“த”கர நிரலில் உள்ள வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
த, தா, தீ, தீ , து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ.

“த”என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தகநம் , தகனம் – எரித்தல், சுடுதல்.
தகநன், தகனன் – நெருப்பு.
தகரவித்தை – திருகூத்தின்றன்மை.
தகரோபாசளை – நெஞ்சகவழிபாடு.
தகவல் – செய்தி.
தகித்தல் – கொளூத்தல், எரித்தல்.-
தக்கிரம் – மோர்.
தகணாயகம் – கெற்குவழி.
தசகம், தசம் – பத்து
தசநம் – பல்.
தசமம் – பத்தில் ஒன்று,
தசமி – பத்தாவது, பத்தாம் நாள்.
தசாங்கம் – பத்துறுப்பு.
தசாவதாரம் – பத்துப்பிறப்பு.
தகிநம் – பல், எயிறு.
தசமன் – கள்வன்.
தசசேந்திரியம் = பத்துப்பொறி.
தசை, தசா – ஊன், புலால்.
தடத்தலக்கணம் – பொதுவியல்.
தடாகம் பொய்கை, குளம்,
தட்சசை – காளி.
தட்சணம், தஷணம், தக்கணம் – தெற்கு, வலப்பக்கம், உடன்.
தட்சணாஸ்தம், தட்சணஹஸ்தம் – வலக்கை.
தட்சுணாமூர்த்தம் – குருவடிவம், தென்முகக் கடவுள்.
தட்சணை, தக்கணை – காணிக்கை.
தட்சாயன் – கருடன்.
தட்சாரி – வீரபத்திரன்.
தட்சிணாவர்த்தம் – வலம்புரிச் சங்கு.
தட்சை – நிலம்.
தண்டதரன் – அரசன், இயமன்.
தண்டநீதி – கட்டளைச்சட்டம், செங்கோன்முறை.
தண்டபாசிகன் – கொலைகாரன்.
தண்டம் – வணக்கம், ஒறுப்பு, கோல்.தண்டனம்,
தண்டனை ஒறுப்பு, ஆணை, கட்டளை.
தண்டாயுதம் – தடி, ஒறுத்தற்கருவி.
தண்டுலம் – அரிசி.
ததகம் – காற்று.
ததம் – அகலம்.
ததாமுகம் – தொடக்கம்.
ததாஸ்து – அவ்வண்ணமாகுக, அப்படியேயாகட்டும்.
ததி – தயிர்.
ததியோதநம் ,தத்தியோதநம் – தயிர்ச் சோறு.
தத்தம் – கொடுத்தல், ஈகை.
தத்தி – கொடை.
தத்திகாரம் – பொய்.
தத்தியம் – மெய்.
தத்திரம் – பதில்.
தத்துவ சாஸ்திரம் – மெய்ப்பொருணூல், ௮றிவு நூல்.
தத்துவ சாஸ்திர விற்பன்னர் – அறிவுநூற் புலவர்.
தத்துவ சாஸ்திரியார் – கலை நூலறிஞர்.
தத்துவ சாதநம் – உண்மைதெறி, மெய்க்நெறிப் பயிற்சி.
தத்துவ சொரூபம் – உண்மைவடி வம், மெய்வடிவம்.
தத்துவ ஞானம் -உண்மையறிவு, மெய்யறிவு.
தத்துவ ஞானி – மெய்யறிவன், மெய்யுணர்வினன்.
தத்துவ நுட்பம் -மெய்ப்பொருள் நுட்பம்.
தத்துவம் – உண்மை, மெய், பொருளியல் உண்மை.
தத்துவா தீதன் – சிவன்.
தத்துவாத்வா – பொருள் வழி.
தநகரன் – கள்வன்.
தநதன் – ஈகையாளன்.
தநபதி – செல்வக்கடவுள், செல்வன்.
தநம், தனம் – செல்வம், பொருள், கொங்கை.
தநயன் – மகன்.
தநயை – மகள்.
தநவான் – செல்வன்.
தநாதிபன் – செல்வக்கடவுள்.
த நிகை – இளம்பெண்.
த நிட்டை – அவிட்டநாள்.
தநிதம் – முழக்கம்.
தநு, தனு – யாக்கை, உடல்.
தநுசன் , தனுசன்- மகன்.
தநூசு , தனூசு- வில்.
தநுசை – மகன்.
