தமிழ்த்துறவோர் பாருக்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம்.
தமிழ் / சமற்கிருதம்/ ஆங்கிலம்.

ஓகவிருக்கைகளின் தமிழ்ப்பெயர்களுக்கிணையான பிறமொழிப்பெயர்களின் பட்டியல்.
இயற்கை – NATURE.
தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்.
௧. ஞாயிறு வணக்கம் – சூரிய நமசுகாரம் – SALUTE TO THE SUN.
௨. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்– ஏகபாத சூரிய நமசுகாரம் – SALUTE THE SUN ON ONE LEG.
௩. அரை நிலாவிருக்கை – அர்த்த சந்திராசனம் – CRESCENT POSTURE.
௪. மலையிருக்கை – மேரு ஆசனம் – MOUNTAIN POSTURE.
௫. மலைநிமிர்விருக்கை – தாடாசனம் – MOUNTAIN ERECT POSTURE.
நிலைத்திணை / பயிர் உயிரிகள் -PLANTS.
௬. தாமரையிருக்கை – பத்மாசனம் – LOTUS POSTURE.
௭. எழும்புத்தாமரையிருக்கை – உத்தித பத்மாசனம் – RAISED LOTUS POSTURE.
௮. பூட்டிய தாமரையிருக்கை – பத்த பத்மாசனம் – LOCKED LOTUS POSTURE.
௯. நாணல்முதுகிருக்கை – பச்சிமோத்தாசனம் – BACK ERECTING POSTURE.
௰. மரவிருக்கை – டோலாசனம் – TREE POSTURE.
௰௧. மூங்கில்வளைவிருக்கை, கை கால் இணைவிருக்கை / – பாத அசுதாசனம் – HAND AND FOOT POSTURE.
விலங்கு – CREATURES.
நீருயிரிகள் – AQUATICS.
௰௨. தவளையிருக்கை – பெக்காசனம் – FROG POSTURE.
௰௩. மீனிருக்கை – மச்சாசனம் – FISH POSTURE.
௰௪. சுறவயிருக்கை – மகராசனம் – SHARK POSTURE.
௰௫. முதலையிருக்கை – மக்கராசனம் – CROCADILE POSTURE.
௰௬. சங்கிருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை – வக்ராசனம் – SEA SHELL POSTURE.
௰௭. ஆமையிருக்கை – கூர்மாசனம் – TORTOISE POSTURE.
௰௮. கைநீட்டிய ஆமையிருக்கை -விக்சேபம் கூர்மாசனம் – HAND STRETCHED TORTOISE POSTURE.
ஊர்வன – REPTILES.
௰௯. தேளிருக்கை – விருச்சிக ஆசனம் – SCORPION POSTURE.
௨௰. பாம்பிருக்கை – புசங்காசனம் – SERPENT POSTURE.
நடப்பன – VERTEBRATE.
௨௰௧. ஆமுகவாயிருக்கை – கோமுகாசனம் – COW FACE POSTURE.
௨௰௨. ஆவினிருக்கை – கோவாசனம் – COW POSTURE.
௨௰௩. பூனையிருக்கை – பில்லியாசனம் – CAT POSTURE.
௨௰௪. ஒட்டகவிருக்கை – உசர்ட்டாசனம் – CAMEL POSTURE.
௨௰௫. நாய்முகவிருக்கை – அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE.
௨௰௬. புலியிருக்கை – வியாகராசனம் – TIGER POSTURE.
௨௰௭. அரிமாவிருக்கை – சிம்மாசனம் – LION POSTURE.
௨௰௮. மிடுக்கான குதிரையிருக்கை – கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA.
௨௰௯. முயலிருக்கை – சசாங்காசனம் – RABBIT POSTURE.
௩௰. நரியிருக்கை – மார்சரி ஆசனம் – FOX POSTURE.
பறப்பன – AVES & INSECTS.
௩௰௧. வெட்டுக்கிளியிருக்கை – சலபாசனம் – GRASSHOPPER (LOCUST) POSTURE.
௩௰௨. அரைவெட்டுக்கிளியிருக்கை – அர்த்தசலபாசனம் – SEMI GRASSHOPPER POSTURE.
௩௰௩. மயிலிருக்கை – மயூராசனம் – PEACOCK POSTURE.
