுமை.
அதிசீக்கிரம்- மிகுவிரைவு, முகுசுருக்கு, கடிது.
அதிசுத்தம்- மிகுதூய்மை.
அதிஸ்டசாலி -நல்வினையளன், செல்வன்.
அதிஸ்டம் -நல்வினைப்பயன், நன்னுகர்ச்சி, நல்லூழ், ஆகூழ்.
அதிஸ்டவதம்- நல்வினைப்பயன், நல்வினை,வயம்.
அதிதி -விருந்தினன், புதியவர்.
அதிதீவிரம்- மிகுவிரைவு.
அகாலமரணம்- முதிராச்சாவு, இளஞ்சாக்காடு.
அகாலம் -இசையாக்காலம், தகாக்காலம்.
அதிதுரிதம் -மிகுவரைவு.
அதிபதி, அதிபன் -தலைவன்,முதல்வன்.
அதிபலம்- மிகுவன்மை.
அதிமதுரம் -குன்றிவேர்.
அதிமிதம் -அளவின்மை.
அதிரகசியம் -அருமறை.
அர்த்தசாமம் -நள்ளிரவு.
அர்த்தநாதீஸ்வரன்- மங்கைபங்கன், மாதிருக்கும் பாதியன், உமையொருபாகன்.
அத்தியாசம்- மாறுபாட்டுணர்ச்சி,படலம், நூற்பிரிவு, பகுதி.
அஸ்திரம் -அன்பு, நிலையின்மை.
அநியாயம் -முறையின்மை, ஈடின்மை, விலக்கு.
அநீதி- முறைகேடு.
அநுகூலம்- நன்மை,கைகூடுதல், பயன், உதவி, துணை.
அநந்தம் -முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது.
அநந்தம் – முதலில்லாது, அளவில்லாதது, முடிவிலி, அளவற்றது.
அந்தியம் – முடிவு, சாவு.
அந்தியக்கிரியை – ஈமவினை, இறுதிக்கடன்.
அந்திய காலம் – முடிவுக்காலம், இறுதிக்காலம்.
அந்நியர் – பிறர், வேறுபட்டவர், வேற்று நாட்டினர்.
அந்தரங்கம் – மறைவடக்கம்.
அந்தரம் – பரபரப்பு.
அந்தி – மாலை.
அந்நியம் – வேறுபாடு, வேற்றுமை.
அநுகூல காலம் -நல்ல காலம், ஆங்காலம்.
அநுசரணம் -பழக்கம், பின்தொடர்தல்.
அநுசரித்தல் -கைக்கொள்ளல், பின்பற்றல்,சார்தல், தழுவுதல்.
அநுசரணை- சார்பு.
அநுட்டானம் -செயல்முறை, நடைமுறை, ஒழுக்கம்.
அநுட்டித்தல்- பின்பற்றல், கைக்கொள்ளல்.
அநுதாபம்- கழிவிரக்கம், இரக்கம், வருத்தம்..
அநுபந்தம் -பின்சேர்க்கை, தொடர்ச்சி , அடுத்து யாக்கப்படுவது.
அநுபவம் -பட்டறிவு , பழக்கம், வழக்கம், நுகர்ச்சி.
அநுபவித்தல்- துய்த்தல்,நுகர்தல், துவ்வல்,அழிந்தியறிதல், உழத்தல்.
அநுமதி- உடன்பாடு,ஆணை, ஒப்புதல்,கட்டளை, விடை.
அனுமானம்- ஐயம், வழியள்வை,கருதளலவை.
அநுமானித்தல் -ஐயுறல், கருதல்.
அநேகம்- பெரும்பான்மை, பல.
அநேகர் -பலர்.
அந்தஸ்து- நிலைமை, ஒழுங்கு நிலை.
அந்தப்புரம் -உவளகம், அரசியில்லம் , உள்ளிடம்.
அந்தம் -அழகு, முடிவு,கேடு, எல்லை,குறுடு, ஈறு.
அந்தரங்கம் -அருமறை,மறைபொருள், உள்ளம்,தனிமை.
அந்தாதி- இறுதிமுதல், கடைமுதற் றொடர் நிலை.
அந்தி -முடிவு, மாலைக்காலம்.
அந்நியர்- பிறர், அயலார்.
அந்நியம் -அயல், வேறு, வேற்றுமை, பிறிது.
அநீதி -மிகை
அபகரணம்- கவர்தல்,பறித்தல், தீயொழுக்கம்.
அபகரித்தல் -கவர்தல் , கொள்ளையிடல்,பறித்தல், வவ்வல்.
அபத்தம் -தவறு, பொய்.
அவமானம் -இழிவு.
அபரிதம் -அளவற்றது.
அபாக்கியம்- செல்வமின்மை , வறுமை.
அபாண்டம் -பெரும்பொய்,பெரும்பழி,இடுபழி.
அபாயம் -பேரிடர் , இடுக்கண்,அழிவு , கேடு, துன்பம், இக்கட்டு.
அபார்த்தம்- பொருளற்றது.
அபாவநம் -பிறப்பு.