தநுரசம் – வியர்வை.
தந்தம் – பல்
தந்தி – ஆண் யானை, கம்பி, மின் செய்தி.
தந்திரம் – நூல், சூழ்ச்சி.
தந்திரி – சூழ்ச்சியாளன்.
தந்நியத்துவம் – செல்வம் உடைமை.
தபசி, தவசி – தவஞ்செய்வோன்.
தபசு, தவசு, தபஸ் – தவம்.
தபநன் – ஞாயிறு, பகலவன், கதிரவன்.
தபநீயம், ,தபநீயகம் – பொன்.
தபால் (இந்து) – அஞ்சல்.
தபோதனர்-தவச்செல்வர், முனிவர்
தபோகிதி -தவச்செல்வர்.
தமகன்-கொல்லன்.
தமசு, தமஸ்-இருள் , அறியாமை.
தமநன்- கீழ்ப்படுத்துபவன்.
தமநியம்-பொன்.
தமம்-இருள் , மேற்பட்டது , பொறியடக்கல்.
தமரகம், தமருகம்-உடுக்கை.
தமாசு, தமாஸ் – பகடி , விளையாட்டு.
தமோகரன்- திங்கள்.
சமோக்கிநன்- தீ
தமோபகன் – கதிரவன், திங்கள்.
தமோமணி – மின்மினி.
தமோமயம் – இருள்.
தம்பதி – கணவனும் மனைவியும்.
தம்பநம், ஸ்தம்பநம் -நிறுத்தல், அடக்கல்.
தம்பம், ஸ்தம்பம் – தூண்.
தயவு, தயா, தயை – அன்பு, இரக்கம், ஈரம், கண்ணோட்டம்.
தயாதருமம் – அருளறம்.
தயாநிதி – அருட்செல்வம்.
தயாளம் – இரக்கம்.
தயிரியம், தைரியம் – உளத்திட்பம், உறுதி,ஊக்கம்.
தயிலம், தைலம் – எண்ணெய்.
தரணி, தரா – நிலம், வையகம்.
தரணிதரன் – அரசன்.
தரம் – தகுதி, நிலை.
தரன் – தாங்கியவன்.
தராசு, திராசு – துலாக்கோல், நிறைகோல்.
தராபதி – அரசன்.
தரிசனம் – காட்சி, பார்வை, கண்.
தரிசனை – காட்சி, கட்புலனாதல்.
தரிசி த்தல் – காண்டல், தொழுதல்.
தரிசியம் – பார்க்கத்தக்கது.
தரித்தல் – அணிதல், பூணல், உடுத்தல், மேற்கொள்ளல்.
தரித்திரம், தரித்திரியம் – வறுமை, எளிமை, நல்குரவு, மிடி, இன்மை.
தருக்கசாஸ்திரம் – அளவை நூல்.
தருக்கம் – அளவை, அளவை நூல்.
தருக்கவுரை – வழக்குரை.
தருக்கன் – வழக்கிடுவோன்.
தருக்கித்தல் – வழக்கிடுதல்.
தருசணி – விலைமகள்.
தருசம் – பெருமை.
தருச்சநம் – குற்றப்படுதல்.
தருச்சாரம் – கற்பூரம், சூடம்
தருணம் – வேளை, பொழுது.
தருணாஸ்தி – கொழுப்பு.
தருணி – இளம்பெண்.
தருநகம் – முள்.
தருப்பகன் – காமன்.
தருப்பணம் – கண்ணாடி.
தருமசபை – ௮றமன்றம்.
தருமசாத்திரம் – அறநூல்.
தருமசொரூபர் – அறவடி வினர்.
தரும்பாகினி – மனைவி.
தருமம், தர்மம் – அறம்.
தருமிருகம் – குரங்கு. தருமோபதேசம் – அறமுறைத்தல்.
தருராசன் – அரசன்.
தர்மசக்கரம் – அறவாழி.
தர்மமார்க்கம் – அறநெறி, ௮றமுறை.
தர்மவசனம் – அறவுரை.
தர்மார்த்த காம ச் கடத மோக்ஷம் – அறம் பொருள் இன்பம் வீடு.
தலதரிசனம் – திருக்கோயில் வழிபாடு.
தலம், ஸ்தலம் – இடம், கோயில். தலயாத்திரை – திருக்கோயிற் பயணம், திருக்கோயிற் செலவு.
