“தயவு” என்ற பிறமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொல் அறிவோம் .

“தயவு” என்ற பிறமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொல் அறிவோம் .
தயவு என்றால் இரக்கம் /அளி என்று பொருள் கொள்ளும் . (சான்று :கழக நூல்கள் )
அளி என்பதற்கு வேறு பல ஒத்தகருத்துச்சொற்களும் உள்ளன.
அவையாவன : கொடு/கருணை/ கனிவு/ அருள்/காத்தல்/ வண்டு /குளிர்ச்சி போன்றவை .
அளியர் என்றால் இரங்கத்திற்குரியவர் என்று பொருள்படும்.
தயவுசெய்து என்றால் அளிசெய்து ..
தயவுகூர்ந்து என்றால் அளிகூர்ந்து …
அளிது என்றால் இரக்கத்தக்கது .
எடுத்துக்காட்டாகச் சில சொல்லியங்களைக் காண்போம்.
அளிசெய்து இப்படிக்கூறாதீர்.( தயவுசெய்து இப்படிக் கூறாதீர் )
அளிசெய்து கொஞ்சமாவது சாப்பிடுங்கள்.( தயவுசெய்து கொஞ்சமாவது சாப்பிடுங்கள்)
அளிகூர்ந்து எனக்கு உதவுங்கள். ( தயவுகூர்ந்து எனக்கு உதவுங்கள்)
அளிகூர்ந்து என் தவற்றைப்பொறுத்துக்கொள்ளுங்கள் . ( தயவுகூர்ந்து என் தவற்றைப்பொறுத்துக்கொள்ளுங்கள் )
அளியர்களை ஒறுத்தல் ஏற்புடையதன்று ( இரக்கத்திற்குரியவர்களைத்(பாவப்பட்டவர்களை) தண்டித்தல் ஏற்புடையதன்று) .
இப்போது தயவு என்ற பிறமொழிச்சொல்லிற்கான தமிழ்ச்சொற்களை அறிந்து கொண்டோம் . ஆயினும் மொழிபெயர்த்து மொழிபகர்தல் மொழியின் இயல்பான அழகியலைக்கெடுத்துவிடுகிறது . எமது மொழியை எமது மொழியின் இயல்பில் நாம் எடுத்துச்செல்லல் வேண்டும் . ஆகவே கீழுள்ள பகுதியைக்காண்க.
முதன்மைக்குறிப்பு :
தயவுசெய்து என்ற சொல்லை மொழிபெயர்க்காமல் , இதைத்தமிழில் அருள்கூர்ந்து , அன்புகூர்ந்து , இரக்கம் கொண்டு என்று தேவைக்கேற்பதுபோல் பயன்படுத்தலே பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஏற்பதற்கும் சிறப்பானதாகும் .
பிறமொழிச்செற்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்ச்சொற்களைப்பயன்படுத்தி மொழியழிவில் இருந்து எந்தமிழைக்காத்துநிற்போம் .
ஆக்கம் :துளிவானொலி
நன்றி ..
வாழ்க தமிழ் ..!