அபாவப் பிரமாணம்- இன்மை ,அளவை.
அபாவம்- இன்மை.
அபாளம் -மலவாய் , எருவாய் (திருமூலர்).
அபாளன் -மலக்கால்.
அபிகபநம்- அண்மையிற்போதல்.
அபிகாதம்- அடித்தல்.
அபிகிதம்- சொல்லப்பட்டது.
அபிசந்தானம்- அணாப்புதல்.
அபிசரன்- தோழன்.
அபிசாரம் -தீமையை உண்டுசெய்யும் மறை.
அபிசாரி- வேசி.
அபிஞ்ஞர் -அறிந்தவர்.
அபிஞ்ஞானம்- அடையாளம்.
அபிடேகம், அபிஷேகம்- திருமுழுக்கு, நீரணிவிழவு, புதுப்புனலாட்டு.
அபிதானம் -பெயர்.
அபிநந்தை- விருப்பம்.
அபிநயம்- உள்ளக் குறிக்காட்டல், கை மெய் காட்டல், கூத்து, நடிப்பு.
அபிநயர்- கூத்தர், நடிப்போர்,
அபிநயத்தல்- உள்ளக்குறி காட்டல், நடித்தல்.
அபிநவம் -புதுமை.
அபிந்நம் -ஒற்றுமை.
அபிப்பிராயம்- நோக்கம், எண்ணம், உட்கருத்து, உட்கோள், உள்ளப்போக்கு, கொள்கை.
அபிமந்திரித்தல் -உருவேற்றல்.
அபிமான புத்திரன்- வளர்ப்புப் பிள்ளை, எடுப்புப் பிள்ளை.
அபிமானம் -பற்று, நேயம், செருக்கு.
அபிமானி- பற்றுடையான்.
அபிமானித்தல்- பற்று வைத்தல், உயர்த்துக் கூறல்.
அபிமுகம் -நேர்முகம், முன்னிலை.
அபியுத்தம்- கடிந்து கொள்ளப்பட்டது.
அப்புத்தன்- அறிஞன்.
அபியோகம் -முறையீடு.
அபிராமம்- அழகு.
அபிராமி -அழகி, மலைமகள்.
அபிரூபன்- காமவேள், சிவன்.
அபிலாசம்- விருப்பம்.
அபிவியஞ்சகர்- வெளிப்படுத்துவோர்.
அபிவிருத்தி- பெருக்கம், வளர்ச்சி, ஆக்கம்.
அபின்னம்- ஒற்றுமை,வேறாகாதது.
அபின்னாசத்தி -பிரிவிலாற்றல்.
அபிஷதம் -மருந்து.
அபீடங்கம் -வைதல்.
அபீட்டியம் -போற்றத்தக்கது.
அபீஷ்டம் -மிகுவிருப்பம், எண்ணம்.
அபீதி -அச்சமின்மை.
அபுத்தி -அறியாமை.
அபுத்திபூர்வ- புண்ணியம் அறியாது செய்த அறம்.
அபூதம்- இன்மை, நிகழாதது.
அபூர்வம், அபுருவம் -அருமை, அரியபொருள்.
அபூர்வ வஸ்து -முன்னில்லாத பொருள், அரியபொருள்.
அபேட்சை -அவா , விருப்பம்.
அபேதம்- வேற்றுமையின்மை, ஒற்றுமை, வேறன்மை.
அபேதவாதி – கடவுளும் உயிரும் ஒன்றென்போன்.
அபோச்சியம்- உண்ணத்தகாதது.
அபோதம்- அறியாமை.
அபோதார்த்தம் -மாறுபாட்டுரை.
அப்தசதம் -நூறாண்டு.
அப்தம் – யாண்டு.
அப்தா, ஹப்தா – கிழமை.
அப்பியங்க ஸ்நானம், அப்பியங்கனம் – எண்ணெய் முழுக்கு.
அப்பியர்ச்சனம் – வழிபாடு.
அப்பியாசம் – பழக்கம் , பயிற்சி.
அப்பியாதானம் – துவக்கம்.
அப்பியுபுட்சணம் – மூடுதல்.
அப்பிரகாசம் – இருள், விளக்கமில்லாதது.
அப்பிரசன் – பிள்ளையில்லாதவன்.
அப்பிரசித்தம் – விளக்கமின்மை, வெளிப்படாதது.
அப்பிரதட்சிணம் – இடப்புறச்சுற்றி , இடப்பக்கச் சுற்று.
அப்பிரதானம் – முதன்மையற்றது.
அப்பிரதியை – அறிவின்மைக் காட்டுதல் (தர.) , திகைத்தல்.
அப்பிரமானம் – பொய், அளவிற்குட்படாதது, மேற்கோளல்லாதது.
அப்பிரமாணிக்கன் – பொய்யன்.
அப்பிரமேயம் – அளவையாரியப்படாதது, அளவிடப்படாதது.
அப்பிரமை – பொய்யறிவு.
அப்பிராகிருதம் – மேலானது.
அப்பிராத்தகாலம் – முறைதவறிப் பேசுதல் , ( தரு.).