தலவிருட்சம் – கோயில்மரம்.
தலாடகன் – யானைப் பாகன்.
தலிகம் – மரம்.
தவளம் – அழகு.
தவனன் – கதிரவன்.
தவிசு – இருக்கை,
தவித்தல், தவித்தல் – வருந்துதல்.
தளகர்த்தர், தளபதி – படைத்தலைவன்.
தற்சமயம், தத்சமயம் – இப்பொழுது, இவ்வேளை.
தற்சனி – சுட்டுவிரல்.
தற்பரம் – கடவுள்.
தனு கரண புவனபோகம் – உடம்பு உறுப்பு இடம் நுகர் பொருள்.
“தா”என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தாக சாந்தி – விடாய் தணித்தல்.
தாகம் – விடாய், நீர்வேட்கை.
தாசத்துவம் – அடிமைத்தன்மை .
தாச மார்க்கம், தாதமார்க்கம் – அடிமை நெறி.
தாசன் – அடியான், அடிமை.
தாசி – அடியாள், கணிகைமாது,பணிப்பெண்.
தாடகம் – தட்டுதல்.
தாக்ஷணம், தாட்சணியம்
தாட்சிண்யம் – கண்ணோட்டம்.
தாட்டாந்தம் – எடுத்துக்காட்டை யுடையது.
தாட்டீகம், தாஷ்டீகம் – வளப்பம், செழிப்பு.
தாணு – சிவன், மலை, குற்றி, நிலை, பேறு, புகலிடம்.
தாதர் – அடிமைக்காரர்.
தாதா – கொடையாளி, வள்ளல்.
தாதாந்மியம் – அதுவதுவாய் ஒன்றிப்பு, நீங்காமை.
தாதி – அடியாள், தோழி, செவிலித் தாய்.
தாது – முதனிலை, நரம்பூ முதற் பொருள்.
தாத்பரியம், தாற்பரியம் – கருத்து, கருத்துரை.
தாநம், ஸ்தானம் – இடம், இருக்கை.
தாநம், தானம் – அறம், ஈகை, கொடை.
தாநாதிபதி – படைத்தலைவன்.
தாபகம், ஸ்தாபகம் – நிலை நிறுத்தல்.
தாபதன் – தவஞ்செய்கவோன், துறவி.
தாநபன் – கதிரவன்.
தாபம் – வெம்மை.
தாபரம், தாவரம் – நிலையியற்பொருள், நிற்பன,
அசையாப்பொருள்.
தாபித்தல் – நிறுவுதல், நாட்டல், நிலை நிறுத்தல்.
தாமசம், தாமதம் – தாழ்த்தல், அட்டி, மயல்.
தாமம் – கயிறு, மரலை.
தாமிரம், தாமிரை – செம்பு.
தாமோதகரன் – திருமால், ஆமை.
தாரகம் – துணை.
தாரகன் – துணைவன்.
தாரகாதிபதி – திங்கள்.
தாரகை, தாரகா – விண்மீன்.
தாரணம் – பூணுதல், அணிதல்.
தாரணை – பொறை நிலை, நினைவொருமை.
தாரதம்மியம் – ஏற்றத்தாழ்வு.
தாரம் – மனைவி
தாராபதம் – விண்ணகம், ‘வானம், விசும்பு.
தாராபதி – வியாழன், திங்கள்.
தாரை – ஒழுக்கு.
தார்க்கிகர் – வழக்கிடுவோர்.
தாலம் – உண்கலம், தட்டம்.
தாளத்திரயம் – மூன்றுதாளம், மும்முறை தட்டுதல்.
தானம் – ஈகை, கொடை.
தானியம் – தவசம், கூலம்.
“தி” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
திகிரி, திகிரிகை – உருளை, மலை.
திடபுருஷன், திடபுருடன் – ஆண்டகை, வல்லவன்.
திடம், திருடம் – வன்மை, ௨றுதி.
திட்டம், திருஷ்டம் – காணப்படுவது.
திட்டாந்தம் – எடுத்துக்காட்டு.
திட்டித்தம்பம் – கண்கட்டு.
திநகரன் – பகலவன், கதிரவன், வெய்யோன்.
திநம் – நான், ஞான்று, வைகல்.
திமிரம் – இருட்டு.
திமிராரி -பகலவன், ஞாயிறு.
தியாகம் – கொடை.
