
பொருள்வேறுபாடுள்ள நகர, னகரச்சொற்கள்.
அந்நாய் – அந்த நாய்./அன்னாய் -அன்னையே!
இந்நகை – இந்த நகை./இன்னகை – இனிய நகைப்பு.
இந்நா இந்த நாக்கு./இன்னா -தீயவை.
இந்நிலை – இந்த நிலை./இன்னிலை-இனிய நிலை
இந்நீர் -இந்த நீர்./இன்னீர் இனிய தன்மை.
செந்நாய் -ஒரு வகை நாய்./சென்னாய் -போகின்ற நாய்.
தந்நலம் -தம்நலம்./தன்னலம் -தன்நலம்.
தேநீர் -தேயிலைநீர்./தேனீர் -தேன் கலந்த நீர்.
நந்நூல்- நம் நூல்./நன்னூல் – நல்ல நூல்.
முந்நாள் – மூன்று நாள்./முன்னாள் -முன்னைய நாள்.
வெந்நீர் -வெம்மையான நீர்./வென்னீர்-வெல்லும் தன்மை.



