எடுப்பு/தொடுப்பு/முடிப்பு என்றாலென்ன?
பல்லவி/அநுபல்லவி /சரணம் போன்ற சங்கதச்சொற்களின் தமிழ்சொற்களறிவோம்.

தமிழறிவோம்.
பல்லவி , அநுபல்லவி , சரணம் எனும் பிறமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் என்னவென்று பார்ப்போம் .
“பல்லவி” என்றால் “எடுப்பு”அல்லது “முகநிலை”.
“அநுபல்லவி” என்றால் “தொடுப்பு” அல்லது “இடைநிலை”.
“சரணம்”என்றால் “முடிப்பு” அல்லது கடைநிலை.
இதில் முகநிலை , இடைநிலை , கடைநிலை என்றே தமிழர் முதலில் பயன்படுத்தினர் . அதன்பின்னர் பல்லவி, அநுபல்லவி , சரணம் என்ற சங்கதச்சொற்கள் உள்நுழைந்ததால் முகநிலை , இடைநிலை , கடைநிலை என்ற சொற்பயன்பாடு முற்றாக தமிழர்களிடமிருந்து மறைந்தது . அதன்பின்னர் விழித்துக்கொண்ட நம் தமிழறிஞர்களின் முயற்சியால் எடுப்பு , தொடுப்பு , முடிப்பு என்ற சொற்கள் தமிழிற்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை முற்றாக யாவரும் அறிந்திருக்கவில்லை என்றாலும் இப்படியான சொற்கள் இருப்பதைச்சிலர் தெரிந்துவைத்திருந்தபோதும் இவை பயன்பாட்டில் இல்லையென்றே கூறலாம் .
ஏன் இத்தமிழ்ச்சொற்கள் பயன்பாட்டில் இல்லையென்றால் தமிழ்கூறும்வையத்து இசையறிந்தோர் அஃதாவது தமிழிசைப்பாடலாசிரியர்கள் ,பாடகர்கள் , பாடலெழுதுவோர் பெரும்பாலும் பிறமொழியினராகவோ அன்றேல் தமிழை முழுமையாக அறியாதோராகவே இருப்பதனால் பிறமொழிச்சொற்கள் தமிழ்மக்களிடம் எளிதில் பரவலாகி நிலைத்துவிடுகிறது . நன்கு தமிழறிந்த தமிழ்ச்சான்றோர் ஒருசிலர் தங்களுக்குக்கிடைத்த வாய்ப்பைப்பயன்படுத்தி மேடைப்பேச்சுகளின்மூலம் தமிழ்ச்சொற்களை மக்களிடம் கொண்டுசேர்க்கின்றனர் .
தமிழா தமிழ்பேசு . உனதடையாளம் தமிழன்றோ. சிறிதுசிறிதாக உன்னடையாளத்தை நீயிழந்துகொண்டிருக்கிறாய் .
விழித்துக்கொள் தமிழா!
நன்றி .
வாழ்க தமிழ்.