தியாநம் – நினைவு, அகவழிபாடு.
தியானித்தல் – நினைத்தல், வழிபடல்.
திரஸ்காரம் – இகழ்ச்சி.
திரணம், திருமணம் – சிறுமை, நொய்மை, புல், துரும்பு.
திரம், ஸ்திரம் – நிலை, உறுதி.
திரயம் – மூன்று.
திரவத்துவம் – நெகிழ்ச்சி.(௧௫)
திரவம் – சாறு.
திரவியம் – பொருள், செல்வம்.
திரலியவான் – செல்வன்.
திராட்சம் – கொடிமுந்திரி.
திராவகம் – செய்நீர், சாரம்.
திரி – மூன்று.
திரி, ஸ்திரீ – பெண்.
திரிகம் — மூன்று கூடியது.
திரிகரணம் – மனமொழிமெய்.
திரிகுணம் – மூவியல், முப்பண்பு.
திரிசூத்திரம் முப்புரி நூல், பூணால்.
திரிசூலம் – முத்தலைவேல்.
திரிதண்டம் – முக்கோல்.
திரிதோஷம் – முக்குற்றம்.
திரிநேத்திர ,சூடாமணி – திங்கள்.
திரிபுண்டரம் – முக்குறி.
திரிபுரம் – முப்புரம்.
திரிமூர்த்தி – ர முவடிவினன்.
திரியக்கி – தேங்காய்.
திரியக்கு -குறுக்கு.
திருட்டம், திருஷ்டம் – தெளிவு, பார்க்கப்பட்டது.
திருட்டாந்தம், திருஷ்டாந்தம் –
சான்று, எடுத்துக்காட்டு,
மேற்கோள் (தரு).
திருட்டி , திருஷ்டி, திட்டி, திஷ்டி – அறிவு , கண், பார்வை, கண்ணேறு.
திருஷ்டி தோஷம் – கண்ணேறு, கண்ணெச்சில், விழியூறு.
திருத்தி, திருப்தி – மனநிறைவு, அமைவு.
திரேகம் – யாக்கை, உடல்.
திரோதாக்கினி – முத்தீ,
திரோதானம் – மறைப்பு.
திரோபவம் – மறைத்தல்.
திலகம் – பொட்டு, மேன்மை,
திலகலம் – செக்கு.
திலaம் – சுட்டி, பொட்டு,
திவா – பகல், எல்.
திவாகரன் – ஞாயிறு, பகலவன்.
திவ்வியகவி – ௮ருட்புலவன்
திவ்வியக்ஷேத்தரம் – மேலான இடம், திருப்பதி.
திவ்வியம் – நேர்த்தி, இனிமை, மேன்மை.
தினசரி – நாடோறும்.
தினந்தோறும் – நாடோறும்.
“தீ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தீக்சுணம், தீட்௪ணம் – கூர்மை, வெம்மை, கொடுமை.
தீட்சணியம் – கூர்மை.
தீபகணம் – தீவின் கூட்டம்.
தீபகம் – விளக்கு.
தீபகம்பம், தீபஸ்தம்பம் – விளக்குத்தண்டு, கலங்கரை விளக்கம்.
தீபநம் – பசி.
தீபம் – விளக்கு, ஒளி, சுடர்
தீபாராதளை – ஒளிவழிபாடு.
தீரம் – கரை , மனைவி,
தீரன் – திண்ணியன், ஆண்டை, திறனாளன்.
தீர்க்கதரிசனம் – முக்காலச்காட்சி, தெளிவுக் காட்சி.
தீர்க்க தரிசி – முக்காலவுணர்வினன், மெய்க் காட்சியாளன், தீர்க்சுபாதபம் – தென்னைமரம்.
தீர்க்கம் – தெளிவு, நீளம், கூர்மை.
தீர்க்க வசனம் – உறுதிச்சொல்.
தீர்க்காயு , தீர்க்காயுசு – நீடுவாழ்வு.
தீர்த்தகரணம் – தூயநீராக்கல்.
தீர்த்தக்கட்டம் – புனிதநீர்த்துறை.
தீர்த்தம் – புனிதநீர், திருக்குளம்.
தீவாந்தரம் – தீவு, வெளி.
தீவிகை – விளக்கு.
தீவிரகதி – விரைவான நடை.
தீவிரபக்குவம் – முறுகிய நிலை.
