
“அப்பொயிமென்ற்“ என்ற சொல்லிற்கான தமிழ்ச் சொல் அறிவோம் .
இப்பொழுது இதுசார்ப்பாக ஒரு சொற்றொடரைப் பார்ப்போம் .
நான் திங்கட்கிழமை மருத்துவரிடம் நேர ஒதுக்கீடு எடுத்துள்ளேன் .
இங்குவரும் ஒதுக்கீடு என்பது இடத்தையோ , நேரத்தையோ , நாளையோ அல்லது காலத்தையோ ஒதுக்கிவைத்தல் என்ற பொருளில் அமைந்துள்ளது .
எங்ஙனம் இது ஏற்புடையதாகிறது என்பதை கீழே காண்போம்.
ஒதுக்கு +ஈடு = ஒதுக்கீடு
ஒதுக்கு : ஒதுக்குதல் , தவிர்த்தல், ஓரப்படுத்தல் , பிரித்துவைத்தல் , தனித்துவைத்தல் .
ஈடு : ஒப்பு , உறை, ஈர்ப்பு , இணை , பற்று , சரிசெய்தல் .
இங்கு வரும் ஒப்பு என்ற சொல்லானது ஒதுக்கீடு என்ற சொல்லில் வருகின்ற ஈடு என்ற சொல்லின் பொருளுக்கு இசைவாகிறது .
இடத்தையோ , நேரத்தையோ , காலத்தையோ அல்லது நாளையோ ஒதுக்குவதற்கான ஒப்புதலைப் பெற்றுள்ளேன் என்ற பொருளில் அமைகிறது .
ஆங்கிலத்தில் வருகின்ற அப்பொயிமென்ற்( appointment) என்பதற்கான தமிழ்ச்சொல் ஒதுக்கீடு என்பது இப்போது புலனாகிறதல்லவா?!
சில சொல்லியங்களை இங்கு எடுத்துக்காட்டுக்காக பார்ப்போம் .
- அம்மா ! ஆசிரியர், தேர்வின் புள்ளிகளை வழங்குவதற்கான நாள் மற்றும் நேரத்தை இந்த கிழமைக்குள் ஒதுக்கீடு செய்யும் படி சொல்லியிருந்தார் .
- நாளை அலுவலகத்தில், ஒரு முக்கியமான நிறுவனத்துடன் நேர்காணல் செய்வதற்காக நேர ஒதுக்கீடு முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது .
- நீங்கள் ஒதுக்கீடு எடுக்காமல் மருத்துவரைப் பார்க்க முடியாது . முதலில் மருத்துவமனைக்கு அழைப்புச் செய்து உங்களுக்கான ஒதுக்கீட்டைச் செய்துவிட்டு அந்த நாளில் சென்று மருத்துவரைப் பாருங்கள் .
- முன்புபோல , உறவினர் வீட்டிற்கு அறிவித்தல் இன்றிச் செல்ல முடியவில்லை . நாம் வருகிறோம் என்று ஒரு ஒதுக்கீடு முன்னேற்பாடு செய்துவிட்டே செல்லமுடிகிறது .
எனவே , ஒதுக்கீடு என்ற சொல்லை வேண்டிய இடங்களில் பயன்படுத்தித் தனித்தமிழில் உரையாடி , எழுதி மகிழ்வோம் .
நன்றி.
துளிவானொலி.