அப்பிராணி – ஏழை, கரவிலான், உயிரில்லாதது, வலியற்றது, பேதை.
அப்பிரீதி, அப்ரீதி – வெறுப்பு.
அப்பு – நீர், புனல்.
அமங்கலம் – தீமை, நலமின்மை , மகிழ்வின்மை.
அமங்கலி, அமங்கலை, – கைம்பெண், அறுதலி.
அமதம் – அறியப்படாதது.
அமயம் – காலம்.
அமரகிரியை – சாவுச் சடங்கு, இழவுச் சடங்கு.
அமரதை – அழிவின்மை .
அமரத்துவம் – அழிவின்மை.
அமரம் – கண்ணோய்.
அமரர் – வானோர், தேவர், விண்ணவர்.
அமராங்கநை – தெய்வப் பெண்.
அமராபதம் – வானுலகு.
அமராவதி – வானவர்கோன் தலைநகர்.
அமரேசுவரன் – இந்திரன்.
அமலம் – புனிதம், அழுக்கின்மை, தெளிவு.
அமலன் – தூயோன், கடவுள், வாலறிவன்.
அமல்தார் (இந்துஸ்.) – அரசிறை வாங்குவோன்.
அமாத்ரியன் – அமைச்சன்.
அமாவாசியை, அமாவாசை – புதுப்பிறை, பிறையுவா.
அமிசம் – பங்கு, நேர்மை, பெருவாழ்வு, நல்வினை, கூறுபாடு.
அமிதம் – மிகுதி, அளவின்மை.
அமித்திரர் – பகைவர்.
அமிர்தகலை – நிலவு, நிலாக்கதிர்.
அமிர்த கிரணன் – நிலவு, தண்கதிரோன்.
அமிர்த சஞ்சீவி, அமிர்த சஞ்சீவினி – உயிர்தரு மருந்து.
அமிர்தசத்து – தேம் பொருள்.
அமிர்ததரங்கிணி – நிலவு.
அமிர்தம், அமிருதம் – சாவா மருந்து, , இனிமை, அழிவின்மை, அருமருந்து,வானோர் உணவு, சோறு.
அமிர்தமயம் – பொன் வடிவு, இன்ப நிறைவு.
அமர்தயோகம் – நற்பொழுது, நல்வேளை.
அமிர்தரூபம் – இன்ப வடிவம்.
அமிர்தவல்லி – சீந்திற் கொடி.
அமிர்தவாயு – தூய காற்று.
அமிர்தாசநர் – தேவர்.
அழுதகுலர் – இடையர்.
அழுத்தி – பாற்கடல்.
அமுதம் – நீர்.
அமுதன் – அழிவிலான், இனியன்.
அமுது – சோறு, அடிசில், இனிமை.
அமுல் (இந்துஸ்) – ஆட்சி.
அழூர்த்தம் – உருவமின்மை.
அமூர்த்தன், அமூர்த்தி – உருவிலான்.
அமூலம் – ஏதுமின்மை.
அமேத்தியம் – அழுக்கு, துப்புரவின்மை, மலம் பல்வீ.
அமோகம் – மிகுதி, பெருக்கம்.
அம்சம் – வகை, அன்னப்புள், காலம், எண், பங்கு.
அம்பகம் – கண்.
அம்பரமணி – கதிரவன்.
அம்பரம் – வெளி, வான், ஆடை.
அம்பராம்புயம் – வானத்தாமரை.
அம்பா – அம்மை, தாய், இறைவி.
அம்பாயம் – துன்பம்.
அம்பாரம் – குவியல்.
அம்பாரி – யானை மேலிருக்கை.
அம்பிகாபதி – சிவன்.
அம்பிகை – தாய், அம்மை.
அம்பிகைதநயன் – முருகன், பிள்ளையார், உமை மகன்.
அம்புசம், அம்புயம், அம்புஜம் – தாமரை.
அம்புதி – கடல்.
அம்புயன் – நான்மகன்.
அம்புயாகம் – தாமரை.
அம்புயாசனம் – தாமரையிருக்கை.
அம்புராசி – கடல்.
அம்போசன் – திங்கள்.
அம்போதரம் – முகில்.
அம்போருகம் – தாமரை.
அயக்காந்தம் – இரும்பிழுக்கி.
அயக்ரீவன், அய்க்ரீவகன் – திருமால்.
அயச்செந்தூரம் – இரும்புச் செந்தூள்.
அயதண்டம் – இரும்புத்தடி.
அயதார்த்தம் – பொய்.
அயநம், அயனம் – வழி.அயபற்பம், அயபஸ்பம் – இரும்பு வெண்ணீறு.
அயமேதம் – ஆட்டு, வேள்வி.
அயம், அஜம் – ஆடு, இரும்பு, குதிரை.
அயன் – நான்முகன்.
அடிக்கவாதி – ஒற்றுமைக் கொள்கையன் (சித்.)
அயிக்கியம், அயிக்கம் – ஒற்றுமை, ஒன்றிப்பு.