தீவிரம் – விரைவு.
“து” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
துக்ககன் -துன்பமுள்ளோன்.
துக்கசாகரம் – துயரக்கடல், துன்பக்கடல்.
துக்கநிவாரணம் – துன்பநீக்கம்.
துக்கம் – துன்பம், பரிவு, கவலை, வருத்தம், துயரம்.
துங்கம் – உயரச்சி.
துட்குணம், துஷ்குணம், துர்க்குணம், – தீக்குணம், கெட்டவியல்பு.
துட்டகருமம் , துஷ்ட கருமம் – தீத்தொழில்.
துட்ட சுபாவம் , துஷ்டசுபாவம் – கெட்ட இயல்பு.
துட்டம் – அடங்காமை.
துஷ்டநிக்கிரக சிஷ்டபரிபாலனம் – தியோரை ஒறுத்து நல்லோரைக்காத்தல்.
துஷ்டபிராணிகள் – கொடிய சிற்றுயிர்கள்.
துஷ்டபுத்தி – தீயஅறிவு, கெடுமதி.
துஷ்டன் – தீயவன், பட்டு, வம்பன்.
துஷ்டை – நீலி, தீயவள்.
துதி, ஸ்துதி – வணக்கம், வழுதுரை.
துதித்தல் – வாழ்த்தல், பரவல்,
வணங்கல், போற்றல்.
துந்மார்க்கா் – தீயொழுக்கினர்.
அப்பட்டா, அப்பட்டி – (இந்து) மேற்போர்வை, மேலாடை.
துரககதி – குதிரை படை.
துரகதம், துரங்கம் – குதிரை.
துரதிஷ்டம் – போகூழ், தீவினைப்பயன்.
துரந்தரன் – வல்லாளன்.
துரபிமானம் – தீய பற்று.
துரவத்தை, துரவஸ்தை – கெட்ட நிலை.
துராகதம் – கெட்ட நடை.
துராகிருதம் – தீச்செயல்.
துராசை – தீய அவா .
துராத்மா – தீயவுயிர்.
துராலோசனை – தீய நினைவு, கெட்ட நினைவு .
துரிதம் – விரைவு.
துரியம் – பேருறக்கம்.
துரியாதீதம் – உயிர்ப்படக்கம்.
துருவம் – அசையா நிலை.
துரோகம் – இரண்டகம், வஞ்சனை.
துரோகி – இரண்டகஞ் செய்வோன்,வஞ்சகன்.
துர்க்கதம் – துன்பம்.
துர்க்கதி – தீய நடை.
துர்க்கந்தம் – தீய நாற்றம்.
துர்க்கருமம் – தீத் தொழில்.
துர்ச்சகுநம் – கெட்ட குறி, தீக்குறி.
துர்ச்சனர் – கெட்டவர்.
துர்நிமித்தம் – தீக்குறி.
துர்ப்பலம் – வலுக்குறைவு, வலுவின்மை.
துர்ப்பிட்சம் – பஞ்சம், சிறுவிலை.
துர்மதி – கெட்ட எண்ணம், கெடுமதி.
துர்மரணம் – ஒழுங்கில் சாவு, தகாச்சாவு.
துர்மார்க்கம், துன்மார்க்கம் – தீயவழி ,கெட்ட நடை.
துர்லபம் – அரிது, முடியாதது.
துர்வாசனை – தீய நாற்றம்.
துல்யம், துல்லியம் – ஒப்பு, ஈடு.
துவசம், துவஜம் – கொடி.
துவஜஸ்தம்பம் – கொடிமரம்.
துதவஜாரோகணம் – கொடியேற்றம்.
துவயம், இரண்டுதன்மை.
துவனி, தொனி – ஓலி, ஒசை.
துவாதசம் – பன்னிரண்டு.
துவாதசாந்தம் – பன்னிரண்டாம் நிலை.
துவாக்தம் – இருள்.
துவாரபாலகர் – வாயிற் காப்போர்.
துவாரம் – வாயில், வழி, புழை, துளை.
துவிசம் – இருபிறப்புடையது,
முட்டையிற் பிறப்பது.
துலிசன் – இருபிறப்பாளன்.
துவிதம், துவி – இரண்டு.
துவிதா – இரண்டுவகை.
துவி தாகதி – நண்டு.
துவிதீயா பாதம் – இரண்டாம் அடி.
