சொல்விளக்கம்தமிழ்பிறமொழி/தமிழ்

“ந” கர நிரலில் உள்ள வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள்.

ந, நா, நி,நீ,நூ,நே,நை

“ந”என்ற எழுத்தில் உள்ள வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் .

நகம்‌ – உகிர்
நகரம்‌ – நாடு
நகல்‌ (௮ராபி) – படி
நகுலம்‌ – கீரி
நடராஜ மூர்த்தி, நடராஜன்‌ – கூத்தன்‌, மன்றவாணன்‌, அம்பலவாணன்‌.
நடனம்‌ – கூத்து.
நடுநிசி – நள்ளிரவு.
நட்சத்திரம்‌ – விண்மீன்‌, வான்மீன்‌, உடு,நாண்மீன்‌.
நட்டம்‌, நஷ்டம்‌ – கேடு.
நதி – ஆறு, யாறு.
நதிதீரம்‌ – ஆற்றங்கரை.
நந்தபாலன்‌ – கண்ணன்‌, திருமால்.
நந்தர்‌ – இடையர்.
நந்தவனம்‌, நந்தனவனம்‌ – பூந்தோட்டம்‌, பூங்கா.
நபநம்‌ – நீராடல்‌.
நபர் (அரபி) – ஆள்.
நபாதி – தோன்றாது.
நபும்ஸகம்‌ – அலி, பேடி.
நபும்ஸகன்‌ – அலி, பேடி, ஆண்டன்மையிலான்.
நமஸ்காரம்‌ – வணக்கம்.
நமன் – காலன்‌, கூற்றுவன்‌, இயமன்‌, மறவி.
நயம்‌ – நன்மை.
நயனம்‌ – கண்.
நரகம்‌, நரகு – நிரயம்‌, அளறு.
நரகர்‌ – கீழுலகத்தவர்‌.
நரகாரி – திருமால்.
நரபதி, நராதிபதி,
நராதிபன்‌ – அரசன்‌.
நரர்‌ – மக்கள்‌.
நரலோகம்‌ – மக்களுலகம்‌.
நரவாகநன் – குபேரன்.
நரன்‌ – மனிதன்.
நராந்தகன்‌ – மக்களையழிப்பவன்‌, இயமன்‌.
நர்த்தனம்‌ – கூத்து.
நவக்கிரகம் – ஒன்பதுகோள்‌.
நவ தானியம்‌ – ஒன்பதுவகைத் தவசம்‌.
நவத்துவாரம்‌ – ஒன்பது வாயில்‌, ஒன்பான்‌ புழை.
நவநீதம்‌ – வெண்ணெய்.
நவமணி – பலதிறமணி.
நவம்‌ – புதுமை, ஒன்பது.
நவரத்தினம்‌ – ஒன்பதுவகை மணி.
நவராத்திரி – ஒன்பதிரவு.
நவியம்‌ – கோடரி.
நவீனகலைஞானிகள்‌ – புதுக்கலையறிஞர்‌.
நவீனம்‌ – புதுமை.
நளினம்‌ – தாமரை, முளரி.

“நா” என்ற எழுத்தில் உள்ள வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் .