அயிங்கிதை – கொல்லாமை.
அயிச்சுவரியம் – செல்வம்.
அயிராணி – வானவர்கோன் மனைவி, இறைவி.
அயிராவணம், அயிராவதம் – வெள்ளை யானை, கீழ்பால் யானை.
அயினம், அசினம் – மான் தோல்.
அயுக்தம் – தகாதது.
அயுதம் – பதினாயிரம்.
அயோகன் – தாரம் இழந்தவன்.
அயோக்கிதை, அயோக்கியம் – தகுதியின்மை, தகாதது.
அயோக்கியன் – தகுதியற்றவன், தகவிலான், கெட்டவன்.
அயோசநம் – ஒன்றுதலின்மை.
அயோனிசம் – பிறவாமை.
அய்மாசு (இந்து) – ஆராய்ச்சி.
அரங்கபூமி – நாடகசாலை, போர்க்களம்.
அரசங்கம் அரசுறுப்பு, அமைச்சு.
அரசச்சின்னம் – அரச அடையாளம்.
அரசம் – சாரமில்லாதது.
அரசாங்கம் – அரசியல்.
அரசிகம் – சுவையின்மை.
அரசுநீதி – அரசு முறை, செங்கோன்மை.
அரணியசடகம் – காட்டுக்குருவி.
அரணியம் – காடு.
அரணியாநி – பெருங்காடு.
அரதனம் – சிலம்பணி, மணி.
அரதனவடம், ரத்தன வடம் – ஒளி மணி, மாலை.
அரத்தன் – அவா வில்லாதவன்.
அரத்தம் சிவப்பு, குருதி.
அரத்தோற்பலம் – செங்கழுநீர், செங்குவளை.
அரத்தினம், ரத்தினம் – ஒளி மணி, அகன் மணி.
அரமியம் – நிலாமுற்றம்.
அரம்பை, ரம்மை – தெய்வப் பெண், அரிவை, வான் மகள்.
அரவம் – ஒலி, பாம்பு.
அரவிந்தம் – தாமரை, முளரி
அரவிந்தாக்கன் – திருமால்.
அரவிந்தன் – நான்முகன்.
அரவிந்தை – தாமரை, திருமகள்.
அராகம் – அவா, விருப்பம், (சித் – தத்), பண், ஓசை.
அராதி – பகைவன்.
அராத்திரி – கைலைமலை.
அராபதம் – வண்டு.
அராமம் – சோலை.
அராமி – கெட்டவன், கெட்டவள்.
அராமை – கீழ் மகள்.
அராலம் – வளைந்தது கொடுவாள்.
அராலை – நாட்டியப் பெண்.
அராவணம் – புலம்பாமை.
அராவைரி – கருடன்.
அரி, ஹரி – சிவன், பகலவன், திருமால், நிறம், புகை.
அரிகண்டம் – துன்பம், இடைஞ்சல்.
அரிகரபுத்திரர் – ஐயனார்.
அரிசரன் – திருமலை அம்பாகக் கொண்ட சிவன்.
அரிசனம், ஹரிசனம் – மஞ்சள்.
அரிட்டம், அரிஷ்டம் – கேடு, தீங்கு.
அரிதினம் – (ஏகா தசி) திருமால் நாள்.
அரிநாதம் – சிங்க முழக்கம்.
அரியாசனம் – அரசிருக்கை, வேந்திருக்கை, அரியணை.
அருகதை – தகுதி.
அருகன் – தக்கவன்.
அருக்கம், அர்க்கம் – பொன், கூலவிலை, நெருப்பு.
அருக்கன் – பகலோன், வெய்யோன்.
அருக்கியம், அர்க்கியம் – நீராற் செய்யும் வழிபாடு, திருவடி கழுவுதல், நீர் வார்த்தல்.
அருச்சகன், அர்ச்சகன் – கோவிற்பட்டன், வழிபாடற்றுவோன்.
அருச்சனை, அர்ச்சனை – பூ வழிபாடு, மலர் தூவ வழிபாடு.
அருச்சிதம் – வழிபாடு.
அருச்சித்தல், அர்ச்சித்தல் – மலர்தூவல், வழிபடல், பூத்தூவல்.
*அருட்சத்தி(சித்தி.) – அருளாற்றல், இறைவி.
*அருட்சோதி – அருளொளி, கடவுள்
அருணம் – சிவப்பு.
அருணலோசநம் – சிவந்த கண்ணுடையது.
அருணவம் – கடல்.
அருணன் – கதிரோன், செஞ்சுடர்.
அருணாசலம், அருணகிரி – திருவண்ணாமலை.
அருணோதயம் – வைகறை, விடியல், கதிரோன், வருகை.
அருத்தகங்கை – காவேரி.
அருத்த சந்திரன், அர்த்த சந்திரன் – இளம்பிறை, பாதி நிலா.
அருத்தசாமம், அர்த்த சாமம், அருத்த நிசா – நள்ளிரவு, நள்யாமம்.
அருத்தநாரீசன், அர்த்தநாரீசுரன், அர்த்தநாரீசுவரன் – உமையொருபாங்கன், மாதிருக்கும் பாதியன், மங்கைபங்கன்.