துவிதீயம் – இரண்டாவது.
துவி பாஷிதர் – இருமொழி பேசுவோர்.
துவீதியன் – மகன்.
துவேசம் – பகை, வெறுப்பு.
துதைதம் – இரண்டு.
துவைதீபாவம் – இரண்டின்றன்மை.
“தூ” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச் சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தூசனம், தூடணம், தூஷணம், தூஷணை-இகழ்ச்சி, பழி, பழிச்சொல்.
தூஷித்தல் -பழித்தல். தூதர் – ஒற்றர், வேவுகாரர்.
தூபம் – புகை.
தூபி, ஸ்தாபி, தூபிகை – மூடி, (கோயில் முதலியவற்றின் முடி. )
தூமம் – புகை.
தூச திட்டி, தூரதிருஷ்டி – தொலைப்பார்வை, தொலைநோக்கு.
தூரதிருஷ்டிக் கண்ணாடி – தொலை நோக்காடி.
தூரம் -சேய்மை, தொலைவு, எட்டாக்கை.
தூர்த்தர் – காமுகர், தீயர், வஞ்சகர்.
தூலசரீரம், ஸ்தூலசரீரம் ,தூலதேகம் – பருவுடல், உருவுடம்பு.
தூல சித்து – உயிர்.
தூல சூக்குமம் – உ௫ அருவம்.
தூலதேகம் -பருவுடல்.
தூலம் – பருமை.
தூலலிங்கம் – பரூஉக்குறி.
தூலவுலகம் – பருப்பொருளுலகம்.
“தெ”என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தெக்கிணம் – தெற்கு.
தெய்வீகம் – கடவுட்டன்மை.
தெரிசநம் – காட்சி.
“தே” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தேககாந்தி – உடம்பினொளி.
தேக சம்பந்தம் – உடற்றொடர்பு.
தேகநாசம் – உடலழிவு.
தேகம், திரேகம் – உடல், யாக்கை, மெய்.
தேகவியோகம் – சாக்காடு.
தேகாப்பியாசம் – உடற்பயிற்சி.
தேச சரிதம் – நாட்டுவரலாறு.
தேசசு, தேஜஸ் – ஒளி.
தேசம் – நாடு.
தேசன் – ஒளியுடையவன்.
தேசாசாரம் – உலக நடை, உலகியல்.
தேசாந்தரம் – அயல்நாடு.
தேசாந்தரி – பிற காட்டான்.
தேசிகன், தேசன் – ஆசிரியன், குரவன்.
தேசோமயம் . ஒளிவடிவு.
தேயு – தீ அனல்
(சித்-தத்) தேவகாயநன் -கந்தருவன்.
தேவஸ்தானம் – கடவுள் நிலையம், கோயில்.
தேவதூஷணம் – தெய்வமிகழ்தல்.
தேவதை ,தேவதா – கடவுள், தெய்வம்.
தேவபக்தி, தெய்வபக்தி – கடவுட் பற்று , கடவுளிடத்தன்பு , தெய்வநேயம்.
தேவபாஷை, தெய்வ பாஷை – கடவுண்மொழி.
தேவபூமி – விண்ணுலகு.
தேவவாக்கியம் – கடவண்மொழி.
தேவன் – இறைவன், தலைவன்.
தேவா தீனம், தெய்வாதீனம் – கடவுட்குரியது, திருவருட் செயல்.
தேவாலயம் – திருக்கோயில்.
தேவான்னம் – கடவுளுணா.
தேவி – இறைவி அரசி தலைவி.
“தை”என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தைத்தியர் – அவுணர்.
தைரியம் – உறுதி, திட்பம், ஆண்மை, ஊக்கம்.
தைலம் – எண்ணெய்.
தைவிகம் – தெய்வச், செயலால் நேரிடுவது.
“தோ”என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தோடம், தோஷம் – குற்றம்.
தோடா (உருது) – கைவளை.
தோத்திரம், ஸ்தோத்திரம் – வாழ்த்து, வழுத்து.
“தெள” என்ற எழுத்தில் தொடங்கும் வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.
தெளகித்திரன் – மகள் பிள்ளை, பேரன்,
தெளத்தியம் – புகழ்ச்சி.
தெளர்ப்பாக்கியம் – நல்வினையின்மை.
தெளற்பல்லியம் – வலுக்குறைவு.