நாகம்‌ – பாம்பு.
நாசகன் – அழியவன்.
நாசசகாலம்‌ – அழிவுகாலம்‌, கெடுகாலம்‌.
நாசம்‌ – அழிவு, கேடு,
நாசி – மூக்கு
நாசிகா சூரணம்‌ – மூக்குத்தூள்‌.
நாசிக்‌ துவாரம்‌ – மூக்குப்புழை, மூக்கின்‌றுளை.
நாஸ்தி – இல்லை, இன்மை.
நாஸ்‌திகமதம்‌ – தெய்வமில்‌ கொள்கை.
நாஸ்திகம்‌ – கடவுளுண்மையை மறுப்பது.
நாஸ்‌திகன்‌ – தெய்வமில்‌ கொள்கையன்‌.
நாதசொருபம்‌ – ஒலிவடிவு.
நாதம்‌ – ஒலி, ஓளை, செம்பால்‌, செந்‌நீர் .
நாதன்‌ – தலைவன்.
நாநாரூபம்‌ – பலவகை வடிவம்‌.
நாநாவிதம்‌ – பலவகை.
நாபி – கொப்பூழ்‌, உந்தி .
நாபிக்கமலம்‌ – உந்தித்தாமரை.
நாபிதன்‌, நாவிதன்‌ – மயிர்‌ வினைஞன்‌.
நாமகரணம்‌, நாமதாரணம்‌ – பெயரிடுதல்‌.
நாமதேயம்‌, நாமம்‌ – பெயர்.
நாயகன் – தலைவன்.
நாயகி – தலைவி
நாராசம் – இருப்பாணி.
நாரிகேளம்‌ – தேங்காய்‌.

“நி”என்ற எழுத்தில் உள்ள வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் .

