தமிழ்பிறமொழி/தமிழ்

மகர நிரலில் உள்ள வடமொழிச்சொற்களுக்கான தமிழ்ச்சொற்கள் .

ம, மா, மி , மீ, மு, மூ, மே, மை, மோ, மௌ

“ம” சங்கதம்/ தமிழ்

மகத்து -பெரிது.
மகத்துவம் – மேன்மை, பெருமை.
மகம் -வேள்வி.
மகரகேதான் -காமன்.
மகரசங்கிராந்தி -தைத்திங்கட் பிறப்பு.
மகரந்தம் -பூந்துகள்.
மகரம் -சுறாமீன், முதலை.
மகராசன், மகாராசன்-அரசன், செல்வன்.
மகராசி -செல்வி.
மகரிஷி-மாமுனிவர்.
மகா -பெரிய, மிகுதி, மேன்மை.
மகாகாசம் -பெருவெளி.
மகாசங்காரம், மகாப்பிரளயம்-பேரழிவு, மாப்பேரூழிக்காலம்.
மகா தரும தேவதை-அறப்பெருங் கடவுள்.
மகாதேவன்-முழுமுதற் கடவுள், சிவன்.
மகாதேவி -இறைவி.
மகாத்மா-பெரியோன்.
மகா நுபாவர்-பெரியவர்.
மகாபாடியம்-பேருரை, அகலவுரை.
மகாபாதகம்-பெருந்தீவினை.
மகாப்பிரபு-பெருஞ்செல்வன்.
மகாலட்சுமி-திருமகள்.
மகாவாக்கியார்த்தம்-மறைமுடிவின் பொருள்.
மகிடம், மகிஷம்-எருமை.
மகிடாசுரன்- எருமை வடிவினன்.
மகிஷி -அரசி.
மகிதலம் -நிலம்.
மகிபதி, மகிபன் -அரசன்.
மகிமை -பெருமை,உயர்வு, மேன்மை.
மகிளா -பெண்.
மகீதரம் -மலை.
மகீ தலம், மகிதலம் -நிலவுலகு.
மகுடம் -தலையணி, முடி..
மகேசன், மகேசுவரன் -மேலான கடவுள், சிவன்.
மகேசுவரி -இறைவி, உமை.
மகைசுவரியம் -பெருஞ்செல்வம்.
மகோதரம் -பெருவயிறு .
மகோத்பலம் -முளரி, தாமரை.
மகோற்சவம் -திருவிழா, பெருவிழா.
மங்கலஸ்நானம் -திருமுழுக்கு.
மங்கலவாரம் -செவ்வாய்க்கிழமை.
மசகம் -கொசுகு.
மசானம்,மயாநம்- சுடுகாடு.
மச்சம், மத்சம் -மீன்.
மச்சரேகை, மத்சரேகை-வரிக்கயல், வரிமீன்.
மச்சை, மஜ்ஜை -கொழுப்பு.
மஞ்சநம்-முழுகல், குளித்தல்.
மஞ்சம்- கட்டில், படுக்கை.
மண்டலாதிபதி,மண்டலாதிபன் -அரசன்.
மண்டுகம், மண்டூகம்- தவளை.
மதகயம், மதகஜம், மதகுஞ்சரம்-வெறியானை.
மதசலம்- வெறிநீர்
மதம் -கொழுப்பு, கொள்கை, நெறி.
மதனலீலை-காமவிளையாட்டு.
மதாசாரம்- (சமய) ஒழுக்கம்.
மதாநுசாரம் -(சமய) நெறி நிற்றல்.
மதாபிமானம்-சமயப்பற்று.
மதியீநம் -அறிவுக்குறை.
மது- கள், தேன்.
மதுகரம் – வண்டு.
மதுசூதனன்- திருமால்.
மதுபாகம் -கட்குடி.
மதுமேகம் – நீரிழிவு.
மதுரம், மா துரியம்-இனிமை,இனிப்பு, தித்திப்பு.
மதுரவசனம், மா துரியவசனம்-இன்சொல்.
மதோன்மத்தன்-செருக்கன், வெறியன்.
மத்தகம், மஸ்தகம்- தலை.
மத்தம் -மயக்கம், வெறி.
மத்திபம்,மத்திமம், மத்தியம்- நடுநிலை, நடு.
மத்திமபட்சம்- நடுத்தரம் .
மத்திமை-நடுவிரல்.
மத்திமை வாக்கு -மிடற்றோசை.
மத்தியஸ்தம்- நடுநிலைமை, ஒருபாற் கோடாமை.
மத்தியஸ்தன் -நடுவன், நடுநிலையாளன்.
மத்தியானம் -நண்பகல்.
மநசு, மநஸ் -உள்ளம், மனம்.
மரச்சஞ்சலம், மநோசஞ்சலம்- மனக்கவலை, மனக்கலக்கம்.
மநச்சம்பூரணம், மனப்பூரணம் -மனநிறைவு.
மநச்சுத்தம் -உளத்தூய்மை.
மநஸ்தாபம்-துன்பம், மனவருத்தம்.
மநநம் -இடையறா நினைவு.
மநப்பூர்வம்-முழுமனது.
மநவிகற்பம், மநவிகாரம்-மனவேறுபாடு, உளவேறுபாடு.
மநித சமூகம்- மக்கட்கூட்டம், மக்களினம், மக்கட்டொகுதி.
மநிதர், மனுஷர்-மக்கள், மாந்தர்.
மநுஷ்யபாஷை -மக்கள் பேசும் மொழி.
மதுடன், மதுஷன், மநுஷ்யன் -ஆடவன், ஆள்.
மநோகரம் -உள்ளக்கவர்ச்சி, இனிமை.
மநோசங்கற்பம் -மனக்கோட்பாடு.
மநோதிடம் -மனவுறுதி.
மனோதைரியம்- மனத்திட்பம்.
மநோபலம் -மனவலிமை.
மநோபாவனை -எண்ணமுதிர்ச்சி
மநோபீஷ்டம்,மநோரதம்-விருப்பம்.
மநோலயம்- மனக்கோட்டை, வீண்எண்ணம்.
மநோராச்சியம்-உள்ள ஒருமை, மன வொருமை.
மந்தகதி -மெதுவான நடை.
மந்தகாசம் -புன்சிரிப்பு.
மந்தமாருதம் – தென்றற்காற்று.
மந்தம் -செரியாமை, சோம்பல், கூர்மையின்மை, மட்டம்.
மந்தானகம் -மெல்லோசை.
மந்தாரம் -மப்பு, மழைவானம்.
மந்திரகாரர் -மறைமொழியாளர்.
மந்திரம் – மறைமொழி.
மந்திராத்துவா -மறைமொழி வழி.
மந்திராலோசை-அரசியலாராய்ச்சி,அரசியற் சூழ்ச்சி.
மந்திரி -அமைச்சன்.
மந்திரோபதேசம் -மறைமொழி அறிவுறுத்தல்.
மமகாரம்-எனதென்றல், புறப்பற்று.
மரகதம்- பச்சைக்கல்.
மரகதவல்லி -பச்சைக்கொடி.
மரணபரியந்தம்-இறக்குமளவும்.
மரணம் -சாவு, இறப்பு,சாக்காடு.
மரணயோகம்- தீயவேளை .
மரணாவஸ்தை -இறப்புத்துன்பம்.
மரணை, ஸ்மரணை-நினைவு, உணர்ச்சி.
மரியாதை -பணிவு, வணக்கம், கீழ்ப்படிதல்.
மருத்து- காற்று.
மருமம், மர்மம் -உயிர்நிலை, மறைபொருள்.
மர்க்கடம்-குரங்கு.
மர்ஷணம் – கழுவல், கெடுத்தல்.
மலபரிபாகம் -பக்குவமடைதல்.
மலவாசயம், மலாசயம்-மலக்குடர்
மலவிசர்ச்சனம்-மலக்கழிவு.