அருத்தபாகம் – பாதிப் பங்கு.
அருத்தம், அர்த்தம் – பொருள், பதி
அருத்தவாதம் – புணைந்துரை.
அருத்தாந்தரம், அர்த்தாந்தரம் – கருத்துப் பிரிவு, வேறு பொருள் கூறுதல்.
அருத்தாபத்தி (தரு.) – பொருள்ளவை, பொருள் பெறுதல்.
அருத்தாபத்திப் பிரமாணம் – பொருட்குறிப்புள்ளது, பொருளளவை (தரு.)
அருத்தி – அவா , விருப்பம்.
அருந்ததி – வடமீன், கடவுள் மீன்.
* அருவமேனி – நுண்ணுடம்பு.
அருவம் – உருவின்மை, அழகின்மை.
அரூபம் – உருவற்றது.
அரூபி – உருவிலி சிவன்.
அரேசிகம் – வாழை.
அரோகம் – நோயின்மை
அரோசம், அரோசகம், அரோசிகம், அரோசனம் – சோற்று, வெறுப்பு, அருவருப்பு, வாயாலெடுப்பு, ஊண் வேண்டாமை.
அர்க்கன் – செஞ்சுடர்.
அர்ச்சனம், அர்ச்சுனம் – பொன்.
அர்த்தகம் – பொருளுடையது.
அர்த்தசந்திரபாணம் – பிறைமுகக்கணை.
அர்த்த சாமம், அர்த்தராத்திரி – நள்ளிரவு.
அர்த்தசாரம் – பொருட் சிறப்பு.
அர்த்த நாசம் – பேறழிவு, பொருளழிவு.
அர்த்தபுஷ்டி – பொருட்செறிவு.
அர்த்தாட்சி – பக்கப் பார்வை.
அர்த்தாலங்காரம் – பொருளணி.அர்ப்பணம் – நீரொடு கொடுத்தல், உரிமைப்படுத்தல், ஒப்புவித்தல்.
அர்ப்பிதம் – கொடுக்கப் பட்டது.
அலங்கம் – மதிலுறுப்பு.
அலங்காரம் – அழகு, ஒப்பனை, அணி, புனைவு.
அலட்சியம் – பொருட்படுத்தாமை, பராமுகம். கருத்தின்மை.
அலத்தம், அலத்தகம் – செம்பஞ்சுக் குழம்பு.
அலந்தம் – மெய்யீறு.
அலப்பியம் – அடையக்கூடாதது.
அலமாரி (அரபி.) – நிலைப்பேழை.
அலம், ஹலம் – கலப்பை, அமைவு.
அலயம் – ஒடுங்காமை.
அலயன் – அழிவிலான்.
அலாரம் – கதவு.
அலுப்சத்தி – பேரருளுடைமை (சித். )
அலுப்பினாத்தி – குண்டூசி.
அலுவா, ஹல்வா – கோதுமைத் தேம்பாகு.
அலெளகிகம் – உலகியற்கு மாறுபாடு.
அல்லோகல்லோலம் – பேராரவரம்.
அவ, அப – இன்மை, எதிரிடை , கெட்ட.
அவகடம், அவ கண்டனம் – கீழ், வஞ்சகம், எதிராயது, அழித்தல், களைதல்.
அவகரணம் – கொள்ளை , பறித்தல், மீட்டல்.
அவகாசம் – ஒழிவு, ஓய்வு.
அவகாரன் – கள்ளன்.
*அவகாலம் – கொடுகாலம், வீண்பொழுது.
அவகிருத்தியம் – தீச்செய்கை.
அவகீதம் – வசைப்பாட்டு, இருக்குடையபாட்டு.
அவகீர்த்தி – இழிவு, புகழின்மை,
* அவகுணம் – தீய இயல்பு.
அவக்கியாதி – வசை, இகழ்ச்சி.
அவக்கிராந்தி – இறங்குதல்.
அவசகுனம் – தீக்குறி, கெட்ட குறி.
அவசத்தம் – இன்னாவோசை, தீங்கொலி.
அவசம் – தன்வசப்படாமை.
அவசயம், அபசயம் – தோல்வி.
அவசரபேதம் – பொழுது வேறுபாடு.
அவசரம் – விரைவு, பரபரப்பு, சுருக்கு, பதைப்பு.
அவசாரணம் – நடத்துதல்.
அவசாரம், அபசாரம் – தீச்செய்கை, புறம் போதல்.
அவசித்தாந்தம் – பயனில் முடிவு.
அவசியம் – முதன்மை, கட்டாயம், இன்றியமையாமை.
அவசீநம் – தேள்.
அவசுத்தம் துப்புரவின்மை.
அவசேடம் – எஞ்சியது.
அவச்சின்னம் – பிரிவு, பிரித்தரியப்பட்டது.
அவச்சேதம் – பிரிவு, வரையறுத்தல்.
அவச்சேதனம் – பகுத்தறிதல், கலைதல்.