௩௰௪. புறாவிருக்கை – கப்போட்டாசனம் – DOVE POSTURE.
௩௰௫. பறக்கும் புறாவிருக்கை – உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE.
௩௰௬. கொக்குவிருக்கை – பக்காசனம் – CRANE POSTURE.
௩௰௭. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை – ஏகபாத பக்காசனம் – SINGLE FOOTED CRANE POSTURE.
௩௰௮. கலுழன் இருக்கை – கருடாசனம் – EAGLE POSTURE.
௩௰௯. சேவல் ருக்கை – குக்குடாசனம் – COCK POSTURE.
௪௰. நிற்கும் மயிலிருக்கை – கடுடா மயூராசனம் – STANDING PEACOCK POSTURE.
௩௰௧. வாத்து இருக்கை – அம்சாசனம் – DUCK POSTURE.
நடனம் – DANCE.
௪௰௨. நடன இருக்கை – நடனாசனம் – POSTURE OF NATARASA.
௪௰௩. களிக்கூத்து – ஆனந்த தாண்டவம் – PLEASURE DANCE POSTURE.
௪௰௪. கூத்தரசன் இருக்கை – நடராச ஆசனம் – KING OF DANCE POSTURE.
௫. வீரடைவு இருக்கை – வீர அனுமான் ஆசனம் – BRAVE STEP POSTURE.
முத்திரை – GESTURE.
௪௰௬. ஓக முத்திரை – யோகமுத்ரா – OGAM GESTURE.
௪௰௭. பெரு முத்திரை – மகாமுத்ரா – GREAT GESTURE.
௪௰௮. படையல் முத்திரை – அஞ்சலி முத்ரா – HOMAGE GESTURE.
௪௰௯. குதிரை மலவாய் முத்திரை – அசுவினி முத்ரா – HORSE’S ANAL GESTURE.
௫௰. ஆறுமுக முத்திரை – சண்முக முத்ரா – HEXAGON GESTURE.
கருவிகள் – TOOLS.
௫௰௧. நாற்காலியிருக்கை – உட்கட்டாசனம் – CHAIR POSTURE.
௫௰௨. அரசரிருக்கை – பூரண உட்கட்டாசனம் – THRONE POSTURE.
௫௰௩. சக்கரவிருக்கை – சக்ராசனம் – WHEEL POSTURE.
௫௰௪. அரைசக்கரவிருக்கை – அர்த்தகடி சக்கராசனம் – SEMI WHEEL POSTURE.
௫௰௫. வில்லிருக்கை – தனுராசனம் – BOW POSTURE.
௫௰௬. காதருகுவில்லிருக்கை – ஆகர்ண தனுராசனம் – EXTENDED BOW POSTURE.
௫௰௭. படகிருக்கை / நாவாய் இருக்கை – நவாசனம் – BOAT POSTURE.
௫௰௮. முக்கோணவிருக்கை – திரிகோனாசனம் – TRIANGLE POSTURE.
௫௰௯. பரிமாற்ற முக்கோணவிருக்கை – பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE.
௬௰. கலப்பை / ஏர் / உழவிருக்கை – அலாசனம் – PLOUGH POSTURE.
தொழில் – ACTIVITIES.
௬௰௧. வழிபாட்டிருக்கை – சசாங்காசனம் – WORSHIP POSTURE.
௬௰௨. வீரவிருக்கை – வீராசனம் – BRAVE POSTURE.
௬௰௩. நெற்றிக்கண் வழியனிருக்கை – வீரபத்ராசனம் – GLABELLA VIEW POSTURE.
௬௰௪. அம்மியரைக்கும் இருக்கை – உபவிசுட்டகோணாசனம் – GRINDING POSTURE.
௬௰௫. காலணிதையலிருக்கை – பத்ராசனம் – SHOEMAKER POSTURE.
௬௰௬. தேரோட்டியிருக்கை – சாரதாசனம் – CHARIOT RIDER POSTURE.
௬௰௭. தலை முழங்கால் இருக்கை,/பூத்தொடுக்கும் இருக்கை – சானுசீராசனம் – HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடலுறுப்புகள் – ORGANS OF HUMAN BODY.
௬௰௮. இணை காலடியிருக்கை – சமபாதாசனம் – PARRALLEL FOOT POSTURE.
