தமிழ்
ஓரெழுத்து ஒருமொழிச்சொற்கள்.

ஓரெழுத்து ஒருமொழிச்சொற்கள்.
- அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், பிரம்மா.
- ஆ – பசு, உயிர்(ஆன்மா)
- இரக்கம், நினைவு, ஆச்சாமரம்,
- இ-சுட்டெழுத்து, இரண்டில் ஒருபங்கு =அரை என்பதின் தமிழ் வடிவம்.
- ஈ – கொடு, பறக்கும் ஈ, தா, குகை, தேனீ,அழிவு.
- உ-சிவன், வியப்பு(ஆச்சரியம்),
- சுட்டெழுத்து, இரண்டு என்பதின் தமிழ் வடிவம்.
- ஊ – இறைச்சி, உணவு, ஊன், தசை.
- எ-வினா எழுத்து, ஏழு என்பதின் தமிழ் வடிவம்.
- ஏ – அம்பு, ஏவுதல்,உயர்ச்சிமிகுதி.
- ஐ – தலைவன், அழகு, உயர்வு, உரிமை,நுட்பம்.
- தலைவன், இறைவன், தந்தை.
- ஓ – மதகு (நீர் தாங்கும் பலகை).
- ஔ-பூமி, ஆனந்தம்.
- க-வியங்கோள் விகுதி,நெருப்பு.
- கா – சோலை, காத்தல்.
- கி-இரைச்சல் ஒலி.
- கு-குவளயம்.
- கூ – பூமி, கூவுதல், உலகம், கூப்பிடு.
- கை – ஒழுக்கம்,உறுப்பு.
- கோ – அரசன், தந்தை, இறைவன்.
- கௌ-கொள்ளு, தீங்கு.
- சா – இறந்தல்,சாக்காடு.
- சீ – இகழ்ச்சி, வெறுப்புச் சொல்.
- சே – உயர்வு,காலை,சிவப்பு.
- சோ – மதில்,அரண்.
- ஞா- பொருத்து, கட்டு.
- தா – கொடு,கேட்பது.
- தீ – நெருப்பு,தீமை.
- து-உண்.
- தூ – தூய்மை,வெண்மை
- தே – கடவுள்.
- தை – தைத்தல், பொருத்தல் , தைத்திங்கள்.
- ந-சிறப்பு.
- நா – நாவு,நான்,நமக்கு,நாக்கு.
- நி- இன்பம், மிகை, விருப்பம்.
- நீ – முன்னிலை ஒருமை,நீக்குதல்.
- நு-எள்.
- நே – அன்பு,அருள், நேயம்.
- நை – இழிவு,வருந்து.
- நொ -மென்மை.
- நோ – வறுமை,துன்பப்படுதல் , நோவு , வலி,வருத்தம்.
- நௌ- மரக்கலம்,கப்பல்.
- ப-நூறு.
- பா – பாடல்.
- பி-அழகு.
- பீ-கழிவு.
- பூ – மலர்.
- பே – மேகம், நுரை, அழகு, அச்சம்.
- பை – இளமை,கைப்பை,பசுமை.
- போ – செல்,ஏவல்.
- மா – மாமரம்,கூற்றுவன்.
- மீ – வான், மேலே, உயர்ச்சி, உச்சி,மிகுதியானது.
- மூ – மூப்பு,முதுமை,மூன்று.
- மே – அன்பு,மேல், மேன்மை.
- மை – அஞ்சனம்,கண்மை, இருள்.
- மோ – முகத்தல்,முகருதல்.
- யா – அகலம், யாவை,ஒருவகை மரம், இல்லை.
- வ-நாலில் ஒரு பங்கு “கால்” என்பதன் தமிழ் வடிவம்.
- வா – அழைத்தல்,வருக , ஏவல்.
- வி- விசை.
- வீ – உதிரும் பூ,அழிவு, மலர்.
- வே-வேம்பு,உளவு.
- வை – புல், வைக்கவும், கூர்மை.
- வௌ – கவர், வவ்வுதல்.
- நொ – நோய்.
- நோ- வருந்து.
- ள-தமிழெழுத்து நூறு என்பதன் வடிவம்.
- ளு-நான்கில் மூன்று பகுதி, முக்கால் என்பதன் வடிவம்.
- து – உண்.
- று-எட்டில் ஒரு பகுதி அரைக்கால் எனபதன் வடிவம்.