அவட்சேபம் – எறிதல்.
அவதந்திரம் – தகுதியற்ற வழியால் ஒன்று செய்தல்.
அவதரம் – தறுவாய்.
அவதரித்தல் – பிறத்தல்.
அவதாரம் – பிறப்பு, இறங்குகை.
அவதாரிகை – முன்னுரை.
அவதானம் – எச்சரிக்கை, ஒழிவு, நினைவு, விரித்தல், மறப்பின்மை.
அவதி – தவணை, துன்பம், வருத்தம், அளவு, எல்லை, முடிவு.
அவதிஞானம் – முக்காலத்தையும் அரியும் அறிவு, முற்ப்பிறப்பையறியுமறிவு, பிறப்பிறப்பையரியுமறிவு.
அவதூதம் – முழுத்துறவு, அசைக்கப்பட்டது.
அவத்தம், அபத்தம் – பொய், தவறு.
அவத்திரீயம் – இடையூறு, துன்பம்.
அவத்தை, அவஸ்தை – நிலை, துன்பம், நிலைமை.
அவநம்பிக்கை – நம்பிக்கைக் குறை.
அவநி, அவனி – நிலம், நிலம், வையகம்.
அவநிந்தை – பழிதூற்றல்.
அவநிபதி, அவநிபன் – அரசன்.
அவ நிபாரகன், அவநிபாலன் – அரசன்.
அவநியாயம், அவநீதி – முறையின்மை.
அவநீதன் – ஒழுக்கமில்லான்.
அவந்தன் – வீணன்.
அவந்திகை – கிளி.
அவபாசம் – அறிவு.
அவபாசன் – விளக்குகிறவன்.
அவபுத்தி – கெட்ட நினைவு, தீய அறிவு.
அவபிரசவம் இடையிர் கருவீழ்தல்.
அவமரணம் – தகாச்சாவு இளஞ்சாக்காடு.
அவமரியாதை – வணக்கமின்மை, தீய முறை, முறை தவறுதல்.
அவமானம் – மானக்கேடு, இழிவு குறைவு, இனிவரவு.
அவமோசனம் விடுதல் விடுதலையாக்கல்.
அவம் – தீமை , கேடு.
அவயமிடல் , அபயமிடல் – முறையிடல்.
அவயம், அபயம் – அழுகை, அடைகாத்தல்.
அவயவம், அவையலம் – உறுப்பு.
அவயவி – உடல், முதல்.
அவயோகம் – தீய நிகழ்ச்சி, பொல்லாங்கு.
அவரசை – தங்கை.
அவரம் (தரு.), அபரம் – பின்.
அவரோகி – ஆலமரம்.
அவங்க மனோகோசரம் – மனமொழிகட்கு எட்டாதது.
அவரோகணம், அவரோ பணம் – இறங்குதல், இறங்குகை.
அவலக்கணம், அவலட்சணம் – அழகின்மை.
அவலம் – கேடு , குற்றம், மிடி, சோர்வு, பயனின்மை, வீண்.
அவலபனம் – பிடிப்பு.
அவலம் பிடித்தல் – சார்ந்து நிற்றல், பற்றுதல்.
அவலன் – உடற் குறையன், வீணன்.
அவலேசம் – சிறிது.
அவலோகம், அவலோகனம் – பார்வை.
அவாசி – தெற்கு.
அவாந்தரம் – அழிவு, உதவியின்மை, வெறுவெளி, இடை.
அவி – தேவருணவு.
அவிகசிதம் – மலராதது.
அவிகடம் – ஆட்டுக் கூட்டம்.
அவிகற்பம் – வேறுபாடின்மை.
அவிக்கிநம் – இடையூறின்மை, மாறின்மை.
அவிகாரம் – மாறுதலின்மை, இயற்கை, எழுவாய்.
அவிகாரி – கடவுள், மானாதவன்.
அவிசு, ஹவிசு – தூய உணவு, உப்பின்றிச் சமைத்த பச்சரிசி உணவு, சோறு, நெய்.
அவிசாரம் – கவிலையின்மை.
அவிசுவாசம் – நன்றியின்மை.
அவிசேடம் – சிறப்பல்லாதது.
அவிச்சை, அவித்தை – அறியாமை, வெறுப்பு, ஆணவம்.
அவிஞ்சதை – அறியாமை.
அவிஞ்ஞாதார்த்தம் – அறியப்படாத பொருள் கூறதல்.
அவிஞ்ஞை – அறியாமை.
அவிதூசம் – ஆட்டுப்பால்.
அவித்தியா – அறியாமை, இருள்.
அவிநயசாலை – நாடக அரங்கு.
அவிநயம், அபிநயம் – கூத்து, நடிப்பு.
அவிநயர் – நாடக்காரர், கூத்தர்.
அவிநயித்தல் – நடித்துக் காட்டல்.
அவிநாசம் – அழிவின்மை, கேடின்மை.
அவிநாசி – அழிவில்லான், அழியாப் பொருள்.
அவிநாபாவம் ( தரு.) – பிறழா நிகழ்ச்சி, உடனி கழ்ச்சி.
