
அடிப்படை இலக்கணம் அறிவோம் ..
(ஓர் / ஒரு)
உயிரெழுத்துகளான அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் “ஓர்” என்று எழுதவேண்டும் .
உயிர் மெய் எழுத்துகள் எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் ” ஒரு” என்பதைப் பயன்படுத்தல் வேண்டும் .
எடுத்துக்காட்டு :
ஓரணில் ஒரு பழத்தைக் கொறித்துக்கொண்டிருக்கின்றது .
ஒரு துளி கண்ணீர் ஓராயிரம் கதைகள் சொல்லும் .
பட்டுப்போனதாக நினைத்திருந்த ஒரு மரத்திலிருந்து ஓரிலை துளிர்த்ததைக் கண்டதும் மனம் துள்ளிக்குதித்தது .!




