இலக்கியம்தமிழ்நன்னூல்

பொங்கல் வாழ்த்துப் பாடல்

ஐங்குறுநூறு என்று ஒரு சங்க நூல். இது எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் பொங்கல் வாழ்த்துப்பாடல் ஒன்று வருகிறது. அப்பாடலைக் காண்க..!

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!

விளைக வயலே! வருக இரவலர்!

பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!

பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக!

பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக!

வேந்து பகைதணிக! யாண்டுபல நந்துக!

அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!

அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!

நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக!

மாரி வாய்க்க! வளநனி சிறக்க!

வாழிய நலனே! வாழிய நிலனே!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button