அவிநாபூதம், அவினா பூதம் – நீக்கமின்றியிருத்தல், பிறழாமை.
அவநீதம் தீயொழுக்கம்.
அவிபட்சம் – எதிரியின்மை.
அவிபத்தம் – பங்கு பிரிக்கப் படாத பொருள்.
அவிப்பவி – வேள்வி உணா.
அவிழுத்தம் – காசி.
அவியம் – வடிவமில்லாமை.
அவியாகிருதம் – பிரிவின்றி நிற்பது.
அவிரோதம் – மாறின்மை.
அவிர்ப்பாகம் – வானோருணா
அவிவேகம் – அறிவின்மை.
அவுஷதம், அவுடதம், ஒளஷதம் – மருந்து.
* அவுதா (இந்துஸ்) – யானைமீதிருக்கை.
அவுபாசனம், ஒளபாசனம் – மணவினைச் சடங்கு.
அவேட்சை, அபேட்சை – உடன்பாடு.
அவேட்டிதம் – கற்றுக்கொள்ளப்படாதது.
அவேத்தியம் – அறியப்படாதது.
அவ்வியத்தம் – வெளிப்படாதது.
அவ்வியம் – அழுக்காது.
அவ்வியயம் – அழியாதது.
அவைராக்கியம் – வெறுப்பின்மை.
அவ்யாப்தி, அவ்வியாத்தி, அவியாத்தி – குன்றக் கூறல், குன்றல், (குறை) (தரு.)
அவ்வியஞ்சனம் – அடையாளமற்றது, குறியின்மை.
அளகாதிபதி, அளகாதிபன் – செல்வக் கடவுள்.
அளிகம் – கட்டழகு, நெற்றி, பொய்.
அளீகதை – பொய்ம்மை.
* அறத்தவிசு – அறவிருக்கை.
* அறிவீனம் – அறியாமை.
அறுபதம் – வண்டு.
அற்கம் – காணிக்கை, பொருள், விலை.
அற்பசுகம் – சிற்றின்பம்.
அற்பசுவாசம் – குறைந்த காற்று, சிறு மூச்சு.
அற்பத்தனம் – இழிவு, சிறுமை, புன்மை.
அற்பபுத்தி – புல்லறிவு.
அற்பப்பிராணன் – சிறு மூச்சு.
அற்பமிருகம் – சிறு விலங்கு.
அற்பம், அல்பம் – சிறுமை, அணு, புன்மை, இழிவு.
அற்பர் – கீழ்மக்கள், புல்லியர்.
அற்புதமூர்த்தி – வியத்தகுவடிவம் உடைய கடவுள்.
அற்புதம் – புதுமை, வியப்பு, அருள் நிகழ்ச்சி, பேரழகு, மருட்கை, அரிய செயல்.
அற்புதவித்தை – விபத்தகு முறை.
அற்புத வைராக்கிய சுத்தசிவஞானசிரேட்டர் – அகப்புறப்பற்று முற்றம் விட்ட பெருந்தவத்தோர்.
அற்புதரஸம் – மருட்கைச் சுவை.
அனகம் – மாசின்மை.
அனங்கன் – உடவிலான், கடவுள், காமவேள்.
அனத்தம், அனர்த்தம் – அழிவு, பயனின்மை.
அனந்தம் – அளவிலாமை, முடிவிலாமை.
அனந்தரம் – எப்போதும், பிரிவின்மை, பின்பு, மேல்.
அனபாயம் – அழிவின்மை.
அனப்பியாசம் – பழக்கமின்மை.
அனவரதம் – எப்பொழுதும், இடைவிடாமல்.
அனாகதம் – அறிவுக் கெட்டாதது.
அனாகரம் – வெறுப்பு.
* அனாகாலம் – வறிய காலம்.
அனாசாரம் – துப்பரவின்மை, அழுக்கு, ஒழுக்கமின்மை.
அனாதரவு – தனிமை, உதவியின்மை, கடவுள், தனியன், பழமை, தொன்மை.
அனாதிசடிலன் – கடவுள்.
அனாதிமுத்தன் – கடவுள்
அனாமத்து – பொது.
அனாமயம் – நோயின்மை.
அனாரதம் – இடையறாமை.
அனாயாசம் – இளைப்பின்மை, அயர்ச்சியின்மை, களைப்பின்மை.
அனிச்சம், அனிச்சை – ஒருசெடி, விருப்பமின்மை, நாகமல்லி.
அனிஷ்டம் – வெறுப்பு.
அனிருத்தன் – அடங்காதவன்.
அனிலம் – காற்று.
அனீகை, அனீகம், அநிகம் – படை, சேனை.
அனீசுரவாதி – கடவுளில்லையென்போன்.
அனுகமனம் – கூடப் போதல், உடன்போதல்.
அனுகம் – செஞ்சந்தனம்.
அனுகரம் – ஒன்றுபோற் செய்தல், (உவமை) செயல் விளங்கி நிற்பது.
* அனுகூல காலம் – கை கூடுங்காலம், ஆங்காலம்.