“மா” சங்கதம்/ தமிழ்

மாசூல் – விளைவு.
மாஸம், மாதம் -திங்கள்.
மாதா-தாய், அன்னை.
மாதாந்தம்-திங்களிறுதி, திங்கள் தோறும்.
மாதுலன்-மாமன்.
மாத்சரியம், மாற்சரியம் -பகைமை, பொறாமை.
மாத்திரம் -மட்டும்.
மாத்திரை-அளவு.
மாநஸம்-மனத்திலிருப்பது, உளத் தோற்றம், எண்ணம்.
மாநஸவிரதம்-அகநோன்பு.
மாநதபூசை-அகவழிபாடு.
மாநபங்கம்-பெருமைக்குறைவு, மானச் கேடு.
மாநியம் -இறையிலி நிலம்.
மாந்தம் -செரியாமை
மாந்திரீகன்-மறைமொழிக்காரன்.
மாந்மியம்- சிறப்பு.
மாமிசதாரி -ஊனுணவினன்.
மாமிச பட்சணம் -ஊனுணா.
மாமிசம் -இறைச்சி, ஊன், புலால்.
மாரகம், மாரணம் -ஏவலாற் செய்யுங் கொலை, கொலைசெய்தல்.
மாரன் -வேள்.
மாருதம் -காற்று.
மார்க்கம் -வழி,நெறி.
மார்ச்சரியம் -உட்பகை.
மார்ச்சனை -முழவொலி.
மார்ச்சாலம் -பூனை.
மார்த்தாண்டன் -வெய்யோன், பகலோன்.
மாலுமி (உருது) -கப்பலோட்டி, மீகாமன்.
மாவுத்தன் (இந்தி) -யானைப்பாகன்.