நிகர்வம்‌ – செருக்கின்மை.
நிகிருட்டம்‌ – இழிந்தது.
நிகேதம்,நிகேதனம்‌ – வீடு.
நிக்கிரகதானம்‌ – தோல்வியிடம்‌.
நிக்கிரகம்‌, நிகிரகம்‌ – ௮ழிக்கை, ஒறுப்பு.
நிக்கரகித்தல்‌ – ஒறுத்தல்‌.
நிக்கேபம்‌, நிக்ஷேபம் – வைப்பு, வைத்தல்‌.
நிசம்‌, நிஜம்‌ – உண்மை, மெய்‌.
நிசாசரர்‌ – இரவிற்றிரிவோர்‌, அரக்கர்‌.
நிசாபதி – திங்கள்.
நிசி – நள்ளிரவு.
நிவேதம்,நிஷேதம்‌, நிஷித்தம் – விலக்கு.
நிச்சயஞானம்‌ – உண்மையறிவு, நல்லறிவு.
நிச்சயம்‌ – உறுதி, மெய்‌, துணிவு, திண்ணம்.
நிச்சயித்தல்‌ – உறுதிப்படுத்தல்‌,
உட்‌கோடல்‌, துணிதல்‌, முடிபு
கட்டுதல்‌, கடைப்பிடித்தல்‌.
நிச்சிந்தை – எண்ணமற்றிருத்தல்‌.
நிச்சுவாசம்‌ – “ மூச்சொடுக்கம்‌.
நிஷ்கருஷம்‌ – உறுதி.
நிஷ்பட்சபாதம்‌ – ஒருபுறங்கோடாமை.
நிட்களங்கம்‌, நிஷ்களங்கம் – தூய்மை.
நிட்களம்‌, நிஷ்களம்‌, அவ்வியத்தம்‌ -கலப்பின்மை, உருவின்மை, அருவம்.
நிட்காமியம்‌, நிஷ்காமியம்‌ – பயன்கருதாமை, விருப்பின்மை.
நிட்காரணம்‌, நிஷ்காரணம்‌ – காரணமின்மை.
நிட்டூரம்‌, நிஷ்டூரம்‌ – கொடுமை.
நிட்டை, நிஷ்டை – தவநிலை, துணிதல்‌ ஒருமைநிலை.
நிதம்பம்‌ – அல்குல்‌.
நிதரிசனம்‌ – கண்கூடு.
நிதனம்‌ – வீடு.
நிதானம்‌ – மதிப்பு.
நிதி – செல்வம்‌, வைப்பு, பொருள்‌.
நிதித்யாசநம் , நிதித்தியானம் – தெளிதல்.
நிதிபதி – செல்வக்‌ கடவுள்‌
நித்தியகருமம்‌ – நாட்கடன்‌, நாள்வினை.
நித்திய கர்மாநுட்‌டானம்‌ – நாட்கடனாற்றல்‌.
நித்தியத்துவம்‌ – அழிவின்மை.
நித்திய பூசை – நாள்வழிபாடு.
நித்தியம்‌ – நாடோறும்‌, எப்பொழுதும்‌, அழியாமை.
நித்தியன்‌ – அழிவிலான்.
நித்தியா நந்தம்‌ – வீடுபேறு, பேரின்பம்‌,அழிவிலின்பம்.
நித்திரை – தூக்கம்‌, துயில்‌, உறக்கம்‌, கண்படை.
நித்திலம்‌ – முத்து.
நிந்தனை, நிந்தை – இகழ்ச்சி, பழிப்பு.
நிந்தாஸ் துதி – இகழ்வதுபோற்‌ புகழ்தல்‌.
நிந்திகம்‌ – இகழப்பட்டது.
நிபந்தனை – கட்டுப்பாடு, உறுதி, ஏற்பாடு.
நிபாதம்‌ – விழுதல்‌, உடம்பொடு புணர்த்‌தல்‌ (குறள்), பதித்தல்‌.
நிபுணர்‌ – தேர்ந்தவர்‌, வல்லவர்‌.
நிமலம்‌ – அழுக்கின்மை,
நிமலன்‌ – தூயோன்‌, கடவுள்‌.
நிமிடம்‌, நிமிஷம்‌ = மணித்துளி
நிமித்சகாரணம்‌ -துணைக்காரணம்‌, வினைமுதல்‌.
நிமித்தகாரணன்‌ – வினைமுதல்வன்‌.
நிமித்தம்‌ – குறி, காரணம்‌, பொருட்‌,அடையாளம்‌.
நிமித்திகன்‌ – குறிசொல்வோன்‌.
நியதம்‌ – உறுதி, (தரு) முறை, அடக்‌கம்.
நியதி – ஊழ், செய்கடன்‌, ஒழுங்கு முறை, பிறழா நிகழ்ச்சி(சித் தத்‌).
நியமம்‌ – ஒழுங்கு, முறை, நெறி, நாட்‌கடன்‌.
நியமனம்‌ – கட்டளை, ஒழுங்கு.
நியமித்தல்‌ – அமைத்தல்‌, ஏற்படுத்தல்‌.
நியாய்சபை, நியாயஸ்‌ தலம் – அறமன்றம், முறை மன்றம்
நியாயமார்க்கம்‌ – நெறிமுறை, அறமுறை,அறவழி. நியாயம்‌ – நெறி, முறை, நடுநிலை.
நியாயவாதி – -வழக்கறிஞன்‌ .
நியாயாதிபதி – முறைமன்றத் தலைவர், நடுவர்.
நியூனம்‌ – குறைவு. நியோகித்தல்‌ – ஏவதல்‌, செலுத்தல்‌.
