
தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம்
தலைவனின் உரைகேட்க ஏங்குதடா.
“எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழமக்களே இன்று, மாவீரர்நாள்”
தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம்
தலைவனின் உரைகேட்க ஏங்குதடா.
ஊர்கூடும் அந்த மாவீரரில்லம்
உறவுகள் காணாமல் கரையுதடா.
தீபங்கள் முன்னே தீயானவுள்ளம்
தோழமை தேடிக்கலங்குதடா.
விழியே மலர்க!
வீரம் தருக!
தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம்
தலைவனின் உரைகேட்க ஏங்குதடா.
புனிதம் வாழ்ந்த துயிலுமில்லம்
புற்களும் புதர்களும் ஆனதம்மா
கல்லறையிருந்த இடங்களிலெல்லாம்
பகைவரின் மிதியாய்ப்போனதம்மா.
நெய்விளக்கேற்றி வணங்கிடும் அந்நாள்
எங்களை மீண்டும் சேர்க்காதா?!
கார்த்திகைமழையில் தீபங்கள் எரிய
வீரரின் கல்லறை பார்க்காதா?!
விழியே மலர்க!
வீரம் தருக!
தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம்
தலைவனின் உரைகேட்க ஏங்குதடா.
ஊர்கூடும் அந்த மாவீரரில்லம்
உறவுகள் காணாமல் கரையுதடா.
தீபங்கள் முன்னே தீயானவுள்ளம்
தோழமை தேடிக்கலங்குதடா.
களங்களிலாடிய புலிமுகவீரம்
மௌனத்தில் மறைவது சோகமம்மா.
நிரைநிரையாக விழிகளில் சூடும்
விலைதலையீழம் தாகமம்மா.
உயிர்க்கொடையாகி களங்களில்நிமிர்ந்த
காந்தளின் கனவுகள் பூக்காதா?!
உறவுகள் கூடி வணங்கிடும்-அந்த
கல்லறைப்பாடல் கேட்காதா?!
விழியே மலர்க!
வீரம் தருக!
தாயகக்கனவுகள் தேம்புதடா-மனம்
தலைவனின் உரைகேட்க ஏங்குதடா.
ஊர்கூடும் அந்த மாவீரரில்லம்
உறவுகள் காணாமல் கரையுதடா.
தீபங்கள் முன்னே தீயானவுள்ளம்
தோழமை தேடிக்கலங்குதடா.
நன்றி.
வாழ்க தமிழ்.