அனுகூலம் – பயன், கை கூடல், நயம்.
அனுக்கிரகம் – அருள், அருட்பேறு.
அனுகிரமம் – ஒழுங்கு.
அனுசந்தானம் – ஆராய்வு.
அனுசயம் – பற்று, வருத்தம்.
அனுசரணம் – இணக்கம், வழக்கம், பின்பற்றல், கைக் கொள்ளால்.
அனுசன் – தம்பி.
அனுசாசனம், ‘அனுசாஸ்தி – கட்டளை.
அனுசாரம் – அடுத்து நடத்தல் தொடர்பு வழக்கம்.
அனுசிதம் – பொய்.
அனுஷ்டானம், அநுட்டானம் – காலை மாலை வழிபாடு, காலை மாலைக்கடன், நிலை நிறுத்தல், கைக்கொள்ளல்.
அநுட்டித்தல் – கைக்கொள்ளல்.
அனுதவித்தல் – இரங்குதல்.
அனுதாத்தம் – படுத்தலோசை.
அனுதாபம் – இரக்கம்.
அனுதாரயம் – இரங்கல்.
அனுதினம் – நாடோறும், எப்போழ்தும்.
அனுத்தமம் – நல்லதல்லாதது.
அனுபசங்காரம் – முடிவு பெருமை.
அனுபந்தம் – பின் தொடர்ச்சி, பின்னுரை, பின் சேர்க்கை, இணைப்பு.
அனுபலத்தி(தரு.) – இன்மையேது, புலப்படாமை.
அருபவப் பரிசோ தலை – அறிவுநிழ்ச்சியாலா ராய்தல்.
அனுபவம் – பழக்கம், வழக்கம், அழுந்தியறிதல் (சித்.).
அனுபல்லவி, அநுபல்லவம் – பதத்தின் , முதற்சிற்றடி
அனுபவித்தல் – அடைதல், துய்த்தல், நுகர்தல்.
அனுபாதகம் – பெருங்குற்றம்.
அனுபானம் – பருகுவதற் குதவியாவது, மருந்துடன் பருகுவது.
அனுபூதி – அளவையறிது.
அனுபோகம் – நுகர்ச்சி, துய்ப்பு.
அனுமதி – கட்டளை, இசை, விடை, ஆணை.
அனுமரணம் – உடன் கட்டையேறுதல்.
அனுமானம் – வழியளவை, கருத்தலளவை, உய்த்துணர்தல்.
அனுமானப் பிரமாணம் (தரு.) – கருத்தலளவை, வழியளவை.
அனுமானித்தல் – ஐயப்படுதல், ஒர்தல்.
அனுமன் – குரங்கு.
அனுமேயம் – அநுமாந ப் பிரமாணத்தால், அறியத்தக்கது.
அனுராகம் – காமம், இணை விழைச்சு. அனுலாபம் – கூறியது, கூறல்.
அனுவசனம் – ஒத்த சொல்.
அனுவதித்தல், அனுவாதம் – வழிமொழிதல், கூறியது கூறில்.
அனுவாகம் – மறைவின் சிறுபிரிவு.
அனுற்பத்தி – பிறப்பின்மை.
அனேகந்தரம் – பல நேரம்.
அனேகம் – பல எல்லாம்.
அனேடன் – அறிவிலான்.
அனைக்கியம், அனைக்குமம் – ஒற்றுமையின்மை.
அனைஸ்வரியம் – வன்மை.
அன்ன சத்திரம் – உணக்கொடைச் சாலை, அறக் கூழ்ச்சாலை.
* அன்னசாரம், * அன்னசாரப் பால் – கஞ்சி, உணவின்வடிபால், தெளு நீர்.
அன்னசுத்தி – நெய்
அன்ன தாதா – உணாக் கொடையாளி.
அன்னதானம் – சோற்றறம், சோற்றுக் கொடை, உணாக் கொடை.
அன்னப் பிராசனம் – சோறூட்டுச்சடங்கு.
அன்னம் – அன்னப்புள், சோறு, உணவு, அடிசில்.
அன்னவம் – கடல்.
அன்னவஸ்திரம் – உணவும் உடையும், சோறும், கூறையும்.
அன்மையகோசம் – பருவுடல்.
அன்னிதா – குறுக்கு, தடை.
அன்னியசன்மம் – மறுபிடிப்பு.
அன்னிய சாதி – வேறு குலம்.
* அன்னசாலை – சோற்று விடுதி, உணவுவிடுதி.
அன்னியபாஷை – பிற மொழி, அயன்மொழி.
அன்னபாகம் – சோறுந் தண்ணீரும்.
அன்ன பானாதிகள் – சோறு தண்ணீர் முதலியன.
அன்னியம் – வேறு, அயல்.
அன்னியன் – அயலான்.
அஸ்திவாரம் = கடைக்கால்.

“அ“ நிரலில் உள்ள சங்கதச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
(* விண்மீன் அடையாளக்குறியீடு குறிப்பது: தமிழும்/சங்கதமும் இணைந்த சொற்கள்)

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button