நிரதிசயானந்தம் – பேரின்பம்.
நிரநுயோச்சியம்‌ – உடன்படாமை.
நிரநுயோச்சியாநு யோகம் –
தோல்வி நிலைகூறல்‌.
நிரந்தரம்‌ – எப்பொழுதும்‌.
நிரந்தரன் – கடவுள்‌.
நிரர்த்தம் – பொருளின்மை.
நிராகரணம்‌ – மறுத்தல்‌.
நிராசை – விருப்பின்மை, ௮வா வின்மை.
நிராடங்கம்‌ – தடையில்லாமல்‌.
நிராதாரம் – பற்றுக்கோடின்மை.
நிராபதம்‌ – கேடின்மை.
நிராமயாத்மா, நிராமயாந்மா – இயற்கை யுணர்வினனாதல்‌, கடவுள்.
நிரீச்சுரவாதி,நிரீஸ்வரவாதி – கடவுளில்லை யென்போன்‌, பாழ்ங்கோளன்‌.
நிரீட்சணம்‌ – பார்த்தல்‌.
நிருணயம்‌ ,நிர்ணயம்‌ – உறுதி.
நிருத்தம்‌ – கூத்து.
நிருத்தாட்சண்‌ணியம் – கண்‌ணோட்டமின்மை.
நிருபகாசம்‌ – உதவியற்றது.
நிருபன்‌ – மன்னன்‌, ௮ரசன்‌.
நிருபித்தல்‌, நிரூபித்தல்‌ – மெப்ப்பித்தல்‌, நிலைபெறுத்தல்.
நிருமலம்‌ – மாசின்மை.
நிருமலன்‌ – மாசிலான்‌.
நிருமித்தல்‌ – ஏற்பித்தல்‌, உண்டாக்கல்‌.
நிருமூலம்‌ – அடியற்றது, அழிவு, வேரோடு கல்லல்‌.
நிருவாகம்‌,நிர்வாகம்‌ – கொண்டு நடத்தல்‌, பொறுப்பு.
நிருவாணம்‌ – உடையின்மை, முண்டம்‌, பற்‌றின்மை.
நிருவிகற்பக்காட்சி – எழுவாய்க்‌காட்சி.
நிருவிகற்பம்‌ – ஒருமையுணர்ச்சி, வேறுபாடின்மை.
நிருவிகாரம்‌ – வேறுபாடின்மை.
நிரூபணம்‌ – நிலை நாட்டல்‌.
நிர்க்குணோபாசனை – குணமில்லதன்‌ வழிபாடு.
நிர்ச்சனம்‌, நிர்மானுஷ்யம்‌ – மக்களின்மை, மக்கட் புழக்கமின்மை.
நிர்ணயம்‌ – முடிவு, உறுதி.
நிர்‌த்தமண்டபம்‌ – நாடக அரங்கு.
நிர்நிமித்தம்‌ – காரணமின்மை, ஏதுமின்மை.
நிர்ப்பர்தம்‌ – நெருக்கம்‌, தொல்லை, இடர் வலுகட்டாயம்‌.
நிர்ப்பாக்கியம்‌ – நல்வினை இன்மை, பொறியின்மை, பொருள் இன்மை.
நிர்மாணாம்‌ – செய்யப்பட்டது.
நிர்விசாரம்‌ – கவலையின்‌மை. நிவர்த்தனம்‌ – திரும்புதல்‌.
நிவர்த்தி, நிவிர்த்தி – விடுதலை, நீக்கம்‌.
நிவாரணம்‌ – விடுத்தை.
நிவேதனம்‌ – ஒப்புவித்தல்‌, கொடுத்தல்‌.
நிவேதித்தல்‌ – படைத்தல்.

“நீ”என்ற எழுத்தில் உள்ள வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் .

நீசகன்‌, நீசன்‌ – கீம்மகன்‌, தாழ்ந்தோன்‌.
நீசம்‌ – இழிவு.
நீதம்‌ – நன்னெறி.
நீதி – நெறி, முறை, அறம்‌.
நீதித்தலம்‌, நீதிஸ்தலம்‌ – முறைமன்‌றம்‌.
நீதிநால்‌ – அற நூல்‌.
நீதிமான்‌ – சிறந்தோன்‌, நடுவன்‌, முறைமன்றாளன்‌.
நீலகண்டன்‌ – கறைமிடற்றன்‌, இவன்‌.
நீலோற்பலம்‌ – கருங்குவளை.

“நூ”என்ற எழுத்தில் உள்ள வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் .

நூதனம் – புதுமை.
நூபுரம் – காற்சிலம்‌பு.

“நே”என்ற எழுத்தில் உள்ள வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் .

நேத்திரம் – கண்.
நேமி -கடல்‌, உருளை, வட்டம்‌.

“நை”என்ற எழுத்தில் உள்ள வடமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்கள் .

நைமித்திகம்‌ – சிறப்புவிழா.
நையாயிகள் – அளவை நூலோண்‌.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button