சொல்விளக்கம்

விலங்கு:சொற்பொருளறிவோம்.

விலங்கு

விலங்கு என்ற சொல்லுக்கு பற்பல பொருளுள.
விலங்கு என்றால் மிருகம் என்பதை யாமறிவோம் .மலைக்கு வழங்கும் இன்னோர் சொல் விலங்கு என்பதை யாமறிந்திருக்க பெரிதாய்வாய்ப்பில .

விலங்கு என்றால் மலை என்பதையும் குறிக்கும் என்பதை இலக்கியங்கள் சிலபகர்கின்றன . எவ்விலக்கியங்கள் இச்சொல்லைக்கையாண்டுள்ளன என்பதையும் இங்கே காண்க.

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் –
(மலைபடுகாடாம்)

பொருள் : ஒளிர்கின்றதும் ஏந்திநிற்பதுமான கொம்பினையுடைய (தன்)இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,
குறுக்குமலையில் மிக உயரமான பரண் (மீது இருக்கும்)குறவர்களின்
நிலத்தில் புகுந்து (பயிர்களைத்)தின்ன, (அதனை விரட்ட, அவர்கள்)ஈடுபாட்டுடன் சுற்றிவளைத்து ஏற்படுத்தும் ஓசையும்; என்று அப்பொருளமைவதைக்காண்க .

கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – (பதிற்றுப்பத்து)

பொருள்: மலை உச்சிகளோடு மாறுபடுவது போன்று கட்டிய, வளைந்த பார்க்குமிடங்களையுடைய வெளிமதிலை
அடுத்துள்ள,ஒரு நாட்டைக்கண்டது போன்ற அகன்ற இடைவெளியைக்கொண்ட அம்புக்கட்டுகள் இருக்கும் நடுமதிலையும்
அடுத்து,
– புற மதிலைக் கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலை போல் நிற்றலின் விலங்கல் என்றும் கூறுவதைக்காண்க .

இதைவிடுத்து விலங்கு என்ற சொல் இன்னும் பலபொருள்குறிக்கும் சொல்லே .

குறுக்கிடு,ஒதுங்கு,மாறுபடு,விலகு, நீங்கு,கடந்து செல்,மாட்டு,தவிர்,தடு,வளை,தவறுசெய் எனும் வினைச்சொற்களும் ;குறுக்கு, மிருகம், மலை என்ற பெயற்சொற்களும் இவ்விலங்கு எனும் சொல்லுக்கான ஒத்தசொல்லாக இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன.

நன்றி
வாழ்க தமிழ் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button