தாயகப்பாடல் எழுத்துவடிவில்.
பாடல் : ஈழம், உயிரில் கலந்து எழும் தேசம். உணர்வில் கலந்துயென்றும் வாழும். உருவம் தந்ததெம் மாவீரமே!

ஈழம்,
உயிரில் கலந்து எழும் தேசம்.
உணர்வில் கலந்துயென்றும் வாழும்.
உருவம் தந்ததெம் மாவீரமே!
ஈழம்,
தமிழர்வாழ்வில் பெருந்தாகம்.
தலைவன் பெயரைச்சொல்லி வாழும்.
நிமிரவைத்தந்தது புலிவீரமே!
முற்றத்தில் பூவாகப்பூத்தவர்.
யுத்தத்தில் புயலாகப்புகுந்தவர்.
இரத்தத்தில் தமிழ்வீரம் சேர்த்தவர்.
மொத்தத்தில் இனவாழ்வைக்காத்தவர்.
எண்திக்கும் உரிமை நிலைநாட்டவே-தாங்கள் எரியும் ஒளியில் வழிகளானவர்.
ஈழம் ,
உயிரில் கலந்து எழும் தேசம்.
உணர்வில் நிலைத்து என்றும்வாழும்,
உருவம் தந்ததெம் மாவீரமே!
ஈழம்,
தமிழர்வாழ்வில் பெருந்தாகம்.
தலைவன் பெயரைச்சொல்லி வாழும்.
நிமிர்வைத்தந்தது புலிவீரமே!
போர்மேகங்கள் சூழும்-அது
தாய்மேனியைக்கீறும்.
போரில்லாமல் நாடொன்றில்லை.
நாடில்லாமல் நாமுமில்லை.
தாய்நாடென்னும் சொந்தம்-அது
தாய்சேய் கொள்ளும் பந்தம்.
வேரில்லாமல் பூவிங்கில்லை.
விதையில்லாமல் மரமும் இல்லை.
தேசம்வரும் நாளையெண்ணி வீரர் போயினர்.
தாயின்துயர் தீரும் என்று தீயில் வேகினர்.
காற்றில் அவர் கரையும்போதும்
தாகம் தமிழென்ற-அவரின்
கனவும் மலரும் நினைவும் சேர்ந்தே.
ஈழம்,
உயிரில் கலந்து எழும் தேசம்.
உணர்வில் நிலைத்து என்றும்வாழும்.
உருவம் தந்ததெம் மாவீரமே!
ஈழம்,
தமிழர் வாழ்வில் பெருந்தாகம்.
தலைவன் பெயரைச்சொல்லி வாழும்.
நிமிர்வைத்தந்தது புலிவீரமே!
கார்மேகங்கள் சூழும்-அது
மாவீரர்போல் தூவும்.
ஊர் காத்தவர் பெயர் எண்ணும்.
உள்ளுக்குள் உயிர்நோகும்.
காற்றேறி கொடியாடும்-தன்
களவீரரைத்தேடும்.
நூற்றாண்டுக்கள் போனாலும்
நினைவோடு இனம்வாழும்.
காதல் எங்கள் தேசம் என்று வீரர் போயினர்.
சாதல் கண்டபோதும் தளராமல் சென்றனர்.
தீயிலவர் மூழ்கும்போதும் -அவர்
தாகம் தமிழென்ற உடலின் துகளும்
உயிரின் அணுவும் சேர்ந்தே.
ஈழம்,
உயிரில் கலந்து எழும் தேசம்.
உணர்வில் நிலைத்துயென்றும் வாழும்.
உருவம் தந்ததெம் மாவீரமே!
ஈழம்,
தமிழர்வாழ்வில் பெருந்தாகம்.
தலைவர் பெயரைச்சொல்லி வாழும்.
நிமிர்வைத்தந்தது புலிவீரமே!
முற்றத்தில் பூவாகப்பூத்தவர்.
யுத்தத்தில் புயலாகப்புகுந்தவர்.
இரத்தத்தில் தமிழ்வீழம் சேர்த்தவர்.
மொத்தத்தில் இனவாழ்வைக்காத்தவர்.
எண்திக்கும் உரிமைநிலைநாட்டவே
தாங்கள் எரியும் ஒளியில் வழிகளானவர்.
நன்றி.
வாழ்க தமிழ் .