“மி” சங்கதம்/ தமிழ்

மிசிரம், மிஸ்ரம்- கலப்பு.
மிதம் -அளவு, மட்டு.
மிதாகாரம் -அளவானவுணவு.
மித்திரத்துவம் -நேயத்தன்மை.
மித்திரபேதம் -நட்புப்பிரிவு.
மித்திரம் -நட்பு, நண்பு, நேயம்.
மித்திரன், மித்துரு -நண்பன், அன்பன்.
மிருகசஞ்சாரம் -விலங்குகளின் நடமாட்டம், விலங்குகளினிருப்பு.
மிருகசாதி -விலங்கினம்.
மிருகத்துவம் -விலங்கின்றன்மை.
மிருகம் -விலங்கு.
மிருகாதிபதி, மிருகாதிபன், மிருகராசன், மிருகேந்திரன் -அரிமா, விலங்கரசன்.
மிருதங்கம் -முழவு, மத்தளம்.
மிருதி -அறநூல்.
மிருது -மென்மை, நொய்ம்மை.
மிருத்து -மண்.
மிலேச்சன் -அறிவிலான், வேடன்.
மின்சார இயந்திரம்-மின்வலிப்பொறி.
மின்சாரத் தந்தி -மின்னோட்டக் கம்பி.

“மீ” சங்கதம்/ தமிழ்

மீநகேதனன்,மீநத்துவசன்-வேள், பாண்டியன், மீனக் கொடியோன்.
மீநாட்சி-கயற்கண்ணி, மீனக்கண்ணி.

“மு” சங்கதம்/ தமிழ்

முகஸ்துதி -முகமன்.
முகவிலாசம்- முகத்தெளிவு.
முகூர்த்தம்-முழுத்தம், நல்வேளை.
முக்கியம் -முதன்மை.
முத்தன்-விடுபட்டவன், இயல்பாகவே மல நீங்கினவன்.
முத்தான்மா -வீடுற்ற உயிர்.
முத்தி -வீடுபேறு.
முத்திரா, முத்திரை- அடையாளம், பொறி.
முனிசிரேஷ்டன் -முனிவர் தலைவன்.

“மூ” சங்கதம்/ தமிழ்

மூகம், மூகை, மூங்கை -ஊமை.
மூடத்துவம் -அறிவின்மை.
மூடமதி -அறிவிலி.
மூடர் -அறிவிலார்.
மூடிகம், மூஷிகம் -பெருச்சாளி.
மூர்க்ககுணம் -விடாப்பிடி, முரட்டுக்குணம்.
மூர்க்கன் -அறிவிலான், முருடன்.
மூர்ச்சை-அறிவுமயக்கம், உணர்ச்சியின்மை, களைப்பு.
மூர்த்தி -கடவுள், வடிவம்.
மூர்த்திகரம் -கடவுட்டன்மை.
மூலக்கிராணி -கழிச்சல்.
மூலதனம்-முதற்பொருள், விடுமுதல்.

“மே” சங்கதம்/ தமிழ்

மேககர்ச்சனம் -இடி முழக்கம்.
மேகம் -முகில், எழிலி, வான், விசும்பு.
மேடம், மேஷம்-ஆடு.
மேதசு, மேதஸ் -கொழுப்பு.
மேதை -நரம்பு, பேரறிவு, மேன்மை, இறைச்சி.

“மை” சங்கதம்/ தமிழ்

மைத்திரம் -நேயம், நட்பு.

“மோ” சங்கதம்/ தமிழ்

மோகம் -அவா, மயக்கம், பெரு வேட்கை, விருப்பம், மருள்.
மோகனம்-மயக்கம்.
மோட்ச சாம்பிராச்சியம் -துறக்கவுலகம்.
மோட்சப்பிராப்தி -வீடுபேறு.
மோட்சம், மோக்கம் -வீடு,துறக்கம்.

“மெள” சங்கதம்/ தமிழ்

மௌத்திகம் -முத்து.
மௌட்டியம்-அறியாமை, அறியாமைச் செருக்கு.
மௌலி, மவுலி -முடி, தலையணி.
மௌனம், மவுனம், மோநம் -அடக்கம், பேசாமை, வாய் வாளாமை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button