௬௰௯. ஒருகாலூன்றி இருக்கை – நின்ற பாதாசனம் – SINGLE LEG POSTURE.
௭௰. கோண இருக்கை – கோணாசனம் – ANGLED POSTURE.
௭௰௧. விலாப்பக்க கோண இருக்கை – பார்சுவ கோணாசனம் – RIBSIDE ANGLED POSTURE.
௭௰௨. மண்டிவல்லிருக்கை – வச்சிராசனம் – FIRM KNEELING POSTURE.
௭௰௩. மழலையிருக்கை – பாலாசனம் – CHILD POSTURE
௭௰௪. கிடைநிலை வல்லிருக்கை – சுப்த வச்சிராசனம் – SUPINE ANKLE POSTURE.
௭௰௫. குந்தி கைகூப்பு இருக்கை – உட்கட்டாசனம் – PERCH AND SALUTEWITH STRETCHED ARMS ABOVE HEAD.
௭௰௬. கை கூப்புகை தாமரை இருக்கை– பர்வட்டாசனம் – OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE.
௭௰௭. மாற்று அமரிருக்கை – அர்த்தமத்ச்யேந்தராசனம் – CONTRA SITTING POSTURE.
௭௰௮. பூட்டிய கோணவிருக்கை – பத்தகோணாசனம் – LOCKED ANGLE POSTURE.
௭௰௯. நீள்காலடியிருக்கை – உத்தான பாதாசனம் – RAISED FOOT ERECT.
௮௰. ஓகத்துயில் – யோக நித்ரா – OGAM SLEEP.
௮௰௧. அரை உடலிருக்கை – விபரீதகரணி – HIP STAND POSTURE.
௮௰௨. முழு உடலிருக்கை – சர்வாங்காசனம் – SHOULDER STAND.
௮௰௩. பாதி முழு உடலிருக்கை – பர்வதாசனம் – SEMI SHOULDER STAND.
௮௰௪. மேடையிருக்கை – பீடாசனம் – STAGE POSTURE.
௮௰௫. பகுதலையிருக்கை – அர்த்த சிரசாசனம் – SEMI INVERTTED.
௮௰௬. தலையிருக்கை – சிரசாசனம் – INVERTTED POSTURE.
தூய்மை – CLEANSING.
௮௰௭. வளிகழித்தலிருக்கை – பவன முக்தாசனம் – WIND RELEASING TECHNIQUE.
௮௰௮. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை – உட்டியானபந்தம் – FLYUP LOCK.
௮௰௯. குடல் சுழற்றியிருக்கை – நௌலி – BOWEL CIRCULATING POSTURE. ௯௰. மூச்சொழுக்கம் – பிராணாயாமம் – ORDER OF BREATH.
௯௰௧. தலைத்தூய்மை – கபாலபாதி – CLEANSING OF BRAIN.
௯௰௨. துருத்தி மூச்சு – பசுதிரிகா – BELLOW BREATH.
௯௰௩. சீழ்க்கை – சீத்காரி – WHISTLING.
௯௰௪. நீர்த்தூய்மை – சலநேதி – WATER CLEANSING.
௯௰௫. குளிர்ச்சீழ்க்கை – சீத்தளி – COOL WHISTLE.
௯௰௬. மூலக்கட்டு – மூலபந்தம் – ANAL CONTRACTION.
௯௰௭. நாடித்தூய்மை – நாடி சுத்தி – CLEANSING OF PULSE.
௯௰௮. தேனியொலி – பிராமரி – HONEY BEE HISSING.
௯௰௯. கண்தூய்மை – திராடகா – EYE CLEANSING.
௱. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் – சதந்தா – INHALING THROUGH CLEANCHED TEETH.
௱௧. உள் மூச்சு – அனுலோமம் – INHALING.
௱௨. வெளி மூச்சு – விலோமம் – EXHALING.
௱௩. தொண்டை ஒலி – உச்சயி – HISSING OF PHARYNX.
நிறைவுநிலை – PACIFICATION.
௱௪. இயல்பிருக்கை – சுகாசனம் – AT EASE POSTURE.
௱௫.. அமைதியிருக்கை – சவாசனம், – LYING RELAX POSTURE.
நன்றி.
வாழ்கதமிழ்.




